முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.116.திருநாகைக்காரோணம்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.116.திருநாகைக்காரோணம்
2.116.திருநாகைக்காரோணம்
பண் - செவ்வழி
திருச்சிற்றம்பலம்
பண் - செவ்வழி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காயாரோகணேசுவரர்.
தேவியார் - நீலாயதாட்சியம்மை.
2725 |
கூனல்திங்கட் குறுங்கண்ணி ஏனற்பூத்தம் மராங்கோதை வானநாடன் அமரர்பெரு கானல்வேலி கழிசூழ் |
2.116. 1 |
வளைந்த பிறையாகிய சிறிய தலைமாலை, ஒளி உமிழும் வெண்ணிலவில் குறிஞ்சி நிலத்தில் தினைக்கொல்லையில் பூத்த கடம்பமலர் மாலை ஆகியவற்றைப் புனைந்த சடையை உடைய வானநாடனும், அமரர் பெருமானும் ஆகிய இறைவற்கு இடமாவது சோலைகளை வேலியாகக் கொண்டதும் உப்பங்கழிகளை உடையதுமாகிய கடல்நாகைக்காரோணமாகும்.
2726 |
விலங்கலொன்று சிலையாமதில் இலங்குகண்டத் தெழிலாமை மலங்கியோங்கிவ் வருவெண்டிரை கலங்கலோதங் கழிசூழ் |
2.116. 2 |
மேருமலை ஒன்றை வில்லாகக் கொண்டு மும்மதில்களை அழித்தவனும் அழகிய கழுத்தில் ஆமை ஓட்டைப் பூண்டவனும் ஆகிய இறைவனுக்கு இடம், கலங்கி ஓங்கி வரும் வெண் திரைகளை உடைய கடலின் கரையில் கலங்கிய நீர்ப்பெருக்கோடு கூடிய கழிகள் சூழ்ந்த கடல் நாகைக்காரோணமாகும்.
2727 | வெறிகொளாருங் கடற்கைதை முறிகொண்ஞாழல் முடப்புன்னை நறைகொள்கொன்றைந் நயந்தோங்கு கறைகொளோதங் கழிசூழ் |
2.116. 3 |
தளிர்களோடு கூடிய ஞாழல்மலர், வளைந்த புன்னை மரத்தில் பூத்தமலர்கள், வெள்ளிய முல்லையரும்புகள், தேன் நிறைந்த கொன்றைமலர் ஆகியவற்றை விரும்பி அணியும் பெருமானுக்கு இடம், மணம் கமழும் தாழைமலர், நெய்தல்மலர் ஆகியவை நிறைந்த பொழில்களால் சூழப்பட்ட, கரிய ஓதம் பரவி விளங்கும் கடல் நாகைக்காரோணமாகும்.
2728 | வண்டுபாட வளர்கொன்றை கொண்டகோலங் குளிர்கங்கை உண்டுபோலும் மெனவைத்து கண்டல்வேலி கழிசூழ் |
2.116. 4 |
வண்டுகள் பாடுமாறு மலர்ந்த கொன்றை மலர் மாலையை இளம்பிறையோடு ஒருசேர அணிந்து, சுருண்ட சடையுள் குளிர்ந்த கங்கையை ஐயப்படுமாறு மறைத்துவைத்து, மகிழ்ந்த இறைவனுக்கு இடம், தாழைவேலி சூழ்ந்ததும் உப்பங்கழிகள் நிறைந்ததும் ஆகிய கடல் நாகைக்காரோணமாகும்.
2729 |
வார்கொள்கோலம் முலைமங்கை நீர்கொள்கோலச் சடைநெடு போர்கொள்சூலப் படைபுல்கு கார்கொளோதங் கழிசூழ் |
2.116. 5 |
நல்லவர் மகிழ்ந்தேத்த, கச்சணிந்த தனங்களை உடைய உமையம்மையோடு கூடிய அழகோடு, தண்மையான அழகிய சடையில் நீண்டநிலாக்கதிர்களைப் பரப்பும் இளம்பிறை விளங்கப் போருடற்றும் சூலப்படையைக் கையின்கண் கொண்டுவிளங்கும் சிவபிரானுக்குரிய இடம் ஓதம் பெருகும் கரிய கழிகள் சூழ்ந்த கடல் நாகைக் காரோணமாகும்.
2730 |
விடையதேறிவ் விடவர படைகொள்பூதம் பலபாட உடைகொள்வேங்கை யுரிதோ கடைகொள்செல்வங் கழிசூழ் |
2.116. 6 |
விடைமீது ஏறி வருபவனும், விடம்பொருந்திய பாம்பை இடையில்கட்டிய விகிர்தனும், பூதப்படைகள் பாட ஆடும் பரமனும், புலித்தோலை உடையாக உடுத்தவனும் ஆகிய சிவபெருமானுக்குரிய இடம், மீன்களாகிய செல்வங்கள் நிறைந்த கழிசூழ்ந்த கடல்நாகைக்காரோணமாகும்.
