முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.039.திருமழபாடி
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.039.திருமழபாடி

6.039.திருமழபாடி
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வச்சிரத்தம்பேசுவரர்.
தேவியார் - அழகாம்பிகையம்மை.
2476 | நீறேறு திருமேனி யுடையான் கண்டாய் கூறாக உமைபாகங் கொண்டான் கண்டாய் ஏறேறி யெங்குந் திரிவான் கண்டாய் மாறானார் தம்அரணம் அட்டான் கண்டாய் |
6.039.1 |
மழபாடியில் உறையும் அழகன் திருநீறணிந்த அழகிய திருமேனியன். நெற்றிக்கண்ணன். பார்வதி பாகன். விடமுண்ட நீலகண்டன். காளையை இவர்ந்து எங்கும் திரிபவன். ஏழுலகமும் ஏழ்மலையும் ஆயவன். பகைவருடைய மும்மதில்களையும் அழித்தவன்
2477 | கொக்கிறகு சென்னி யுடையான் கண்டாய் அக்கரைமே லாட லுடையான் கண்டாய் அக்கோ டரவ மணிந்தான் கண்டாய் மற்றிருந்த கங்கைச் சடையான் கண்டாய் |
6.039.2 |
மழபாடி மன்னும் மணாளன் சென்னியில் கொக்கு இறகை அணிந்தவன். முல்லை நிலக்கடவுளாகிய திருமாலாகிய காளையை இவர்பவன். கூத்தாடுபவன். தான்கூத்தாடும்போது இடையில் கட்டிய சங்குமணி ஆடுதலை உடையவன். தீயினைஉள்ளங்கையில் ஏந்திய முதற்கடவுள். எலும்பையும், பாம்பையும் அணிந்தவன். அடியவர்களுக்குக் கிட்டுதற்கரிய அமுதமானவன். கங்கை அடங்கியிருக்கும் சடையை உடையவன்.
2478 | நெற்றித் தனிக்கண் ணுடையான் கண்டாய் பற்றிப்பாம் பாட்டும் படிறன் கண்டாய் செற்றார் புரமூன்றுஞ் செற்றான் கண்டாய் மற்றொரு குற்ற மிலாதான் கண்டாய் |
6.039.3 |
மழபாடி மன்னும் மணாளன், நெற்றிமேல் ஒற்றைக்கண்ணை உடையவன். பார்வதிபாகன். பாம்பைப் பிடித்து ஆட்டும் வஞ்சகன். பல ஊர்களிலும் பிச்சைஎடுக்கும் மேம்பட்டவன். பகைவர் மும்மதில்களையும் அழித்தவன். பிறையைச்சடையில் அணிந்தவன். எல்லா நற்குணங்களுக்கும் இருப்பிடமாகிய அவன்குற்றமே இல்லாதவன்.
2479 | அலையார்ந்த புனற்கங்கைச் சடையான் கண்டாய் கொலையான கூற்றங் குமைத்தான் கண்டாய் சிலையால் திரிபுரங்கள் செற்றான் கண்டாய் மலையார் மடந்தை மணாளன் கண்டாய் |
6.039.4 |
மழபாடி மன்னும் மணாளன், அலைமிக்க கங்கையைச் சடையில் ஏற்றவன். உலகங்களுக்கு எல்லாம் புறத்தவனாக நிற்பவன். கொலைத் தொழிலைச் செய்யும் கூற்றுவனைத் தண்டித்தவன். தன்னால் கொல்லப்பட்ட வேங்கைத்தோலை ஆடையாக உடுத்தவன். வில்லால் முப்புரங்களை அழித்தவன். பிறையைச் சடையில் வைத்தவன். பார்வதியின் தலைவன்.
2480 | உலந்தார்தம் அங்கம் அணிந்தான் கண்டாய் நலந்திகழுங் கொன்றைச் சடையான் கண்டாய் உலந்தார் தலைகலனாக் கொண்டான் கண்டாய் மலர்ந்தார் திருவடியென் தலைமேல் வைத்த |
6.039.5 |
மழபாடி மன்னும் மணாளன் இறந்தவர்களுடைய எலும்புகளை அணிந்தவன். மகிழ்வோடுபிறருக்கு அருள் செய்பவன். அழகு விளங்கும் சடையில் கொன்றையை அணிந்தவன். நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் ஆகியவன். இறந்தவர்களின் தலைகளை அணிகலனாக உடையவன். தேவர்களுக்குத் தலைவன். எங்கும் நிறைந்த தன் திருவடிகளை என் தலைமேல்வைத்தவன்.
2481 | தாமரையான் தன்தலையைச் சாய்த்தான் கண்டாய் பூமலரான் ஏத்தும் புனிதன் கண்டாய் ஏமருவு வெஞ்சிலையொன் றேந்தி கண்டாய் மாமருவுங் கலைகையி லேந்தி கண்டாய் |
6.039.6 |
மழபாடி மன்னும் மணாளன், பிரமனுடைய தலை ஒன்றனை நீக்கிநற்பண்புடையவர்கள் நெஞ்சினைத் தன் இருப்பிடமாகக் கொண்டு பூத்தமலர்களால் எல்லோராலும் வழிபடப்படும் தூயவனாய், எல்லோரும் சார்தற்குரிய பொருளாய் இருப்பவனாய், அம்புகள் பொருந்தக் கொடிய வில்லை ஏந்தியவனாய், நீலகண்டத் தெய்வமாய் விலங்குத் தன்மை பொருந்தியமானைக் கையில் ஏந்தியவனாய் உள்ளான்.
