முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.098.திருமறுமாற்றத்-திருத்தாண்டகம்
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.098.திருமறுமாற்றத்-திருத்தாண்டகம்
6.098.திருமறுமாற்றத்-திருத்தாண்டகம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
3047 | நாமார்க்குங் குடியல்லோம் நமனையஞ்சோம் ஏமாப்போம் பிணியறியோம் பணிவோமல்லோம் தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க் |
6.098.1 |
நாம் வேறு யார்க்கும் அடிமை அல்லோம்; இயமனை அஞ்சோம்; நரகத்தில் புக்கு இடர்ப்படோம்; பொய்யும் இல்லோம்; என்றும் களிப்புற்றிருப்போம்; பிணியாவது இஃது என அறியோம்; வேறு யாரையும் பணிவோம் அல்லோம்; எந்நாளும் எமக்குள்ளது இன்பமே அன்றித் துன்பமில்லை. தான் யார்க்கும் அடிமையாகாத தன்மையனும், நல்ல சங்க வண்குழையை ஒரு காதில் உடைய கோமானும் ஆகிய சங்கரனுக்கு நாம் என்றும் மீளாத அடிமையாய் அப்பொழுது அலர்ந்த மலர் போன்ற அவன் உபய சேவடிகளையே அடைக்கலமாக அடைந்தோம் ஆகலின்.
3048 | அகலிடமே இடமாக ஊர்கள் தோறும் புகலிடமாம் அம்பலங்கள் பூமி தேவி இகலுடைய விடையுடையான் ஏன்று கொண்டான் துகிலுடுத்துப் பொன்பூண்டு திரிவா சொல்லும் |
6.098.2 |
பரந்த பூமிமுழுதும் எமக்கு இடமாகும். ஊர்கள் தோறும் தம் உணவை அட்டுண்ணும் இல்லறத்தான் அதனைப் பிறர்க்கு இட்டு அல்லது உண்ணாராதலின் எமக்கு உணவுப் பிச்சையிடுதலை அவர்கள் ஒருபோதும் விலக்கார். அம்பலங்கள் யாம் தங்கும் இடங்களாகும். யாம் தன்னுடன் கிடந்தால் பூமிதேவி எம்மைப் புரட்டி எறியாள். இது பொய்யன்று, மெய்யே. போர்விடையை ஊர்தியாக உடைய சிவபெருமானார் எம்மைத் தம் அடிமையாக ஏற்றுக் கொண்டார். அதனால் இனியாம் ஏதும் குறைவில்லேம்; துன்பமாயின எல்லாம் தீர்ந்தேம். குற்றமற்றேம் ஆயின் யாம் சிறந்த உடைகளை உடுத்துப் பொன்னாபரணங்களைப் பூண்டு திரியும் அரசர் சொல்லும் சொல்லை ஏற்க வேண்டிய கடப்பாடு உடையேம் அல்லேம்.
3049 | வாராண்ட கொங்கையர்சேர் மனையிற் சேரோம் நீராண்ட புரோதாயம் ஆடப் பெற்றோம் காராண்ட மழைபோலக் கண்ணீர் சோரக் பாராண்டு பகடேறி வருவார் சொல்லும் |
6.098.3 |
கச்சணிந்த கொங்கை மாதருடன் சேர்ந்து வாழும் இல்வாழ்க்கையில் பொருந்தோம். மகாதேவா மகாதேவா என்று பலகாலும் அவனை வாழ்த்தி விடியற்காலத்து நீராடப் பெற்றோம், திருநீறணியும் சைவத் திருக்கோலமே எம்பால் நிலவப் பெற்றோம். பண்டு கல்லாய்த் திகழ்ந்த மனம் கரிய மேகம் பொழியும் மழை போலக் கண்ணீர் சோருமாறு நன்மனமாய்க் கரையப் பெற்றோம். ஆகவே உலகியற் பொருளில் பற்றற்றேமாகிய யாம் பூமி முழுவதையும் ஆண்டு ஆனை ஏறி வரும் அரசர் ஏவும் பணிகளை ஏற்க வேண்டிய கடப்பாட்டினேம் அல்லேம்.
