முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.075.திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம்
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.075.திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம்

6.075.திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மடந்தைபாகேசுவரர்.
தேவியார் - பெரியநாயகியம்மை.
2829 | சொன்மலிந்த மறைநான்கா றங்க மாகிச் கன்மலிந்த கயிலைமலை வாணர் போலுங் மன்மலிந்த மணிவரைத்திண் தோளர் போலும் கொன்மலிந்த மூவிலைவேற் குழகர் போலுங் |
6.075.1 |
குடந்தைக் கீழ்க்கோட்டத்துத்திகழும் எம் கூத்தனார், சொல் வடிவாய் நிற்கும் நான்குமறைகளும் ஆறு அங்கங்களும் ஆனவரும், சொல்லையும் அதன் பொருளையும் கடந்த ஒளிப்பிழம்பாம் தன்மையரும், பக்க மலைகள் நிறைந்த கயிலை மலையில்வாழ்பவரும், கடலிடத்துத் தோன்றிய நஞ்சையுண்டுகறுத்த கழுத்தினரும், வலிமைமிக்க அழகிய மலைபோன்ற திண்ணிய தோளினரும், பருவதராசன் மகள்பார்வதியின் கணவரும், கொலைத் தொழில் பழகியமூவிலை வேலை ஏந்திய அழகரும் ஆவார்.
2830 | கானல்இளங் கலிமறவ னாகிப் பார்த்தன் ஆனல்இளங் கடுவிடையொன் றேறி யண்டத் தேனலிளந் துவலைமலி தென்றல் முன்றிற் கூனல்இளம் பிறைதடவு கொடிகொள் மாடக் |
6.075.2 |
நல்லதேனின் சிறியதுளிகளை மிகுதியாக ஏந்தித் தென்றல் தவழும் முன்றிலின் கண்ணுள்ள பொழிலிடத்துப் பாளைகள் விரிதலால் துளிக்கும் தேனின் மணம் கமழப்பெறுவனவும், வளைவு பொருந்திய இளம்பிறையைத் தடவும்துகிற் கொடிகளைக் கொண்டவனும் ஆகிய, மாடங்களை உடைய குடந்தைக் கீழ்க்கோட்டத்துத் திகழும் எம்கூத்தனார், காட்டில் எழுச்சிமிக்க நல்லிள வேட்டுவன் ஆகி விசயனுடைய ஊக்கத்தின் அளவினையும் விற்றொழிலின் பயிற்சி முழுவதையும் அறிந்தவரும், விரைந்து நடக்கும் நல்லிள ஆனேற்றை ஊர்ந்து இந்நிலவுலகிற்கு அப்பாலும் பிச்சைக்கொள்ளத் திரியும் அழகரும் ஆவார்.
2831 | நீறலைத்த திருவுருவும் நெற்றிக் கண்ணும் ஆறலைத்த சடைமுடியும் அம்பொன் தோளும் ஏறலைத்த நிமிர்கொடியொன் றுடையர் போலும் கூறலைத்த மலைமடந்தை கொழுநர் போலுங் |
6.075.3 |
குடந்தைக் கீழ்க்கோட்டத்துத் திகழும் எம் கூத்தனார் திருநீறுபொருந்திய தம் திருவுருவத்தையும், நெற்றிக் கண்ணினையும், பிறையொடு பாம்பும் நீர் நிறைந்த கங்கையும் பொருந்திய சடைமுடியையும், அழகிய பொன்நிறத் தோள்களையும் அடியவர்க்குக் காட்டி அருள்புரிவாராய், இடபம் பொறித்த கொடியை உயர்த்தியவராய், ஏழுலகங்களும் வணங்கும் திருவடிகளை உடைய ஈசராய்த் தம் இடப்பங்காய் இடம் பெற்ற மலைமகட்குக் கொழுநராயும் திகழ்பவர்.
