முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.099.திருப்புகலூர்
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.099.திருப்புகலூர்

6.099.திருப்புகலூர்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அக்கினீசுவரர்.
தேவியார் - கருந்தார்க்குழலியம்மை.
3057 | எண்ணுகேன் என் சொல்லி எண்ணு கேனோ கண்ணிலேன் மற்றோர் களைகண் இல்லேன் ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய் புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன் |
6.099.1 |
புண்ணியா, அழகிய புகலூர் மேவிய புண்ணியனே, நினையுந்தன்மை உடையேனாகிய நான் எம்பெருமானாகிய நினது திருவடியை விரும்பி நினையின் அல்லது வேறு எதனை விரும்பி நினைவேன்? நினது கழலடியையே கைதொழுது காணின் அல்லது வேறு காட்சியில்லேன்; மற்றொரு பற்றுக்கோடும் இல்லேன். யான் வாழ்வதற்குப் பொருந்திய உறையுளாகிய இவ்வுடம்பிலே ஒன்பது வாசல் வைத்தாய். அவையாவும் ஒரு சேர அடைக்கப்படும் காலத்து மேற்குறித்தவாறு உன்னையே நினைதலையும் காணுதலையும் செய்யமாட்டேன். ஆதலின் அக்காலம் வாராதபடி இப்பொழுதே உன் திருவடிக்கே வருகின்றேன். என்னை ஏற்றுக் கொண்டருள்வாயாக.
3058 | அங்கமே பூண்டாய் அனலா டினாய் பங்கமொன் றில்லாத படர்சடை யினாய் சங்கையொன் றின்றியே தேவர் வேண்டச் சிங்கமே உன்னடிக்கே போது கின்றேன் |
6.099.2 |
திருப்புகலூர் மேவியதேவ தேவே! எலும்புகளை அணியாகப் பூண்டவனே, அனலாடீ, ஆதிரை நாண்மீனை உடையவனே, கல்லால மர நிழலமர்ந்தோனே. ஆனேற்றை ஊர்ந்தவனே, குறைஒன்றுமில்லாத பரவியசடையினனே, பாம்பொடு திங்களை வைத்து வற்றின் பகை தீர்த்தாண்டவனே, தேவர் வேண்டப் பிறிது எண்ணம் ஒன்று இன்றியே சமுத்திரத்தில் தோன்றியநஞ் சினையுண்டு சாதலும் மூத்தலும் இல்லாத வலிய சிங்கமே! உன் திருவடிக்கே வருகின்றேன். என்னை ஏற்றுக் கொண்டருள்வாயாக.
3059 | பையரவக் கச்சையாய் பால்வெண் ணீற்றாய் மைவிரவு கண்ணாளைப் பாகங் கொண்டாய் ஐவரையும் என்மேல் தரவ றுத்தாய் பொய்யுரையா துன்னடிக்கே போது கின்றேன் |
6.099.3 |
அழகிய புகலூரில் மேவிய புண்ணியனே! பட நாகத்தைக் கச்சையாகக் கொண்டவனே, பால்போலும் வெள்ளிய திருநீற்றினாய், பளிக்குக் குழையினனே, பண்போலும் இன் சொல்லும் மை பூசிய கண்ணுமுடைய பார்வதியைப் பாகங்கொண்டவனே, மான் கன்றை ஏந்திய கையினனே, வஞ்சமிக்க கள்வரைப் போன்ற ஐம்புலன்களும் வஞ்சம் செய்தலை என்னினின்றும் நீக்கினை. அவை விரும்பும் காரியம் எனக்கு நன்மை பயக்குமாறு இல்லை. என்னுரை பொய்யுரையன்று: உன் திருவடிக்கே வருகின்றேன். என்னை ஏற்றுக்கொண்டு அருள்வாயாக.