2731 |
பொய்துவாழ்வார் மனம்பாழ் செய்துவாழ்வார் சிவன்சேவடிக்கே எய்தவாழ்வார் எழில்நக்க கைதல்வேலி கழிசூழ் |
2.116. 7 |
மனத்தைப் பாழ்படுத்தி வாழும் பொய்ம்மை வாழ்வுடையாரும், சிவன் சேவடிக்கே செல்லும் சிந்தையராய் மலர் தூவிப் பூசனைசெய்து வாழ் அடியவரும் தம்மை எய்தவாழ்வாராகிய அழகிய பெருமானுக்கு இடம், தாழைவேலியையும் உப்பங் கழிகளையும் உடைய கடல் நாகைக்காரோணமாகும்.
2732 |
பத்திரட்டி திரடோ வத்திரட்டி விரலா மைத்திரட்டிவ் வருவெண்டிரை கத்திரட்டுங் கழிசூழ் |
2.116. 8 |
இருபது தோள்களை உடைய இராவணனுடைய பத்துத் தலைகளும் நெரியச் சிவந்த கால் விரல்களால் அடர்த்த பெருமானுக்குரிய இடம், கரிய மணலைத்திரட்டி வரும் வெண்திரைகளை உடைய பெரியகடலைச் சூழ்ந்துள்ள கழிகள் ஒளிசிறந்து ஒலியெழுப்பும் கடல் நாகைக்காரோணமாகும்.
2733 |
நல்லபோதில் லுறைவானு அல்லராவ ரெனநின்ற மல்லலோங்கிவ் வருவெண்டிரை கல்லலோதங் கழிசூழ் |
2.116. 9 |
நல்ல தாமரை மலரில் உறையும் நான்முகனும், திருமாலும் நடுக்கத்தால் இவரே சிவபரஞ்சுடர் எனவும் அல்லர் எனவும் ஐயுற நின்ற பெருமானுக்குரிய இடம், வளமோங்கிவரும் வெள்ளிய அலைகள் நிரம்பிய பெரிய கடலினது ஒலிக்கும் ஓதங்களையுடைய கழிகள் சூழ்ந்த கடல் நாகைக்காரோணமாகும்.
2734 |
உயர்ந்தபோதின் னுருவத் பெயர்ந்தமண்டை யிடுபிண்ட நயந்துகாணா வகைநின்ற கயங்கொளோதங் கழிசூழ் |
2.116. 10 |
தாமரைமலர் போன்று சிவந்த கல்லாடையை உடுத்தவர்களும் உடையின்றித் திரிபவர்களும் கையில் ஏந்திய மண்டையில் பிறர் இடும் பிச்சையை உணவாகக் கொண்டு உழல்பவரும் ஆகிய புத்தர்களும் சமணர்களும் விரும்பிக் காணாதவாறு நின்ற பெருமானுக்கு உரிய இடம் ஆழமும் நீர்ப் பெருக்கும் உடைய கழிகள் சூழ்ந்து விளங்கும் கடல்நாகைக் காரோணமாகும்.
2735 |
மல்குதண்பூம் புனல்வாய்ந் நல்லகேள்வித் தமிழ்ஞான வல்லவாறே புனைந்தேத்துங் சொல்லுவார்க்கும் இவைகேட்ப |
2.116.d |
நீர்நிறைந்த வயல்களால் சூழப்பட்ட சீகாழிப் பதியில் தோன்றியவரும் நல்ல கேள்வியை உடையவரும் ஆகிய தமிழ் ஞானசம்பந்தர் நல்லோர்கள்முன் வல்லவாறு பாடிய காரோணத்துத் திருப்பதிகமாகிய இவ்வண்தமிழைச் சொல்பவர்கட்கும் கேட்பவர்கட்கும் துன்பம் இல்லை.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 114 | 115 | 116 | 117 | 118 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருநாகைக்காரோணம் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - காரோணமே, கழிசூழ், கடல்நாகைக், கிடமாவது, நாகைக்காரோணமாகும், கழிகள், மால்கடல், சூழ்ந்த, நிறைந்த, பெருமானுக்கு, வருவெண்டிரை, மல்கிய, விளங்கும், எனவும், டுழல்வார்களும், பெருமானுக்குரிய, சிவந்த, கடனாகைக், காரோணமாகும், சூழப்பட்ட, இறைவனுக்கு, திருச்சிற்றம்பலம், திருமுறை, வளைந்த, கடல்நாகைக்காரோணமாகும், திருநாகைக்காரோணம், கொண்டு, வெள்ளிய