2832 | தக்கனது பெருவேள்வி தகர்த்தார் போலுஞ் செக்கரொளி பவளவொளி மின்னின் சோதி மிக்கதிறல் மறையவரால் விளங்கு வேள்வி கொக்கினிய கனிசிதறித் தேறல் பாயுங் |
6.075.4 |
வேதவழி ஒழுகுதலில்மிக்க வன்மையுடைய மறையவராய் விளக்கம் பெறும்வேள்வியிடத்து எழும் மிகு புகை விண்ணிடத்துப்போய் மழையைப் பெய்விக்க, கழனிகளில் மாமரத்தினுடைய இனிய கனிகள் சிதற அவற்றின் சாறு பரவிப் பாயும்குடந்தைக் கீழ்க் கோட்டத்துத் திகழும் எம் கூத்தனார், தக்கனது பெருவேள்வியை அழித்தவரும், சந்திரனை ஒற்றைக்கலையுடன் கைப்பற்றித் தலையில் தரித்துக்காப்பாற்றியவரும், செவ்வானொளி, பவளஒளி, மின்னொளி, கொழுவிய சுடர்த்தீயொளி, ஞாயிற்றொளி, ஆகிய எல்லா ஒளியும் ஒருங்கு கலந்தாற்போன்ற செம்மை நிறம் உடையவரும் ஆவார்.
2833 | காலன்வலி தொலைத்தகழற் காலர் போலுங் ஆலதனில் அறம்நால்வர்க் களித்தார் போலும் நீலவுரு வயிரநிரை பச்சை செம்பொன் கோலமணி கொழித்திழியும் பொன்னி நன்னீர்க் |
6.075.5 |
அழகிய அரதனங்களைக்கரையில் ஒதுக்கி, மலையினின்று இறங்கிவரும் காவிரியின் நன்னீரால் சிறப்புமிகும் குடந்தைக் கீழ்க்கோட்டத்துத்திகழும் எம் கூத்தனார், இயமனது ஆற்றலையழித்ததும், கழல் அணிந்ததும் ஆகிய காலை உடையவரும், மன்மதனது அழகிய உடலை அழல் உண்ணும் வண்ணம் நுதற் கண்ணைவிழித்து நோக்கியவரும், சனகாதி முனிவர் நால்வர்க்கும், கல்லாலின் கீழ் அமர்ந்து அறம் உரைத்தருளியவரும், ஆண் பெண் அலிகளின் அல்லராம் தன்மை உடையவரும், நீலமணி, வரிசைப் படப்பதித்தற்குரிய வயிரம், பச்சை, செம்பொன், நீடு பளிங்கு என்றிவற்றுள் இன்னது ஒன்றுபோலும் நிறத்தினர் என உணர ஒண்ணாததொரு நிறமுடையவரும் ஆவார்.
2834 | முடிகொண்ட வளர்மதியும் மூன்றாய்த் தோன்றும் அடிகொண்ட சிலம்பொலியும் அருளார் சோதி துடிகொண்ட இடைமடவாள் பாகங் கொண்டு குடிகொண்டென் மனத்தகத்தே புகுந்தார் போலுங் |
6.075.6 |
குடந்தைக் கீழ்க்கோட்டத்துத்திகழுமெம் கூத்தனார், முடியினிடத்தே வளர்மதியைத் தரித்தவராய், மூன்றாய் எழுந்து தோன்றும் இளஞாயிறுகள் என்னத் தக்க மலர்க்கண்கள் மூன்றுடையவராய், பாதத்தில்கட்டப்பட்டொலிக்கும் சிலம்பினராய், அருள் நிறைந்து ஒளிமிக்க வரிசையான பற்களுடன் அழகிதாய் விளங்கும் செவ்வாயினராய், உடுக்கை போன்ற இடுப்பினை உடைய உமையம்மையை இடப்பங்காய்க் கொண்டவராய், ஒளிப்பிழம்பாய் விளக்கம் மிக்க செம்பொன்மலை போன்றவராய், இந்நாள் என் மனத்திடத்தே புகுந்துகுடிகொண்டவர் ஆவார்.