3060 | தெருளாதார் மூவெயிலுந் தீயில் வேவச் மருளாதார் தம்மனத்தில் வாட்டந் தீர்ப்பாய் அருளாகி ஆதியாய் வேத மாகி பொருளாவாய் உன்னடிக்கே போது கின்றேன் |
6.099.4 |
அழகிய புகலூரில் மேவிய புண்ணியனே! தாங்கள் செய்து வந்த சிவ வழிபாட்டினை இடையிலேயே விட்டொழிந்த மயக்கத்தினராகிய திரிபுரத்தசுரரின் மூன்று மதிலும் தீயில் வேகுமாறு வில்லை வளைத்துச் செங்கணையால் அவற்றை அழித்த தேவனே! மயக்கமின்றி நின்னையே வழிபடுவார் மனத்தில் ஏற்படும் மெலிவைத் தீர்ப்பவனே! தேவர்களுக்கு மருந்தாய் என்றும் அவருற்ற பிணி தீர்ப்பவனே! அருளே உருவமாகி எப்பொருட்கும் முதலாகிய வேதமானவனே! பிரமனும் திருமாலும் தேடியும் காணமுடியாத பொருளானவனே! உன் திருவடிக்கே வருகின்றேன். என்னை ஏற்றுக் கொண்டருள்வாயாக.
3061 | நீரேறு செஞ்சடைமேல் நிலாவெண் டிங்கள் பாரேறு படுதலையிற் பலிகொள் வானே காரேறு முகிலனைய கண்டத் தானே போரேறே உன்னடிக்கே போது கின்றேன் |
6.099.5 |
அழகிய புகலூரில் மேவிய புண்ணியனே! கங்கை தங்கிய செஞ்சடைமேல் நிலவையுடைய வெள்ளிய திங்களை நீங்காமல் உறையும்படி விரும்பிவைத்த நீதியனே! பருமை பொருந்திய படுதலையில் பிச்சை கொள்வானே! பண்டு மன்மதனைச் சுட்டு எரித்தவனே! பாவங்களை நாசம் செய்பவனே! கருமை பொருந்திய மேகம் போன்ற கண்டத்தை உடையவனே! கரியதும் கையுடையதுமாகிய களிறுகதற அதனை உரித்து அதன் தோலைப் போர்த்த போர்த்தொழில் வல்ல சிங்கமே! உன் திருவடிக்கே வருகின்றேன். என்னை ஏற்றுக் கொண்டருள்வாயாக.
3062 | விரிசடையாய் வேதியனே வேத கீதா திரிபுரங்கள் எரிசெய்த தேவ தேவே மருவினியார் மனத்துளாய் மாகா ளத்தாய் புரிசடையாய் உன்னடிக்கே போது கின்றேன் |
6.099.6 |
அழகிய புகலூரில் மேவிய புண்ணியனே! விரி சடையாய்! வேதத்தாற் புகழப்படுவோனே! வேதத்தைப் பாடுபவனே! விரிந்த பொழிலால் சூழப்பட்ட வெண்காட்டினனே! மீயச்சூரை உடையவனே! திரிபுரங்களை எரித்தழித்த தேவதேவனே! திருவாரூர்த் திருமூலட்டானத்தில் விரும்பி உறைவோனே! இனிய பண்பு உடையாரின் மனத்துள்ளவனே! மாகாளத்து வாழ்பவனே! வலஞ்சுழி வள்ளலே! மாமறைக்காட்டெந்தையே! என்றும் முறுக்குண்டு திகழும் சடையானே! உன் திருவடிக்கே வருகின்றேன். என்னை ஏன்று கொண்டருள்வாயாக.
3063 | தேவார்ந்த தேவனைத் தேவ ரெல்லாந் நாவார்ந்த மறைபாடி நட்டம் ஆடி காவார்ந்த பொழிற்சோலைக் கானப் பேராய் பூவார்ந்த பொன்னடிக்கே போது கின்றேன் |
6.099.7 |
அழகிய புகலூரில் மேவிய புண்ணியனே! கடவுட்டன்மை மிக்க கடவுளே, எல்லாத் தேவரும் நான்முகனும், இந்திரனும், மாலும் தேடிக் கண்டு நின்று திருவடிமேல் பூக்களை இட்டு நாவிற்பொருந்திய மறையைப்பாடி நட்டம் ஆடிப் போற்ற இள மரக்காவுடன் பொருந்திய பொழிலாகிய சோலையையுடைய கானப் பேரூர் என்ற திருத்தலத்தில் விளங்குபவனே! கழுக்குன்றின் உச்சியில் உள்ளவனே! மனம் வாக்கு மெய்களைக் கடந்தவனே! நின் பூவைப் போலப் பொருந்திய அழகிய திருவடிக்கே வருகின்றேன். என்னை ஏன்றுகொண்டருள்வாயாக.
