முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.041.திருநெய்த்தானம்
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.041.திருநெய்த்தானம்

6.041.திருநெய்த்தானம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நெய்யாடியப்பர்.
தேவியார் - வாலாம்பிகையம்மை.
2493 | வகையெலா முடையாயும் நீயே யென்றும் மிகையெலாம் மிக்காயும் நீயே யென்றும் பகையெலாந் தீர்த்தாண்டாய் நீயே யென்றும் திகையெலாந் தொழச் செல்வாய் நீயே யென்றும் |
6.041.1 |
திருநெய்த்தானத்தில் உகந்தருளி உறையும் பெருமானே! செல்வர்க்கு உரிய கூறுபாடுகள் யாவும் உடைய நீ, உயர்ந்த கயிலை மலையை விரும்பி உறைவாய். உயர்வற உயர்நலம் யாவும் உடையாய், வெண்காடு, பாசூர் இவற்றை உறைவிடமாக விரும்புகிறாய். பகைகளை எல்லாம் போக்கி எமை ஆண்டாய். எண்திசையிலுள்ளாரும் உன்னை வழிபடுமாறு ஆங்கெல்லாம் செல்வாய் என்று உன்பண்பு நலன்களை நாங்கள் எடுத்துத் துதிக்கிறோம்.
2494 | ஆர்த்த எனக்கன்பன் நீயே யென்றும் கூர்த்த நடமாடி நீயே யென்றுங் பார்த்தற் கருள் செய்தாய் நீயே யென்றும் தீர்த்தன் சிவலோகன் நீயே யென்றும் |
6.041.2 |
நின்ற நெய்த்தானா! உனக்கு அடிமையாகப் பிணிக்கப்பட்ட அடியேனிடம் அன்பு உடையாய், பழைய கயிலாயம், கோடிகா பழையனூர் இவற்றில் உறைகின்றாய். நடனக்கலையின் நுட்பங்களெல்லாம் அமையக் கூத்தாடுகின்றாய். அருச்சுனனுக்கு அருள் செய்தாய். தூயவனும் சிவலோகநாதனுமாக உள்ளாய் என்று அடியோங்கள்நின்னை துதிக்கின்றோம்.
2495 | அல்லாய்ப் பகலானாய் நீயே யென்றும் கல்லா லமர்ந்தாயும் நீயே யென்றுங் சொல்லாய்ப் பொருளானாய் நீயே யென்றுந் செல்வாய்த் திருவானாய் நீயே யென்றும் |
6.041.3 |
நின்ற நெய்த்தானா! நீ இரவாகவும் பகலாகவும் உள்ளாய். பழைய கயிலாயம், காளத்தி, சோற்றுத்துறை இவற்றை விரும்பி உறைவாய். கல்லாலின் கீழ் அமர்ந்தவனும், சொல்லும் பொருளுமாய் இருப்பவனும், நீயே. உலகில் எல்லா நிகழ்ச்சிகளும் நடப்பதற்கு உதவும் செல்வமாகவும் நீ உள்ளாய் என்று அடியோங்கள் நின்னைத் துதிக்கின்றோம்.
2496 | மின்னே ரிடைபங்கன் நீயே யென்றும் பொன்னேர் சடைமுடியாய் நீயே யென்றும் என்னா விரதத்தாய் நீயே யென்றும் தென்னூர்ப் பதியுளாய் நீயே யென்றும் |
6.041.4 |
நின்ற நெய்த்தானா! நீ வெள்ளிய கயிலை மலை, ஏகம்பம் தென்னூர் இவற்றில் விரும்பி உறைகின்றாய். மின்னலை ஒத்த இடையை உடைய பார்வதிபாகனாய், பொன்னை ஒத்து ஒளி வீசும் சடை முடியனாய்ப் பூதகணத் தலைவனாய் எம் நாவினில் இனிக்கின்ற சுவைப் பொருளாய் உள்ளாய் என்று அடியோங்கள் நினைத்துத் துதிக்கின்றோம்.
2497 | முந்தி யிருந்தாயும் நீயே யென்றும் நந்திக் கருள்செய்தாய் நீயே யென்றும் பந்திப் பரியாயும் நீயே யென்றும் சிந்திப் பரியாயும் நீயே யென்றும் |
6.041.5 |
நின்ற நெய்த்தானா! கயிலை, நள்ளாறு பைஞ்ஞீலி என்ற தலங்களைக் கூத்தனாயநீ விரும்பி உறைகின்றாய். எல்லாப் பொருளுக்கும் முற்பட்டவனாய் நந்திதேவருக்கு அருள் செய்தவனாய், பாசத்தால் பிணிக்க ஒண்ணாதவனாய்ச் சிந்தையால் அணுக ஒண்ணாதவனாய் உள்ளாய் என்று அடியோங்கள் நினைத்துத் துதிக்கின்றோம்.
