முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.120.திருமூக்கீச்சரம்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.120.திருமூக்கீச்சரம்
2.120.திருமூக்கீச்சரம்
பண் - செவ்வழி
திருச்சிற்றம்பலம்
பண் - செவ்வழி
திருச்சிற்றம்பலம்
2769 | சாந்தம்வெண்ணீறெனப்பூசி
காந்தளாரும் விரலேழை ஆய்ந்துகொண்டாங் கறியந் வேந்தன்மூக்கீச் சரத்தடிகள் |
2.120. 1 |
சந்தனம்போலத் திருநீற்றை உடல் முழுதும் பூசி, கங்கையைச் சடைமீது வைத்துள்ளவராகிய சிவபிரான், காந்தள் போன்ற கைவிரல்களை உடைய உமையம்மையோடு கூடியிருந்ததற்குரிய காரணத்தை ஆராய்ந்தறிந்தவர்கள் யார்? கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட மூக்கீச்சரத்துள் விளங்கும் இறைவன் செய்யும் மெய்மை இதுவாகும்.
2770 | வெண்டலையோர்
கலனாப் கொண்டலாரும் புனல்சேர்த் விண்டவர்தம் மதிலெய்தபின் கண்டவர் மூக்கீச்சரத்தெம் |
2.120. 2 |
வெண்தலையை உண்கலனாகக் கையில் ஏந்திப் பலிதேர்தல், விரிந்தசடையில் கங்கையைத் தாங்குதல், உமையம்மையோடு கூடியிருத்தல், பகைவர்தம் முப்புரங்களை எய்து அழித்தல், மன்மதனை நெற்றிவிழியால் வெந்தழியச் செய்தல் ஆகியன மூக்கீச் சரத்தில் விளங்கும் எம் அடிகள் செய்த செயல்களாகும்.
2771 | மருவலார்தம்
மதிலெய்த உருவிலாரவ் வெரியூட்டி செருவிலாரும் புலிசெங் பொருவின் மூக்கீச்சரத்தெம் |
2.120. 3 |
போர்க்கருவியாகிய வில், புலி, கயல் ஆகிய மூவிலச்சினைகளுக்கும் உரிய சேர, சோழ, பாண்டிய மண்டலங்களுக்குரியவனாய் விளங்கிய கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட ஒப்பற்ற மூக்கீச்சரத்தில் உறையும் எம் அடிகள் செய்த போர்களில் மும்மதில்களை எய்தது, மால்மகனாகிய காமனை எரித்தது ஆகிய உலகறிந்தனவாம்.
2772 | அன்னமன்னந்
நடைச்சாய மின்னையன்ன சடைக்கங்கை தென்னன்கோழி யெழில்வஞ்சியும் மன்னன்மூக்கீச் சரத்தடிகள் |
2.120. 4 |
தென்நாட்டின் உறையூர் வஞ்சி ஆகிய சோழ, சேர மண்டலங்களுக்கும் உரியவனாய்ப் புகழ்மிக்க செங்கோலினனாய் விளங்கிய கோச்செங்கட்சோழ மன்னன் கட்டிய மூக்கீச்சரத்துக் கோயிலில் விளங்கும் அடிகள், அன்னம் போன்ற நடையினை உடைய உமையம்மையாரோடு அழகுற விளங்கி, மின்னல் போன்ற சடையில் கங்கையைக் கொண்டுள்ள காரணம் யாதோ?
2773 | விடமுனாரவ்
வழல்வாய நடமுனாரவ் வழலாடுவர் வடமன்நீடு புகழ்ப்பூழி அடன்மன்மூக்கீச் சரத்தடிகள் |
2.120. 5 |
வடதிசையில் புகழ்மிக்கு விளங்கும் பாண்டியனாகவும் உறையூருக்குரிய சோழனாகவும் விளங்கிய வலிமை பொருந்திய கோச்செங்கட்சோழமன்னன் கட்டிய மூக்கீச்சரத்துறையும் அடிகள் அச்சம் தரும் முறையில், அழல் போன்ற வாயில் நஞ்சுடைய பாம்பை அரையில் கட்டியவர். நள்ளிருளில் பேயோடு, ஆரழலில் நடனம் ஆடுபவர்.
2774 | வெந்தநீறு
மெய்யிற் வந்தெனாரவ் வளைகொள்வதும் அந்தண்மா மானதன்னேரியன் எந்தைமூக்கீச் சரத்தடிகள் |
2.120. 6 |
அகத்துறைப்பாடல்: பகைவரின் மானத்தை அழிக்கும் பெருவீரனும் நேரியன் செம்பியன் என்ற பெயர்களை உடையவனுமான கோச்செங்கட்சோழன் கட்டிய மூக்கீச்சரத்தில் விளங்கும் அடிகள் செய்த ஏதமான செயல் திருநீற்றை மேனியில் பூசிய சுந்தரத்திருமேனியராய், அடல் வல்லவராய், மிக்க இருளில் வந்து என் அரிய வளையல்களை மாயமான முறையில் கவர்ந்து சென்ற தாகும்.
