முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.031.திருக்கருப்பறியலூர்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.031.திருக்கருப்பறியலூர்
2.031.திருக்கருப்பறியலூர்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - குற்றம்பொறுத்தநாதர்.
தேவியார் - கோல்வளையம்மை.
1797 | சுற்றமொடு
பற்றவை துயக்கற வறுத்துக் குற்றமில் குணங்களொடு கூடுமடி யார்கள் மற்றவரை வானவர்தம் வானுலக மேற்றக் கற்றவ னிருப்பது கருப்பறிய லூரே. |
2.031. 1 |
சுற்றம், பற்று ஆகியவற்றை முற்றிலும் அறுத்துக் குற்றமற்ற நல்ல குணங்களோடு கூடி விளங்கும் அடியவர்களைத் தேவர்கள் வாழும் வானுலகம் ஏற்றலைச் செய்யும் சிவபிரான் இருக்குமிடம் கருப்பறியலூர்.
1798 | வண்டணைசெய்
கொன்றையது வார்சடைகண்மேலே கொண்டணைசெய் கோலமது கோளரவி னோடும் விண்டணைசெய் மும்மதிலும் வீழ்தரவொ ரம்பால் கண்டவ னிருப்பது கருப்பறிய லூரே. |
2.031. 2 |
வண்டுகள் அணைதலைச் செய்கின்ற கொன்ய நீண்ட சடைமுடிமீது அணிந்து, துன்பம் செய்யும் பாம்பு அணைதலைச் செய்யும் கோலம் பூண்டவராய், மும்மதில்களும் உடைந்து நிலத்தினை அடையுமாறு ஓரம்பால் எய்தழித்தவர் இருப்பது கருப்பறியலூர்.
1799 | வேதமொடு
வேதியர்கள் வேள்விமுத லாகப் போதினொடு போதுமலர் கொண்டுபுனை கின்ற நாதனென நள்ளிருண்மு னாடுகுழை தாழும் காதவ னிருப்பது கருப்பறிய லூரே. |
2.031. 3 |
வேதியர்கள் வேதங்களை ஓதுவதோடு வேள்வி முதலியனவற்றைச் செய்து, காலம் பெற அரும்புகளையும் மலர்களையும் சாத்தி வழிபடும் தலைவராக நள்ளிருளில் அசைகின்ற குழைதாழ ஆடும் காதினை உடையவராகிய சிவபிரான் இருப்பது கருப்பறியலூர்.
1800 | மடம்படு
மலைக்கிறைவன் மங்கையொரு பங்கன் உடம்பினை விடக்கருதி நின்றமறை யோனைத் தொடர்ந்தணவு காலனுயிர் காலவொரு காலால் கடந்தவ னிருப்பது கருப்பறிய லூரே. |
2.031. 4 |
மலையரசனின் மகளாகிய மடப்பம் பொருந்திய மையொருபாகனும், உடலைவிட்டு உயிர் செல்லும் காலம் வருவதை அறிந்து தொழுது நின்ற மார்க்கண்டேயன் உயிரைக் கவர வந்த காலனின் உயிர் நீங்குமாறு தனது ஒரு காலினால் உதைத்தவனும் ஆகிய பெருமான் வீற்றிருக்கும் தலம் கருப்பறியலூர்.
1801 | ஒருத்தியுமை
யோடுமொரு பாகமது வாய நிருத்தனவ னீதியவ னித்தனெறி யாய விருத்தனவன் வேதமென வங்கமவை யோதும் கருத்தவ னிருப்பது கருப்பறிய லூரே. |
2.031. 5 |
ஒருபாகமாக ஒப்பற்றவளாகிய உமையம்மையோடு கூடி விளங்கும் கூத்தனும், நீதியின் வடிவானவனும், அழியாதவனும், நெறிகாட்டும் முதியோனும், வேதங்கள், ஆறு அங்கங்கள் ஆகியவற்றை ஓதும் தலைவனும் ஆகிய சிவபிரான் விளங்குவது கருப்பறியலூர்.
1802 | விண்ணவர்கள்
வெற்பரசு பெற்றமகண் மெய்த்தேன் பண்ணமரு மென்மொழியி னாளையணை விப்பான் எண்ணிவரு காமனுடல் வேவவெரி காலும் கண்ணவ னிருப்பது கருப்பறிய லூரே. |
2.031.6 |
இமவான் பெற்ற மகளும், தேன்சுவை, பண்ணிசை ஆகியன போன்ற மொழியினாளும் ஆகிய உமையம்மையை, சிவபிரானது திருமேனியோடு சேர்ப்பிக்குமாறு விண்ணவர்கள் ஏவ வந்த காமனது உடல் வெந்தழியுமாறு எரிகாலும் நெற்றிக்கண்ணை உடைய சிவபிரான் எழுந்தருளியிருப்பது கருப்பறியலூர்.
