முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.042.திருநெய்த்தானம்
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.042.திருநெய்த்தானம்

6.042.திருநெய்த்தானம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நெய்யாடியப்பர்.
தேவியார் - வாலாம்பிகையம்மை.
2503 | மெய்த்தானத் தகம்படியுள் ஐவர் நின்று இத்தானத் திருந்திங்ங னுய்வா னெண்ணும் மைத்தான நீள்நயனி பங்கன் வங்கம் நெய்த்தான நன்னகரென் றேத்தி நின்று |
6.042.1 |
அறிவில்லாத நெஞ்சமே! யான் கூற நீ கேட்பாயாக. உடம்பாகிய இடத்தின் உட்புறத்தில், ஐம்பொறிகள் பரு உடம்பாய் நின்று, விரும்பிய இன்றியமையாத பொருள்களைத் தந்து நிரப்பி, வினைகளுக்குத் தங்கும் இடமாகிய இந்த உடம்பில் இருந்து, ஐம்புல நுகர்ச்சி நுகர்ந்து கொண்டே தப்பித்துப் போகலாம் என்ற எண்ணத்தை விட்டுவிடு. நீண்ட கருங்கண்ணியாகிய பார்வதி பாகனாய்க் கப்பல்கள் இயங்கும் கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு நிறுத்திய நீலகண்டன் விரும்பி உறையும் திருநெய்த்தானத் திருக் கோயிலைத் துதித்துத் தியானிக்க வேண்டும் என்பதனை விருப்புற்று நினைத்து நீ செயற்பட்டால் பிறவிப் பிணியிலிருந்து தப்பலாம்.
2504 | ஈண்டா விரும்பிறவித் துறவா ஆக்கை வேண்டாவே நெஞ்சமே விளம்பக் கேள்நீ ஆண்டானன் றருவரையாற் புரமூன் றெய்த நீண்டா னுறைதுறைநெய்த் தான மென்று |
6.042.2 |
நெஞ்சமே! நான் கூறுவதனைக் கேள்! பிறப்புக்கள் பலவற்றிற்கு ஏதுவாகி நீங்காத இவ்வுடல் தொடர்பிலிருந்து விரைவாக நீங்குதற்குரிய வழி உள்ளது என்பதனை யான் நினக்குக் கூறல் வேண்டா. தேவர்கள் தலைவராய், இவ்வுலகிலே என்னை அடிமை கொண்டவராய், மலையை வில்லாகக் கொண்டு மும்மதில் களையும் அழித்த பெருமானாராய்த் திருமாலும் பிரமனும் காணா வண்ணம் தீப்பிழம்பாய் நீண்டவராய் உள்ளவர் உகந்தருளியிருக்கும் நெய்த்தானம் என்ற தலத்தைத் தியானிக்கும் வழியை விரும்பி நினைப்பாயானால் பிறவிப்பிணியிலிருந்து தப்பித்தல் கூடும்.
2505 | பரவிப் பலபலவுந் தேடி யோடிப் குரவிக் குடிவாழ்க்கை வாழ வெண்ணிக் இரவிக் குலமுதலா வானோர் கூடி நிரவிக் கரியவன் நெய்த் தான மென்று |
6.042.3 |
நெஞ்சே! நான் கூறுவதைக் கேள். உலகெங்கும் தேவை என்று கருதிப்பல பொருள்களையும் தேடித் திரிந்து பாழான இவ்வுடம்பிலே கிடந்து பின்விளைவை நோக்காது, உற்றார் உறவினரோடு கூடி வாழும் குடும்ப வாழ்க்கையை வாழ எண்ணி உடைந்து போதலை நீக்கு. பன்னிரு ஆதித்தர் முதலாகிய வானவர் இனத்தைச் சேர்ந்த கணக்கற்ற தேவர் கூட்டத்தார் ஒன்று சேர்ந்தாலும் தன் புகழை முழுமையாகச் சொல்ல முடியாத சிவபெருமானுடைய நெய்த்தானத்தை நினையுமா நினைத்தக்கால் உய்யலாம்.
