ஆரூடப் பாடல் 29 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்

௨௯. (29) வந்தால்..
இப்புவியில் பட்டதுயர்வில கிப்போச்சு இனியொன்றும் குறைவில்லை ஜெயமுண்டாச்சு தப்பிதங்க ளணுகாது தழைத்து வாழ்வாய் தனலாப மடைந்திடுவாய் நஷ்டமில்லை ஒப்பவே ஜென்மத்தை விட்டுராகு விலகிடுவான் இருபத்து ஐந்துநாளில் அப்பனே அதற்குப்பின் நினைத்ததெல்லாம் அகஸ்தியர் சொல்போல் நடக்கும் அதிர்ஷ்டந்தானே. |
ஆரூடத்தில் இருபத்தியேழு வந்திருப்பதால், இவ்வுலகில் இதுவரையில் நீ பட்ட துன்பங்களெல்லாம் விலகிப்போய்விட்டது. இனி ஒரு குறையும் இல்லை. எத்தகைய காரியத்தை நினைத்த போதிலும் அது சித்தியாகும். இனி லாபமே கிட்டும், நட்டம் ஏற்படாது. இதுவரை ஜென்மத்தில் இருந்த ராகு இன்னும் 25 நாளில் விலகிவிடுவான். அதன்பிறகு என் வாக்கின்படி எல்லாம் நடக்கும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 29 - Sri Agathiyar Horary Wheel - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம் - Horary Astrology - ஆரூடங்கள்