3050 | உறவாவார் உருத்திரபல் கணத்தி னோர்கள் செறுவாருஞ் செறமாட்டார் தீமை தானும் நறவார்பொன் னிதழிநறுந் தாரோன் சீரார் சுறவாருங் கொடியானைப் பொடியாக் கண்ட |
6.098.4 |
சிவவேடத்தையுடைய சிவனடியார்கள் எம் உறவினர் ஆவர். கோவணமும் கீளும் யாம் உடுப்பனவாய் உள்ளன. ஆகவே பகைவரும் எம்மை வெகுளார். தேன் நிறைந்து பொன் போன்று திகழும் நல்ல கொன்றை மாலையணிந்த புகழுடைய சிவபெருமானுடைய நமச்சிவாய மந்திரத்தை நாவால் சொல்ல வல்லேமாய்ச் சுறவுக்கொடியானாகிய மன்மதனைப் பொடியாக அக்கினி நேத்திரத்தை விழித்த சோதிவடிவினனையே தொடர்வுற்றே மாதலின், தீமை, நன்மையாய்ச் சிறக்கப் பிறப்பிற் செல்லேம் ஆயினேம்.
3051 | என்றும்நாம் யாவர்க்கும் இடைவோ மல்லோம் சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோ மல்லோம் ஒன்றினாற் குறையுடையோ மல்லோ மன்றே பொன்றினார் தலைமாலை யணிந்த சென்னிப் |
6.098.5 |
சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோமாய், இறந்த பிரமவிட்டுணுக்களுடைய தலைகளை மாலையாகக் கோத்து அணிந்த தலையையுடைய புண்ணியனை நண்ணிய புண்ணியத்து உள்ளோமாதலின் யாவர்க்கும் யாம் என்றும் பின்வாங்குவோம் அல்லோம். இப்பரந்த பூமியில் எமக்கு எதிராவார் யாரும் இல்லை. யாம் தேடிச்சென்று சிறு தெய்வங்களைச் சேர்ந்து தொழுவோம் அல்லோம். யாம் ஒன்றினாலும் குறையுடையேம் அல்லேம். அதனால் மிக்க பிணிகள் எம்மைத் துன்புறுத்தலை விட்டு ஓடிப்போயின.
3052 | மூவுருவின் முதலுருவாய் இருநான் கான தேவர்களும் மிக்கோருஞ் சிறந்து வாழ்த்தும் நாவுடையார் நமையாள வுடையா ரன்றே காவலரே யேவி விடுத்தா ரேனுங் |
6.098.6 |
"அயன், அரி, அரன் என்னும் மூவுருவிற்கும் முதலுருவாயவனே! அட்டமூர்த்தியே! முப்பத்து மூவர் தேவர்களும் அவர்களின் மிக்க இருடியரும் எக்காலத்தும் மகிழ்ச்சி மிக்கு வாழ்த்தும் செம்பவளத் திருமேனியுடைய சிவனே" என்று போற்றும் நாவுடையாரே நம்மை அடிமை கொண்டு ஆள உடையாராவார். அதனால் கடிதாய செயலும் களவும் அற்றோமாகிய யாம் நாவலந் தீவு முழுவதற்கும் தலைவரான அரசரே எம்மை அழைத்து வருமாறு தம் ஏவலரை ஏவி விடுத்தாராயினும் அவர் ஆணை வழி நிற்கும் கடப்பாட்டினேம் அல்லேம்.
3053 | நிற்பனவும் நடப்பனவும் நிலனும் நீரும் அற்பமொடு பெருமையுமாய் அருமை யாகி தற்பரமாய்ச் சதாசிவமாய்த் தானும் யானும் பொற்புடைய பேசக் கடவோம் பேயர் |
6.098.7 |
நிற்பனவும், நடப்பனவும், நிலனும், நீரும், நெருப்பும், காற்றும், நெடுவானும், புன்மையதும், பெரியதும், அரியதும், அன்புடையார்க்கௌயதும், அளக்கலாகாத் தற்பரமும், சதாசிவமும் ஆகித் தானும் யானும் ஆகின்ற தன்மையுடைய சிவபெருமானை அவன் நன்மைகளையும், பொலிவுடைய தன்மைகளையும் புகழ்ந்து பேசக் கடவோம்; அதனால் பிழையற்றோம். அரசனுக்கு வணங்கி நின்று அவனுக்கேற்பப் பேயர் பேசுமாறு போலயாம் பேசுவமோ?
