முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.074.திருநாரையூர்
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.074.திருநாரையூர்

6.074.திருநாரையூர்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சௌந்தரேசர்.
தேவியார் - திரிபுரசுந்தரியம்மை.
2819 | சொல்லானைப் பொருளானைச் சுருதி யானைச் அல்லானைப் பகலானை அரியான் தன்னை வில்லானைச் சரம்விசயற் கருள்செய் தானை நல்லானைத் தீயாடு நம்பன் தன்னை |
6.074.1 |
சொல்லாகவும் பொருளாகவும் வேதங்களாகவும் திகழ்பவனும், ஒளிமிக் கசக்கராயுதத்தைத் திருமாலுக்கு அருளியவனும், இரவாகவும் பகலாகவும் இருப்பவனும், அன்பர் அல்லாதார்க்கு அரியனாகவும் அடியார்க்கு எளியனாகவும் இலங்குபவனும் அசுரர்க்கு அரணாயமைந்த திரிபுரங்கள் அழிய அம்பு எய்தவில்லினனும், விசயற்குப் பாசுபதம் அருளிய அருளாளனும், சூரியனும் பெருந்தவமுனிவர்களும் விரும்பிப் போற்றும் நல்லவனும், தீயாடு பவனும், விரும்புதற்குரிய தலைவனும் ஆகிய சிவபெருமானை நாரையூர் நன்னகரில் நான் கண்டேன்.
2820 | பஞ்சுண்ட மெல்லடியாள் பங்கன் தன்னைப் மஞ்சுண்ட வானாகி வானந் தன்னில் நெஞ்சுண்டென் நினைவாகி நின்றான் தன்னை நஞ்சுண்டு தேவர்களுக் கமுதீந் தானை |
6.074.2 |
செம்பஞ்சுக்குழம்பு ஊட்டப்பட்ட மெல்லிய பாதங்களை உடைய உமையம்மையை ஒரு கூறாகக் கொண்டவனும், நிலமும், நீரும், தீயும்வீசும் காற்றும் ஆனவனும், மேகம் தவழும் வானமும், அவ்வானத்தில் ஊரும் மதியும் ஆகி அம்மதியைத் தன்சடை முடிமேல் தாங்கியவனும், என் மனத்தைத் தன் வழிநிறுத்தி அதன் நினைவுகள் எல்லாம் தானாகி நின்றவனும், நெடிய கடலைக் கடைந்தார் அனைவரும் ஓடி நீங்கும் வண்ணம் ஓங்கி எழுந்த நஞ்சைத் தான் உண்டு தேவர்கட்கு அமுதம் ஈந்தவனும் ஆகிய சிவபெருமானை நாரையூர் நன்னகரில்நான் கண்டேன்.
2821 | மூவாதி யாவர்க்கும் மூத்தான் தன்னை தேவாதி தேவர்கட்குந் தேவன் தன்னைத் ஆவாத அடலேறொன் றுடையான் தன்னை நாவானை நாவினில்நல் லுரையா னானை |
6.074.3 |
யாவர்க்கும் முன்னே தோன்றி வைத்தும் மூப்பு இன்றி என்றும் ஒருபெற்றியனாய் உள்ளவனும், தேவர்கட்குத் தலைவராகிய நான்முகன், திருமால், இந்திரன் ஆகியோருக்கும் தலைவனாய்த் திகழ்பவனும், நான்முகனுடைய சிரங்களில் ஒன்றைக் கொய்தவனும், காற்றெனக் கடிதியங்குவதும் வெற்றியையுடையது மாகிய ஆனேற்றை ஊர்தியாக உடையவனும், ஆகி, அடியேன் நினையுந்தொறும் நாவான் நுகரப்படும் தித்திப்பாகும் சுவையாகவும், நாவிற்பயிலும் நல்லுரையானாகவும் விளங்கும் சிவபெருமானை நாரையூராம் நன்னகரில் நான் கண்டேன்.