1803 | ஆதியடி
யைப்பணிய வப்பொடு மலர்ச்சேர் சோதியொளி நற்புகை வளர்க்குவடு புக்குத் தீதுசெய வந்தணையு மந்தக னரங்கக் காதின னிருப்பது கருப்பறிய லூரே. |
2.031. 7 |
உலகின் ஆதியாய் விளங்கும் தன்னை வழிபட நீர், மலர், ஒளிதரும் விளக்கு, நறுமணப்புகை ஆகியவற்றுடன் கட்டுமலையாய் உயரமாக அமைந்த ஆலயத்தை அடைந்து வழிபட்ட மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்தணைந்த காலன் அழியுமாறு உதைத்த சிவபிரான் எழுந்தருளியிருப்பது கருப்பறியலூர்.
1804 | வாய்ந்தபுகழ்
விண்ணவரு மண்ணவரு மஞ்சப் பாய்ந்தமர்செ யுந்தொழிலி லங்கைநகர் வேந்தற் கேய்ந்தபுய மத்தனையு மிற்றுவிழ மேனாள் காய்ந்தவ னிருப்பது கருப்பறிய லூரே. |
2.031. 8 |
புகழ் வாய்ந்த தேவர்களும் மக்களும் அஞ்சுமாறு ஓடிச் சென்று போர் உடற்றும் தொழிலினை உடைய இலங்கை மன்னனுக்கு அமைந்த இருபது தோள்களும் ஒடிந்து விழுமாறு முன்னாளில் சினந்தவனாகிய சிவபிரான் வீற்றிருப்பது கருப்பறியலூர்.
1805 | பரந்தது
நிரந்துவரு பாய்திரைய கங்கை கரந்தொர்சடை மேன்மிசை யுகந்தவளை வைத்து நிரந்தர நிரந்திருவர் நேடியறி யாமல் கரந்தவ னிருப்பது கருப்பறிய லூரே. |
2.031.9 |
வரிசையாகப் பரவிப் பெருகி வந்த அலைவீசும் கங்கை சுவறுமாறு ஒருசடைமேல் ஏற்று அந்நதித் தெய்வமாகிய கங்கையை மகிழ்வுடன் முடிமிசை வைத்து, திருமால் பிரமர் தேடிஅறியாதவாறு எப்போதும்அவர்களால் அறியப்பெறாதவனாய் ஒளித்திருக்கும் சிவபிரான்எழுந்தருளியிருக்கும் ஊர் கருப்பறியலூர்.
1806 | அற்றமறை
யாவமண ராதமிலி புத்தர் சொற்றமறி யாதவர்கள் சொன்னசொலை விட்டுக் குற்றமறி யாதபெரு மான்கொகுடிக் கோயில் கற்றென விருப்பது கருப்பறிய லூரே. |
2.031. 10 |
மறைக்கவேண்டிய உறுப்பை மறையாது ஆடையின்றித் திரியும் சமணர்களும், அறிவற்ற புத்தர்களும் சொல்லும் திறன் அறியாதவர்கள்.அவர்கள் சொல்லை விடுத்துக் குற்றம் அறியாத பெருமான் கொகுடிக் கோயிலையே உறுதியானதாகக் கருதி எழுந்தருளிய ஊர் கருப்பறியலூர்.
1807 | நலந்தரு
புனற்புகலி ஞானசம்பந்தன் கலந்தவர் கருப்பறியன் மேயகட வுள்ளைப் பலந்தரு தமிழ்க்கிளவி பத்துமிவை கற்று வலந்தரு மவர்க்குவினை வாடலௌ தாமே. |
2.031. 11 |
நன்மைகளைத்தரும் நீர் வளம் மிக்க புகலிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், தன்னோடு உடன் கலந்தவனாய கருப்பறியலில் மேவிய கடவுளைப்பாடிய பயன்தரும் தமிழ்ச் செய்யுளாகிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் கற்று வன்மை உற்றோர்க்கு வினைகள் வாடுதல் எளிதாம்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 29 | 30 | 31 | 32 | 33 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கருப்பறியலூர் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கருப்பறிய, கருப்பறியலூர், னிருப்பது, சிவபிரான், விளங்கும், செய்யும், விண்ணவர்கள், பெருமான், எழுந்தருளியிருப்பது, அமைந்த, உயிரைக், ஞானசம்பந்தன், வைத்து, அணைதலைச், ஆகியவற்றை, திருமுறை, திருக்கருப்பறியலூர், திருச்சிற்றம்பலம், இருப்பது, வேதியர்கள்