முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.013.திருத்துறையூர்
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.013.திருத்துறையூர்

7.013.திருத்துறையூர்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - துறையூரப்பர்.
தேவியார் - பூங்கோதையம்மை.
123 |
மலையாரரு வித்திரள் குரையாரக்கொணர்ந் தெற்றிஓர் கலையார் அல்குற் கன்னியர் தலைவாஉனை வேண்டிக்கொள் |
7.013.1 |
மலையிற் பொருந்திய அருவிக் கூட்டம், பெரிய மணிகளைத் தள்ளிக் கொணர்ந்து கரை நிறைய எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணை யாற்றின் வடகரைக்கண், நல்லஆடையை அணிந்த அல்குலையுடைய கன்னிப்பெண்கள் மூழ்கி விளையாடும் ஒரு துறையைச் சார்ந்த ஊராகிய திருத்துறையூரின்கண் எழுந்தருளியுள்ள தலைவனே, உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.
124 |
மத்தம்மத யானையின் வெண்மருப் புந்தி முத்தங்கொணர்ந் தெற்றிஓர் பெண்ணை வடபால் பத்தர்பயின் றேத்திப் பரவுந் துறையூர் அத்தாஉனை வேண்டிக்கொள் வேன்தவ நெறியே. |
7.013.2 |
மயக்கங்கொண்ட மதயானைகளின் கொம்புகளைத் தள்ளிக்கொண்டுவந்து அவற்றில் உள்ள முத்துக்களைக் கரையில் எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக்கண் உள்ள, அடியவர் பலகாலும் வந்து ஏத்தி வழிபடுகின்ற திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள தந்தையே, உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.
125 |
கந்தங்கமழ் காரகில் செந்தண்புனல் வந்திழி மந்தீபல மாநடம் எந்தாய் உனை வேண்டிக்கொள் |
7.013.3 |
நறுமணம் கமழ்கின்ற கரிய அகில்மரங்களையும் சந்தன மரங்களையும் தள்ளிக்கொண்டு, சிவந்த குளிர்ந்த நீர் இடையறாது வந்து பாய்கின்ற பெண்ணையாற்றின் வடகரைக்கண்ணுள்ள, பெண் குரங்குகள் பல வகையான நடனங்களை ஆடுகின்ற திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள எம்தந்தையே, உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.
126 |
அரும்பார்ந்தன மல்லிகை சுரும்பாரக்கொணர்ந் தெற்றிஓர் கரும்பார்மொழிக் கன்னியர் விரும்பாஉனை வேண்டிக்கொள் |
7.013.4 |
அரும்புகள் நிறைந்தனவாகிய 'மல்லிகை, சண்பகம்' என்னும் மரங்களை முரித்து, அவற்றில் உள்ள வண்டுகள் நிறையக்கிடக்கக் கொணர்ந்து கரையில் எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணை யாற்றின் வடகரைக்கண், கரும்புபோலும் மொழியினை யுடைய கன்னிப் பெண்கள் மூழ்கி விளையாடும் ஒருதுறையைச் சார்ந்த திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள என் விருப்பத்திற்குரியவனே, உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக்கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.
127 |
பாடார்ந்தன மாவும் நாடாரவந் தெற்றிஓர் மாடார்ந்தன மாளிகை வேடாஉனை வேண்டிக்கொள் |
7.013.5 |
பக்கங்களில் நிறைந்துள்ளனவாகிய மாமரங்களையும், பலா மரங்களையும் முரித்துக்கொணர்ந்து நாடெங்கும் நிறையும் படி எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக் கண் உள்ள, செல்வம் நிறைந்தனவாகிய மாளிகைகள் சூழ்ந்த துறையூரில் எழுந்தருளியுள்ள, பல அருட்கோலங்களை யுடையவனே, உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.
128 |
மட்டார்மலர்க் கொன்றையும் மொட்டாரக்கொணர்ந் தெற்றிஓர் கொட்டாட்டொடு பாட்டொலி சிட்டாஉனை வேண்டிக்கொள் |
7.013.6 |
தேன் நிறைந்த மலர்களை யுடையகொன்றை மரம், வன்னி மரம் இவைகளை முரித்து, அரும்புகளோடு நிரம்பக் கொணர்ந்து எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக் கண், வாச்சிய முழக்கமும், ஆடலும், பாடலும் நீங்காது கொண்டு விளங்குகின்ற திருத் துறையூரில் எழுந்தருளியுள்ள மேலானவனே உன்பால் அடியேன் தவ நெறியையே வேண்டிக் கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.