2822 | செம்பொன்னை நன்பவளந் திகழும் முத்தைச் வம்பவிழும் மலர்க்கணைவேள் உலக்க நோக்கி கம்பனையெங் கயிலாய மலையான் தன்னைக் நம்பனையெம் பெருமானை நாதன் தன்னை |
6.074.4 |
செம்பொன், நற்பவளம், ஒளிமுத்து, செழுமணி என்றெல்லாம் ஒப்புக் கூறப்படுபவனும், வணங்குவார் சித்தத்தில் உறைபவனும், மணங்கமழும் மலர்களை கணைகளாகக் கொண்ட மன்மதன் இறக்கும் வண்ணம் விழித்து மகிழ்ந்தவனும், மதில் சூழ்ந்தகச்சியில் ஏகம்பனாய் மன்னுபவனும, கயிலாய மலையில்வாழும் எம் தலைவனும், சம்பாதி சடாயு என்ற கழுகுகளும் இராமனும் தமக்கு நன்மைதருவான் இவன் என்று ஆராய்ந்து வணங்கும் இறைவனும், எம்பெருமானும், தலைவனுமாகிய சிவபெருமானை நாரையூராம் நன்னகரில் நான் கண்டேன்.
2823 | புரையுடைய கரியுரிவைப் போர்வை யானைப் விரையுடைய வெள்ளெருக்கங் கண்ணி யானை வரையுடைய மகள்தவஞ்செய் மணாளன் தன்னை நரைவிடைநற் கொடியுடைய நாதன் தன்னை |
6.074.5 |
உட்டொளை பொருந்திய கரத்தையுடைய யானையது தோலைப் போர்வையாகக் கொண்டவனும், முறுக்குண்ட சடையின்மேல் கங்கையைச் செறித்து வைத்தபுனிதனும், மணங்கமழும் வெள்ளெருக்கம் பூமாலையை அணிந்தவனும் வெள்ளிய நீறு செம்மேனியிடத்து விரவி விளங்குபவனும், பருவதராசன் மகள் தவம் செய்து அடையப்பெற்ற மணாளனும், வெள்ளிய விடையை உயர்த்திய நற்கொடியை உடைய தலைவனும் ஆகிய சிவபெருமானை நாரையூர் நன்னகரில்நான் கண்டேன்.
2824 | பிறவாதும் இறவாதும் பெருகி னானைப் மறவாத மனத்தகத்து மன்னி னானை உறவானைப் பகையானை உயிரா னானை நறவாரும் பூங்கொன்றை சூடி னானை |
6.074.6 |
பிறவாமையானும், இறவாமையானும் புகழ் பெருகியவனும், பேய்களின் பாட்டிற்கேற்பக் கூத்தாடும் பித்தனும், தன்னை மறவாத மனத்திடத்தேமன்னி நிற்பவனும், மலையிடத்தும் கடலில் கண்ணும் வானின் மேலும் விளங்குபவனும், உறவும் பகையும் உயிரும் ஆகுபவனும், அகத்தும், புறத்தும் திகழ்பவனும், தேனிறைந்தகொன்றைப் பூவைச் சூடியவனும் ஆகிய சிவபெருமானை நாரையூராம் நன்னகரில் நான் கண்டேன்.
2825 | தக்கனது வேள்விகெடச் சாடி னானைத் கொக்கரைசச் சரிவீணைப் பாணி யானைக் அக்கினொடும் என்பணிந்த அழகன் தன்னை நக்கனைவக் கரையானை நள்ளாற் றானை |
6.074.7 |
தக்கனது வேள்வியை அதன் பயன் கெடுமாறு அழித்தவனும், பிரமனது தலையைப்பாத்திரமாகக் கொண்டு பிச்சை ஏற்ற தலைவனும், கொக்கரை, சச்சரி, வீணை ஆகிய இசைக்கருவிகளை வாசிக்கும் கரத்தினனும், உயிரைக் கொள்ளுதலையுடைய நாகத்தை அணியாகப் பூண்டவனும், உருத்திராக்கம் என்பு இவற்றை அணிந்த அழகனும், ஆறுமுகன், ஆனைமுகன் ஆகிய இருவருக்கும் தந்தையும், ஆடை அணியாதவனும், வக்கரைநள்ளாறு என்னுந் தலங்களில் திகழ்பவனும் ஆகியசிவபெருமானை நாரையூராம் நன்னகரில் நான் கண்டேன்.
