முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.001.கோயில்
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.001.கோயில்

6.001.கோயில்
பெரியதிருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
பெரியதிருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர்.
தேவியார் - சிவகாமியம்மை.
2086 | அரியானை அந்தணர்தம் சிந்தை யானை தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத் கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக் பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் |
6.001.1 |
எவ்வளவு தகுதி உடையவரும் தம் முயற்சியால் அணுகுதற்கு அரியவன், அந்தணர்களின் உள்ளத்தில் உள்ளவன். மாற்றுதற்கு அரிய வேதத்தின் உட்பொருளாகியவன், நுண்ணியன், யாரும் தம் முயற்சியால் உணரப்படாத மெய்ப்பொருள் ஆகியவன். தேனும் பாலும் போன்று இனியவன். நிலைபெற்ற ஒளிவடிவினன், தேவர்களுக்குத் தலைவன், திருமாலையும் பிரமனையும், தீயையும், காற்றையும், ஒலிக்கின்ற கடலையும்மேம்பட்ட மலைகளையும் உடனாய் இருந்து செயற்படுப்பவன் ஆகிய மேம்படடவன். புலிக்கால் முனிவனுக்கு உறைவிடமாகிய தில்லையை உகந்து எழுந்தருளும் அப்பெருமானுடைய மெய்ப் புகழைப்பற்றி உரையாடாத நாள்கள் எல்லாம் பயன் அற்ற நாள்களாம்.
2087 | கற்றானைக் கங்கைவார் சடையான் றன்னைக் அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய் வானை மற்றாருந் தன்னொப்பா ரில்லா தானை பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் |
6.001.2 |
எல்லாம் வல்லவன், கங்கையைத் தாங்கிய நீண்ட சடையன். ஒரு பக்கத்தில் காவிரியால் சூழப்பட்ட திருவலஞ்சுழி என்ற திருத்தலத்தை உகந்தருளியிருப்பவன். பொருள் அற்றவருக்கும், தாங்குவார் இல்லாது வருந்துபவருக்கும், அருளுபவன். தன்னைத் தவிர வேறு எவரும் தனக்கு ஒப்பில்லாதவன். தேவர்களால் எப்பொழுதும் வணங்கிப் போற்றப்படுபவன். திருவாரூரிலும் உகந்து தங்கியிருப்பவன் ஆகிய எம்பெருமானை நாம் எல்லாருக்கும் மேலானவன் என்று அறிந்தோம். ஆதலின் அந்தப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.
2088 | கருமானின் உரியதளே உடையா வீக்கிக் வருமானத் திரள்தோள்கள் மட்டித் தாட அருமான வாண்முகத்தா ளமர்ந்து காண பெருமானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் |
6.001.3 |
யானைத் தோலை மேலாடையாக இறுக்கி உடுத்து, தன் கழல்களின் ஒலி ஏனைய இயங்களின் ஒலியோடு கலந்து ஒலிக்க, கையில் தீயை ஏந்தி, பெருமை வளர்கின்ற பருத்த தோள்களை மடித்து அவைகள் அசையுமாறு, பிறைமதியைச் சடையில் அணிந்து மானின் பார்வை போன்ற பார்வையளாகிய மேம்பட்ட சிறந்த ஒளியை உடைய முகத்தவளாகிய உமாதேவி விரும்பிக்காணுமாறும் தேவர் கூட்டம் தலை தாழ்த்து வணங்குமாறும் திருக்கூத்தாடுகின்ற மேம்பட்டவனாகிய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.
2089 | அருந்தவர்கள் தொழுதேத்தும் அப்பன் தன்னை மருந்தமரர்க் கருள்புரிந்த மைந்தன் தன்னை திருந்தொளிய தாரகையுந் திசைக ளெட்டுந் பெருந்தகையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் |
6.001.4 |
பெருந்தவத்தோர் தொழுது போற்றும் தலைவன், தேவர்கள் தலைவன், தீமைகளை அழிப்பவன், மூப்பு எய்தாமற் செய்யும் அமுதத்தைத் தேவர்களுக்கு உதவிய வலிமையுடையவன். அலைகள் மடங்கி வீழும் கடல், மேம்பட்டமலை, நிலம், வானம், திருத்தமான ஒளியை உடைய விண்மீன்கள், எண்திசைகள், வானத்தில் உலவுகின்ற காய்கதிர், மதியம், பிறவும், ஆகிய பொருள்களில் உடனாய் இருந்து அவற்றைச் செயற்படுத்தும் மேன்மையை உடையவன் ஆகிய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.
2090 | அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும் வருந்துணையுஞ் சுற்றமும் பற்றும் விட்டு பொருந்தணைமேல் வரும்பயனைப் போக மாற்றிப் பெருந்துணையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் |
6.001.5 |
ஒப்பற்ற துணைவன், அடியவர்களின் துயரைப் போக்கும் அமுதம் போன்றவன். பரந்த இவ்வுலகில் பிறப்பெடுத்த பின்னர் உடன்தோன்றும் துணைவர், ஏனைய சுற்றத்தார், செல்வம் இவற்றிலுள்ள பாசத்தை நீத்து, பெரியபுலன்களின்மேல் செல்லும் மனத்தை அடக்கி, மகளிரோடும் படுக்கையில் நுகரும் சிற்றின்பப்பயனை அடியோடு நீக்கி, ஏனைய தெய்வங்களோடு பொதுவாக நினைப்பதனை விடுத்துத் தன்னையே விருப்புற்று நினைத்தலில் வல்ல அடியவர்களுக்கு எக்காலத்தும் உடனாய் நின்று உதவும் துணைவன் ஆகிய பெரும்பற்றப்புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.
