முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.040.திருமழபாடி
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.040.திருமழபாடி

6.040.திருமழபாடி
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வச்சிரத்தம்பேசுவரர்.
தேவியார் - அழகாம்பிகையம்மை.
2486 | அலையடுத்த பெருங்கடல்நஞ் சமுதா வுண்டு சிலையெடுத்து மாநாகம் நெருப்புக் கோத்துத் நிலையடுத்த பசும்பொன்னால் முத்தால் நீண்ட மலையடுத்த மழபாடி வயிரத் தூணே |
6.040.1 |
அலைகள் பொருந்திய பெரிய கடலில் தோன்றிய விடத்தை அமுதமாக உண்டு தேவர்களுடைய உயிரைப் பாதுகாத்த தலைவர் என்றும், மேருவை வில்லாக வளைத்துப் பெரிய பாம்பினை நாணாகப் பூட்டி நெருப்பாகிய அம்பினைக் கோத்து முப்புரங்களையும் எரித்த செல்வர் என்றும், தன் மாற்றுக் குறையாத கிளிச்சிறை என்ற பசிய பொன்னாலும் முத்தாலும் நீண்ட பலகை போன்ற வயிரத்தாலும் குவியலாகத் திரட்டி இயற்றப்பட்ட மழபாடியில் உறையும், மலைபோல உறுதியாக அமைந்த வயிரத்தூணே என்றும் எம்பெருமானை முன்னிலையாகவும் படர்க்கையாகவும் சொல்லி நான் மனம் உருகுகின்றேன்.
2487 | அறைகலந்த குழல்மொந்தை வீணை யாழும் மறைகலந்த மந்திரமும் நீரும் கொண்டு கறைகலந்த பொழிற்கச்சிக் கம்பம் மேய மறைகலந்த மழபாடி வயிரத் தூணே |
6.040.2 |
ஓசை பொருந்திய குழல், மொந்தை, வீணை, யாழ் என்ற இசைக் கருவிகளை இசைத்து வானத்தில் கந்தருவர் என்ற தேவகணத்தாரும் தேவர்களும் துதித்து வேதமந்திரமும் ஓதி, நீரினால் அபிடேகம் செய்து வழிபட, அவர்களுக்கு வானுலகில் வெகுகாலம் அநுபவிக்கும் செல்வத்தைக் கொடுக்கும், செறிவினால் இருண்ட பொழில்களை உடைய காஞ்சி நகரில் ஏகம்பத்தில் விரும்பியிருக்கும் மேம்பட்ட வயிரக்குவியலால் அமைந்த தூண் போல்வாய் என்றும், வேத ஒலி பொருந்திய மாடங்களை உடைய மழபாடியில் உள்ள வயிரத்தூண் போல்வாய் என்றும், நான் பலகாலும் எம்பெருமானை அழைத்து உள்ளம் உருகுகின்றேன்.
2488 | உரங்கொடுக்கு மிருண்மெய்யர் மூர்க்கர் பொல்லா பரங்கெடுத்திங் கடியேனை யாண்டு கொண்ட புரங்கெடுத்துப் பொல்லாத காமன் ஆகம் வரங்கொடுக்கும் மழபாடி வயிரத் தூணே |
6.040.3 |
வலிமை மிக்க கறுத்த உடம்பினராய், உண்மை யறிவு அற்றவராய், நல்லவரல்லாத ஊத்தை வாயை உடைய சமணர்களை ஆன்மபந்துக்களாகக் கொண்ட பாவமாகிய சுமையை நீக்கி, அடியேனை அடிமையாகக் கொண்ட பருத்த பவளத்தூணே! பசிய பொன்னில் பதிக்கப்பட்ட முத்தே! திரிபுரங்களை அழித்துத் தவறான செயலில் ஈடுபட்ட மன்மதனுடைய உடம்பு சாம்பலாகுமாறு தீ விழித்து உலக மக்களுக்கு என்றும் மேம்பட்ட வாழ்வை அருளும் மழபாடியில் உள்ள வயிரத்தூணே! என்று பலகாலும் நான் வாய்விட்டு அழைத்து உள்ளம் உருகுகின்றேன்.
2489 | ஊனிகந்தூ ணுறிக்கையர் குண்டர் பொல்லா ஞானகஞ்சேர்ந் துள்ளவயி ரத்தை நண்ணா மீனகஞ்சேர் வெள்ளநீர் விதியாற் சூடும் வானகஞ்சேர் மழபாடி வயிரத் தூணே |
6.040.4 |
சுவைத்து உண்ணுதலை விடுத்துக்கையில் உறியில் கரகத்தைத் தாங்கி உடல்பருத்த பொலிவற்ற, ஊத்தைவாயினை உடைய சமணர்களை ஆன்மபந்துக்களாகக் கொண்டு, உள்ளத்தில் நல்லறிவு பெற்று, உள்ளத்தில் வயிரம் போல ஒளிவீசும் எம்பெருமானை நெருங்காத நாய் போன்ற கீழேனாகிய என்னை ஒரு பொருளாகக் கருதி அடிமையாகக் கொண்ட, மீன் பொருந்திய கங்கையைத் தன் ஆணையால் தலையிலே தங்குமாறு சூடிய அரசனே! தேவர்கள் தலைவனே! மேகத்தை உடைய வானளாவிய மாடி வீடுகளை உடைய மழபாடியில் உகந்தருளியிருக்கும் வயிரத்தூணே என்று நான் பலகாலும் வாய்விட்டுக் கூப்பிட்டு உள்ளம் உருகுகின்றேன்.
