முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.073.திருவலஞ்சுழி-திருக்கொட்டையூர்
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.073.திருவலஞ்சுழி-திருக்கொட்டையூர்

6.073.திருவலஞ்சுழி-திருக்கொட்டையூர்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலங்கள் சோழநாட்டிலுள்ளன.
திருவலஞ்சுழியில்,
சுவாமிபெயர் - கபர்த்தீசுவரர்.
தேவியார் - பெரியநாயகியம்மை.
திருக்கொட்டையூரில்,
சுவாமிபெயர் - சுந்தரகோடீசுவரர்.
தேவியார் - பந்தாடுநாயகியம்மை.
2809 | கருமணிபோற் கண்டத் தழகன் கண்டாய் பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய் வருமணிநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய் குருமணி போல் அழகமருங் கொட்டையூரிற் |
6.073.1 |
நிறம் வாய்ந்த மணிபோன்ற அழகுடையவனும், கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும், தலைவனுமாகிய சிவபெருமான் நீலமணி போற்றிகழும் கழுத்தால் அழகு மிக்கவனும் கல்லால மரநிழலில் இருந்தவனும், பருத்த மணிகளை உடைய பெரியபாம்பினை அணியாகப் பூண்டவனும், பவளக்குன்று போல் காட்சியளிக்கும் மேலோனும், தௌந்த நீர் ஒடிவரும் காவிரியின் கரையில் உள்ள வலஞ்சுழியில் உறைபவனும், தேவர்க்கெல்லாம் தலைவன் ஆகிய தேவனும், யாவர்க்கும் வரமருளும் வரதனும் ஆவான்.
2810 | கலைக்கன்று தங்கு கரத்தான் கண்டாய் அலைக்கங்கை செஞ்சடைமேல் ஏற்றான் கண்டாய் மலைப்பண்டங் கொண்டு வருநீர்ப் பொன்னி குலைத்தெங்கஞ் சோலைசூழ் கொட்டையூரிற் |
6.073.2 |
குலைகளை உடைய தெங்குகள் நிறைந்த சோலையால் சூழப்பட்ட கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவன் ஆகிய சிவபெருமான்மான் கன்றை ஏந்திய கரத்தனும், கலைகளைப் பயில்வோருக்குஞானக் கண்ணாய் விளங்குபவனும், அலைகள் பொருந்திய கங்கையாற்றைத் தன்செஞ்சடையில் ஏற்றவனும், அண்டச்சுவரின் உச்சிக்கும் அப்பாலவனும், மலைபடுபொருள்களை அடித்துக் கொண்டு வரும் நீரையுடைய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியிடத்து மேவிய மைந்தனும் ஆவான்.
2811 | செந்தா மரைப்போ தணிந்தான் கண்டாய் பந்தாடு மெல்விரலாள் பாகன் கண்டாய் மந்தாரம் உந்தி வருநீர்ப் பொன்னி கொந்தார் பொழில்புடைசூழ் கொட்டை யூரிற் |
6.073.3 |
பூங்கொத்துக்கள் நிறைந்த சோலைகள் நான்கு பக்கங்களிலும் சூழவிளங்கும் கொட்டையூரில் உள்ள கோடீச்சரத்து உறையும் தலைவன் செந்தாமரை மலரை அணிந்தவனும், சிவன்என்னும் நாமம் தனக்கே உரியவனும், தேவர்க்குத் தலைவனும், பந்தாடும் மெல்லிய விரல்களையுடைய பார்வதியைத்தன் ஆகத்தின் பாகத்தில் கொண்டவனும், பால்,தயிர், நெய், தேன் இவற்றில் ஆடப்பெறுபவனும், மந்தாரமரங்களைத் தள்ளிக் கொண்டு வரும் நீரையுடையகாவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியிடத்து நிலைபெற்று நிற்கும் மணவாளனும் ஆவான்.
