முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.032.திருவையாறு
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.032.திருவையாறு

2.032.திருவையாறு
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செம்பொன்சோதீசுரர்.
தேவியார் - அறம்வளர்த்தநாயகியம்மை.
1808 | திருத்திகழ்
மலைச்சிறுமி யோடுமிகு தேசர் உருத்திக ழெழிற்கயிலை வெற்பிலுறை தற்கே விருப்புடைய வற்புதரி ருக்குமிட மேரார் மருத்திகழ் பொழிற்குலவு வண்டிருவை யாறே. |
2.032. 1 |
அழகிய மலைமகளோடு மிக்க ஒளிவடிவினராய சிவபிரான் வெண்மை உருவுடைய அழகிய கயிலைமலையில் உறைவதற்கு விருப்புடைய மேன்மையர். அவர் இருக்குமிடம் மணம் கமழும் பொழில் சூழ்ந்ததும் வண்மையாளர் வாழ்வதுமாய திருவையாறாகும்.
1809 | கந்தமர
வுந்துபுகை யுந்தலில் விளக்கேர் இந்திரனு ணர்ந்துபணி யெந்தையிட மெங்கும் சந்தமலி யுந்தருமி டைந்தபொழில் சார வந்தவளி நந்தணவு வண்டிருவை யாறே. |
2.032. 2 |
பற்றுக் கோடாக விளங்கும் சிவபிரானைப் பொருந்துமாறு புகை இல்லாத விளக்கொளி போன்ற அச்செம்பொற்சோதியை இந்திரன் உணர்ந்து வழிபடும் இடம் எங்கும் அழகு விளங்கும் மரம் நிறைந்த பொழிலைச் சார்ந்து வரும் குளிர்ந்த காற்று தங்கிக் கலந்துள்ளதும் வள்ளன்மையோர் வாழ்வதுமான திருவையாறு ஆகும்.
1810 | கட்டுவட
மெட்டுமுறு வட்டமுழ வத்தில் கொட்டுகர மிட்டவொலி தட்டும்வகை நந்திக் கிட்டமிக நட்டமவை யிட்டவ ரிடஞ்சீர் வட்டமதி லுட்டிகழும் வண்டிருவை யாறே. |
2.032. 3 |
எட்டு வடங்களால் கட்டப்பட்ட வட்டமான முழவத்தை நந்திதேவர் தம் கரங்களால் கொட்ட, அம்முழவொலிக்கும் தாளச்சதிக்கும் ஏற்ப அவர்க்குப் பெருவிருப்பம் உண்டாகுமாறு நடனமாடிய சிவபிரானது இடம், அழகிய வட்டமான மதில்களுள் விளங்குவதும், வள்ளன்மையோர் வாழ்வதுமான திருவையாறு ஆகும்.
1811 | நண்ணியொர்
வடத்தினிழல் நால்வர்முனி வர்க்கன் றெண்ணிலி மறைப்பொருள்விரித்தவ ரிடஞ்சீர்த் தண்ணின்மலி சந்தகிலொ டுந்திவரு பொன்னி மண்ணின்மிசை வந்தணவு வண்டிருவை யாறே. |
2.032. 4 |
கல்லால மரநிழலை அடைந்து சனகாதியர் நால்வருக்கு அக்காலத்தில் வேதப் பொருளை விரித்துரைத்த சிவபிரானது 110 இடம்; குளிர்ந்த சந்தனம், அகில் ஆகிய மரங்களை அடித்து வருகின்ற பொன்னியாற்றின் கரையின்மேல் வந்து பொருந்தியதும் வள்ளன்மையோர் வாழ்வதுமான திருவையாறு ஆகும்.
1812 | வென்றிமிகு
தாருகன தாருயிர் மடங்கக் கன்றிவரு கோபமிகு காளிகத மோவ நின்றுநட மாடியிட நீடுமலர் மேலால் மன்றன்மலி யும்பொழில்கொள் வண்டிருவை யாறே. |
2.032. 5 |
வெற்றிகள் பல பெற்ற தாருகன் உயிர் போகுமாறு சினந்து அவனை அழித்த கோபம்மிக்க காளிதேவியின் சினம் அடங்க அவளோடு நடனமாடிய சிவபிரானது இடம், பெரிய மலர்மணம் நிறையும் பொழில்களைக் கொண்டுள்ளதும், வள்ளன்மையயோர் வாழ்வதுமான திருவையாறு ஆகும்.
1813 | பூதமொடு
பேய்கள்பல பாடநட மாடிப் பாதமுதல் பையரவு கொண்டணி பெறுத்திக் கோதைய ரிடும்பலி கொளும்பர னிடம்பூ மாதவி மணங்கமழும் வண்டிருவை யாறே. |
2.032. 6 |
பூதங்களும் பேய்களும் பாட நடனமாடி அடி முதல் முடிவரை பாம்புகளை அழகுடன் பூண்டு மகளிர் இடும் பலியைக் கொள்ளும் சிவபிரானது இடம், குருக்கத்திச் செடிகளின் மணம் கமழ்வதும் வள்ளன்மையுடையோர் வாழ்வதுமான திருவையாறு ஆகும்.
