முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.118.திருத்திலதைப்பதி
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.118.திருத்திலதைப்பதி
2.118.திருத்திலதைப்பதி
பண் - செவ்வழி
திருச்சிற்றம்பலம்
பண் - செவ்வழி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மதிமுத்தநாதேசுவரர்.
தேவியார் - பொற்கொடியம்மை.
2747 | பொடிகள்பூசிப்
பலதொண்டர் அடிகளாரத் தொழுதேத்த கொடிகளோங்கிக் குலவும் வடிகொள்சோலைம் மலர் |
2.118. 1 |
வைகறைப்போதில் தொண்டர்கள் பலரும் கூடி நியமங்களை முடித்துத் திருநீற்றுப் பொலிவோடு திருவடிகளை மனமாரத் தொழுதேத்தநின்ற அழகனது இடம், கொடிகள் ஓங்கி அசைந்தாடுவதும் திருவிழாக்கள் இடையறாமல் நிகழ்வதுமாகிய திருத்திலதைப்பதியிலுள்ள அழகிய சோலைகளின் மலர்கள் மணம் கமழ்ந்து விளங்கும் மதிமுத்தம் கோயிலாகும்.
2748 | தொண்டர்மிண்டிப்
புகைவிம்மு கொண்டுகண்டார் குறிப்புணர தெண்டிரைப்பூம் புனலரிசில் வண்டுகெண்டுற் றிசைபயிலுஞ் |
2.118. 2 |
தௌந்த நீரையுடைய அரிசிலாற்றங்கரையிலமைந்த திலதைப்பதியில் விளங்குவதும், வண்டுகள் கெண்டி இசை பயிலும் மலர்களை உடைய சோலைகளால் சூழப்பெற்றதுமாகிய மதிமுத்தம், நெருங்கிவந்து நறுமணப் புகையும் சாந்தமும் மாலைகளும் கொண்டு வழிபடும் அடியார்களின் கருத்தறிந்து. அவர்கட்கு அருள் புரியும் குழகன் இடமாகும்.
2749 | அடலுளேறுய்த்
துகந்தான் கடலுள்நஞ்ச அமுதாக திடலடங்கச் செழுங்கழனி மடலுள்வாழைக் கனிதேன் |
2.118. 3 |
திடல்களைச்சுற்றி வயல்கள் சூழ்ந்து விளங்குவதும், மடல்வழியாக வாழைக்கனிசாறு ஒழுகுவதும் ஆகிய வளங்களை உடைய திலதைப்பதியிலுள்ள மதிமுத்தம், வலிய விடையை ஏறிச் செலுத்தி மகிழ்பவரும், அடியார்களும் அமரர்களும் தொழுமாறு கடலுள் எழுந்த நஞ்சை அமுதாக உண்டருளியவருமாகிய கடவுள் விரும்பி உறையுமிடமாகும்.
2750 | கங்கைதிங்கள்
வன்னிதுன் வெங்கண்நாகம் விரிசடையில் செங்கயல்பாய் புனலரிசில் மங்குல்தோயும் பொழில்சூழ்ந் |
2.118. 4 |
கயல்மீன்கள் பாய்ந்து விளையாடும் நீரை உடைய அரிசிலாறு சூழ்ந்ததும், மேகம் தோயும் பொழில்கள் சூழ்ந்ததுமாகிய திலதைப்பதியில் விளங்கும் அழகிய மதிமுத்தம், கங்கை, பிறை, வன்னி, எருக்கு, கூவிளம், நாகம் ஆகியவற்றைத் தம் விரிசடையில் வைத்த விகிர்தனின் இடமாகும்.
2751 | புரவியேழும்
மணிபூண் பரவிநின்று வழிபாடு விரவிஞாழல் விரிகோங்கு மரவமவ்வல் மலருந் |
2.118. 5 |
ஞாழல், கோங்கு, வேங்கை, சுரபுன்னை, கடம்பு, முல்லை ஆகியன மலரும் பூங்காவை உடைய திலதைப்பதியிலுள்ள மதிமுத்தம், மணிகள் கட்டிய ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட கொடித்தேரைச் செலுத்தும் சூரியன் நின்று வழிபாடு செய்யும் இறைவனது ஊராகும்.
2752 | விண்ணர்வேதம்
விரித்தோத பெண்ணர்எண்ணார் எயில் தெண்ணிலாவின் ஒளிதீண்டு மண்ணுளார்வந் தருள்பேண |
2.118. 6 |
விண்ணுலகிலுள்ளவரும், வேதங்களை அருளியவரும், ஒரு பாகமாக உமையம்மையை உடையவரும், தம்மை எண்ணாத திரிபுரத்தசுரர்களின் கோட்டைகளை அழித்துப் பின் அவர் கட்கு அருள் செய்தவரும் ஆகிய பெருமான் உறையும் இடம், தௌந்த நிலாவொளி வீசும் சோலைகள் சூழ்ந்ததும் மண்ணுலகில் உள்ளவர் அருள் பெற வழிபடுவதுமாகிய திலதைப்பதியிலுள்ள மதி முத்தமாகும்.