2826 | அரிபிரமர் தொழுதேத்தும் அத்தன் தன்னை எரிபுரியும் இலிங்கபுரா ணத்து ளானை திரிபுரஞ்செற் றொருமூவர்க் கருள்செய் தானைச் நரிவிரவு காட்டகத்தி லாட லானை |
6.074.8 |
மாலும் நான்முகனும் ஏத்தி வணங்கும் தந்தையும், இயமனுக்கு இறுதியை ஆக்கும்மகாசங்காரக் கடவுளும், அளந்தறிய இயலாத எரிப்பிழம்பாம் இலிங்கத்தினது இயல்புவிரிக்கும் இலிங்கபுராணத்து விளங்கித் தோன்றுபவனும், அருமைமிக்க எண்ணும் பண்ணும் எழுத்தும் ஆனவனும், திரிபுரங்களை அழித்து ஆண்டுத்தன்னை மறவாத மூவர்க்கும் அருள் செய்தவனும், சிலந்திக்குப்புவிபுரக்கும் அரசனாம் பேற்றையளித்த செல்வனும் ஏனை விலங்குகளொடு நரிகள் கலந்து திரியும் சுடுகாட்டில் ஆடுபவனும் ஆகிய சிவபெருமானை நாரையூராம் நன்னகரில்நான் கண்டேன்.
2827 | ஆலாலம் மிடற்றணியா அடக்கி னானை பாலாகித் தேனாகிப் பழமு மாகிப் மேலாய வேதியர்க்கு வேள்வி யாகி நாலாய மறைக்கிறைவ னாயி னானை |
6.074.9 |
ஆலால நஞ்சினைத்தன் கழுத்திற்கு அணியாகக் கொண்டு அதன் நச்சுத்தன்மையைக் கெடுத்தவனும், கல்லால மர நிழலில் அமர்ந்துசனகாதி முனிவர் நால்வருக்கும் அறமுரைத்தவனும், பாலும் தேனும் பழமும் பசிய கரும்பும் ஆகி அவற்றின் இனிய சுவையாய்ப் பயில்பவனும், மேன்மைமிக்க வேதியர்க்கு வேள்வியாய் விளங்குபவனும், வேள்வியின் பயனாய்விளை பவனும், குற்றமற்றவனும், நான் மறைகளாலும் இறைவனாகப் போற்றப்படுபவனும் ஆகிய சிவபெருமானை நாரையூராம் நன்னகரில் நான் கண்டேன்.
2828 | மீளாத ஆளென்னை உடையான் தன்னை மாளாமை மறையவனுக் குயிரும் வைத்து தோளாண்மை கருதிவரை யெடுத்த தூர்த்தன் நாளோடு வாள்கொடுத்த நம்பன் தன்னை |
6.074.10 |
விட்டுப்பிரியாத அடிமையாக என்னை உடையவனும், அறிவு ஒன்றிச் செய்தவழிபாட்டை விரும்புபவனும், மார்க்கண்டேய மறையவனுக்கு ஒருகாலும் மாளாதவாறு உயிரளித்து வலியகூற்றின் உயிர் நீங்கும் வண்ணம் உதைத்தவனும், தன்தோள் வலிமையை மதித்துக் கயிலை மலையை எடுக்க முயன்றகாமுகனாகிய இராவணனுடைய தோள்வலியும் முயற்சி மிகுதியும்கெடச் செய்து, அவன் தன்னை உணர்ந்த அப்பொழுதே அவனுக்கு மிகுந்த வாழ்நாளையும் வாளையும் வழங்கிய தலைவனும் ஆகிய சிவபெருமானை நாரையூராம் நன்னகரில்நான் கண்டேன்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 72 | 73 | 74 | 75 | 76 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருநாரையூர் - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கண்டேன், நன்னகரிற், நாரையூராம், சிவபெருமானை, தலைவனும், நன்னகரில்நான், திகழ்பவனும், நன்னகரில், தன்னைநாரையூர், நாரையூர், வண்ணம், கருள்செய், விளங்குபவனும், னானைநாரையூர், வணங்கும், வேதியர்க்கு, மணங்கமழும், செய்து, தக்கனது, தந்தையும், கயிலாய, நன்னக&, கொண்டு, வெள்ளிய, நீங்கும், நம்பன், தீயாடு, திருச்சிற்றம்பலம், திருமுறை, பவனும், கொண்டவனும், யாவர்க்கும், திருநாரையூர், ஆனவனும், உடையவனும்