1814 | துன்னுகுழன்
மங்கையுமை நங்கைசுளி வெய்தப் பின்னொரு தவஞ்செய்துழல் பிஞ்ஞகனு மங்கே என்னசதி யென்றுரைசெ யங்கணனி டஞ்சீர் மன்னுகொடை யாளர்பயில் வண்டிருவை யாறே. |
2.032. 7 |
செறிந்த கூந்தலையுடைய உமைமங்கை சினம் கொள்ளுமாறு பின்னும் ஒரு தவத்தைச் செய்ய, உமையே! நீ சினம் கொள்ளக் காரணம் யாதென வினவி, அவளை மணந்துறையும் கருணை நிரம்பிய கண்களை உடைய சிவபிரானது இடம், வள்ளன்மை நிரம்பிய கொடையாளர் வாழும் திருவையாறு ஆகும்.
1815 | இரக்கமில்கு
ணத்தொடுல கெங்குநலி வெம்போர் அரக்கன்முடி யத்தலை புயத்தொடும டங்கத் துரக்கவிர லிற்சிறிது வைத்தவரி டஞ்சீர் வரக்கருணை யாளர்பயில் வண்டிருவை யாறே. |
2.032. 8 |
இரக்கமற்ற குணத்தோடு உலகெங்கும் வாழ்வோரை நலிவு செய்யும் கொடிய போரைச் செய்துவந்த இராவணனின் தலைகள், தோள்கள் ஆகியன அழியுமாறு கால்விரலால் செற்ற சிவபிரானது இடம் புகழ் உண்டாகுமாறு பொருள் வழங்கும் கருணையாளர் வாழும் திருவையாறு ஆகும்.
1816 | பருத்துருவ
தாகிவிண் அடைந்தவனொர் பன்றிப் பெருத்துருவ தாயுல கிடந்தவனு மென்றும் கருத்துரு வொணாவகை நிமிர்ந்தவனி டங்கார் வருத்துவகை தீர்கொள்பொழில் வண்டிருவை யாறே. |
2.032. 9 |
பருந்து உருவமாய் விண்ணிற்சென்று தேடிய பிரமன், பெரிய பன்றி உருவமாய் நிலத்தை அகழ்ந்து சென்று அடிமுடி தேடிய திருமால் ஆகியோர் மனங்கட்கு எட்டாதவாறு ஓங்கி உயர்ந்து நின்ற சிவபிரானது இடம், வெம்மையைப் போக்கும் பொழில்கள் சூழ்ந்ததும் வள்ளன்மை உடையோர் வாழ்வதுமான திருவையாறு ஆகும்.
1817 | பாக்கியம
தொன்றுமில் சமண்பதகர் புத்தர் சாக்கியர்க ளென்றுடல் பொதிந்துதிரி வார்தம் நோக்கரிய தத்துவ னிடம்படியின் மேலால் மாக்கமுற நீடுபொழில் வண்டிருவை யாறே. |
2.032. 10 |
நல்லூழ் இல்லாத சமண் பாதகர்கள், புத்தராகிய சாக்கியர்கள் என்று உடலைப் போர்த்தித் திரிவோரின் பார்வைக்கு அகப்படாத மெய்ப்பொருளாகிய சிவபிரானது இடம் உலகில் நீண்டு வளர்ந்த சோலைகள் சூழ்ந்ததும், வள்ளன்மையோர் வாழ்வதுமான திருவையாறு ஆகும்.
1818 | வாசமலி
யும்பொழில்கொள் வண்டிருவை யாற்றுள் ஈசனை யெழிற்புகலி மன்னவன்மெய்ஞ் ஞானப் பூசுரன் உரைத்ததமிழ் பத்துமிவை வல்லார் நேசமலி பத்தரவர் நின்மலன் அடிக்கே. |
2.032. 11 |
மணம் நிறைந்த பொழில்களைக் கொண்டுள்ள வளமான திருவையாற்றுள் எழுந்தருளிய சிவபிரானை, அழகிய புகலி மன்னனும், உண்மை ஞானம் பெற்ற அந்தணனும் ஆகிய ஞான சம்பந்தன் போற்றி உரைத்த இப்பதிகப்பாடல்கள் பத்தையும் வல்லவர், சிவபிரான் திருவடிக்கண் மிக்க அன்புடையவராவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 30 | 31 | 32 | 33 | 34 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவையாறு - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - வண்டிருவை, திருவையாறு, சிவபிரானது, வாழ்வதுமான, வள்ளன்மையோர், சூழ்ந்ததும், டஞ்சீர், பொழில்களைக், யும்பொழில்கொள், மேலால், நிரம்பிய, உருவமாய், வாழும், வள்ளன்மை, திருமுறை, யாளர்பயில், உண்டாகுமாறு, இல்லாத, விளங்கும், சிவபிரான், நிறைந்த, குளிர்ந்த, விருப்புடைய, வட்டமான, திருச்சிற்றம்பலம், நடனமாடிய