முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.100.திருநொடித்தான்மலை
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.100.திருநொடித்தான்மலை

7.100.திருநொடித்தான்மலை
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
1017 |
தானெனை முன்படைத்தான் அத நானென பாடலந்தோ நாயி வானெனைவந் தெதிர்கொள்ள மத்த ஊனுயிர் வேறுசெய்தான் நொடித் |
7.100.1 |
திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், தானே முன்பு என்னை நிலவுலகில் தோற்றுவித்தருளினான்; தோற்றுவித்த அத்திருக் குறிப்பினையுணர்ந்து அவனது பொன்போலும் திருவடிகளுக்கு, அந்தோ, நான் எவ்வளவில் பாடல்கள் செய்தேன்! செய்யாதொழியவும், அப்புன்மை நோக்கி ஒழியாது, என்னை அடியவர்களுள் ஒருவனாக வைத்தெண்ணி, வானவர்களும் வந்து எதிர்கொள்ளுமாறு, பெரியதோர் யானை யூர்தியை எனக்கு அளித்து, எனது உடலொடு உயிரை உயர்வுபெறச் செய்தான்; அவனது திருவருள் இருந்தவாறு என்!
1018 |
ஆனை உரித்தபகை அடி ஊனை உயிர்வெருட்டி ஒள்ளி வானை மதித்தமரர் வலஞ் ஆனை அருள்புரிந்தான் நொடித் |
7.100.2 |
யான், கருவி கரணங்களை அறிவினால் அடக்கி, அறிவே வடிவாய் உள்ள தன்னை உள்கியிருத்தலாகிய ஒன்றே செய்தேன்; அவ்வளவிற்கே, திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் அம் முதல்வன், வானுலகத்தையே பெரிதாக மதித்துள்ள தேவர்கள் வந்து என்னை வலம்செய்து ஏற்றிச் செல்லுமாறு, ஓர் யானையூர்தியை எனக்கு அளித்தருளினான்; அஃது, அவன் முன்பு யானையை உரித்ததனால் நிலைத்து நிற்கும் பகைமையை அடியேனால் நீங்கச்செய்து, அதற்கு அருள்பண்ணக் கருதியதனாலோ; அன்றி என்மாட்டு வைத்த பேரருளாலோ!
1019 |
மந்திரம் ஒன்றறியேன் மனை சுந்தர வேடங்களால் துரி அந்தர மால்விசும்பில் அழ துந்தர மோநெஞ்சமே நொடித் |
7.100.3 |
நெஞ்சே, அடியேன், மறைமொழிகளை ஓதுதல் செய்யாது இல்வாழ்க்கையில் மயங்கி, அடியவர் வேடத்தை மேற்கொள்ளாது, அழகைத் தரும் வேடங்களைப் புனைந்து கொண்டு, இவ்வாறெல்லாம் பொருந்தாதனவற்றையே செய்து வாழும் ஒரு தொண்டன்; எனக்கு, திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், வெளியாகிய பெரிய வானத்திற் செல்லும் அழகுடைய யானையூர்தியை அளித்தருளியதும் என் தரத்ததோ!
1020 |
வாழ்வை உகந்தநெஞ்சே மட டாழ முகந்தவென்னை அது சூழ அருள்புரிந்து தொண்ட வேழம் அருள்புரிந்தான் நொடித் |
7.100.4 |
உலக இன்பத்தை விரும்பிய மனமே, பெண்டிரால் உண்டாகும் வலிய வினையாகிய குழியில் விழுந்து அழுந்திக் கிடந்த என்னை, திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், அந்நிலையினின்றும் நீக்கி, தேவரெல்லாரும் சூழ்ந்து அழைத்து வருமாறு ஆணையிட்டு, என் நிலைக்குப் பெரிதும் மேம்பட்டதாகிய ஓர் யானை யூர்தியை அருளித்தருளினான்; அவனது திருவருள் இருந்தவாறு என்!
1021 |
மண்ணுல கிற்பிறந்து நும்மை பொன்னுல கம்பெறுதல் தொண்ட விண்ணுல கத்தவர்கள் விரும் என்னுடல் காட்டுவித்தான் நொடித் |
7.100.5 |
'மண்ணுலகில் மக்களாய்ப் பிறந்து நும்மைப் பாடுகின்ற பழவடியார், பின்பு பொன்னுலகத்தைப் பெறுதலாகிய உரையளவைப் பொருளை, அடியேன் இன்று நேரிற்கண்டேன்' என்று தன்பால் வந்து சொல்லுமாறு, திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், தேவரும் கண்டு விருப்பங்கொள்ள, என் உடம்பை வெள்ளை யானையின்மேல் காணச் செய்தான்; அவனது திருவருள் இருந்தவாறு என்!
