முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.067.திருக்கீழ்வேளூர்
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.067.திருக்கீழ்வேளூர்
6.067.திருக்கீழ்வேளூர்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அட்சயலிங்கநாதர்.
தேவியார் - வனமுலைநாயகியம்மை.
2756 | ஆளான அடியவர்கட் கன்பன் தன்னை தாளானைத் தன்னொப்பா ரில்லா தானைச் தோளானைத் தோளாத முத்தொப் பானைத் கீளானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக் |
6.067.1 |
தனக்கு அடிமையான அன்பர்களுக்குத் தானும் அன்பனாய், பஞ்சகவ்விய அபிடேகம் செய்பவனாய், நான் அடைக்கலம் புகுந்த திருவடிகளை உடையவனாய், ஒப்பற்றவனாய், சந்தனமும் குங்குமமும் வாசக்கலவைகளும் பூசப்பட்ட தோள்களை உடையவனாய், துளையிடப்படாத முத்தினை ஒப்பவனாய், தூய வெள்ளிய கோவணத்தைக் கீளோடு இடுப்பில் கட்டியவனாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள என்றும் அழிதல் இல்லாத பெருமானை அடைக்கலமாக அடைபவர்கள் பிறந்து இறத்தலாகிய கேட்டினை எதிர்காலத்தில் பெறாதார் ஆவர்.
2757 | சொற்பாவும் பொருள்தெரிந்து தூய்மை நோக்கித் நற்பான்மை அறியாத நாயி னேனை பற்பாவும் வாயாரப் பாடி யாடிப் கிற்பானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக் |
6.067.2 |
சிவபெருமானுடைய இயல்புகளை உணர்த்தும் பாடல்களில் உள்ள சொற்களின பொருளை நன்றாக உணர்ந்து, மலங்கள் பற்றற நீங்கப் பெற்றுப் பசுபோதம் நீங்கி, அருளில் அடங்கி நில்லாதவர்கள் உள்ளத்திலுள்ள அஞ்ஞானத்தை நீக்காதவனாய், உய்வதற்குரிய வழியை அறியாத நாய் போன்ற கீழ்மையனாகிய என்னை நல்ல வழியில் செல்லும் வண்ணம் விரும்பி ஆட்கொண்டவனாய், பற்கள் வரிசையாக அமைந்தவாயினால், உச்சரிப்பில் குறை ஏற்படாதவகையில் பாடியும் ஆடியும் பணிந்து எழுந்தும், குறை இரந்து தன்னைச் சரணமாக அடைந்தவர்களுடைய பாவங்களைப் போக்கும் ஆற்றலுடையவனாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள அழிவற்ற பெருமானை அடைக்கலமாக அடைந்தவர்கள் கேடுஇலார்.
2758 | அளைவாயில் அரவசைத்த அழகன் தன்னை விளைவானை மெய்ஞ்ஞானப் பொருளா னானை குளைவானை அல்லாதார்க் குளையா தானை கிளைவானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக் |
6.067.3 |
புற்றில் உள்ள பாம்புகளை அணிந்த அழகனாய், தன்னை விரும்பும் அடியவர்களுக்கு அன்பனாய், மெய்ஞ்ஞானப் பொருளாய், பெருந்திறல் உடையவனாய், பத்தர்களுடைய பத்தி எவ்வளவிற்றாயினும் அதற்கு மனம் இரங்குபவனாய், பத்தர் அல்லாதவருக்கு இரங்கானாய், என்றும் அழிவில்லாதவனாய், என் உள்ளத்துப்புக்கு அங்குள்ள மாசுகளைக் கல்லி எடுத்து நீக்குபவனாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள அழிவற்ற பெருமானை அடைக்கலம் அடைந்தவர்கள் கேடிலாரே.
