முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.072.திருவலஞ்சுழி
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.072.திருவலஞ்சுழி

6.072.திருவலஞ்சுழி
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காப்பகத்தீசுவரர்.
தேவியார் - மங்களநாயகியம்மை.
2808 | அலையார் புனற்கங்கை நங்கை காண தொலையாத வென்றியார் நின்றி யூரும் டிலையார் படைகையி லேந்தி யெங்கும் மலையார் திரளருவிப் பொன்னி சூழ்ந்த |
6.072.1 |
அலைபொருந்திய நீரையுடைய கங்கையை உமையம்மை காணுமாறு அம்பலத்தில் பிறர் ஆடுதற்கரிய திருக்கூத்தை ஆடி. அக்கூத்து வேடம் ஒரு காலும் விட்டு நீங்காத வெற்றியையுடைய சிவபெருமான் நின்றியூரையும், நெடுங்களத்தையும் விரும்பிப் பொருந்தி, இடபவாகனத்தை ஏறி இலைவடிவு கொண்ட முனைகளையுடைய படைக்கலங்களைக் கையிலேந்தி, எல்லா இடங்களிலும் நிறைந்து, இமையவரும், அருகிலிருந்து, உமையும் வணங்கித் துதிக்க மலையின் கண் நிறைந்து திரண்ட அருவியால் ஆகிய காவிரியாறு சூழ்ந்த வலஞ்சுழியைத் தாம் புகுந்துறையும் இடமாகவிரும்பி மேற்கொண்டார்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 70 | 71 | 72 | 73 | 74 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவலஞ்சுழி - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - நிறைந்து, திருச்சிற்றம்பலம், திருமுறை, திருவலஞ்சுழி