முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.068.திருமுதுகுன்றம்
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.068.திருமுதுகுன்றம்
6.068.திருமுதுகுன்றம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது - இதுவே விருத்தாசலம்.
சுவாமிபெயர் - பழமலைநாதர்.
தேவியார் - பெரியநாயகியம்மை.
2766 | கருமணியைக் கனகத்தின் குன்றொப் பானைக் குருமணியைக் கோளரவொன் றாட்டு வானைக் அருமணியை அடைந்தவர்கட் கமுதொப் பானை திருமணியைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத் |
6.068.1 |
கண்ணின் கருமணியைப் போன்று அருமையானவனாய், பொற்குன்று ஒப்பவனாய், தியானிக்கும் அடியவர்களுக்கு மிகவும் எளியவனாய், நல்ல நிறமுடையமாணிக்கமாய், கொடிய பாம்பு ஒன்றினை ஆட்டுபவனாய், வேங்கைத் தோலை உடுத்தவனாய், கோவணம் அணிந்தவனாய், சிந்தாமணியாய், தன்னைச் சரணம் புகுந்தவர்களுக்கு அமுதம் போன்று இனியனாய், பஞ்ச கவ்விய அபிடேகத்தை உகப்பவனாய், அடியேன் சரணடைந்த வீடுபேறாகிய செல்வத்தை நல்கும்மணியாய்த் திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினையை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப்போனேனே.
2767 | காரொளிய கண்டத்தெங் கடவுள் தன்னைக் பாரொளியை விண்ணொளியைப் பாதாளனைப் பேரொளியைப் பெண்பாகம் வைத்தான் தன்னைப் சீரொளியைத் திருமுதுகுன்றுடையான் தன்னைத் |
6.068.2 |
நீலகண்டனாய்க் காபாலக்கூத்து ஆடுபவனாய், கட்டங்கப் படையை ஏந்தியவனாய், நில உலகு விண் உலகு பாதாள உலகு இவற்றிற்கு ஒளிவழங்குபவனாய், வெள்ளிய பிறையைச் சூடியவனாய், நற்பண்புக்கு நிலைக்களனாய், தனக்கு நிகரில்லாத ஞான ஒளியை உடையவனாய், பார்வதி பாகனாய், தன்னை விரும்பும் அடியவர்களைத் தானும் விரும்பி, அவர்கள் வினைகளைப் போக்கும் சிறப்பான புகழ் ஒளியை உடையவனாய்த் திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.
2768 | எத்திசையும் வானவர்கள் தொழநின் றானை பத்தனாய்ப் பணிந்தடியேன் தன்னைப்பன்னாள் முத்தினை யென்மணியை மாணிக் கத்தை சித்தனையென் திருமுதுகுன் றுடையான்தன்னைத் |
6.068.3 |
எல்லாத்திசைகளிலும் தேவர்களால் தொழப்படுபவனாய், இடபவாகனனாய், அடியேன் என் தலைவன் என்று பக்தியோடு பணியத் தன்னைப் பல நாளும் பாமாலை பாடப்பழகுவித்தவனாய், முத்து, மணி, மாணிக்கம், முளைத்தெழுந்த செம்பவளக் கொத்து என்பன போலக்கண்ணுக்கு இனியவனாய், எல்லாம் செய்யவல்லவனாய்த் திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.
2769 | ஊன்கருவின் உள்நின்ற சோதி யானை கான்திரிந்து காண்டீப மேந்தி னானைக் தான்தெரிந்தங் கடியேனை யாளாக் கொண்டு தீங்கரும்பைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத் |
6.068.4 |
உடம்பில் கருவாகி நின்ற உயிருக்குள் ஒளி வடிவாய் உள்ளவனாய், உத்தமனாய், அடியார் மனத்தில் உறைபவனாய், காட்டில் வேடனாய்த் திரிந்து அருச்சுனன் பொருட்டுக் காண்டீபம் என்ற வில்லினை ஏந்தியவனாய், கார்மேகம் போன்ற நீலகண்டனாய், கனலாகவும், காற்றாகவும் உள்ளானாய், தானே ஆராய்ந்துஅடியேனைத் தன் அடிமையாகக் கொண்டு தன்னுடைய திருவடிகளை என் தலைமேல் வைத்தகரும்பு போன்ற இனியனாய், திருமுது குன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.
2770 | தக்கனது பெருவேள்வி தகர்த்தா னாகித் மிக்கதொரு தீவளிநீர் ஆகா சம்மாய் அக்கினொடு முத்தினையு மணிந்து தொண்டர்க் திக்கினையென் திருமுதுகுன் றுடையான் தன்னைத் |
6.068.5 |
தக்கனுடைய பெரிய வேள்வியை அழித்து, தாமரையில் உறையும் பிரமனும்தானேயாகி, ஐம்பூதங்களும், மேலுலகும், அதற்குஅப்பாலும் இப்பாலுமாய்ப் பரந்து, சங்கு மணியையும், முத்தையும் அணிந்து, அடியவர்களுக்கு அவர்களுடைய பக்குவ நிலைக்கு ஏற்ப ஆறு வைதிக சமயங்களாகிய வழியானவனாய், திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.