3064 | நெய்யாடி நின்மலனே நீல கண்டா மையாடு கண்மடவாள் பாகத் தானே கொய்யாடு கூவிளங் கொன்றை மாலை பொய்யாத சேவடிக்கே போது கின்றேன் |
6.099.8 |
அழகிய புகலூரில் மேவிய புண்ணியனே! நெய்யாடுபவனே, நின்மலனே, நீல கண்டனே, நிறைவுடையவனே, வேதம் வல்லானே, நீதியனே, மைவிரவு கண் மடவாள் பார்வதி திகழ் பாகத்தானே, மான்தோலை உடையாகக் கொண்டு மகிழ்ந்தவனே, இப்பொழுது பறித்தல் பொருந்திய, வில்வம் கொன்றை இவற்றால் ஆகிய மாலையைக் கொணர்ந்து இட்டு அடியேன் பொய்யில்லாத நின்புகழ்விரிக்கும் தோத்திரங்களைக் கூறி வழிபட்டு நின்று நின் சேவடிக்கே வருகின்றேன். என்னை ஏன்று கொண்டருள்வாயாக.
3065 | துன்னஞ்சேர் கோவணத்தாய் தூய நீற்றாய் தன்னணையுந் தண்மதியும் பாம்பும் நீருஞ் அன்ன நடைமடவாள் பாகத் தானே பொன்னங் கழலடிக்கே போது கின்றேன் |
6.099.9 |
அழகிய புகலூரில் மேவிய புண்ணியனே! தைத்தல் பொருந்திய கோவணத்தை உடையவனே! தூய நீற்றினனே! ஒளி மிகுந்து விளங்கும் வெள்ளிய மழுவாயுதத்தைக் கையிற் கொண்டு, தன்னைச் சார்ந்த குளிர்ந்த பிறையையும் பாம்பையும் கங்கையையும் சடைமுடிமேல் வைத்து மகிழ்ந்த அருள்தன்மையனே! அன்னநடை மடவாள் பார்வதி திகழும் பாகத்தை உடையவனே! எலும்பு மாலை அணிந்தவனே! முதற்கடவுளே! நான் நின் பொன்னால் ஆகிய கழல் அணிந்த திருவடிக்கே வருகின்றேன். என்னை ஏன்று கொண்டு அருள்வாயாக.
3066 | ஒருவனையும் அல்லா துணரா துள்ளம் இருவரையும் மூவரையும் என்மேல் ஏவி கருவரைசூழ் கானல் இலங்கை வேந்தன் பொருவரையாய் உன்னடிக்கே போது கின்றேன் |
6.099.10 |
அழகிய புகலூரில் மேவிய புண்ணியனே! ஒருவை ஆகிய நின்னையல்லது என் உள்ளம் வேறு உணராது. உணர்வு கலங்குமாறு புலனாகாது அருவாய் நின்ற இருவினைகளையும் முக்குணங்களையும் என்மேல் விடுத்துப் பொய்யான யான் எனது என்னும் செருக்கினை அறுத்தாய்க்குச் செய்யும் கைம்மாறு இல்லேன். ஏலம் நிறைந்த கரிய மலைகளைச் சூழ்ந்து கடற்கரை விளங்கும் இலங்கைக்கு அரசனது விரைந்து செல்லும் தேர், மேலே ஓடாமல் காலால் ஊன்றிய போர் செய்யும் திருக்கயிலாய மலையானே! நான் நின் திருவடிக்கே வருகின்றேன். என்னை ஏன்று கொண்டருள்வாயாக.
திருச்சிற்றம்பலம்
ஆறாம் திருமுறை முற்றும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்புகலூர் - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - புண்ணியனே, புண்ணி, கின்றேன்பூம்புகலூர், வருகின்றேன், திருவடிக்கே, புகலூரில், பொருந்திய, உன்னடிக்கே, கொண்டருள்வாயாக, உடையவனே, வெள்ளிய, ஏற்றுக், திருப்புகலூர், என்மேல், விரும்பி, திருமுறை, நின்று, மாலும், நட்டம், திகழும், நின்மலனே, இந்திரனும், சேவடிக்கே, விளங்கும், செய்யும், கொண்டு, பார்வதி, நீதியனே, மடவாள், கொன்றை, செஞ்சடைமேல், வைத்து, சிங்கமே, திங்களை, காணின், அல்லது, ஒன்பது, கைதொழுது, திருச்சிற்றம்பலம், என்றும், இல்லேன், தீர்ப்பவனே, தீயில், அருள்வாயாக, வைத்துகந்த