முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.069.திருப்பள்ளியின்முக்கூடல்
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.069.திருப்பள்ளியின்முக்கூடல்
6.069.திருப்பள்ளியின்முக்கூடல்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முக்கோணவீசுவரர்.
தேவியார் - மைமேவுங்கண்ணியம்மை.
2776 | ஆராத இன்னமுதை அம்மான் தன்னை தாராரும் மலர்க்கொன்றைச் சடையான் தன்னைச் நீரானைக் காற்றானைத் தீயா னானை பாரானைப் பள்ளியின்முக் கூட லானைப் |
6.069.1 |
தெவிட்டாத இனிய அமுதமாய்த் தலைவனாய், பிரமனும் திருமாலும் அறியாத முதலவனாய், கொன்றை மாலை அணிந்த சடையனாய், நன்மை தருபவனாய், ஒப்பற்றவனாய், நீராய், தீயாய், காற்றாய், நீண்ட வானமாய், ஆழ்ந்தகடல்கள் ஏழும் சூழ்ந்த நிலனாய்ப் பரந்து இருக்கும் பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் யான்தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது.
2777 | விடையானை விண்ணவர்கள் எண்ணத் தானை சடையானைச் சாமம்போல் கண்டத் தானைத் அடையாதார் மும்மதிலுந் தீயில் மூழ்க படையானைப் பள்ளியின்முக் கூட லானைப் |
6.069.2 |
காளை வாகனனாய், தேவர்களால் தியானிக்கப்படுபவனாய், வேதம் ஓதுபவனாய், வெண்பிறைசூடிய சடையனாய், நீலகண்டனாய், மெய்ப் பொருளாய், ஒப்பற்றவனாய், பகைவருடைய மும்மதிலும் தீயில் மூழ்க அழிக்கும் அம்பினைக் கோத்து எய்தவனாய், கூரியசூலப் படையை உடையவனாய், உள்ள பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது.
2778 | பூதியனைப் பொன்வரையே போல்வான் தன்னைப் வேதியனை வெண்காடு மேயான் தன்னை ஆதியனை ஆதிரைநன் னாளான் தன்னை பாதியனைப் பள்ளியின் முக்கூட லானைப் |
6.069.3 |
நீறு அணிந்தவனாய், பொன்மலை போல்வானாய், முறுக்கேறிய சடையின் கங்கையை மறைத்த தூயோனாய், வேதியனாய், வெண்காட்டில் உறைவானாய், வெண்மையான காளை வாகனனாய், தேவர்களுக்கு எல்லாம் முற்பட்டவனாய், திருவாதிரை நட்சத்திரத்திற்கு உரிமை பூண்டவனாய், தலைவனாய், மை தீட்டிய கண்களை உடைய பார்வதிபாகனாய், உள்ள பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது.
2779 | போர்த்தானை ஆனையின் தோல் புரங்கள் மூன்றும் வார்த்தாங்கு வனமுலையாள் பாகன் தன்னை தீர்த்தானைத் தென்றிசைக்கே காமன் செல்லச் பார்த்தானைப் பள்ளியின்முக் கூட லானைப் |
6.069.4 |
யானையின் தோலைப் போர்த்தவனாய், முப்புரங்களும் சாம்பலாகுமாறு அம்புஎய்தவனாய், தூயனாய், கச்சணிந்த முலையை உடைய பார்வதிபாகனாய், அலைகள் கரையை அடைந்து மீண்டு வரும் கடலுள் தோன்றிய விடத்தை உண்டு, தேவர்களின் அச்சத்தைப் போக்கியவனாய், மன்மதன் யமனுலகத்தை அடையுமாறு சிறிது நேரத்தில் அவன் உடலம் சாம்பலாகுமாறு தீத்தோன்ற விழித்தவனாய், உள்ள பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது.
2780 | அடைந்தார்தம் பாவங்கள் அல்லல் நோய்கள் கடிந்தானைக் கார்முகில்போற் கண்டத் தானைக் தடிந்தானைத் தன்னொப் பாரில்லா தானைத் படிந்தானைப் பள்ளியின்முக் கூட லானைப் |
6.069.5 |
தன்னைச் சரணாக அடைந்த அடியவர்பால் பாவங்கள், துன்பங்கள், நோய்கள், பழைய தீவினைகள், வறுமை என்பன அணுகாதவாறு அவற்றைப் போக்கியவனாய், கார்முகில் போன்ற நீலகண்டனாய், மிக்க வெகுளியை உடைய சலந்தரனுடைய உடலைச் சக்கரத்தாலே அழித்தவனாய், ஒப்பற்றவனாய், மெய்ப்பொருளாய், உத்தமனாய், தன்னைத் தியானிக்கும் அடியவர் நெஞ்சில் ஊன்றியிருப்பவனாய், உள்ள பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது.
2781 | கரந்தானைச் செஞ்சடைமேல் கங்கை வெள்ளங் சிரந்தாங்கு கையானைத் தேவ தேவைத் வருந்தாமைக் காப்பானை மண்ணாய் விண்ணாய் பரந்தானைப் பள்ளியின்முக் கூட லானைப் |
6.069.6 |
சிவந்த சடையின்மீது கங்கை வெள்ளத்தை மறைத்தவனாய், தீப்போன்ற சிவந்த தன் திருமேனிக்கண் பிரமனுடைய மண்டையோட்டினைச் சுமக்கும் கையை உடையவனாய், தேவர்களுக்குத் தலைமைத் தேவனாய், விளங்குகின்ற ஞானப்பிரகாசனாய், தன் திருவடிகளைத் தியானிப்பவர் வருந்தாத வகையில் அவரைக் காப்பவனாய், ஐம்பூதங்களாகி எங்கும் பரவியுள்ளவனாய், உள்ள பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் யான்தடுமாறித் திரிந்த செயல் இரங்கத் தக்கது.