2759 | தாட்பாவு கமலமலர்த் தயங்கு வானைத் கோட்பாவு நாளெல்லா மானான் தன்னைக் மீட்பானை வித்துருவின் கொத்தொப் பானை கேட்பானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக் |
6.067.4 |
தண்டிலே விரிந்த தாமரையில் உறையும் பிரமனுடைய தலை ஒன்றினை அறுத்தவனாய், மாவிரத சமயத்திற்கு உரிய வேடத்தை அணிந்தவனாய், கிரகங்களின் பெயரால் அமைந்த கிழமைகள் யாவும் ஆவானாய், தீவினையை உடைய அடியேன் நின்ற கொடிய நரகக் குழியிலிருந்து அடியேனை மீட்பவனாய், பவளக் கொத்தினை ஒத்தநிறத்தினனாய், வேதம் ஓதுபவனாய், வேதத்தின் பொருள் கொண்ட வீணை ஒலியைக் கேட்பானாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள பெருமானை அடைக்கலமாக அடைந்த வர்கள் கேடிலாரே.
2760 | நல்லானை நரைவிடையொன் றூர்தி யானை சொல்லானைச் சுடர்மூன்று மானான் தன்னைத் வில்லானை மெல்லியலோர் பங்கன் தன்னை கில்லானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக் |
6.067.5 |
பெரியவனாய், வெண்ணிறக் காளை வாகனனாய், நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் அணுகமாட்டாத அருள் ஞானத்தானாய், மூன்று சுடர்களும் ஆனவனாய், தொண்டர்களாகித் தன்னைப் பணிபவர்களுக்கு அருகில் உள்ளவனாய், சுயம்பிரகாசனாய், பார்வதிபாகனாய், உண்மையாகத் தன்னை தியானிக்காதவர்கள் வினைகளைப்போக்காதவனாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள பெருமானை அடைக்கலமாகஅடைந்தவர்கள் கேடிலாரே.
2761 | சுழித்தானைக் கங்கைமலர் வன்னி கொன்றை அழித்தானை அரணங்கள் மூன்றும் வேவ விழித்தானைக் காமனுடல் பொடியாய் வீழ கிழித்தானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக் |
6.067.6 |
கங்கையைச் சடையில் வளைத்துக் கொண்டவனாய், அச்சடையில் வன்னி,கொன்றை, ஊமத்தை மலர்கள், ஒளி பொருந்திய பாம்பு இவற்றைச் சூடியவனாய்,மும்மதில்களும் தீயில் வெந்து சாம்பலாகுமாறு அழித்தவனாய், ஆலகாலவிடத்தை உண்டவனாய், மன்மதன் உடல் பொடியாக விழுமாறு தீக்கண்ணால்விழித்தானாய், பார்வதி பாகனாய், முன்னொரு காலத்தில் வேல் போன்றகூரிய தந்தங்களை உடைய யானைத் தோலைக் கிழித்து உரித்தவனாய்க்கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள பெருமானை அடைக்கலமாக அடைந்தவர்கள்கேடிலாரே.
2762 | உளரொளியை உள்ளத்தி னுள்ளே நின்ற விளரொளியை விடுசுடர்கள் இரண்டும் ஒன்றும் வளரொளியை மரகதத்தி னுருவி னானை கிளரொளியைக் கீழ்வேளூ ராளுங் கோவைக் |
6.067.7 |
அசைகின்ற ஒளிவிளக்காய், உள்ளத்து நிலை பெற்ற ஓங்காரத்தின் உட்பொருளாய், வெள்ளொளி உடைய சூரியன், சந்திரன், செந்நிறமுடைய அக்கினி என்ற இவையாகி, தேவருலகும், நிலவுலகும், தேவருலகுக்கும் மேற்பட்ட ஆகாயமுமாகி, மாணிக்கத்தின் ஒளியும் மரகதத்தின் ஒளியுமாகி, தேவர் எப்பொழுதும் வாழ்த்தித் துதிக்கும் ஒளிமிக்க திருமேனியை உடையவனாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள பெருமானை அடைக்கலமாக அடைந்தவர்கள் கேடிலாரே.