2812 | பொடியாடு மேனிப் புனிதன் கண்டாய் இடியார் கடுமுழக்கே றூர்ந்தான் கண்டாய் மடலார் திரைபுரளுங் காவிரி வாய் கொடியாடு நெடுமாடக் கொட்டை யூரிற் |
6.073.4 |
துகில் கொடிகள் அசையும் உயர்ந்த மாடங்கள் நிறைந்த கொட்டையூரில் உள்ள கோடீச்சரத் துறையும் தலைவனாகிய சிவபெருமான் திருநீறு திகழுந் திருமேனியை உடையபுனிதனும், கருட வாகனனாகிய திருமாலுக்குச் சக்கராயுதத்தை உதவியவனும், இடிபோன்று அச்சந்தரும் முழக்கத்தையுடைய இடபத்தினை ஊர்பவனும், எட்டுத் திசைகளுக்கும் விளக்கமாய் நிற்பவனும், பூவிதழ்களைச் சுமந்த அலைகள் புரளும் காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியிடத்துப் பொருந்திய மைந்தனும் ஆவான்.
2813 | அக்கரவம் அரைக்கசைத்த அம்மான் கண்டாய் தக்கனது பெருவேள்வி தகர்த்தான் கண்டாய் மைக்கொண்மயிற் றழைகொண்டு வருநீர்ப் பொன்னி கொக்கமரும் வயல்புடைசூழ் கொட்டை யூரிற் |
6.073.5 |
கொக்குக்கள் அமர்ந்திருக்கும் வயல்கள் நாற்புறமும் சூழ்ந்துள்ள கொட்டையூரில் கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவபெருமான், சங்கு மணியையும், பாம்பையும் இடையில் கட்டியவனாய், உணர்தற்கரிய நான்மறைகளும் ஆறங்கங்களும் ஆனவனாய், தக்கனது பெருவேள்வியைத் தகர்த்தவனாய், சதாசிவனாய், சலந்தரன் உடலைப் பிளந்தவனாய், நீலநிற மயிற் பீலியை அடித்துக் கொண்டு வரும் நீரினையுடைய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியில் வாழ்பவனாய், கையில் மழு ஏந்தியவனாய் விளங்குபவன் ஆவான்.
2814 | சண்டனைநல் லண்டர்தொழச் செய்தான் கண்டாய் தொண்டர்பலர் தொழுதேத்துங் கழலான் கண்டாய் மண்டுபுனல் பொன்னிவலஞ்சுழியான் கண்டாய் கொண்டல்தவழ் கொடிமாடக் கொட்டை யூரிற் |
6.073.6 |
கொடிகள் கட்டப்பட்டு, மேகங்கள் தவழும் வண்ணம் மிக உயர்ந்த மாடங்களைக் கொண்ட கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவபெருமான், சண்டேசுரனை நல்ல தேவர்கள் தொழுமாறு செய்தவனும், சதாசிவனும், சங்கரனும், தொண்டர் பலரும் புகழ்ந்து வணங்கும் திருவடிகளை உடையவனும், பற்றிப் பின் தொடர்வதற்கு அரிய பேரொளிப் பிழம்பாய் நின்றவனும், மிக்குவரும் புனலையுடைய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியில் வாழ்பவனும், பெருமைமிக்க தவத்தவர் நுகரும் அமிர்தமும் ஆவான்.
2815 | அணவரியான் கண்டாய் அமலன் கண்டாய் பணமணிமா நாக முடையான் கண்டாய் மணல்வருநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய் குணமுடைநல் லடியார்வாழ் கொட்டை யூரிற் |
6.073.7 |
நற்குணமிக்க அடியார்கள் வாழ்கின்ற கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவபெருமான், எட்டுதற்கரியவனாய், குற்றமற்றவனாய், அழிவில்லாதவனாய், மேலுலகத்து உள்ளவனாய், படமுடைய பெரிய நாகத்தை அணிபவனாய், பண்டரங்கக் கூத்தினை ஆடுபவனாய், ஐசுவரியம் முதலிய ஆறு குணங்களை உடையவனாய், மணலை வாரிக் கொண்டுவரும் நீரையுடையகாவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியில் வாழ்பவனாய், திருமாலுக்கும் பிரமனுக்கும் அவர்கள் விரும்பிய அதிகாரத்தை வழங்குபவனாய் விளங்குபவன் ஆவான்.
