ஆரூடங்கள் - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்
இந்த ஆரூட முறையில் 64 கட்டங்கள் கொண்ட ஒரு யந்திரம் பயன்படுகிறது. இந்த யந்திரத்தினை வெள்ளி அல்லது செப்புத் தகட்டில்கீறிக் கொள்ள வேண்டும் என்கிறார் அகத்தியர். இந்த யந்திரத்தை பயன் படுத்தவும் சில நிபந்தனைகளும் உண்டு. அதில் மிக முக்கியமானது சூரிய ஒளி இல்லாத சமயத்தில் இதனை பயன்படுத்தி ஆரூடம் பார்க்கக் கூடாது என்பதாகும். இந்த ஆரூட முறையானது அகத்தியர் அருளிய "அகத்தியர்12000” என்ற நூலில் காணப்படுகிறது.
அறுபத்திநாலு கட்டங்களை கொண்ட இந்த யந்திரம் இல்லாமல் இதனை செயல் படுத்த முடியாது. இந்த யந்திரத்தின் அமைப்பு மிகவும் எளிமையானதாகும். எட்டுக்கு எட்டு அளவிலான சதுரத்தில் 64 கட்டங்களாக பிரிக்கப் பட்ட எளிய அமைப்புடையது. இந்த கட்டங்கள் முழுவதும் எண்களால் மட்டுமே நிரப்பப் பட்டிருக்கும். பெரிதான சிக்கலோ, சிரமமோ இல்லாத எளிய ஆரூட முறை இது. இந்த ஆரூட யந்திரத்தை எவர் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். தனக்கும் பார்த்துக் கொள்ளலாம், மற்றவர்களுக்கும் பலன் சொல்லலாம்.
ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம் சக்கரத்தின் மூலமாக உங்களின் நன்மை, தீமைகளை அறிந்து கொள்ள கீழ்காணும் கட்டதில் உள்ள ஏதாவது ஒரு எண்ணை தங்களின் இஷ்ட தெய்வத்தினைத் தியானித்து கிளிக் செய்யவும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
Sri Agathiyar Horary Wheel - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம் - Horary Astrology - ஆரூடங்கள்