2835 | காரிலங்கு திருவுருவத் தவற்கும் மற்றைக் சீரிலங்கு தழற்பிழம்பிற் சிவந்தார் போலுஞ் பாரிலங்கு புனல்அனல்கால் பரமா காசம் கூரிலங்கு வேற்குமரன் தாதை போலுங் |
6.075.7 |
குடந்தைக் கீழ்க்கோட்டத்துத்திகழும் எம் கூத்தனார் மேகம் போல விளங்கும் அழகிய உருவத்தையுடைய திருமாலுக்கும், படைப்பிற்குக் காரணராய்த் தாமரை மலரில்விளங்கும் பிரமனுக்கும் காண முடியாதபடி புகழ் நிலவும்நெருப்புப்பிழம்பு உருவத்தில் சிவந்து காணப்பட்டவரும், மலையை வில்லாக வளைத்து அசுரருடைய முப்புரங்களையும் அழித்தவரும், விளங்கும் நிலம், நீர், தீ, காற்று மேம்பட்ட ஆகாயம், சூரியன் சந்திரன், சுருதி என்றிவையாய்ப் பரவி நின்றவரும், கூர்மையுடன் திகழும் வேலையுடைய குமரனுக்குத் தந்தையானவரும் ஆவார்.
2836 | பூச்சூழ்ந்த பொழில்தழுவு புகலூ ருள்ளார் மாச்சூழ்ந்த பழனத்தார் நெய்த்தா னத்தார் தீச்சூழ்ந்த திகிரிதிரு மாலுக் கீந்து கோச்சோழர் குலத்தரசு கொடுத்தார் போலும் |
6.075.8 |
குடந்தைக் கீழ்க்கோட்டத்துத் திகழும் எம் கூத்தனார் பூக்கள் பரவிய பொழிலால் தழுவப்பட்ட புகலூரில் உள்ளவரும், புறம்பயத்தில் உறைபவரும், அறத்தை மக்கள் விரும்பி மேற்கொள்ளும் பூந்துருத்தியில் புக்கவரும், வண்டுகள் சூழ்ந்தபழனத்தை விரும்பிக் கொண்டவரும், நெய்த்தானத்து நிலைத்தவரும், சிறந்த தவஞ்செய்தற்கு ஏற்றசோற்றுத்துறையைப் போற்றிக் கொண்டவரும், தீயைப் போன்ற ஒளியை உமிழும் சக்கராயுதத்தைத் திருமாலுக்கு ஈந்தவரும், திருவானைக்காவில் தொண்டுசெய்த ஒப்பற்ற சிலந்திக்கு மேம்பட்ட சோழர்குடிக்குரிய அரசாட்சியை அந்நாள் கொடுத்தவரும் ஆவார்.
2837 | பொங்கரவர் புலித்தோலர் புராணர் மார்பிற் சங்கரவக் கடன்முகடு தட்ட விட்டுச் அங்கரவத் திருவடிக்காட் பிழைப்பத் தந்தை கொங்கரவச் சடைக்கொன்றை கொடுத்தார் போலும் |
6.075.9 |
குடந்தைக் கீழ்க்கோட்டத்துத்திகழும் எம் கூத்தனார் சினம் மிகும் பாம்பை அணிந்தவரும், புலித்தோலை உடுத்தவரும், பழமையானவரும், உத்தம இலக்கணமாகிய பொறிகள் (மூன்று வரிகள்) விளங்கும்மார்பிடத்து வெள்ளிய பூணூலைத் தரித்த புனிதரும், சங்குகள் வாழ்வதும் ஒலியுடையதும் ஆகிய கடல் அண்டமுகட்டில் சென்று மோதுமாறு கைகளை வீசித் திறம்படநடனமாடும் அநாதிசைவரும், கழலும், சிலம்பும் கிடந்து ஒலிக்கும் திருவடிக்கு ஆளாதலில் தவறியதனால், தந்தையாகிய அந்தணனைத் தாளிரண்டும் வெட்டுண்டு வீழ மழுவினாலெறிந்தசண்டேசருக்கு அப்பொழுதே அரவம் தவழும் சடை முடியிடத்துத் திகழும் கொன்றை மாலையைக் கொடுத்தவரும் ஆவார்.
