முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.119.திருநாகேச்சரம்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.119.திருநாகேச்சரம்
2.119.திருநாகேச்சரம்
பண் - செவ்வழி
திருச்சிற்றம்பலம்
பண் - செவ்வழி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செண்பகாரணியேசுவரர்.
தேவியார் - குன்றமுலைநாயகியம்மை.
2758 | தழைகொள்சந்
தும்மகிலும் பழமும்உந்திப் புனல்பாய் நழுவில்வானோர் தொழநல்கு தழகர்பாதந் தொழுதேத்த |
2.119. 1 |
தழைகளோடு கூடிய சந்தன மரங்கள், அகில் மரங்கள், மயிற்பீலி, நல்லபழங்கள் ஆகியவற்றைப்புனலில் உந்தி வந்து பாயும் பழமையான காவிரியின் தென்கரையில் வானோர் விலகாது தொழ அருள் நல்கும் சிறப்புமிக்க நாகேச்சுரத்தில் விளங்கும் அழகர் பாதங்களைத் தொழுது போற்றவல்லார்க்கு அழகு நலம் வாய்க்கும்.
2759 | பெண்ணொர்பாகம்
அடையச் வண்ணமான பெருமான் நண்ணிநாளுந் தொழுதேத்தி கண்ணினாற் காணவல்லா |
2.119. 2 |
ஒருபாகத்தே உமையையும், சடையில் நீர் வடிவான கங்கையையும், கொண்ட அழகிய பெருமான் அமரும் இடம் ஆகிய, மண்ணுலகத்தோர் நாள்தோறும் வந்து வணங்கி நன்மைகள் பெறும் நாகேச்சரத்தைக் கண்ணால் காண்பவரே கண்ணுடையராவர்.
2760 | குறவர்கொல்லைப்
புனங்கொள்ளை பறவையாலப் பரக்கும் நறவநாறும் பொழில்சூழ்ந் திறைவர்பாதந் தொழுதேத்த |
2.119. 3 |
குறவர் வாழும் குறிஞ்சிப்புனம், முல்லைநிலம் ஆகியவற்றைக் கொள்ளைகொண்டு மணிகள் குலாவும் நீரைப் பரவச் செய்யும் காவிரித் தென்கரையில் தேன்மணம் கமழும் பொழில் சூழ்ந்து அழகியதாய் விளங்கும் நாகேச்சுரத்து இறைவர் பாதங்களைத் தொழுது ஏத்த வல்லார்க்கு இடர்இல்லை.
2761 | கூசநோக்காதுமுன்
சொன்ன நாசமாக்கும் மனத்தார்கள் தேசமாக்குந் திருக்கோயி நேசமாக்குந் திறத்தார் |
2.119. 4 |
ஆராயாது பிறர் மனம் கூசுமாறு சொல்லும் பொய், கொடிய வினைகளால் வந்த குற்றங்கள் ஆகியவற்றைச் செய்யாத நன்மனம் உடைய அடியவர்கள் வந்து மகிழும் நாகேச்சுரத்தை ஒளிவிளங்கும் கோயிலாகக் கொண்ட செல்வன் திருவடிகளில் அன்புடையவர் அறநெறிப் பாலராவர்.
2762 | வம்புநாறும்
மலரும்மலைப் பைம்பொன்வாரிக் கொழிக்கும் நம்பன்நாளும் அமர்கின்ற உம்பர்வானோர் தொழச் |
2.119. 5 |
மணம் கமழும் மலர்களையும், மலைப் பொருள்களையும் வாரிக்கொண்டு, பைம் பொன் கொழித்து வரும் நீரை யுடைய பழங்காவிரித் தென்கரையில் நம்பன் நாளும் அமர்கின்ற நாகேச் சரத்தை நண்ணுபவர் உம்பர் வானவர் தொழச் சிவபிரானோடு ஒன்றாவர்.
2763 | காளமேகந்
நிறக்கால நீளமாய்நின் றெய்தகாமனும் நாளுநாதன் அமர்கின்ற கோளுநாளுந் தீயவேனும் |
2.119. 6 |
கரிய நிறமுடைய காலன், அந்தகன், கருடன், விலகி நின்று கணை எய்த காமன் ஆகியோரை இறைவன் செற்றதை நினைந்து நாள்தோறும் சிவபிரான் உறையும் நாகேச்சுரத்தை நண்ணி வழிபடுபவர்க்குக் கோள்களும் நாள்களும் தீயவேனும் நல்லன ஆகும். அதனை மனத்தில் கொள்மின்.
