முதுமொழிக் காஞ்சி - பதினெண் கீழ்க்கணக்கு

5. அல்ல பத்து
41. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் நீரறிந்து ஒழுகாதான் தாரம் அல்லன் |
ஆர்கலியாற் சூழப்பட்டஉலகத்து மக்கட் கெல்லாம் கொழுநனது குணமறிந் தொழுகாதாள்மனையாளல்லள்.
42. தார(ம்)மா ணாதது வாழ்க்கை யன்று |
மனையாள் மாட்சிமைப்படாதமனைவாழ்க்கை மனைவாழ்க்கை யன்று.
43. ஈரலில் லாதது கிளைநட் பன்று |
மனத்தின்கண் ஈரமில்லாததுகிளையுமன்று நட்புமன்று.
44. சோராக் கையன் சொன்மலை யல்லன் |
பிறர்க்கு ஒன்றை உதவாத கையையுடையோன் புகழைத்தாங்கமாட்டான்.
45. நேரா நெஞ்சத்தோன் நட்டோன் அல்லன் |
வேறாய் உடன்படாதநெஞ்சத்தோன் நட்டோனல்லன்.
46. நேராமற் கற்றது கல்வி யன்று |
கற்பிக்கும் ஆசிரியனுக்குஒன்றைக் கொடாது கற்குமது கல்வியன்று.
47. வாழாமல் வருந்தியது வருத்தம் அன்று |
தன்னுயிர் வாழாமைவருந்தியது வருத்தமன்று.
48. அறத்தாற்றின் ஈயாத(து) ஈனை யன்று |
அறத்தின் நெறியின்ஈயாதது ஈகையன்று.
49. திறத்தாற்றின் நேர்லா ததுநோன் பன்று |
தன் குலத்திற்கும் நிலைமைக்கும் தகநோலாதது தவமன்று.
50. மறுபிறப் பறியா ததுமூப் பன்று. |
மறுபிறப்பை யறிந்துஅறத்தின்வழி ஒழுகாதே மூத்த மூப்பு மூப்பன்று.
6. இல்லைப் பத்து
51. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் மக்கட் பேற்றின் பெறும்பே(று) இல்லை |
ஆர்கலியாற் சூழப்பட்டஉலகத்து மக்கட் கெல்லாம் புதல்வரைப் பெறும் பேற்றிற்பெறும் பேறில்லை.
52. ஒப்புரவு அறிதலின் தகுவரவு இல்லை |
செய்யக்கடவன் செய்கையோடொக்கும் தகுதி இல்லை.
53. வாய்ப்புடை விழைச்சின் நல்விழைச்சு இல்லை |
மக்கட்பேறு வாய்த்தகலவிபோலும் கலவியின் நல்ல தில்லை.
54. வாயா விழைச்சின் தீவிழைச்சு இல்லை |
மக்கட்பேற்றின்பொருட்டன்றிக் கலக்கும் கலவிபோலத்தீயதில்லை.
55. இயைவது கரத்தலின் கொடுமை இல்லை |
தான் பிறர்க்குக் கொடுக்க இயலும் பொருளை இல்லையென்று கரக்கும் கரப்பிற் கொடுமை யில்லை.
56. உணர்விலன் ஆதலின் சாக்காடு இல்லை |
ஒருவற்கு அறிவின்மையோ டொக்கும் சாக்க டில்லை.
57. நசையில் பெரியதோர் நல்குரவு இல்லை |
ஆசையின் மிக்கதொரு வறுமைஇல்லை.
58. இசையின் பெரியதோர் எச்ச மில்லை |
புகழுடைமையின் மிக்குப் பிறர் பயப்பதோர் ஆக்கம் ஒருவர்க் கில்லை.
59. இரத்தலின் ஊஉங்கு இளிவரவு இல்லை |
இரந்து உயிர்வாழ்தலின்மேல் கீழ்மை இல்லை.
60. இரப்போர்க்கு ஈதலின் எய்தும் சிறப்பில்லை |
இரப்போர்க்குக்கொடுப்பதின் மிக்கதாய் எய்தும் மேன்மை இல்லை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதுமொழிக் காஞ்சி - பதினெண் கீழ்க்கணக்கு, இல்லை, மக்கட், யன்று, இலக்கியங்கள், கெல்லாம், கீழ்க்கணக்கு, பதினெண், காஞ்சி, பன்று, முதுமொழிக், விழைச்சின், எய்தும், பெரியதோர், கொடுமை, ஆர்கலியாற், பத்து, கல்வி, ஆர்கலி, யுலகத்து, சங்க, அல்லன், சூழப்பட்டஉலகத்து