2775 | அரையிலாருங்
கலையில்ல உரையிலரவ் வழலாடு விரவலார்தம் மதின்மூன் அரையன்மூக்கீச் சரத்தடிகள் |
2.120. 7 |
இடையில் பொருந்தும் உடை இல்லாதவன். ஆணும், பெண்ணுமாய் விளங்குபவன். அழலில் நின்று ஆடுபவன். ஒன்றாயின்றிப் பலபலவேடம் கொள்பவன். பகைவரின் முப்புரங்களை அழல்எழச் செய்து அழித்தவன். கோச்செங்கணான் கட்டிய மூக்கீச்சரக் கோயிலில் விளங்கும் அப்பெருமான், செய்யும் அச்சமான செயல்கள் இவையாகும்.
2776 | ஈர்க்குநீர்ச்செஞ்
சடைக்கேற் கூர்க்குநன்மூ விலைவேல்வல ஆர்க்கும்வாயான் அரக்கன் மூர்க்கன்மூக்கீச் சரத்தடிகள் |
2.120. 8 |
மூக்கீச்சரத்து அடிகள் செய்த வலிய செயல்கள் ஈர்க்கும் தன்மையை உடைய கங்கையைச் சடைமிசை ஏற்றது, கூரிய முத்தலைச்சூலத்தை வெற்றிக்கு அடையாளமாகப் பிடித்துள்ளது. ஆரவாரிக்கும் வாயினனும் வலியமூர்க்கனும், அரக்கனும் ஆகிய இராவணன் உடலை நெரித்தது முதலியனவாகும்.
2777 | நீருளாரும்
மலர்மேல் சீருளாருங் கழல்தேட சீரினாலங் கொளிர்தென்ன சேருமூக்கீச் சரத்தடிகள் |
2.120. 9 |
சிறப்புமிக்க தென்னவன், செம்பியன், வில்லவன் ஆகிய மூவேந்தரும் வந்து வழிபடும் மூக்கீச்சரத்தில், உறையும் பெருமான் நீருள் தோன்றிய தாமரையில் விளங்கும் நான்முகனும், நெடியமாலும் புகழிற் பொருந்திய திருவடிகளைத் தேட முற்பட்டபோது தீத்திரளாய் நின்றவன்.
2778 | வெண்புலான்மார்
பிடுதுகிலினர் உண்பினாலே யுரைப்பார் ஒண்புலால்வேன் மிகவல்லவ பண்பின்மூக்கீச் சரத்தடிகள் |
2.120. 10 |
வெண்மையான புலால் நாற்றம் வீசும் ஆடையை மார்பிற் கொண்டவரும், வெற்றுடம்போடு திரிபவரும் ஆகிய புத்தர்களும் சமணரும் உண்ணும் பொருட்டு உரைக்கும் மொழிகளைக் குறையுடைய தாக்கினான். புலால் மணக்கும் வேல் வென்றி உடையவன். சோழமன்னன் எடுப்பித்த மூக்கீச்சரத்து அப் பெருமான் செய்யும் புதுமையான செயல் இதுவாகும்.
2779 |
மல்லையார்மும் முடிமன்னர் செல்வராக நினையும்படி நல்லராய்வாழ் பவர்காழி சொல்லவல்லா ரவர்வானுல |
2.120. 11 |
மற்போரில் வல்லவராய முடிமன்னர் மூவரானும் தொழப் பெறும் மூக்கீச்சரத்து அடிகளை நல்லவர் வாழும் காழியுள் மேவிய ஞானசம்பந்தன் செல்வராக நினையும்படிப் பாடிய இச் செந்தமிழைச் சொல்லவல்லவர் வானுலகையும் ஆளவல்லவர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 116 | 117 | 118 | 119 | 120 | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமூக்கீச்சரம் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - சரத்தடிகள், அடிகள், விளங்கும், செய்கின்ற, கட்டிய, செய்யும், மூக்கீச்சரத்தில், மூக்கீச்சரத்து, விளங்கிய, காரணம், செம்பியன், பகைவரின், முறையில், பெண்ணுமாய், பொருந்திய, செயல்கள், முடிமன்னர், செல்வராக, புலால், பெருமான், திருமுறை, தோரச்சமே, திருச்சிற்றம்பலம், இதுவாகும், மூக்கீச்சரத்தெம், கங்கையைச், உமையம்மையோடு, கட்டப்பட்ட, திருநீற்றை, முப்புரங்களை, கோச்செங்கட்சோழனால், உறையும், செய்கின்றதோர், திருமூக்கீச்சரம், கோயிலில்