2816 | விரைகமழும் மலர்க்கொன்றைத் தாரான் கண்டாய் அரையதனிற் புள்ளியத ளுடையான் கண்டாய் வருதிரைநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய் குரவமரும் பொழில்புடைசூழ் கொட்டை யூரிற் |
6.073.8 |
குராமரங்கள் நிறைந்த சோலைகள் நாற்புறமுஞ் சூழ்ந்த கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவபெருமான். மணங்கமழும் கொன்றைப் பூ மாலையை உடையவனும், வேதங்களால் போற்றப்படும் தலைவனும், புள்ளிகளை உடைய புலித்தோலை இடையில் உடையாக உடுத்தியவனும், அழலாடுபவனும், அழகனும், தொடர்ந்துவரும் அலைகளையுடையதும் நீர் நிரம்பியதும் ஆகியகாவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியில் வாழ்பவனும், வஞ்சமனத்தாரால் உணரப்படாத மைந்தனும் ஆவான்.
2817 | தளங்கிளருந் தாமரையா தனத்தான் கண்டாய் இளம்பிறையும் முதிர்சடைமேல் வைத்தான் கண்டாய் வளங்கிளர்நீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய் குளங்குளிர்செங் குவளைகிளர் கொட்டை யூரிற் |
6.073.9 |
குளிர்ந்தகுளங்களில் செங்குவளை மலர் மேலெழுந்து விளங்கும் கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவபெருமான், இதழ்கள் மிக்க தாமரை மலரை ஆதனமாக உடையவனாய், தயரதராமனுடைய துன்பங்களைக் களைந்தவனாய், இளம்பிறையையும் பாம்பினையும் கங்கையையும். தன்பழைய சடையில் வைத்தவனாய், கலைகள் அறுபத்து நான்கும் ஆனவனாய், வளத்தை மிகுவிக்கும் நீர்ப் பெருக்கினையுடைய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியில் வாழ்பவனாய், முனிவர்கள் வணங்கி எழும் பொற்பாதங்களை உடையவனாய் விளங்குபவன் ஆவான்.
2818 | விண்டார் புரமூன் றெரித்தான் கண்டாய் தண்டா மரையானும் மாலுந் தேடத் வண்டார்பூஞ் சோலைவலஞ் சுழியான் கண்டாய் கொண்டாடு வேதியர்வாழ் கொட்டை யூரிற் |
6.073.10 |
ஓதிய நான்மறை ஆறங்க, வழிஒழுகும் வேதியர்கள் வாழ்கின்ற கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவபெருமான், பகைவர் புரமூன்றையும் எரித்தவனும், வலிய அரக்கனாகிய இராவணன் உடலைக் கயிலை மலையின் கீழ் வைத்துச் சிதைத்தவனும், குளிர்ந்த தாமரையில் வாழ் நான்முகனும் திருமாலும் தேட நெருப்புப் பிழம்பாய் நீண்டவனாகிய கழலை உடையவனும், வண்டுகள் மொய்க்கும் பூஞ்சோலைகள்மிக்க வலஞ்சுழியில் வாழ்பவனும், தேவர்க்குத் தேவனும் ஆவான்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 71 | 72 | 73 | 74 | 75 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவலஞ்சுழி-திருக்கொட்டையூர் - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கண்டாய், கோமான், கோடீச்சரத்துறையும், சிவபெருமான், கரையிலுள்ள, சரத்துறையுங், கொட்டை, யூரிற்கோடீச், வலஞ்சுழியில், தலைவனாகிய, கொட்டையூரிலுள்ள, காவிரியின், சுழியான், பொன்னிவலஞ், நிறைந்த, கொண்டு, வாழ்பவனாய், கொட்டையூரில், வருநீர்ப், மைந்தன், தலைவன், உடையவனும், விளங்குபவன், வாழ்பவனும், உடையவனாய், நின்றான், கொடிகள், வாழ்கின்ற, உயர்ந்த, மானான், கழலான், நீரையுடையகாவிரியின், ஆனவனாய், இடையில், பொன்னிவலஞ்சுழியான், பிழம்பாய், அடித்துக், தேவியார், கண்டாய்மாதேவன், தேவனும், சுவாமிபெயர், திருச்சிற்றம்பலம், திருக்கொட்டையூர், திருமுறை, பொன்னிவலஞ்சுழியின், அலைகள், சோலைகள், தேவர்க்குத், பொழில்புடைசூழ், மைந்தனும், பொருந்திய, திருவலஞ்சுழி, தலைவனும்