2498 | தக்கா ரடியார்க்கு நீயே யென்றுந் அக்காரம் பூண்டாயும் நீயே யென்றும் புக்காய ஏழுலகும் நீயே யென்றும் தெக்காரு மாகோணத் தானே யென்றும் |
6.041.6 |
நின்ற நெய்த்தானா! நீ மேம்பட்ட கயிலாயனாகவும் ஆக்கூரில் தான்தோன்றி ஈசனாகவும் புள்ளிருக்குவேளூர், தெற்கே உள்ள மாகோணம் இவற்றில் உறைபவனாகவும் உள்ளாய். தகுதியுடையவரான அடியாருக்கு நீயே துணையாகவும் எலும்பு மாலை அணிபவனாகவும் உயிர்கள் புகுந்து வாழும் ஏழுலகங்களாகவும் உள்ளாய் என்று அடியோங்கள் நின்னைத் துதிக்கின்றோம்.
2499 | புகழும் பெருமையாய் நீயே யென்றும் இகழுந் தலையேந்தி நீயே யென்றும் அகழும் மதிலுடையாய் நீயே யென்றும் திகழும் மதிசூடி நீயே யென்றும் |
6.041.7 |
நின்ற நெய்த்தானா! அழகிய கயிலை, இராமேச்சுரம் ஆலவாய் இவற்றில் உகந்து உறைபவனே! எல்லோரும் புகழும் பெருமையை உடையையாய், யாவரும் இகழும் மண்டையோட்டை உண்கலமாக ஏந்தியையாய், ஆலவாயில் அகழும் மதிலும் உடையையாய், விளங்கும் பிறை சூடியாய் உள்ளாய் என்று அடியோங்கள் நின்னைத் துதிக்கின்றோம்.
2500 | வானவர்க்கு மூத்திளையாய் நீயே யென்றும் கான நடமாடி நீயே யென்றுங் ஊனார் முடியறுத்தாய் நீயே யென்றும் தேனாய் அமுதானாய் நீயே யென்றும் |
6.041.8 |
நின்ற நெய்த்தானா! நீ வானளாவிய கயிலாய னாய்க் கடவூர் வீரட்டனாய், ஒற்றியூரிலும் ஆரூரிலும் உறைபவனாய்த் தேனும் அமுதும் போல இனியனாய் உள்ளாய். தேவர்களுக்கும் முற்பட்ட வனாய், சுடுகாட்டில் கூத்தாடுபவனாய்த் தக்க யாகத்தில் ஈடுபட்ட தேவர்களின் தலைகளைப் போக்கினாய் என்று அடியோங்கள் நின்னைத் துதிக்கின்றோம்.
2501 | தந்தைதா யில்லாதாய் நீயே யென்றுந் எந்தாயெம் பிரானானாய் நீயே யென்றும் முந்திய முக்கணாய் நீயே யென்றும் சிந்தையாய்த் தேனூராய் நீயே யென்றும் |
6.041.9 |
நின்ற நெய்த்தானா! நீ எங்கள் உள்ளத்திலும் மேம்பட்ட கயிலாயம், ஏகம்பம், மூவலூர், தேனூர் என்ற திருத்தலங்களிலும் உறைகின்றாய். தந்தைதாய் இல்லாத பிறவாயாக்கைப் பெரியோனாய், யாவருக்கும் முற்பட்ட முக்கண்ணனாய், எங்களுக்குத் தாய் தந்தையாகவும் தலைவனாகவும் உள்ளாய் என்று அடியோங்கள் நின்னைத் துதிக்கின்றோம்.
2502 | மறித்தான் வலிசெற்றாய் நீயே யென்றும் வெறுத்தார் பிறப்பறுப்பாய் நீயே யென்றும் அறத்தாய் அமுதீந்தாய் நீயே யென்றும் பொறுத்தாய் புலனைந்தும் நீயே யென்றும் |
6.041.10 |
நின்ற நெய்த்தானா! நீ உயரிய கயிலை, வீழிமிழலை இவற்றில் உறைபவன். தன்விமானத்தை நிறுத்திக் கயிலையைப் பெயர்த்த இராவணனது வலிமையை அழித்து, உலகப் பற்றைத் துறந்த அடியார்களுடைய பிறவிப் பிணியைப் போக்கி, அறவடிவினனாய், வானோர்க்கு அமுதம் வழங்கி, ஒருவராலும் பொறுக்க முடியாத விடத்தை உண்டு, பொறிவாயில் ஐந்து அவித்துள்ளாய் என்று அடியோங்கள் நின்னைத் துதிக்கின்றோம்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 39 | 40 | 41 | 42 | 43 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருநெய்த்தானம் - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - நெஞ்சு, யென்றும்நின்றநெய்த், தானாவென், உள்ளாய், துதிக்கின்றோம், மேவினாய், நெய்த்தானா, அடியோங்கள், நின்னைத், இவற்றில், கயிலாயன், விரும்பி, உறைகின்றாய், கயிலாயம், யென்றும்ஏகம்பத், பரியாயும், புகழும், உடையையாய், முற்பட்ட, மேம்பட்ட, யென்றுந்தலையார், ஏகம்பம், நினைத்துத், தென்னீசன், செய்தாய், செல்வாய், யாவும், யென்றும்வான்கயிலை, திருச்சிற்றம்பலம், திருமுறை, உறைவாய், உடையாய், நடமாடி, யென்றும்ஆதிக், போக்கி, இவற்றை, திருநெய்த்தானம்