முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.002.திருவலஞ்சுழி
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.002.திருவலஞ்சுழி

2.002.திருவலஞ்சுழி
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காப்பகத்தீசுவரர்.
தேவியார் - மங்களநாயகியம்மை.
1480 | விண்டெ
லாமல ரவ்விரை வண்டெ லாம்நசை யால்இசை தொண்டெ லாம்பர வுஞ்சுடர் பண்டெ லாம்பலி தேர்ந்தொலி |
2.002. 1 |
மலர்கள் எல்லாம் விண்டு மணம் வீசவும், அம்மலர்களில் நிறைந்துள்ள தண்ணிய தேனை உண்ணும்விருப்பினால் வண்டுகள் இசைபாடவும், விளங்கும் சோலைகள் சூழ்ந்த திருவலஞ்சுழியில் தொண்டர்கள் பரவச் செஞ்சுடர் போன்ற ஒளியினை உடையவராய் எழுந்தருளிய இறைவரே! முன்னெல்லாம் நீர் ஒலியோடு பாடல்களைப் பாடிக்கொண்டு பலி ஏற்பதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.
1481 | பாரல்
வெண்குரு கும்பகு வாரல் வெண்டிரை வாயிரை மூரல் வெண்முறு வல்நகு ஊரல் வெண்டலை கொண்டுல |
2.002.2 |
நீண்ட கழுத்தினை உடைய வெள்ளிய கொக்குகளும், பிளந்த வாயை உடைய நாரைகளும், ஓடுகின்ற தண்ணீரின் வெண்மையான அலைகளில் இரை தேடுகின்ற திருவலஞ்சுழியில் புன்னகையோடு வெள்ளி பற்கள் விளங்க, செறிந்த ஒளிப்பிழம்பினராய் எழுந்தருளிய இறைவரே! முடியில் வெண்மையான தலை மாலை பொருந்தியவராய் உலகம் முழுவதும் சென்று திரிந்து பலி ஏற்கக் காரணம் யாதோ? சொல்வீராக.
1482 | கிண்ண
வண்ணமல ருங்கிளர் வண்ண நுண்மணன் மேலனம் சுண்ண வெண்பொடிக் கொண்டுமெய் விண்ண வர்தொழ வெண்டலை |
2.002. 3 |
கிண்ணம் போல் வாய் விரிந்து செவ்வண்ணம் பொருந்தியதாய் மலர்ந்து விளங்கும் தாமரை மலர்களின் தாதுகளை அளாவி அழகிய நுண்மணற் பரப்பின் மேல் அன்னங்கள் வைகும் திருவலஞ்சுழியில், உடலிற்பூசும் சுண்ணமாகத் திருநீற்றுப் பொடியை மேனிமேற் பூசுதலில் வல்லவராய் விளங்கும் இறைவரே! தேவர்கள் எல்லாம் உம்மை வந்து வணங்கும் தலைமைத்தன்மை உடையவராயிருந்தும் வெள்ளிய தலையோட்டில் பலிகொண்டு திரிதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.
1483 | கோடெ
லாநிறை யக்குவ மாடெ லாமலி நீர்மண சேடெ லாமுடை யீர்சிறு நாடெ லாமறி யத்தலை |
2.002.4 |
கரைகளெல்லாம் நிறையுமாறு குழிகளில் பூத்த குவளை மலர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்திருத்தலால் அங்குள்ள தண்ணீர், குவளை மலரின் மணத்தை வீசும் திருவலஞ்சுழியில் விளங்கும் பெருமைகள் எல்லாம் உடையவரே! சிறிய மான் கன்றைக் கையில் ஏந்தியவரே! நாடறியத் தலையோட்டில் பிச்சை ஏற்றல் ஏனோ? சொல்வீராக.
1484 | கொல்லை
வென்றபுனத் திற்குரு வல்லை நுண்மணன் மேலனம் முல்லை வெண்முறு வன்னகை சில்லை வெண்டலை யிற்பலி |
2.002.5 |
முல்லை நிலத்தைப் போன்ற காடுகளில் கிடைக்கும் நிறம் பொருந்திய மணிகளை எடுத்துச்சென்று விரைவில் அன்னங்கள் நுண்ணிய மணற் பரப்பின்மேல் தங்கி வாழும் திருவலஞ்சுழியில் எழுந்தருளிய, முல்லை அரும்பு போன்ற வெண்மையான முறுவலோடு புன்சிரிப்பையுடைய உமாதேவியை ஆளும் ஒளி வடிவுடையவரே! சிறுமையைத்தரும் வெண்டலையோட்டில் பலிகொண்டுழல்வதைச் செல்வமாகக் கருதுதல் ஏனோ? சொல்வீராக.
1485 | பூச
நீர்பொழி யும்புனற் வாச நீர்குடை வாரிடர் தேச நீர்திரு நீர்சிறு ஏச வெண்டலை யிற்பலி |
2.002.6 |
நீர் பெருகி வரும் காவிரியில் பூச நன்னாளில் பல மலர்களோடு கூடி மணம் கமழ்ந்துவரும் நீரில் மூழ்குபவர்களின் இடர்களைத் தீர்த்தருளும் திருவலஞ்சுழித் தேசரே! அழகிய சிறிய மான்கன்றைக் கையில் ஏந்தியவரே! பலரும் இகழ வெண்டலையில் நீர் பலிகொள்வது செல்வம் இல்லாமையினாலோ? சொல்வீராக.