2506 | அலையார் வினைத்திறஞ்சே ராக்கை யுள்ளே தலையாய்க் கடையாகும் வாழ்வி லாழ்ந்து இலையார் புனக்கொன்றை யெறிநீர்த் திங்கள் நிலையா னுறைநிறைநெய்த் தான மென்று |
6.042.4 |
நெஞ்சமே! அலைகள் போல ஓயாது செயற்படும் வினைக் கூறுகளுக்குச் சார்பாகிய இவ்வுடம்பில் அகப்பட்டு, ஆசை என்னும் கயிற்றால் சுருக்கிடப்படுமாறு தலையைக் கொடுத்து, கீழான இந்த உலக வாழ்வில் முழுகி மிகத் தளர்ந்து, நீ அஞ்சுதல் வேண்டா. இலைகளிடையே தோன்றும் கொன்றைப் பூ, கங்கை, பிறை இவற்றைப் பெரிய சடையிலே வைத்து மகிழ்ந்தவனாய்த் தேவர்கள் போற்றும் மேம்பட்ட நிலையிலுள்ளவனாகிய சிவபெருமான் உகந்தருளியிருக்கும் நெய்த்தானம் என்று நினையுமா நினைத்தக்கால் உய்யலாகும்.
2507 | தினைத்தனையோர் பொறையிலா வுயிர்போங் கூட்டைப் அனைத்துலகும் ஆளலா மென்று பேசும் முனைத்துவரு மதில்மூன்றும் பொன்ற அன்று நினைத்த பெருங் கருணையன்நெய்த் தான மென்று |
6.042.5 |
நெஞ்சே! உரிய காலம் முடிந்த பின் சிறிது நேரமும் தாமதிக்காமல் உயிர்விடுத்து நீங்கும் இவ்வுடம்பை மேம்பட்ட பொருளாகப் பெரிதும் கருதிநம் புத்தியினாலே இந்த உலகம் முழுதையும் நமக்கு அடிமைப்படுத்தலாம் என்று பேசும் தன் முனைப்பை நீக்கு. தேவர்களுக்காகப் பகைத்து வந்த மதில்கள் மூன்றும் அழியுமாறு முன்னொரு காலத்தில் விரைவாகத் தூக்கிய வில்லை வளைத்து அம்மதில்களைத் தீக்கு இரையாக்க நினைத்துச் செயற்பட்ட பெரிய கருணையை உடைய சிவபெருமான் உகந்தருளியிருக்கும் நெய்த்தானம் என்று நினையுமா நினைத்தக்கால் உய்யலாகும்.
2508 | மிறைபடுமிவ் வுடல்வாழ்வை மெய்யென் றெண்ணி குறைவுடையார் மனத்துளான் குமரன் தாதை அறைகழலுந் திருவடிமேற் சிலம்பும் ஆர்ப்ப நிறைவுடையா னிடமாம்நெய்த் தான மென்று |
6.042.6 |
நெஞ்சே! துன்பமே விளைக்கின்ற இந்த உடலில் வாழும் வாழ்வு நிலையானது என்று கருதி வினைப்பயனிலே கிடந்து ஈடுபட்டு மகிழாதே. தம்மைப் பற்றித் தாழ்வாகக் கருதுபவர் மனத்து இருப்பவனாய், முருகனுக்குத் தந்தையாய், கூத்தாடுதலைப் பண்பாக உடையவனாய், கொல்லும் முத்தலை வேல் ஏந்தியகையனாய்த் திருவடிகளில், கழலும், சிலம்பும் ஒலிக்க இவ்வுலகமே பெயருமாறு ஆடும் ஊழிக் கூத்தில் மனநிறையுடையவனாகிய சிவபெருமானுடைய திருத்தலமாகிய நெய்த்தானம் என்று நினையுமா நினைத்தக்கால் உய்யலாம்.
2509 | பேசப் பொருளலாப் பிறவி தன்னைப் வாசக் குழல்மடவார் போக மென்னும் தூசக் கரியுரித்தான் தூநீ றாடித் நீசர்க் கரியவன்நெய்த் தான மென்று |
6.042.7 |
நெஞ்சே! வருக. பேசுதற்கு ஏற்ற உயர்ந்த பொருள் அல்லாத இப்பிறவியைக் கிட்டுதற்கு அரிய பொருளாக உன் அற்பப்புத்தியில் கருதி நறுமணம் கமழும் கூந்தலையுடைய மகளிர் இன்பம் என்னும் வலையில் அகப்பட்டு அழியாமல், யானைத்தோலை உரித்துப் போர்த்துத்தூய திருநீறு பூசிப் பூணூல் அணிந்து, தன்னை அணுகாத கீழ்மக்களுக்கு அரியவனாயுள்ள சிவபெருமானுடைய நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யலாம்.