2753 | ஆறுசூடி
யடையார்புரஞ் கூறுசேரும் முருவர்க் தேறலாரும் பொழில் மாறிலாவண் புனலரிசில் |
2.118. 7 |
கங்கையைத் தலையில் சூடியவர். திரிபுரப் பகைவருடைய கோட்டைகளை அழித்தவர். மாதொரு கூறர். அவ்விறைவர்க் குரிய இடம், தேன் பொருந்திய பொழில்கள் சூழ்ந்ததும், அழகியதும், நீர்வற்றாத அரிசிலாற்றினால் சூழப்பெற்றதுமாகிய திலதைப்பதியி லுள்ள மதிமுத்தமாகும்.
2754 | கடுத்துவந்த
கனன்மேனி எடுத்தவன்றன் முடிதோள் புடைக்கொள்பூகத் திளம்பாளை மடுத்துமந்தி யுகளுந் |
2.118. 8 |
சினத்தோடுவந்த கார்மேகம் போலும் நிறத்தை உடைய இராவணன் வலிய கயிலைமலையை எடுக்க, அவனுடைய முடிதோள் ஆகியவற்றை அடர்த்த இறைவனது இடம், தழைத்து வளர்ந்த பாக்குமரத்தின் இளம்பா வழியாய்ப் பாயும் தேனை உண்டு மந்திகள் விளையாடும் திலதைப்பதியிலுள்ள மதிமுத்தமாகும்.
2755 | படங்கொணாகத்
தணையானும் இடங்கொணால்வே தனுமேத்த திடங்கொள்நாவின் இசைதொண்டர் மடங்கல்வந்து வழிபாடு |
2.118. 9 |
ஆயிரம் தலைகளை உடைய ஆதிசேடனைத் தன் படுக்கையாகக்கொண்ட திருமாலும், புதியதாமரைமலரில் விளங்கி வேதங்களை ஓதும் நான்முகனும் வழிபட எழுந்தருளிய இறைவன் இடம், தொண்டர்கள் திண்மையான நாவினால் இசை பாடித் தொழும் திலதைப்பதியுள் சிங்கம் வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தமாகும்.
2756 | புத்தர்தேரர்
பொறியில் பித்தர்சொன்னம் மொழிகேட்கி பத்தர்சித்தர் பணிவுற் மத்தயானை வழிபாடு |
2.118. 10 |
புத்தர், தேரர், அறிவற்றசமணர், பெருமையில்லாத பித்தர் ஆகிய புறச்சமயத்தார் கூறும் மொழிகளைக் கேளாத பெருமானது இடம், அன்பர்களும் அறிஞர்களும் பணிந்து வழிபடும் திலதைப்பதியில் மதயானைவந்து வழிபட்ட சிறப்புடைய மதிமுத்தமாகும்.
2757 | மந்தமாரும்
பொழில் கந்தமாருங் கடற்காழி பந்தன்மாலை பழிதீர சிந்தைசெய்வார் சிவன்சேவடி |
2.118. 11 |
தென்றற்காற்று வீசும் சோலை சூழ்ந்த திலதைப்பதியுள் விளங்கும் மதிமுத்தத்தில் எழுந்தருளிய இறைவன் மீது நறுமணம் கமழும் கடற்கரையில் விளங்கும் காழி ஞான சம்பந்தன் பாடிய பாமாலையைப் பழிதீர ஓதி வழிபடுபவர் சிவன் சேவடிகளைச் சிந்தை செய்பவராய் அவ்வடிகளை அடைவது உறுதி.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 116 | 117 | 118 | 119 | 120 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருத்திலதைப்பதி - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - மதிமுத்தமே, திலதைப்பதி, வழிபாடு, மதிமுத்தம், விளங்கும், சூழ்ந்த, மதிமுத்தமாகும், திலதைப்பதியிலுள்ள, செய்யும், சூழ்ந்ததும், புனலரிசில், திலதைப்பதியில், இறைவனது, கோட்டைகளை, பெருமானிடம், வீசும், வேதங்களை, எழுந்தருளிய, திலதைப்பதியுள், பழிதீர, இறைவன், முடிதோள், பொழில், கிடமாவது, விரிசடையில், விளங்குவதும், சூழப்பெற்றதுமாகிய, தொண்டர்கள், திருச்சிற்றம்பலம், திருமுறை, வழிபடும், இடமாகும், விளையாடும், பொழில்கள், திருத்திலதைப்பதி, கூவிளம், அமுதாக, திலதைம்