1486 | கந்த
மாமலர்ச் சந்தொடு வந்த நீர்குடை வாரிடர் அந்த நீர்முத னீர்நடு பந்த நீர்கரு தாதுல |
2.002.7 |
மணம் பொருந்திய சிறந்த மலர்களையும் சந்தன மரங்களையும், கரிய அகில் மரங்களையும் தாங்கிவந்த காவிரிநீரில் குளிப்பவர்களின் இடர்களைத் தீர்க்கும் திருவலஞ்சுழியில் எழுந்தருளி உலகிற்கு ஆதியும் நடுவும் அந்தமுமாகி விளங்கும் அடிகளே! உலகிற்பற்றை விளைப்பது என்று மக்களை போலக் கருதாமல் பலிகொள்வது ஏனோ! சொல்வீராக.
1487 | தேனுற்
றநறு மாமலர்ச் வானுற் றநசை யாலிசை கானுற் றகளிற் றின்னுரி ஊனுற் றதலை கொண்டுல |
2.002.8 |
தேன் பொருந்திய பெரிய மலர்ச்சோலையில் வண்டுகள் தேனுண்ணும் நசையால் உயரிய இசையைப் பாடும் திருவலஞ்சுழியில் எழுந்தருளிக் கொல்லவந்த காட்டு யானையின் தோலை உரித்துப் போர்த்த வலிமையை உடைய இறைவரே! ஊன் பொருந்திய தலையோட்டைக் கையில் கொண்டு உலகெங்கும் உழன்றது ஏனோ? சொல்வீராக.
1488 | தீர்த்த
நீர்வந் திழிபுனற் வார்த்த நீர்குடை வாரிடர் ஆர்த்து வந்தவ ரக்கனை சீர்த்த வெண்டலை யிற்பலி |
2.002.9 |
புனிதமான நீர் வந்து செல்லும் காவிரி ஆற்றில் பன்மலர்களைத் தூவி அவ்வாற்று நீரில் மூழ்குவோரது இடர்களைப் போக்கியருள்பவராய்த் திருவலஞ்சுழியில் மேவி, தன் வலிமையைப் பெரிது எனக் கருதி ஆரவாரித்து வந்த இராவணனை அக்காலத்தில் அடர்த்தவரே! சீர்மை பொருந்திய வெள்ளிய தலையோட்டில் பலி ஏற்றுண்பது உம் பெருமைக்கு அழகோ? சொல்வீராக.
1489 | உரம
னுஞ்சடை யீர்விடை வரம னும்பெற லாவது பிரம னுந்திரு மாலும சிரமெ னுங்கல னிற்பலி |
2.002. 10 |
பெருமை பொருந்திய சடையினை உடையவரே! விடையை ஊர்ந்து வருபவரே! நிலையான வரம் பெறுதற்குரிய இடமாய் உள்ள வலஞ்சுழியில் விளங்கும் எந்தையே! பிரமன் திருமால் ஆகியோரால் அளத்தற்கு அரியரானவரே, நீர் தலையோடாகிய உண் கலனில் பலியைச் செல்வமாக ஏற்றதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.
1490 | வீடும்
ஞானமும் வேண்டுதி வாடின் ஞானமென் னாவது நாடி ஞானசம் பந்தன பாடும் ஞானம்வல் லாரடி |
2.002.11 |
வீடும் அதற்கு ஏதுவாய ஞானமும் பெறவிரும்பு வீராயின், விரதங்களை மேற்கொண்டு உடல் வாடுவதனால் ஞானம் வந்துறுமோ? திருவலஞ்சுழியை அடைந்து ஞான சம்பந்தர் ஓதி யருளிய செந்தமிழை இசையோடு பாடும் ஞானம் வாய்க்கப் பெற்றவர்களின் திருவடிகளை வழிபடுவதொன்றே ஞானத்தைத் தருவதாகும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவலஞ்சுழி - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - சொல்வீராக, திருவலஞ்சுழியில், பொருந்திய, விளங்கும், யீர்சொலீர், லஞ்சுழி, வெண்டலை, காரணம், இறைவரே, யிற்பலி, தீர்க்கும்வ, முல்லை, வெள்ளிய, வெண்மையான, நீர்குடை, வாரிடர், கையில், எழுந்தருளிய, எல்லாம், தலையோட்டில், பாடும், ஏந்தியவரே, பொன்னியிற், பன்மலர், செல்வமே, பலிகொள்வது, வீடும், ஞானமும், மெந்தைவ, மரங்களையும், இடர்களைத், மாமலர்ச், நீரில், வைகும்வ, வண்டுகள், வெண்முறு, கொண்டுல, மலர்கள், லஞ்சுழித், திருமுறை, திருச்சிற்றம்பலம், பாடும்வ, கொக்கவு, ழன்றதே, லீர்சொலீர், அன்னங்கள், மான்மறி, லஞ்சுழிச், திருவலஞ்சுழி, நுண்மணன், மேலனம், உடையவரே