2763 | தடுத்தானைக் காலனைக் காலாற் பொன்றத் உடுத்தானைப் புலியதளோ டக்கும் பாம்பும் மடுத்தானை அருநஞ்சம் மிடற்றுள் தங்க கெடுத்தானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக் |
6.067.8 |
கூற்றுவன் இறக்குமாறு அவனைக் காலால் உதைத்து, தன்னைச் சரணடைந்தமார்க்கண்டேயனுக்கு ஒருகாலத்தில் அருள் செய்தவனாய், புலித்தோலோடு எலும்பும் பாம்பும் பூண்டவனாய், தன்னை அன்போடு வழிபடுபவர் உள்ளத்து இருப்பவனாய், கொடிய நஞ்சினைத் தன்கழுத்தில் தங்குமாறு உண்டவனாய், தேவர்கள் கூடியிருந்த தக்கனுடைய வேள்வியை அழித்தவனாய், உள்ள கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள பெருமானை அடைக்கலமாக அடைந்தவர்கள் கேடிலாரே.
2764 | மாண்டா ரெலும்பணிந்த வாழ்க்கை யானை பூண்டானைப் புறங்காட்டி லாட லானைப் ஆண்டானை அறிவரிய சிந்தை யானை கீண்டானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக் |
6.067.9 |
இறந்தவர்களுடைய எலும்புகளை அணியும் இயல்பினனாய், கடவூர் மயானம் முதலிய இடங்களில் கூத்தாடுபவனாய், ஒளி பொருந்திய பாம்போடு எலும்பை அணிபவனாய், சுடுகாட்டில் ஆடுபவனாய், என் உள்ளத்தில் இடம் பெற்று, அதனை விடுத்துநீங்காது, என்னை அடிமை கொண்டானாய், தன் உள்ளத் திருப்பதனைப் பிறர்அறிய இயலாதவனாய், அச்சம் இல்லாதவனாய்த் தேவர்களின் அச்சத்தைப் போக்கியவனாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள பெருமானை அடைக்கலமாக அடைந்தவர்கள் கேடிலாரே.
2765 | முறிப்பான பேசிமலை யெடுத்தான் தானும் பறிப்பான்கைச் சிற்றரிவாள் நீட்டி னானைப் பொறித்தானைப் புரமூன்றும் எரிசெய் தானைப் கிறிப்பானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக் |
6.067.10 |
தனக்கு அறிவுரை கூறிய தேர்ப்பாகனிடம் கடுஞ் சொற்கள் பேசிக் கயிலைமலையை அசைத்த இராவணன் முதுகு நொறுங்குமாறு அழுத்திப்பின் அவன் தன்கை நரம்புகளை வீணைத் தந்திகளாகக் கொண்டு பாட மலையை அசைத்த அவனுக்குச் சிறிய வாளை அருள் செய்தவனாய், அடியேன் உள்ளத்தே தன் திருவடிகளைப் பதித்தவனாய், மும்மதில்களையும் எரித்துச் சாம்பல் ஆக்கியவனாய், அன்பின்றி வழிபடுபவர்களுக்குத் தானும் அருள்புரிவான் போன்று காட்டிவஞ்சிப்பவனாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள பெருமானை அடைக்கலமாக அடைந்தவர்கள் கேடிலாரே.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 65 | 66 | 67 | 68 | 69 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கீழ்வேளூர் - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - ராளுங், பெருமானை, அரசனாய், கீழ்வேளூ, நாடுமவர், கோவைக்கேடிலியை, கீழ்வேளூரை, அடைக்கலமாக, அடைந்தவர்கள், கேடிலாரே, உடையவனாய், மானான், கொன்றை, வேதத்தின், அடியேன், மெல்லியலோர், கேடிலியை, செய்தவனாய், அசைத்த, உள்ளத்து, உண்டவனாய், பொருந்திய, அழித்தவனாய், கோவைக், அறியாத, தனக்கு, தானும், அடியவர்கட், திருச்சிற்றம்பலம், திருமுறை, அன்பனாய், அடைக்கலம், அழிவற்ற, மெய்ஞ்ஞானப், தன்னைச், திருக்கீழ்வேளூர், என்றும், பத்தர்