2091 | கரும்பமரும் மொழிமடவாள் பங்கன் தன்னைக் அரும்பமரும் பூங்கொன்றைத் தாரான் தன்னை சுரும்பமருங் கடிபொழில்கள் சூழ்தென் னாரூர்ச் பெரும்பொருளைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் |
6.001.6 |
கரும்பு போன்ற இனிய சொற்களை உடைய பார்வதியைத் தன் திருமேனியின் இடப்பகுதியாகக் கொண்டவன். மேம்பட்ட வயிரமலைபோன்ற வடிவினன். அலரும்பருவத்து அரும்பாய்க் கட்டிய கொன்றைப் பூமாலையான். நால்வேதமும் ஆறங்கமும் ஆயினான். வண்டுகள் விரும்பும் நறுமணச்சோலைகள் சூழ்ந்த அழகிய ஆரூரில் மேல் நோக்கும் சுடரொளி போன்றவன். ஒளிப்பிழம்பு அணைதல் இல்லாத விளக்குப் போன்றவன். வீடுபேற்று இன்பமாக இருப்பவன் ஆகிய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.
2092 | வரும்பயனை எழுநரம்பி னோசை யானை அரும்பயஞ்செ யவுணர்புர மெரியக் கோத்த சுரும்பமருங் குழல்மடவார் கடைக்கண் நோக்கில் பெரும்பயனைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் |
6.001.7 |
ஏழிசையாய் இசைப் பயனாய் உள்ளவன். மேருவை வில்லாகக் கொண்டு, தேவர்களையே அம்பாகக் கொண்டு கொடிய அச்சத்தை விளைத்த அசுரர்களின் மூன்று கோட்டைகளும் எரியுமாறு அம்பினைச் செலுத்திய தலைவன். அலைகடலில் தோன்றிய விடத்தை உண்டவன். வண்டுகள் தங்கும் பூக்களை அணிந்த கூந்தலை உடைய இளைய மகளிரின் கடைக்கண் பார்வையால் அசையாத உள்ளத்தை உடையவராய்ச் சிற்றின்பத்தை அறநீத்த உள்ளத்தார் அடையும் முடிந்த பயனாக இருப்பவன் ஆகிய பெரும் பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.
2093 | காரானை யீருரிவைப் போர்வை யானைக் ஆரேனும் அடியவர்கட் கணியான் தன்னை பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம் பேரானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் |
6.001.8 |
கரிய யானையின் உதிரப் பசுமை கெடாத தோலைப் போர்த்தியவன். விருப்பம் மருவிய பொலிவினை உடைய காஞ்சி நகரத்தின் ஏகம்பம் என்ற திருக்கோயிலை உகந்து எழுந்தருள்பவன். அடியவர்களை அண்மித்திருப்பவன். தம் முயற்சியால் அறிய முயலும் தேவர்களுக்கு அளவிட முடியாதவன். நிலவுலகத்தவரும் வானுலகத்தவரும் தன்னை வணங்குமாறு கூத்தினைப் பயில்கின்ற ஒளி உருவன் ஆகி எண்ணற்ற திருநாமங்களை உடையவன். அத்தகைய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.
2094 | முற்றாத பால்வமதியஞ் சூடி னானை செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் தன்னைத் குற்றாலத் தமர்ந்துறையுங் குழகன் தன்னைக் பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் |
6.001.9 |
வெள்ளிய பிறைமதியைச் சூடியவன். மூவுலகும் தானேயாய் இருக்கும் தலைவன். பகைவருடைய மும்மதிலையும் அழித்தவன். விளங்கும் ஒளிவடிவினன். இடப்பாகத்தது நிறத்தால் மரகதமணி போன்றவன். இன்பம்பயத்தலால் தேனும் பாலும் போன்றவன். குற்றாலம் என்ற திருத்தலத்தை உகந்தருளியிருக்கும் இளையவன். கூத்தாடுதலில் வல்லவன். யாவருக்கும் தலைவன். சிவஞானியர் ஞானத்தால் அறியப் பெற்றவன் ஆகிய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.
2095 | காரொளிய திருமேனிச் செங்கண் மாலுங் சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத் ஏரொளியை இருநிலனும் விசும்பும் விண்ணும் பேரொளியைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் |
6.001.10 |
கரிய உடல் ஒளியை உடையவனும் சிவந்த கண்களை உடையவனும் ஆகிய திருமாலும், நறுமணம் கமழும் செந்தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் தன் அடியையும் முடியையும் காணமுடியாதபடி சீரிய ஒளியை உடைய தீப்பிழம்பாய் நின்ற பழைய மேம்பட்ட ஒளியை உடையவன். உள்ளத்தில் உள்ள மயக்கத்தைப் போக்கும் ஞான ஒளியானவன். பெரிய இந்நில உலகையும், வானத்தையும், தேவர் உலகையும் உள்ளிட்ட ஏழு உலகங்களையும் கடந்து அவற்றிற்கு அப்பாலும் பரவும் எல்லையற்ற பேரொளிப் பிழம்பாய் இருப்பவன் ஆகிய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
கோயில் - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - பெரும்பற்றப், புலியூ, நாளெல்லாம், எல்லாம், ரானைப்பேசாத, புலியூரானைப், தலைவன், போன்றவன், உடையவன், உடனாய், உகந்து, முயற்சியால், இருப்பவன், மேம்பட்ட, தேவர்களுக்கு, வண்டுகள், உடையவனும், உலகையும், கொண்டு, கடைக்கண், போக்கும், பிறைமதியைச், துணைவன், இருந்து, கலந்து, உள்ளத்தில், தேனைப், திருச்சிற்றம்பலம், திருமுறை, உள்ளவன், தேனும், வல்லவன், கோயில், ஒளிவடிவினன், பாலும், திருத்தலத்தை