ஆரூடப் பாடல் 61 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்

௬௧. (61) வந்தால்..
யோகதிசை உந்தனக்கு வந்ததாலே ஒன்பதிலே குருபகவான் பார்வையாச்சு தோகையரால் லாபமண்டு துயரம் பொச்சு துரைத்தனத்தி லுந்தனக்கு தொழிலுண்டாச்சு பாகமாய் வந்தபிணி பதங்கலாச்சு பலவூர்கள் செய்தியதால் பாக்கியமாச்ச ஆகமத்தின் மொழியிதுதான் உண்மையாச்சு அறிவித்தேன் அருள்வாக்கை அறிகுவாயே. |
ஆரூடத்தில் அறுபத்து ஒன்று வந்திருப்பது, ஒன்பதாமிடத்தில் குருபார்வையும் யோக திசையும் வந்திருப்பதை குறிக்கிறது. பெண்களால் லாபம் உண்டு. கவலைகள் எல்லாம் நீங்கும். மிகுந்த செல்வாக்கான இடத்தில் தொழில் வாய்க்கும். உனக்கு வந்த நோய்கள் எல்லாம் நீங்கும். பல இடங்களிலும் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வரும். இந்த ஆரூடம் உண்மையாகும். இது அருளால் சொல்லும் வாக்கு என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 61 - Sri Agathiyar Horary Wheel - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம் - Horary Astrology - ஆரூடங்கள்