முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.066.திருநாகேச்சரம்
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.066.திருநாகேச்சரம்

6.066.திருநாகேச்சரம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சண்பகாரண்ணியேசுவரர்.
தேவியார் - குன்றமுலைநாயகியம்மை.
2746 | தாயவனை வானோர்க்கும் ஏனோ ருக்குந் ஆயவனைச் சேயவனை அணியான் தன்னை மாயவனை மறையவனை மறையோர் தங்கள் தீயவனைத் திருநாகேச் சரத்து ளானைச் |
6.066.1 |
தேவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தாய் போல்பவனாய், எல்லாருக்கும் தலைவனாய், மலைகளில் உறைபவனாய், எல்லா உலகங்களும் ஆகியவனாய், அடியார் அல்லாதாருக்குத் தீப்போன்றவனாய்ச் சேய்மையிலுள்ளவனாய், அடியார்களுக்குநிழல் போன்றவனாய் அண்மையில் உள்ளவனாய், பிறரால் அறியப்படாதவியத்தகு பண்பு செயல்களை உடையவனாய், வேதம் ஓதுபவனாய், வேதியர்கள் தியானிக்கும் மந்திரவடிவாய் உள்ளவனாய், ஆகமமாக இருப்பவனாய்,வேள்வித்தீயாய் இருப்பவனாய், திருநாகேச்சரத்தில் உள்ள பெருமானை அடைந்து வழிபடாதவர்கள் நல்ல வழியில் செல்லாதவராவர்.
2747 | உரித்தானை மதவேழந் தன்னை மின்னா தரித்தானைத் தரியலர்தம் புரமெய் தானைத் அரித்தானை ஆலதன்கீழ் இருந்து நால்வர்க் தெரித்தானைத் திருநாகேச் சரத்து ளானைச் |
6.066.2 |
மத யானைத் தோலை உரித்தவனாய், மின்னல் போல ஒளி வீசும் சடை முடிஉடையவனாய், பார்வதி பாகனாய், பகைவர் மும்மதில்களை எரித்தவனாய்,அடியார்களுடைய வினைப்பயனாம் நோய்களையும் பாவங்களையும்போக்கியவனாய், கல்லால மரத்தின் அடியில் அமர்ந்து முனிவர் நால்வர்க்குஅறம், பொருள், இன்பம், வீடு என்ற உறுதிப் பொருள்களையும் அவற்றை உணரும்கருவிகளாகிய நான்கு வேதம் ஆறு அங்கங்கள் ஆகியவற்றையும்உபதேசித்தவனாய்த் திருநாகேச்சரத்தில் உறையும் பெருமானைச் சேராதார்நன்னெறிக்கண் சேராதாரே.
2748 | காரானை உரிபோர்த்த கடவுள் தன்னைக் வாரானை மதிப்பவர்தம் மனத்து ளானை ஏரானை இமையவர்தம் பெருமான் தன்னை சீரானைத் திருநாகேச் சரத்து ளானைச் |
6.066.3 |
யானைத்தோல் போர்த்த கடவுளாய, தன்னை விரும்பி நினையாத கீழ் மக்கள் உள்ளத்துக்கண் வாராதானாய், தன்னை மதிப்பவர் மனத்து இருப்பவனாய், தன்னிகர் இல்லாத அழகனாய், தேவர்கள் தலைவனாய், இயல்பாகவே உலகமெல்லாம் நிறைந்து விளங்கும் பொருள்சேர் புகழ் உடையவனாய்த் திருநாகேச் சரத்து உறையும் பெருமானைச் சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே.