1022 |
அஞ்சினை ஒன்றிநின்று அலர் வஞ்சனை யென்மனமே வைகி துஞ்சுதல் மாற்றுவித்துத் தொண்ட வெஞ்சின ஆனைதந்தான் நொடித் |
7.100.6 |
திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், ஐம்புலன்களைப் பொருந்தி நின்று, பூக்களைக் கொண்டு தனது திருவடியை அணுக அறியாத வஞ்சனையை யுடைத்தாகிய என் மனத்தின்கண்ணே வீற்றிருந்து, எனக்கு இறப்பை நீக்கி, தேவர்களது கண்முன்னே, என் நிலைக்குப் பெரிதும் மேம்பட்ட, வெவ்விய சினத்தையுடைய யானையூர்தியை அளித்தருளினான்; அவனது திருவருள் இருந்தவாறு என்!
1023 |
நிலைகெட விண்ணதிர நிலம் மலையிடை யானைஏறி வழி அலைகட லால்அரையன் அலர் உலையணை யாதவண்ணம் நொடித் |
7.100.7 |
திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், விண்ணுலகம் தனது நிலைகெடுமாறு அதிரவும், நிலவுலகம் முழுதும் அதிரவும் மலையிடைத்திரியும் யானை மீது ஏறி, தனது திரு மலையை அடையும் வழியே வருகின்ற என் எதிரே, அலைகின்ற கடலுக்கு அரசனாகிய வருணன், பூக்களைக் கொண்டு, யாவரினும் முற்பட்டு வந்து வணங்குமாறு, உடல் அழியாதே உயர்ந்து நிற்கின்ற ஒரு நிலையை எனக்கு அளித்தருளினான்; அவனது திருவருள் இருந்தவாறு என்!
1024 |
அரவொலி ஆகமங்கள் அறி விரவிய வேதஒலி விண்ணெ வரமலி வாணன்வந்து வழி சிரமலி யானைதந்தான் நொடித் |
7.100.8 |
'அரகர' என்னும் ஒலியும், ஆகமங்களின் ஒலியும்,அறிவுடையோர் அறிந்து பாடும் பாட்டுக்களின் ஒலியும், பல்வேறு வகையாகப் பொருந்திய வேதங்களின் ஒலியும் ஆகாயம் முழுதும் நிறைந்து வந்து எதிரே ஒலிக்கவும், மேன்மை நிறைந்த, 'வாணன்' என்னும் கணத்தலைவன் வந்து, முன்னே வழிகாட்டிச் செல்லவும், ஏறத்தக்கதொரு முதன்மை நிறைந்த யானையை, திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன் எனக்கு அளித்தருளினான்; அவனது திருவருள் இருந்தவாறு என்!
1025 |
இந்திரன் மால்பிரமன் னெழி வந்தெதிர் கொள்ளஎன்னை மத்த மந்திர மாமுனிவர் இவன் நந்தமர் ஊரனென்றான் நொடித் |
7.100.9 |
திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வனாகிய எம்பெருமான், இந்திரன், திருமால், பிரமன், எழுச்சி பொருந்திய மிக்க தேவர் ஆகிய எல்லாரும் வந்து என்னை எதிர் கொள்ளுமாறு, எனக்கு யானை யூர்தியை அளித்தருளி, அங்கு, மந்திரங்களை ஓதுகின்ற முனிவர்கள், 'இவன் யார்' என்று வினவ, "இவன் நம் தோழன்; 'ஆரூரன்' என்னும் பெயரினன்" என்று திருவாய் மலர்ந்தருளினான்; அவனது திருவருள் இருந்தவாறு என்!
1026 |
ஊழிதொ றூழிமுற்றும் உயர் சூழிசை யின்கரும்பின் சுவை ஏழிசை இன்றமிழால் இசைந் ஆழி கடலரையா அஞ்சை |
7.100.10 |
ஆழ்ந்ததாகிய கடலுக்கு அரசனே! உலகம் அழியுங்காலந்தோறும் உயர்வதும், பொன்வண்ணமாயதும் ஆகிய திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வனை, திரு நாவலூரில் தோன்றியவனாகிய யான், இசை நூலிற் சொல்லப்பட்ட, ஏழாகிய இசையினையுடைய, இனிய தமிழால், மிக்க புகழை யுடையனவாகவும், கரும்பின் சுவை போலும் சுவையினை யுடையனவாகவும் அப்பெருமானோடு ஒன்றுபட்டுப் பாடிய இப் பத்துப் பாடல்களையும், திருவஞ்சைக்களத்தில் வீற்றிருந்தருளும் பெருமானுக்கு, நீ அறிவித்தல் வேண்டும்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருநொடித்தான்மலை - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - வீற்றிருந்தருளும், திருக்கயிலை, மலைக்கண், தான்மலை, உத்தமனே, நொடித், முதல்வன், இருந்தவாறு, திருவருள், எனக்கு, அளித்தருளினான், ஒலியும், கொண்டு, என்னும், யானையூர்தியை, யூர்தியை, திருச்சிற்றம்பலம், கடலுக்கு, அதிரவும், திருமுறை, முழுதும், பொருந்திய, யுடையனவாகவும், எம்பெருமான், இந்திரன், நிறைந்த, பூக்களைக், யானையின்மேல், முன்பு, திருநொடித்தான்மலை, அருள்புரிந்தான், செய்தேன், யானையை, அடியேன், நிலைக்குப், நீக்கி, அருள்புரிந்து, பெரிதும்