129 |
மாதார்மயிற் பீலியும் தாதாரக்கொணர்ந் தெற்றிஓர் போதார்ந்தன பொய்கைகள் நாதாஉனை வேண்டிக்கொள் |
7.013.7 |
அழகு நிறைந்தனவான மயிற்பீலியையும், வெள்ளிய நுரைகளையும் தள்ளி, பல மலர்களை மகரந்தத்தோடு நிரம்பக் கொணர்ந்து எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக்கண், மலர்கள் நிறைந்தனவாகிய பொய்கைகள் சூழப் பெற்று விளங்கும் திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள தலைவனே, உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக்கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.
130 |
கொய்யார்மலர்க் கோங்கொடு செய்யாரக்கொணர்ந் தெற்றிஓர் மையார்தடங் கண்ணியர் ஐயாஉனை வேண்டிக்கொள் |
7.013.8 |
கொய்தல் பொருந்திய மலரையுடைய கோங்க மரம், வேங்கை மரம் இவைகளை முரித்துக்கொணர்ந்து, வயல் நிறைய எறிவதாகிய, ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக்கண், மை பொருந்திய கண்களையுடைய மகளிர் மூழ்கியாடும் ஒரு துறைக்கண் உள்ள திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள தலைவனே, உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக்கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.
131 |
விண்ணார்ந்தன மேகங்கள் மண்ணாரக்கொணர்ந் தெற்றிஓர் பண்ணார்மொழிப் பாவையர் அண்ணாஉனை வேண்டிக்கொள் |
7.013.9 |
வானத்தில் நிறைந்தனவாகிய மேகங்கள் நிலைத்து நின்று பொழிவதனால், மலைக்கண் உள்ள பொருள்களை வாரிக் கொணர்ந்து நிலம் நிறைய எறிவதாகிய, ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக்கண், பண்போலும் மொழியினையுடைய மகளிர் மூழ்கியாடும் ஒரு துறைக்கண் உள்ள திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள தலைவனே, உன்போல் அடியேன் தவநெறியையே வேண்டிக்கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.
132 |
மாவாய்ப்பிளந் தானும் ஆவாஅவர் தேடித் பூவார்ந்தன பொய்கைகள் தேவாஉனை வேண்டிக்கொள் |
7.013.10 |
பூக்கள் நிறைந்தனவாகிய பொய்கைகள் சூழ்ந்துள்ள திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள பெருமானே. 'கேசி' என்னும் அசுரன் கொண்ட வஞ்சனை உருவமாகிய குதிரையின் வாயைக் கிழித்த திருமாலும், மலர்மிசையோனாகிய பிரமனும் ஆகிய அவ்விருவரும் உன்னை வழிபட்டுத் தவநெறியை வேண்டிக் கொள்ள மாட்டாது, அந்தோ! உன் அளவினை ஆராய்ந்து தேடியலைந்தனர்; ஆயினும், உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக்கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.
133 |
செய்யார்கம லம்மலர் கையால்தொழு தேத்தப் பொய்யாத்தமிழ் ஊரன் மெய்யேபெறு வார்கள் |
7.013.11 |
வயல்கள் நிறையத் தாமரை மலரும் திருநாவலூருக்குத் தலைவனும், மெய்ம்மையையே கூறும் தமிழ்ப் பாடலைப் பாடுபவனும் ஆகிய நம்பியாரூரன், யாவராலும் கையால் கும்பிட்டுத் துதிக்கப்படும் திருத்துறையூரில் உள்ள இறைவன் மீது பாடியனவாகிய இப் பாடல்களை நன்கு பாடவல்லவர் தவநெறியைத் தப்பாது பெறுவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருத்துறையூர் - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - பெண்ணை, நெறியே, வேன்தவ, எழுந்தருளியுள்ள, வேண்டேன், அடியேன், வேண்டிக்கொள், வேறொன்றையும், உன்பால், தவநெறியையே, வடபால், தெற்றிஓர், ஒப்பற்ற, திருத்துறையூரில், எறிவதாகிய, துறையூர், பெண்ணையாற்றின், வேண்டிக், வடகரைக்கண், வேண்டிக்கொள்வேன், கொணர்ந்து, நிறைந்தனவாகிய, கொள்வேன், பொய்கைகள், தலைவனே, சூழுந், பொருந்திய, வடகரைக், முரித்துக்கொணர்ந்து, துறையூரில், மகளிர், மேகங்கள், நின்று, துறைக்கண், மூழ்கியாடும், இவைகளை, நிரம்பக், மலர்களை, கரையில், திருச்சிற்றம்பலம், திருத்துறையூர், சார்ந்த, விளையாடும், யாற்றின், மூழ்கி, திருமுறை, அவற்றில், சாடிச், என்னும், மல்லிகை, மரங்களையும், கன்னியர், முரித்து