2749 | தலையானை எவ்வுலகுந் தானா னானைத் நிலையானை நேசர்க்கு நேசன் தன்னை மலையானை வரியரவு நாணாக் கோத்து சிலையானைத் திருநாகேச் சரத்து ளானைச் |
6.066.4 |
தலைவனாய், எல்லா உலகும் தானே ஆனவனாய், தன் உருவத்தைப் பிறர் அறியமுடியாத நிலையினனாய், அடியார்க்கு அன்பனாய், நீண்ட வானத்து உச்சியைத் தடுத்துஓங்கிய மலைகளானவனாய், கோடுகளை உடைய பாம்பினை நாணாகக் கட்டி, கொடிய அசுரருடைய மும்மதில்களையும் அழியுமாறு அம்பு எய்த வில்லை ஏந்தியவனாய்த் திருநாகேச்சரத்து உறையும் பெருமானைச் சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே.
2750 | மெய்யானைத் தன்பக்கல் விரும்பு வார்க்கு பொய்யானைப் புறங்காட்டி லாட லானைப் பையானைப் பையரவ மசைத்தான் தன்னைப் செய்யானைத் திருநாகேச் சரத்து ளானைச் |
6.066.5 |
தன்பக்கல் விருப்பமுடைய அடியவர்களுக்கு உண்மையானவனாய், தன்னை விரும்பாத கொடிய பாவிகளுக்குப் பொய்யானவனாய், சுடுகாட்டில் கூத்தாடுபவனாய், பொன்போல ஒளிவீசும் சடையினனாய், திருநீறு நிறைந்த பையை உடையவனாய், பாம்பினை அணிந்தவனாய், எங்கும் பரவியிருப்பவனாய், பவள மலைபோலச் சிவந்த திருமேனியை உடையவனாய்த் திருநாகேச் சரத்து உறையும் பெருமானைச் சேராதார் நன்னெறிக் கண் சேராதாரே.
2751 | 2950.தூயவன்காண் நீறு துதைந்த மேனி தீயவன்காண் தீயவுணர் புரஞ்செற் றான்காண் ஆயவன்காண் ஆரூரி லம்மான் தான்காண் சேயவன்காண் சேமநெறி யாயி னான்காண் |
6.066.5 |
சிவபுரத்தெம் செல்வனாம் சிவபெருமான், தூயவனும், ஒளி விளங்கும் பளிங்கு போன்று, திருநீறு செறிந்த மேனிச் சோதியனும், தீயாய்த் திகழ்பவனும், கொடிய அசுரருடைய புரங்களை அழித்தவனும், சிறுமானைச் செங்கையிலேந்திய எம் பெருமானும், தாய் போன்றவனும், ஆரூரில் அம்மானாய்த் திகழ்பவனும், அடியவர்க்கு ஆரமுதம் ஆனவனும், மற்றையர்க்குத் தொலைவில் உள்ளவனும், பாதுகாவலான நெறியினனும் ஆவான்.
2752 | மறையானை மால்விடையொன் றூர்தி யானை இறையானை யென்பிறவித் துயர்தீர்ப் பானை உறைவானை ஒருவருமீங் கறியா வண்ணம் சிறையானைத் திருநாகேச் சரத்து ளானைச் |
6.066.7 |
வேதப் பொருளாய் உள்ளவனாய், பெரிய காளை வாகனனாய், பெரிய கடலில் தோன்றிய விடத்தை உண்டவனாய், தேவர்கள் தலைவனாய், என் பிறவித்துயரைப் போக்குபவனாய், நிலைபெற்ற சிறப்பினை உடைய ஏகம்பத்தில் இனிய அமுதமாக உறைபவனாய், மற்றவருக்குப் புலப்படாத வகையில் அடியேன் உள்ளத்தினுள்ளே சிறை செய்துவைக் கப்பட்டவனாய், திருநாகேச்சரத்து உறையும் பெருமானைச் சேராதார் நன்னெறிக் கண் சேராதாரே.
