முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.001.திருவெண்ணெய்நல்லூர்
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.001.திருவெண்ணெய்நல்லூர்
7.001.திருவெண்ணெய்நல்லூர்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தடுத்தாட்கொண்டவீசுவரர்.
தேவியார் - வேற்கண்மங்கையம்மை.
1 |
பித்தாபிறை சூடீபெரு எத்தான்மற வாதேநினைக் வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் அத்தாஉனக் காளாய்இனி |
7.001.1 |
பித்தனே, பிறையைக் கண்ணியாகச் சூடியவனே, பெருமை உடையவனே, பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய, 'அருட்டுறை' என்னும் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, எனது நெஞ்சத்துள் உன்னை அகலாது வைத்தருளினாய்; அதனால், எவ்வாற்றானும் உன்னை மறவாமலே நினைந்து, முன்பே உனக்கு அடியவனாகி, இப்பொழுது, 'உனக்கு அடியவன் அல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!
2 |
நாயேன்பல நாளும்நினைப் பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் ஆயாஉனக் காளாய்இனி |
7.001.2 |
மூங்கில்கள் நிறைந்து வரும் பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, நாய் போலும் கீழ்மையுடையேனாகிய யான் உன்னை எனது இளைய நாள்கள் பலவற்றினும் மனத்தால் நினைத்தல் இன்றிப் பேய்போல அலைந்து இளைத்தேன்; ஆயினும், இதுபோழ்து, பெறுதற்கு அரிய உனது திருவருளை நான் பெற்றேன். இப்பேற்றை எனக்கு அளிக்க வந்த உனக்கு, முன்பே நான் அடியவனாகி, இப்பொழுது, 'அடியவன் அல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!
3 |
மன்னேமற வாதேநினைக் பொன்னேமணி தானேவயி மின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் அன்னேஉனக் காளாய்இனி |
7.001.3 |
தலைவனே, கரையை மோதி, பொன்னும் மணியும், வயிரமும் ஆகிய இவற்றைத் தள்ளிக்கொண்டு, ஒளிமிக்கு வருகின்ற பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியுள்ள தாய் போன்றவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, 'அடியவன் அல்லேன்' என்று எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ! இனிமேல், உன்னை என் மனத்தில் ஒருபோதும் மறவாமலே நினைப்பேன்.
4 |
முடியேன்இனிப் பிறவேன்பெறின் கொடியேன்பல பொய்யேஉரைப் செடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் அடிகேள்உனக் காளாய்இனி |
7.001.4 |
இடபத்தை ஊர்பவனே, ஒளி நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, 'அடியவன் அல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ! அப்பொருந்தாமையை அகற்றி என்னை நீ தௌவித் தருளினமையால், இனி நான் இறக்கவும், மீளப் பிறக்கவும், இவ்வுலகில் வாழப் பெறின் மூப்படைந்து வருந்தவும் ஆற்றேனாகின்றேன். நெறிகோடினேனாகிப் பொய்ம்மைகள் பலவற்றையே பேசுவேனாகிய என்னை நீ வெறாது ஏற்றருள்.
5 |
பாதம்பணி வார்கள்பெறு யாதன்பொரு ளானேன்அறி தாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் ஆதீஉனக் காளாய்இனி |
7.001.5 |
அருளாளனே, பூக்களின் மகரந்தம் நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய் நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியுள்ள முதல்வனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது,'அடியவன் அல்லேன்' என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ! அப்பொருந்தாச் செய்கையைச் செய்தமையால் அறிவில்லேனாயினேன்; அதனால், 'ஆதன்' என்னும் சொற்குப் பொருளாயினேன்; ஆயினும், என்னை இகழாது உன் திருவடியை வணங்கி வாழ்கின்ற அறிவர் பெறும் பேற்றை அளித்தருள்.
6 |
தண்ணார்மதி சூடீதழல் எண்ணார்புர மூன்றும்எரி மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் அண்ணாஉனக் காளாய்இனி |
7.001.6 |
தட்பம் நிறைந்த திங்களைச் சூடியவனே, நெருப்புப் போலும் திருமேனியை உடையவனே, உன்னை மதியாதவரது அரண்கள் மூன்றையும் தீ உண்ணும்படி சிரித்தவனே, மூழ்குவோரது பாவத்தைக் கழுவுதல் பொருந்திய பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, 'அடியவன் அல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!