2482 | நீராகி நெடுவரைக ளானான் கண்டாய் பாராகிப் பௌவமே ழானான் கண்டாய் ஆரேனுந் தன்னடியார்க் கன்பன் கண்டாய் வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய் |
6.039.7 |
மழபாடி மன்னும் மணாளன். நீராகவும் பெரிய மலைகளாகவும் ஆகி, ஒளியாகி, ஆகாயமும் ஆகி, நிலமாகி, ஏழ் கடலும் ஆகிச் சூரியனும் மேகமும் ஆகித் தன் அடியவர் எவரிடத்தும் அன்பனாய், நுட்பமான சக்தியாகி உலகுக்கு எல்லாம் காரணமாய்க் கச்சணிந்த அழகிய முலையை உடைய பார்வதி பாகனாய் உள்ளான்.
2483 | பொன்னியலுந் திருமேனி உடையான் கண்டாய் மின்னியலும் வார்சடையெம் பெருமான் கண்டாய் தன்னியல்பார் மற்றொருவ ரில்லான் கண்டாய் மன்னிய மங்கையோர் கூறன் கண்டாய் |
6.039.8 |
மழபாடி மன்னும் மணாளன், பொன்னார் மேனியனாய்க் கொன்றைப் பூ மாலை அணிந்தவனாய், ஒளிவீசும் நீண்ட சடை உடையவனாய், யானைத் தோலைவிரும்பிப் போர்த்த வனாய்த் தன் தகுதியை உடையார் மற்றொருவர் இல்லாதானாய்ப் பிறர் ஒருவராலும் பொருந்துதற்கரிய மங்கலப் பொருளாய்த்தன்னோடு கூடிய பார்வதி பாகனாய் உள்ளான்.
2484 | ஆலாலம் உண்டுகந்த ஆதி கண்டாய் காலாலக் காலனையும் காய்ந்தான் கண்டாய் பாலாரும் மொழிமடவாள் பாகன் கண்டாய் மாலாலும் அறிவரிய மைந்தன் கண்டாய் |
6.039.9 |
மழபாடி மன்னும் மணாளன் ஆலகால விடத்தை உண்டு மகிழ்ந்த முதற்பொருளாய்ப் பகைவருடைய மும்மதில்களையும் அழித்தவனாய்த் தன் திருவடியால் கூற்றுவனை ஒறுத்தவனாய், கண்ணப்பருக்கு அருள் செய்த தலைமகனாய், பால்போன்ற சொற்களை உடைய பார்வதி பாகனாய், காளை மீது இவர்ந்து பிச்சைக்கு அலையும் பண்பினனாய்த் திருமாலும் அறிவதற்கரிய வலியவனாய் உள்ளான்.
2485 | ஒருசுடராய் உலகேழு மானான் கண்டாய் விரிசுடராய் விளங்கொளியாய் நின்றான் கண்டாய் இருசுடர்மீ தோடா இலங்கைக் கோனை மருசுடரின் மாணிக்கக் குன்று கண்டாய் |
6.039.10 |
மழபாடி மன்னும் மணாளன் ஒப்பற்ற பேரொளியாய், உலகு ஏழும் பரவி ஓங்காரத்தின் உட்பொருளாய் நின்று, ஞாயிறு முதலிய ஒளிப் பொருள்களாகவும், அவற்றிலிருந்து வெளிப்படும் ஒளியாகவும் அமைந்து, திரு விழாக்களிலும் வேள்விகளிலும் செவிமடுக்கப்படும் ஒலிவடிவினனாய், தன் மீது ஞாயிறும் திங்களும் வானில் ஊர்ந்து செல்வது இராவணனுடைய ஆணையால் தடுக்கப்பட்ட இலங்கையில் மன்னனாகிய அவனுடைய வலிமை அழியுமாறு அவன் இருபது தோள்களையும் நசுங்கச் செய்து ஒளிவிளங்கும் மாணிக்கக்குன்றாய் விளங்குகின்றான்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 37 | 38 | 39 | 40 | 41 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமழபாடி - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - மணாளன், கண்டாய்மழபாடி, மன்னும், மழபாடி, நின்றான், மானான், அணிந்தவன், உள்ளான், பார்வதி, உடையவன், அழித்தவன், பாகனாய், மும்மதில்களையும், சடையில், சடையான், கொண்டான், தலைவன், திருமேனி, எல்லாம், பெருமான், திருமுறை, திருச்சிற்றம்பலம், ஏந்தியவனாய், வைத்தான், கண்டாய்செழுமா, இவர்ந்து, எங்கும், திருமழபாடி, காளையை, யுடையான், பகைவருடைய, செற்றான், மதிசென்னி