முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.121.திருப்பாதிரிப்புலியூர்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.121.திருப்பாதிரிப்புலியூர்

2.121.திருப்பாதிரிப்புலியூர்
பண் - செவ்வழி
திருச்சிற்றம்பலம்
பண் - செவ்வழி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தோன்றாத்துணையீசுவரர்.
தேவியார் - தோகையம்பிகையம்மை.
2780 | முன்னநின்ற
முடக்கான் புன்னைநின்று கமழ்பா தன்னைநின்று வணங்குந் பின்னைநின்ற பிணியாக் |
2.121. 1 |
முடங்கிய கால்களை உடைய முயலுருவத்தைப் பெற்றுத் தன்னை வணங்கி முன்னே நின்ற மங்கண முனிவருடைய சாபத்தைப் போக்கி அவருக்கு அருள் செய்து, நீண்ட புன்னைமரங்கள் மணம் கமழும் திருப்பாதிரிப் புலியூரில் எழுந்தருளி இருக்கும் இறைவனை வணங்கும் மேலான தவம் இல்லாதவர்கள் நோயால் நலியும் யாக்கையைப் பெறுவார்கள்.
2781 | கொள்ளிநக்க
பகுவாய முள்ளிலவம் முதுகாட் புள்ளினங்கள் பயிலும் உள்ள நம்மேல் |
2.121. 2 |
நகும் போது தீயை உமிழும் திறந்த வாயை உடைய பேய்கள் குழைந்தாட முள்ளிலவ மரங்கள் நிறைந்த சுடுகாட்டில் உறையும் இறைவன் இடமாகிய, அன்னம், மயில் முதலிய பறவையினங்கள் வாழும் திருப்பாதிரிப்புலியூரை நினைந்து வழிபட்டு நம்மேலுள்ளன ஆகிய வினைகளை ஒழியுங்கள்.
2782 | மருளினல்லார்
வழிபாடு பொருளினல்லார் பயில் வெருளின்மானின் பிணை அருளிஆகத் திடைவைத் |
2.121.3 |
மெய்ப்பொருளை அறிந்தவரும் மயக்கமற்ற ஞானியரும் வழிபாடு செய்து வாழும் திருப்பாதிப்புலியுல் வாழம் மழவாளரைக் கண்டு மருளும் பெண்மான் போன்ற பார்வையை உடைய பார்வதியை நோக்கி, அவளைத் தம்மீது காதல் கொள்ளச் செய்து, தம் ஆகத்திடை வைத்து அருள்பவராய் உள்ள அப்பெருமான் செயல்மிக்க அழகானதாகும்.
2783 | போதினாலும்
புகையாலும் போதினாலே வழிபாடு ஆதிநாலும் அவலம் ஓதிநாளும் இடும்பிச்சை |
2.121. 4 |
மலர்கள் தூவியும் தசாங்கம் முதலிய மணமுடைய பொருள்களைப் புகைத்தும் அடியவர்கள் காலந்தவறாமல் வழிபாடு செய்யப் பாதிரிப்புலியூரில் உறையும் அவலம் இலாத அடிகள் நாள் தோறும் வேதங்களை ஓதிக் கொண்டு சென்று அன்பர்கள் இடும் பிச்சையை ஏற்று உண்ணும் இயல்பினர்.
2784 | ஆகநல்லார்
அமுதாக்க நாகநல்லார் பரவந்நயந் போகநல்லார் பயிலும் பாகநல்லா ளொடுநின்ற |
2.121. 5 |
நுகர்ச்சிக்குரிய இளமகிளிர் பயிலும் பாதிரிப்புலியூரில் பெரிய நாயகியாரை இடப்பாகமாகக் கொண்டுள்ள பரமேட்டி உடலின் இடப் பாதியிலே உறையும் உமையம்மை அமுது ஆக்கிக் கொடுக்க நஞ்சை உண்டவன். நல்லோர் பரவ நச்சு வெப்பத்தை உடைய ஐந்தலைப் பாம்பை விரும்பி அரையில் கட்டியவன்.
2785 |
மதியமொய்த்த கதிர்போ புதியமுத்தந் திகழ் பதியில்வைக்கப் படுமெந்தை குதியுங்கொள்வர் விதியுஞ் |
2.121. 6 |
பழ அடியார்கள் அழகாக ஆகம விதிகளின்படி வழிபாடு செய்யவும் ஆனந்தக் கூத்தாடவும் நிலவொளி போன்று வெண்மணல் பரவிய கடற்கரைச் சோலை இடத்தே புதிய முத்துக்கள் திகழும் திருப்பாதிரிப்புலியூரில் எழுந்தருளி உள்ளார் இறைவர்.
