ஆரூடப் பாடல் 41 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்

௪௧. (41) வந்தால்..
வையகத்தி லுன்கவலை நீங்கலாச்சு வைரிகளும் உனைக்கண்டு ஏங்கலாச்சு கைவிட்டு போனபொருளண் வருகலாச்சு கன்னியர்க்கு மனைதனிலே கர்ப்பமாச்சு பையவே வருத்தும் பிணி பறந்துபோச்சு பாலகனே வெளியூரில் லாபமாச்சு கைத்தொழிலும் வர்த்தகமும் ஓங்கலாச்சு கருத்துடனே ஏழைகட்கு தருமஞ்செய்ய. |
ஆரூடத்தில் நாற்பத்தி ஒன்று வந்திருப்பதால், இப்பொழுது உன் கவலைகளெல்லாம் நீங்கி வருகிறது. எதிரிகளும் உன்னைக் கண்டு அஞ்சுவார்கள். கைவிட்டுப்போன பொருள் வந்து சேரும். உன் மனைவிக்கு கர்ப்பந்தரிக்கும். உன்னை கவலைக்குள்ளாகி வந்த நோய் நீக்கும். வெளியூரில் இருந்து லாபம் கிடைக்கும். வியாபாரமும் தொழிலும் பெருகும். கவனமாக ஏழைகளுக்கு தர்மம் செய்து வர நாளுக்கு நாள் நன்மை அதிகரிக்கும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 41 - Sri Agathiyar Horary Wheel - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம் - Horary Astrology - ஆரூடங்கள்