3054 | ஈசனையெவ் வுலகினுக்கும் இறைவன் தன்னை தேசனைச் செம்மேனி வெண்ணீற் றானைச் நேசனை நித்தலும் நினையப் பெற்றோம் வாசக மெல்லாம் மறந்தோ மன்றே |
6.098.8 |
எவ்வுலகினுக்கும் ஈசனும், இறைவனும், தேவர்கள் தலைவனும், எரிபோன்று மிக்கு ஒளிரும் தேசனும், செம்மேனியிடத்து வெண்ணீற்றானும், மலையரையன் பொற்பாவை தன்னைக் காதலிக்க, தானும் அவளைக் காதலிக்கும் நேசனும் ஆகிய சிவபெருமானைத் தினமும் நினையப் பெற்றோம். அதனால் நின்றுண்ணும் சமணர் என்றும் மறவாதிருக்கும்படி எமக்குச் சொன்ன உறுதிபோலும் சொற்களை எல்லாம் யாம் மறந்தொழிந்தோம். இந்நிலையில் என்னிடம் வந்த நீர் யார்? மன்னன் ஆவான் தானும்யாரே?.
3055 | சடையுடையான் சங்கக் குழையோர் காதன் விடையுடையான் வேங்கை அதள் மேலாடை உடையுடையான் நம்மை யுடையான் கண்டீர் படையுடையான் பணிகேட்கும் பணியோ மல்லோம் |
6.098.9 |
சடையுடையானும் ஒருகாதில் விளங்கும் சங்கக் குழையானும், சாம்பலைப் பூசிப் பாம்பை அணிந்த மேனியானும், விடையுடையானும், புலித்தோலாம் மேலாடையானும், வெள்ளி போல் திகழும் புள்ளிகளையுடைய உழைமானின் தோலால் அமைந்த உடை உடையானும் ஆகிய சிவபெருமானே நம்மை அடிமையாக உடையான் ஆவான். அதனால் பாசத்தை முழுதும் உதறியெறியும் நிலையினை உடையோம். ஆகவே உம்மையும் மற்றுமுள்ள படை வீரர்களையுமுடைய அரசனுடைய ஆணைகேட்கும் தொழில் உடையோம் அல்லோம்.
3056 | நாவார நம்பனையே பாடப் பெற்றோம் ஆவாஎன் றெமையாள்வான் அமரர் நாதன் தேவாதி தேவன் சிவனென் சிந்தை கோவாடிக் குற்றேவல் செய்கென் றாலும் |
6.098.10 |
நாவிடத்து இன்பம் நிறையச் சிவபெருமானையே பாடப் பெற்றோம் அதனால் உடை உடாத சமணர் எம்மை விரும்பாது விலகப்பெற்றோம். அமரர் தலைவனாகிய சிவபெருமான் மனமிரங்கி எமை ஆள்வான். நான்முகனும் திருமாலும் அறிதற்கு அரிய அனற் பிழம்பாய் நீண்டவனும் தேவர்க்குத் தேவனுமாகிய சிவபெருமான் எம் சிந்தையில் மன்னி நின்றான். அதனால் அவனுக்குரிய எண் குணங்களை உடையேமாயினேம். ஆகவே இயமனே வந்து தன் தலைமையை உரைத்து எம்மைக் குற்றேவல் செய்க என்றாலும் அதனை எமக்குரிய நெறியாகக் கொள்ளோம்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 93 | 94 | 95 | 96 | 97 | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமறுமாற்றத்-திருத்தாண்டகம் - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - அதனால், அல்லோம், பெற்றோம், என்றும், அல்லேம், சிவபெருமான், தானும், அணிந்த, எமக்கு, திருத்தாண்டகம், குற்றேவல், உடையோம், திருவடியே, திகழும், பிறப்பிற், சங்கக், யாவர்க்கும், மிக்கு, நிலனும், பொற்பாவை, கடப்பாட்டினேம், நடப்பனவும், நினையப், நிற்பனவும், கடவோம், கரையப், ஊர்கள், விலக்கார், அம்பலங்கள், யார்க்கும், குழையோர், திருமுறை, திருச்சிற்றம்பலம், கடவோமோ, எம்மைத், நன்மனமாய்க், திருமறுமாற்றத், சேர்ந்து, கண்ணீர், வேண்டிய, அடிமையாக, எல்லாம், மகாதேவா