2786 | கொங்கரவப்
படுவண் சங்கரவப் பறையின் பொங்கரவம் முயர் அங்கரவம் அரையில் |
2.121. 7 |
பூந்தாதுகளின் வண்டுகள் செய்யும் ஒலி கடற்கரைச் சோலைகளில் சங்குகளின் ஒலி, பறைமுழவு ஆகிய ஒலிகள் கூடி ஆரவாரம் மிகுந்து தோன்றும் திருப்பாதிரிப் புலியூரில் இடையிலே பாம்பைக் கச்சாக அணிந்து எழுந்தருளிய பரமனை அடையுங்கள்.
2787 | வீக்கமெழும்
மிலங்கைக் ஊக்கமொழிந் தலறவ் பூக்கமழும் புனற் நோக்கமெலிந் தணுகா |
2.121. 8 |
பெருமை மிக்க இலங்கைக்கு அரசனாகிய இராவணன் கயிலை மலையிடைத்தனது செருக்கழிந்து அலறுமாறு கால் விரலை ஊன்றிய இறைவன் எழுந்தருளிய மலர் மணம் கமழும் நீர் வளம் சான்ற பாதிரிப்புலியூரை நோக்க வினைகள் மெலிந்து நுணுகி ஒழியும்.
2788 | அன்னந்தாவும்
மணியார் பொன்னந் தாதுசொரி முன்னந்தாவி அடிமூன் தன்னந்தாளுற் றுணராத |
2.121. 9 |
அன்னங்கள் விளையாடும் அழகிய சோலைகளில் முத்துமணி போன்ற புன்னை மலர்கள் பொன்போலும் தாதுக்களைச் சொரியும் திருப்பாதிரிப்புலியூரில், முற்காலத்தே எல்லா உலகங்களையும் தாவி மூன்றடியால் அளந்த திருமாலும், நான்முகனும், சிறிதேனும் திருத்தாளையும் திருமுடியையும் அறிய முடியாதவராய்த் தவத்தின் நேரிய நீதி வடிவினராய்ப் பெருமான் விளங்குகிறார்.
2789 | உரிந்தகூறை
யுருவத் திரிந்துதின்னுஞ் சிறுநோன் எரிந்துசொன்னவ் வுரைகொள் புரிந்தவெண் ணீற்றண்ணல் |
2.121. 10 |
ஆடையின்றித் தெருவில் திரிந்து தின்னும் அற்பவிரதத்தை உடைய சமணரும், புத்தரும் எரிவினால் சொல்லும் உரைகளைக் கொள்ளாது. திருவெண்ணீறு அணிந்த திருப்பாதிரிப்புலியூர் அண்ணலைப் புகழ்ந்து போற்றுங்கள்.
2790 | அந்தண்நல்
லாரகன் பந்தன்நல் லார்பயில் சந்தமாலைத் தமிழ்பத்தி வந்துதீயவ் வடையாமை |
2.121. 11 |
அந்தணர்கள் நிறைந்துவாழும் அகன்ற சீகாழிப் பதியில் திருஞானசம்பந்தன், நல்லவர் வாழும் திருப்பாதிரிப் புலியூரில் எழுந்தருளிய இறைவர் மீது பாடிய இசை மாலை ஆகிய இத்திரருபதிகத்தை ஓதி வழிபடுவாரைத் தீமைகள் அணுகா. அவர்தம் வினைகள் மாயும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 116 | 117 | 118 | 119 | 120 | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்பாதிரிப்புலியூர் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - பாதிரிப், வழிபாடு, எழுந்தருளிய, உறையும், திருப்பாதிரிப்புலியூர், பயிலும், புலியூர்தனுள், வாழும், திருப்பாதிரிப், செய்து, புலியூரில், இறைவர், திருப்பாதிரிப்புலியூரில், கடற்கரைச், அரையில், சோலைகளில், புன்னை, வினைகள், திருமுறை, பாதிரிப்புலியூரில், திருச்சிற்றம்பலம், புலியூர், இறைவன், புலியூர்தனை, எழுந்தருளி, முதலிய, கமழும், பேய்கள், செய்யப், செய்யும், மலர்கள்