2510 | அஞ்சப் புலனிவற்றா லாட்ட வாட்டுண் தஞ்ச மெனக்கருதித் தாழேல் நெஞ்சே வஞ்ச மனத்தவர்கள் காண வொண்ணா நெஞ்சர்க் கினியவன்நெய்த் தான மென்று |
6.042.8 |
நெஞ்சே! ஐம்புலன்களால் நினைத்தவாறு செயற்படுத்தப்பட்டுக் கொடிய நோய்களுக்கு இருப்பிடமாகிய இவ்வுடலில் நிலையாமையை உனக்குப்புகலிடம் என்று கருதி ஐம்புல இன்பத்தில் ஆழ்ந்து போகாதே. தன்னைப் பற்றுக் கோடாக அடையாத வஞ்சமனத்தவர் காண முடியாத நீலகண்டனாய்த் தேவர்கள் தலைவன் என்று போற்றப்படும் மனத்துக்கினிய சிவபெருமானுடைய நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யலாம்.
2511 | பொருந்தாத உடலகத்திற் புக்க ஆவி இருந்தாங் கிடர்ப்படநீ வேண்டா நெஞ்சே கருந்தாள் மதகரியை வெருவச் சீறுங் நிரந்தரமா இனிதுறைநெய்த் தான மென்று |
6.042.9 |
நெஞ்சே! தகுதியற்ற இவ்வுடலில் வினைவயத்தால் புகுந்த உயிர் இதனை எந்த நேரத்திலும் விடுத்து நீங்கிவிடும் என்பதனை அறிந்தும் கீழான ஐம்புல நுகர்ச்சி வாழ்வினையே கருதிக் கொண்டிருந்து துயர்ப்படல் வேண்டா. தேவர்கள் தலைவனாய், ஒருகாலத்தில் பார்வதி அஞ்சுமாறு, கரிய அடிகளை உடையமதயானை அஞ்ச அதனை வெகுண்டவனாய், நெற்றிக் கண்ணனாய், தன்னைப் பரம்பொருளாகக் கருதாதவர் கூடி நிகழ்த்திய வேள்வியைப் போரிட்டு அழித்தவனாய், நிலையாக உகந்தருளியிருக்கும் நெய்த் தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யலாம்.
2512 | உரித்தன் றுனக்கிவ் வுடலின் தன்மை தரிந்துந் தவமுயன்றும் வாழா நெஞ்சே எரித்தான் அனலுடையான் எண்டோ ளானே நெரித்தானை நெய்த்தானம் மேவி னானை |
6.042.10 |
விரதங்களை எல்லாம் மேற்கொண்டு தவ வாழ்வு வாழ முயன்று வாழாத நெஞ்சே! நிலையாமையை உடைய இவ்வுடல் என்றும் உள்ள உயிரைப்பற்ற வேண்டிய உனக்கு உரிய பொருள் அன்று. உண்மையை உனக்குக் கூறிவிட்டேன். தம்மிடத்துப் பொருளில்லாத வறியவர்களுக்கு ஒன்றும் ஈயாதவர்களுக்குத் தானும் எதுவும் ஈயாதவனாய்த் திரிபுரங்களை எரித்தவனாய்க் கையில் தீயை உடையவனாய் எட்டுத் தோள்களை உடைய எம்பெருமானே என்று தன்னைத் துதிக்காத இலங்கை மன்னனான இராவணனை நெரித்த, நெய்த்தானம் என்ற திருத்தலத்தை உகந்தருளி உறைகின்ற பெருமானை நினையுமா நினைந்தக்கால் உய்யலாம்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 40 | 41 | 42 | 43 | 44 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருநெய்த்தானம் - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - நினைந்தக்கா, நெய்த்தானம், மென்றுநினையுமா, நினையுமா, நெஞ்சே, உய்யலாம், நெஞ்சமே, நினைந்தக்கால், தேவர்கள், நினைத்தக்கால், வேண்டா, சிவபெருமானுடைய, கிடந்து, உகந்தருளியிருக்கும், ஐம்புல, என்பதனை, நிலையாமையை, உய்யலாகும், தன்னைப், சிலம்பும், மேம்பட்ட, வாழ்வு, என்னும், பொருள், இவ்வுடலில், உடையவனாய், வுடலின், நீக்கு, திருச்சிற்றம்பலம், இவ்வுடல், விரும்பி, பார்வதி, நுகர்ச்சி, பன்னிரு, தவிர்நெஞ்சே, முடியாத, திருமுறை, வாழும், திருநெய்த்தானம், நெய்த், அகப்பட்டு