2771 | புகழொளியைப் புரமெரித்த புனிதன் தன்னைப் விழவொலியும் விண்ணொலியு மானான் தன்னை கழலொலியுங் கைவளையும் ஆர்ப்ப ஆர்ப்பக் திகழொளியைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத் |
6.068.6 |
புகழாகிய ஒளியை உடையவனாய், திரிபுரத்தை எரித்த தூயோனாய், பொன்னிறம் அமைந்த திருமேனியனாய், பழமையானவனாய், விண்ணின் பண்பாகிய ஒளியும் திருவிழாக்களில் கேட்கப்படும் ஒலியும் ஆகியவனாய், வெண்காட்டில் உறையும் விகிர்தனாய், கால்களில் அணிந்தகழல்களின் ஒலியும் கைவளைகளின் ஒலியும் சிறக்க வீடுகள் தோறும்பிச்சைக்கு என்று சஞ்சரிக்கும் மேம்பட்ட ஒளியை உடையவனாய், திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.
2772 | போர்த்தானை யின்னுரிதோல் பொங்கப் பொங்கப் காத்தானை ஐம்புலனும் புரங்கள் மூன்றும் மாத்தாடிப் பத்தராய் வணங்குந் தொண்டர் தீர்த்தானைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத் |
6.068.7 |
யானையை உரித்த தோலைப் போர்த்துத் திருமேனியின் ஒளி சிறக்குமாறு புலித்தோலை உடுத்துத் திரிவானாய், பொறிவாயில் ஐந்தவித்தானாய், முப்புரங்களையும் வெகுண்டவனாய், காலனைத் திருவடியால் உதைத்தவனாய், மேம்பட்ட கூத்தினை நிகழ்த்துபவனாய், பத்தர்களாய் வணங்கும் அடியார்களுடைய வலிய வினைகளும், அவற்றால் நிகழும் நோய்களும், நீங்குமாறு மருந்தாகி அவற்றைப் போக்கியவனாய், திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.
2773 | துறவாதே யாக்கை துறந்தான் தன்னைச் பிறவாதே எவ்வுயிர்க்குந் தானே யாகிப் மறவாதே தன்திறமே வாழ்த்துந் தொண்டர் திறலானைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத் |
6.068.8 |
இயல்பாகவே உடம்பு இன்றி இருப்பவனாய், சோதி வடிவினனாய், தான்பிறப்பெடுக்காமல் பிறவி எடுக்கும் உயிர்களுக்கெல்லாம் தானே நலன்செய்பவனாய், பெண்ணுருவும், ஆண் உருவுமாக இருப்பவனாய், தன்னை மறவாமல், தன்பண்பு செயல்களையே வாழ்த்தும் அடியவர்களின் உள்ளத்தே எப்பொழுதும் நிலைபெற்றிருக்கும் பண்பினை உடையவனாய், திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப்போனேனே.
2774 | பொற்றூணைப் புலால்நாறு கபால மேந்திப் முற்றாத வெண்டிங்கட் கண்ணி யானை கற்றூணைக் காளத்தி மலையான் தன்னைக் செற்றானைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத் |
6.068.9 |
பொன்மயமான தூண்போல்பவனாய், புலால் நாற்றம் வீசும் மண்டையோட்டினை ஏந்தி மேல் உலகம் எல்லாம் திரிபவனாய், பிறையை முடிமாலையாக அணிந்தவனாய், முழுமுதற் கடவுளாய், எல்லா உலகங்களிலும் விரவி நின்று, தனக்கு இறுதியில்லாது கற்றூண்போல அவற்றைத் தாங்குபவனாய்க் காளத்தி மலையில் உறைபவனாய், பகைவருடைய மும்மதில்களையும் எரியுமாறு வில்லால் அழித்தவனாய், திருமுதுகுன்றம் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.
2775 | இகழ்ந்தானை இருபதுதோள் நெரிய வூன்றி புகழ்ந்தானைப் பூந்துருத்தி மேயான் தன்னைப் மகிழ்ந்தானை மலைமகளோர் பாகம் வைத்து திகழ்ந்தானைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத் |
6.068.10 |
தன்னை இகழ்ந்து, கயிலையை அசைத்த இராவணனுடைய இருபது தோள்களும் நெரியுமாறு விரலை ஊன்றி, அவன் ஏழுநரம்புகளைக் கொண்டு இசைபாட, அதனை இனிது கேட்டு, அவன் இசை ஞானத்தைப் புகழ்ந்தவனாய், பூந்துருத்தியில் உறையும் புண்ணியனாய், தேவர்களுக்குச் செல்வமாய், பார்வதி பாகனாய் மகிழ்ந்தவனாய், பிறையைச் சடையில் சூடித் திருமாலைத் திருமேனியின் ஒருபாகமாகக் கொண்டு விளங்குபவனாய், திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 66 | 67 | 68 | 69 | 70 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமுதுகுன்றம் - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - உறையும், பெருமானை, அறியாமல், திகைத்த, தீவினை, அறியாதே, இதுகாறும், உள்ளவாறு, திருமுதுகுன், றுடையான், போனேனே, திருமுதுகுன்றத்தில், மயங்கிப், தன்னைத்தீவினையேன், உடையவனாய், திருமுதுகுன்றம், ஒலியும், கொண்டு, தன்னைத், தீவினையேன், திருச்சிற்றம்பலம், உறைபவனாய், தலைமேல், எல்லாம், திருமுறை, மேம்பட்ட, காளத்தி, இருப்பவனாய், நின்றான், திருமேனியின், தன்னைப், போன்று, தனக்கு, பிறையைச், ஏந்தியவனாய், மயங்கிப்போனேனே, அடியேன், பார்வதி, அடியவர்களுக்கு, அணிந்தவனாய், இனியனாய், பாகனாய், மேந்தி