2764 | வேயுதிர்முத்
தொடுமத்த பாய்புனல்வந் தலைக்கும் நாயிறுந்திங் களுங்கூடி மேயவன்றன் அடிபோற்றி |
2.119. 7 |
மூங்கில் முத்துக்கள், யானைமருப்பு ஆகியவற்றுடன் வந்து வளம் செயும் காவிரியாற்றின் தென்கரையில், நாயிறு, திங்கள் இரண்டும் வந்து வழிபடும் நாகேச்சுரத்தில் எழுந்தருளிய, இறைவன் திருவடிகளைப் போற்றி என வணங்குவார் வினைகள் கெடும்.
2765 | இலங்கைவேந்தன்
சிரம்பத்தி மலங்கிவீழம் மலையால் நலங்கொள்சிந்தை யவர்நாள்தொறும் வலங்கொள்சிந்தை யுடையார் |
2.119. 8 |
இலங்கை வேந்தனாகிய இராவணனின் பத்துத் தலைகள் இருபது தோள்கள் ஆகியன சிதையுமாறு மலையினால் அடர்த்த இறைவன் இடம் ஆகிய நன்மைகெழுமிய மனமுடையோர் நாள்தோறும் நண்ணி வழிபடும் நாகேச்சுரத்தை வலம் வந்து வழிபடும் சிந்தை உடையவர்களின் இடர்கள் கெடும்.
2766 | கரியமாலும்
மயனும் எரியதாகிந் நிமிர்ந்தான் விரியின்நீர்வந் தலைக்குங் பிரிவிலாதவ் வடியார்கள் |
2.119. 9 |
கருநிறமுடைய திருமாலும், பிரமனும் அடிமுடி காண இயலாதவாறு எரியுருவாக நிமிர்ந்த இறைவன் அமரும் இடம் ஆகிய, பெருகிவரும் காவிரி நீர் வந்தலைக்கும் தென் கரையில் அமைந்த நாகேச்சுரத்தைப் பிரிவிலாத அடியவர் சிவலோகத்தைப் பிரியார்.
2767 | தட்டிடுக்கி
யுறிதூக்கி கட்டுரைக்கும் மொழிகொள்ளலும் நட்டிருட்கண் நடமாடிய மட்டிருக்கும் மலரிட் |
2.119. 10 |
தட்டைக் கக்கத்தில் இடுக்கி உறிதூக்கிய கையினராய்த்திரியும் சமணர், சாக்கியர், புனைந்து சொல்லும் மொழிகளைக் கொள்ளாது, இடுகாட்டில் நள்ளிருளில் நடனமாடும் நாகேச்சுரத்து இறைவனைத் தேன் நிறைந்த மலர்களைத் தூவி அடி வீழ்ந்து வணங்குவது உண்மைப் பயனைத்தரும்.
2768 | கந்தநாறும்
புனற்காவிரித் நந்திசேருந் திருநாகேச் பந்தனாவிற் பனுவல் எந்தையீசன் இருக்கும் |
2.119.11 |
மணம் கமழும் நீரை உடைய காவிரித் தென் கரையில், கண்ணுதற் கடவுளாகிய நந்தி எழுந்தருளிய திருநாகேச்சுரத்தின் மேல் ஞானசம்பந்தன் நாவினால் போற்றிய இப்பனுவல் பத்தையும் வல்லவர் மறுமையில் எந்தையீசன் இருக்கும் சிவலோகம் எய்துவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 117 | 118 | 119 | 120 | 121 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருநாகேச்சரம் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - நாகேச்சரம், பழங்காவிரித், இறைவன், தென்கரையில், தென்கரை, வழிபடும், கமழும், நாகேச்சுரத்தை, அமர்கின்ற, நாள்தோறும், தீயவேனும், திருச்சிற்றம்பலம், நண்ணுவார், நாகேச்சர, மயிற்பீலி, திருமுறை, எழுந்தருளிய, எந்தையீசன், இருக்கும், சாக்கியர், கரையில், கெடும், நாகேச்சரத், சொல்லும், பெருமான், மரங்கள், தொழுது, பாதங்களைத், விளங்கும், அமரும், திருநாகேச்சரம், வந்தாடு, நாகேச்சுரத்து, தொழுதேத்த, காவிரித், நாகேச்சுரத்தில்