2490 | சிரமேற்ற நான்முகன்றன் றலையும் மற்றைத் உரமேற்ற இரவிபல் தகர்த்துச் சோமன் நரையேற்ற விடையேறி நாகம் பூண்ட வரமேற்கும் மழபாடி வயிரத் தூணே |
6.040.5 |
ஐந்தலைகளைக் கொண்ட பிரமனது ஐந்தாவது தலை அழியுமாறும் திருமாலுடைய தலைமை அழியுமாறும் போக்கி, வலிமை உடைய சூரியன் ஒருவனுடைய பற்களை உடைத்துச் சந்திரனுடைய ஒளிவீசும் கலைகள் அழியுமாறு கலக்கி, அவர்களை உயிரோடு விட்டு, வெண்ணிறக் காளையை இவர்ந்து, பாம்பினை அணிந்த குணபூரணனே! தலைவனே! நான்கு வேதங்களும் உன்புகழ் பாடிப் பெருமை பெறுகின்ற மழபாடி வயிரத்தூணே என்று நான் அரற்றி நைகின்றேன்.
2491 | சினந்திருத்துஞ் சிறுப்பெரியார் குண்டர் தங்கள் புனந்திருத்தும் பொல்லாத பிண்டி பேணும் தனந்திருத்து மவர்திறத்தை யொழியப் பாற்றித் மனந்திருத்தும் மழபாடி வயிரத் தூணே |
6.040.6 |
சினந்து பிறரைத் திருத்த முற்படும் சிறுமையின் மேம்பட்ட பருத்த உடலை உடைய சமணர்களாகிய பொல்லாத அறிவினை உடையவர்கள் காட்டிய தீவினைகளில் அழுந்தினேனாய் விளை நிலங்களை அழித்து அவ்விடத்தில் அசோகமரத்தை வளர்த்துப் பாதுகாக்கும் நல்வினையில்லேனாகிய என்னையும் ஒரு பொருளாக ஏற்று அடிமை கொண்டு மகளிரைப் பற்றிய எண்ணத்தை யான் நினையாதவாறு நீக்கி இரக்கத்திற்கு அடிப்படையான அறவழியை எனக்கு வழங்கி என் மனத்தை நல்வழியில் திருத்தும் மழபாடி வயிரத்தூணே என்று நான் அரற்றி நைகின்றேன்.
2492 | சுழித்துணையாம் பிறவிவழித் துக்கம் நீக்குஞ் இழிப்பரிய பசுபாசப் பிறப்பை நீக்கும் பழிப்பரிய திருமாலும் அயனும் காணாப் வழித்துணையாம் மழபாடி வயிரத் தூணே |
6.040.7 |
நீர்ச் சுழிக்கு ஒப்பாகித் தன்னிடத்திலேயே ஆழ்த்தும் பிறவி வழியாகியதுக்கத்தைப் போக்கும் சுருண்ட சடையை உடைய எம் பெருமானே! சடையில் தூயதௌந்த நீராகிய கங்கையை ஏற்றவனே! போக்குதற்கு அரிய பசுத்தன்மையால் உள்ள பாசத்தால் ஏற்படும் பிறப்பை நீக்கிய என் துணைவனே! என் தலைவனே! எல்லோருக்கும் தலைவனே! குறை கூறுதற்கரிய திருமாலும் பிரமனும் காணாத ஒளிப்பிழம்பே! வேதத்தின் முடிவாகிய உபநிடதங்களுக்கு அணிகலனாய் எனக்குக் கிட்டிய வழித்துணையாகிய மழபாடி வயிரத்தூணே என்று நான் பலகாலும் வாய்விட்டுக் கூப்பிட்டு உள்ளம் உருகுகின்றேன்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 38 | 39 | 40 | 41 | 42 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமழபாடி - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - மழபாடி, வயிரத், நைகின், தூணேயென்றென்றே, நானரற்றி, என்றும், உருகுகின்றேன், வயிரத்தூணே, பலகாலும், மழபாடியில், பொருந்திய, தலைவனே, உள்ளம், பொல்லாத, மேம்பட்ட, எம்பெருமானை, உள்ளத்தில், ஒளிவீசும், கொண்டு, பொருளாக, குண்டர், திருமாலும், பிறப்பை, அரற்றி, கூப்பிட்டு, வாய்விட்டுக், நைகின்றேன், பெருமானே, அழியுமாறும், அழைத்து, அமைந்த, கந்தருவர், பாம்பினை, செல்வர், திருமுறை, திருச்சிற்றம்பலம், திரள்தூணே, போல்வாய், நீக்கி, அடிமையாகக், ஆன்மபந்துக்களாகக், சமணர்களை, திருமழபாடி, பருத்த