2753 | எய்தானைப் புரமூன்றும் இமைக்கும் போதில் பெய்தானைப் பிறப்பிலியை அறத்தில் நில்லாப் கொய்தானைக் கூத்தாட வல்லான் தன்னைக் செய்தானைத் திருநாகேச் சரத்து ளானைச் |
6.066.8 |
இமைகொட்டும் நேரத்தில் மும்மதில்களையும் அம்பு எய்து அழித்தவனாய், வானிலிருந்து இறங்கிய கங்கை வெள்ளத்தை அழகிய தலையில் ஏற்றவனாய், பிறப்பில்லாதவனாய், அறவழியில் நில்லாத பிரமனுடைய தலை ஒன்றனைத் தன்கை ஒன்றினால் நீக்கியவனாய், கூத்து நிகழ்த்துதலில் வல்லவனாய், குறிக்கோள் ஏதும் இல்லாத கொடியவனான என்னை அடியவனாகச் செய்தானாய் உள்ள திருநாகேச்சரத்து உறையும் பெருமானைச் சேராதார் நன்னெறிக் கண் சேராதாரே.
2754 | அளியானை அண்ணிக்கும் ஆன்பால் தன்னை துளியானை அயன்மாலுந் தேடிக் காணாச் கௌயானை யாவர்க்கும் அரியான் தன்னை தௌயானைத் திருநாகேச் சரத்து ளானைச் |
6.066.9 |
கருணை உடையவனாய், இனிக்கும் பசுப்பால் போல்பவனாய், உலகில் வளரும்பயிர்களாய், அப்பயிர்களின் வாட்டம் தீர்க்கும் மழையாய் உள்ளவனாய், பிரமனும், திருமாலும் தேடியும் காண முடியாத தீப்பிழம்பாய், குற்றம தீரத்தொண்டு செய்யும் அடியவருக்கு எளியவனாய், மற்றயாவருக்கும் அரியவனாய், இனிய கருப்பஞ்சாற்றின் தௌவு போன்றவனாய்த் திருநாகேச்சரத்து உறையும் பெருமானைச் சேராதார் நன்னெறிக் கண் சேராதாரே.
2755 | சீர்த்தானை யுலகேழுஞ் சிறந்து போற்றச் பார்த்தானை மதனவேள் பொடியாய் வீழப் ஆர்த்தோடி மலையெடுத்த அரக்கன் அஞ்ச தீர்த்தானைத் திருநாகேச் சரத்து ளானைச் |
6.066.10 |
உலகங்கள் ஏழும் பரவிப் போற்றும்படியான புகழுடையவனாய், ஏனையோரினும சிறந்தவனாய், நிறைந்து உயரும் செல்வத்தனாய், மன்மதன் சாம்பலாகுமாறு அவனை நெற்றிக் கண்ணால் பார்த்தவனாய், பிறை சூடிய சடையினனாய், தூயோனாய், ஆரவாரித்து ஓடிவந்து கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் அஞ்சுமாறு, அவனைக் கால் விரல் ஒன்றினால் நசுக்கியவனாய், தன்னைச் சரணாக அடைந்தவர்களின் பாவங்களைப் போக்குபவனாய், உள்ள திருநாகேச்சரத்து உறையும் பெருமானைச் சேராதார் நன்னெறிக் கண் சேராதாரே.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 64 | 65 | 66 | 67 | 68 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருநாகேச்சரம் - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - சரத்து, நன்னெறிக்கண், திருநாகேச், ளானைச்சேராதார், பெருமானைச், உறையும், சேராதாரே, சேராதார், திருநாகேச்சரத்து, நன்னெறிக், உள்ளவனாய், தலைவனாய், நிறைந்து, இருப்பவனாய், உடையவனாய், தன்பக்கல், சடையானைப், திருச்சிற்றம்பலம், அசுரருடைய, சடையினனாய், மும்மதில்களையும், திருமுறை, ஒன்றினால், போக்குபவனாய், திகழ்பவனும், பாம்பினை, திருநீறு, யாவர்க்கும், திருநாகேச்சரம், மனத்து, நினையாத, உறைபவனாய், இல்லாத, தேவர்கள், பெருமானை, போல்பவனாய், உடையவனாய்த், விளங்கும், புரமூன்றும்