7 |
ஊனாய்உயி ரானாய்உட வானாய்நில னானாய்கட தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் ஆனாய்உனக் காளாய்இனி |
7.001.7 |
பூக்களின் தேன் நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் நீங்காது எழுந்தருளியிருப்பவனே, நீ உடலிடத்து நின்று பொருள்களை உணர்ந்து வருகின்ற உயிர்கள் ஆகியும், அவைகள் நிற்கின்ற அவ்வுடல்களாகியும், வானாகியும், நிலமாகியும், கடலாகியும், மலையாகியும் நிற்கின்றாய்; இப்பெற்றியன் ஆகிய உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, 'அடியவன் அல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!
8 |
ஏற்றார்புரம் மூன்றும்மெரி தேற்றாதன சொல்லித்திரி ஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் ஆற்றாய்உனக் காளாய்இனி |
7.001.8 |
பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திரு வெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக் கோயிலின் கண் எழுந்தருளியிருக்கும் நன்னெறியானவனே, நீ உனக்குப் பகையாய் எதிர்ந்தவர்களது அரண்கள் மூன்றையும் தீ உண்ணும்படி, போர் செய்து அழித்தாய். சிவந்த சடையிடத்து ஆகாய கங்கையைத் தாங்கினாய். அப்பெருமைகளை அறியாமை காரணமாகத் தோன்றும் சொற்களைச் சொல்லி நான் வீணே உழல்வேனோ! அங்ஙனம் உழலும் நெறியானே, முன்பு உனக்கு அடியவனாயதற்கு மாறாக இப்பொழுது, 'அடியவன் அல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!
9 |
மழுவாள்வலன் ஏந்தீமறை தொழுவாரவர் துயராயின செழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் அழகாஉனக் காளாய்இனி |
7.001.9 |
மழுப்படையை வலப்பக்கத்தில் ஏந்தியவனே, வேதத்தை ஓதுபவனே, உமையை ஒரு பாகத்தில் உடையவனே, செழுமை வாய்ந்து இடையறாது ஒழுகுகின்ற பொண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அருட்டுறைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் அழகனே, உன்னை வணங்குவாரது துன்பங்களை நீக்குதல் உனது தொழில் என்பதனால், என்னை வலிந்து ஆட்கொள்ள வந்தாய். அதனை அறியாது, முன்பே உனக்கு அடியவனாகியதனை மறுத்து, இப்பொழுது, 'அடியவன் அல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!
10 |
காரூர்புன லெய்திக்கரை பாரூர்புக ழெய்தித்திகழ் சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் ஆரூரன்எம் பெருமாற்காள் |
7.001.10 |
மேகத்தினின்றும் ஒழுகும் தன்மையை உடைய நீர் திரண்டு பொருந்தி, அலைகளாகிய கைகளால் கரையைக் குத்தி, நிலம் முழுதும் பரவிய புகழைப்பெற்று, ஒளி விளங்குகின்ற பல சிறந்த மணிகளைத் தள்ளிவந்து, அழகு மிகுகின்ற பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அருட்டுறைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு, ஆரூரன் 'அடியவனல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவெண்ணெய்நல்லூர் - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - நல்லூரருட், டுறையுள், தென்பால், பொருந்துமோ, தென்பால்வெண்ணெய், உனக்கு, அல்லேன், பேசியது, அல்லேன்என, அருட்டுறைத், பெண்ணையாற்றின், அடியவன், காளாய்இனி, முன்பே, இப்பொழுது, எதிர்வழக்குப், கண்ணதாகிய, அடியவனாகி, திருக்கோயிலின்கண், எழுந்தருளியிருக்கும், திருவெண்ணெய்நல்லூரின், தலைவனே, நிறைந்த, உடையவனே, பூக்களின், எழுந்தருளியுள்ள, வருகின்ற, வழக்குப், மூன்றையும், திருக்கோயிலில், திருவெண்ணெய்நல்லூரில், உண்ணும்படி, ஆயினும், அரண்கள், சூடியவனே, திருவெண்ணெய்நல்லூர், மறவாமலே, அதனால், என்னும், கின்றேன்மனத், திருச்சிற்றம்பலம், வாதேநினைக், பெற்றேன், துன்னைப், திருமுறை, போலும்