2838 | ஏவியிடர்க் கடலிடைப்பட் டிளைக்கின் றேனை கூவிஅம ருலகனைத்து முருவிப் போகக் தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை கோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த |
6.075.10 |
முதன்மை பொருந்தியகாவிரி, நல்யமுனை, கங்கை, சரசுவதி, பொற்றாமரை, பிற தாமரைத் தடாகங்கள், தௌநீர்க் கிருட்டிணை, குமரி ஆகிய தீர்த்தங்கள் தாவிவந்து சூழ்ந்த குடந்தைக் கீழ்க்கோட்டத்துத் திகழுமெம் கூத்தனார், என்வினைக்கு ஈடாகத் தம்மால் செலுத்தப்பட்டுத் துன்பக்கடலில் வீழ்ந்து துன்புறுகின்ற என்னைக் கூவிக் கரை ஏறும்படிஎடுத்து, இப்பிறவியை அறுத்து யான் விண்ணவர் உலகம் எல்லாவற்றையும் தாண்டித் தமது சிவலோகத்தில் சென்றுசேரும்படி, மாயை கலவாத தம் அருட்குணம் ஆறனுள்ளும்படுத்து என்னை ஆட்கொண்டவர் ஆவார்.
2839 | செறிகொண்ட சிந்தைதனுள் தௌந்து தேறித் நெறிகொண்ட குழலியுமை பாக மாக மறிகொண்ட கரதலத்தெம் மைந்தர் போலும் குறிகொண்ட இன்னிசைகேட் டுகந்தார் போலும் |
6.075.11 |
குடந்தைக் கீழ்க்கோட்டத்துத்திகழும் எம் கூத்தனார், இறையின்பம் எய்துதலையே முடிந்தபயனாய்த் தௌயவுணர்ந்து தியானத்தில் செறிந்து நிற்பார் சிந்தையில் தித்திக்கும் சிவலோகத்து அமுதம் ஆவாரும், நெறித்த கூந்தலையுடையஉமை ஒருபாகமாக இருக்க, அமரர் கூட்டம் வணங்க, எல்லாநலனும் நிரம்பப்பெற்றுத் திகழ்ந்தவரும், மான்கன்றைத்தம் கரத்தில் ஏந்திய எம் வலியரும், மதிற்காவல்மிக்க இலங்கையிறை கருத்தழியுமாறு மலைக்கீழ் இட்டு அவனை ஒறுத்துப் பின் இலக்கணம் அமைந்த அவன் இசையைக் கேட்டு விருப்புற்று அவனுக்கு நலம்பல நல்கினவரும் ஆவார்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 73 | 74 | 75 | 76 | 77 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கூத்தனார், குடந்தைக், கோட்டத்தெங், திகழும், கீழ்க்கோட்டத்துத்திகழும், கீழ்க்கோட்டத்துத், போலுங்குடந்தைக்கீழ்க், உடையவரும், விளங்கும், போலும்குடந்தைக்கீழ்க், கொண்டவரும், கொடுத்தவரும், தக்கனது, விளக்கம், அழித்தவரும், கொடுத்தார், நெற்றிக், மேம்பட்ட, பொருந்திய, ஏந்திய, நிறைந்த, திருச்சிற்றம்பலம், திருமுறை, அழகரும், கண்டார், திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம், தவழும், தென்றல், நல்லிள