2782 | நதியாருஞ் சடையானை நல்லூ ரானை மதுவாரும் பொழில்புடைசூழ் வாய்மூ ரானை நிதியாளன் தோழனை நீடூ ரானை பதியானைப் பள்ளியின்முக் கூட லானைப் |
6.069.7 |
கங்கை தங்கிய சடையினனாய், குபேரனுக்குத் தோழனாய், நல்லூர், நள்ளாறு, நல்லம், தேன் ஒழுகும் பொழில்களால் சூழப்பட்ட வாய்மூர், மறைக்காடு, ஆக்கூர், நீடூர், நெய்த்தானம், ஆரூர் என்னும் திருத்தலங்களில் உறைபவன் ஆகிய பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்தசெயல் இரங்கத்தக்கது.
2783 | நற்றவனை நான்மறைக ளாயி னானை செற்றவனைச் செஞ்சடைமேல் திங்கள் சூடுந் கொற்றவனைக் கூரரவம் பூண்டான் தன்னைக் பற்றவனைப் பள்ளியின்முக் கூட லானைப் |
6.069.8 |
பெருந்தவத்தை உடையவனாய், நான்கு வேத வடிவினனாய், பெரியவனாய், பகைவர் மதில்கள் மூன்றையும் அழித்தவனாய், சிவந்த சடையின் மீது பிறையைச் சூடித் திருவாரூர்த் திருமூலட்டானத்தில் விரும்பி உறையும் வெற்றியனாய், கொடிய பாம்புகளைப் பூண்டவனாய், தம் தேவையைக் கருதித்தன் தன்மையையே கடவுள் தன்மையாகத் துணிந்த அடியவர்களுக்கு என்றும் பற்றுக்கோடாக இருப்பவனாய், உள்ள பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் யான்தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது.
2784 | ஊனவனை உடலவனை உயிரா னானை வானவனை மதிசூடும் வளவி யானை கானவனைக் கயிலாய மலையு ளானைக் பானவனைப் பள்ளியின்முக் கூட லானைப் |
6.069.9 |
ஊனாய், உடலாய், உயிராய், ஏழுலகமுமாய், தேவர்கள் தலைவனாய், பரமபதமாகிய வீட்டுலகில் இருப்பவனாய், பிறை சூடியாய், வளவி என்றதலத்தில் உறைபவனாய், பார்வதி காணப் பன்றியின் பின்போன வேடனாய், கயிலாய மலையில் உள்ளவனாய், ஒன்று பட்டு இளகி உருகும் அடியவருடைய நெஞ்சில், அப்பொழுது கறந்தபால் போல் இனியவனாய், பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது.
2785 | தடுத்தானைத் தான்முனிந்து தன்தோள் கொட்டித் எடுத்தானைத் தாள்விரலால் மாள வூன்றி கொடுத்தானைப் பேரோடுங் கூர்வாள் தன்னைக் படுத்தானைப் பள்ளியின்முக் கூட லானைப் |
6.069.10 |
தன்னைத் தடுத்த தேர்ப்பாகனை வெகுண்டு, தன் தோள்களைக் கொட்டிக் கயிலை மலையைப் பத்துத் தலைகளாலும் இருபது தோள்களாலும் பெயர்த்த தசக்கிரிவனைத் தன் கால் விரலால் நசுங்குமாறு அழுத்தி, அவன் நரம்பு ஒலியோடு இசைத்தபாடலை மகிழ்வோடு கேட்டு, இராவணன் என்ற பெயரையும், கூரிய வாளையும் கொடுத்தவனாய், கழல் ஒலிக்கும் திருவடியால் கூற்றுவன் மாளுமாறு ஒரு காலத்தில் உதைத்தவனாய், உள்ளபள்ளியில் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்தசெயல் இரங்கத்தக்கது.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 67 | 68 | 69 | 70 | 71 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்பள்ளியின்முக்கூடல் - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - முக்கூடலில், பள்ளியின், உறைகின்ற, பலகாலும், பயனில்லாமல், பாழேநான், பெருமானைப், லானைப்பயிலாதே, பள்ளியின்முக், சிந்திக்காமல், இரங்கத்தக்கது, திரிந்த, தடுமாறித், உடையவனாய், யான்தடுமாறித், ஒப்பற்றவனாய், தலைவனாய், சிவந்த, மேயானை, பாவங்கள், சாம்பலாகுமாறு, போக்கியவனாய், அழித்தவனாய், நெஞ்சில், கயிலாய, புரங்கள், திரிந்தசெயல், செஞ்சடைமேல், இருப்பவனாய், தன்னைத், கண்டத், ரில்லா, சடையனாய், தன்னொப்பா, திருச்சிற்றம்பலம், திருமுறை, திருப்பள்ளியின்முக்கூடல், தீயில், சடையின், பூண்டவனாய், புனிதன், நீலகண்டனாய், வாகனனாய், பார்வதிபாகனாய்