முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.096.தனி - திருத்தாண்டகம்
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.096.தனி - திருத்தாண்டகம்
6.096.தனி - திருத்தாண்டகம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
3025 | ஆமயந்தீர்த் தடியேனை யாளாக் கொண்டார் தாமரையோன் சிரமரிந்து கையிற் கொண்டார் வாமனனார் மாகாயத் துதிரங் கொண்டார் காமனையும் உடல்கொண்டார் கண்ணால் நோக்கிக் |
6.096.1 |
கண்ணப்பரது பூசையினையும் அன்புகருதி ஏற்றுக்கொண்ட காபாலியாராகிய சிவபெருமானார் நோய் தீர்த்து அடியேனை ஆளாகக் கொண்டவரும், அதிகை வீரட்டானத்திருந்து ஆட்சி செய்பவரும், பிரமனது சிரத்தைக் கொய்து கையிற் கொண்ட வரும், அத்தலையோட்டில் பிச்சை ஏற்றவரும், வாமனனாகி வந்து மண் இரந்து திரிவிக்கிரமனாய் வளர்ந்து மூவுலகையும் அளந்து மிக்க செருக்குற்ற நிலையில் அப்பேருடம்பின் உதிரத்தை வெளிப்படுத்தி அவனை அழித்தவரும், மான்போன்ற உமையை இடப்பாகமாகக் கொண்டவரும், மழு ஆயுதத்தை வலக்கையில் ஏந்தியவரும், நெற்றிக் கண்ணைத் திறந்து பார்த்துக் காமனை அழித்தவரும் ஆவார்.
3026 | முப்புரிநூல் வரைமார்பின் முயங்கக் கொண்டார் செப்புருவ முலைமலையாள் பாகங் கொண்டார் துப்புரவார் சுரிசங்கின் தோடு கொண்டார் அப்பலிகொண் டாயிழையார் அன்புங் கொண்டார் |
6.096.2 |
அடியேனைத் தமக்கு ஆளாகவுடைய தலைவர் ஆகிய சிவபெருமானார் உத்தமவிலக்கணமாகிய கீற்றுப் பொருந்திய மார்பினிடத்து முப்புரிநூல் பொருந்தக் கொண்டவரும். பழைய பன்றியில் முளை போன்ற கொம்பினைப் பூணாகக் கொண்டவரும், கிண்ணம் போன்ற அழகிய முலைகளையுடைய பார்வதியை இடப்பாகமாகக் கொண்டவரும் சிவந்த உடலில் வெண்ணீறு விளங்கக் கொண்டவரும், தூய்மை நிறைந்து முறுக்குண்ட சங்கினாலியன்ற தோட்டினைக் கொண்டவரும், அமரர் சூழ்ந்து சுடர் முடியால் தமது அடியைத் தொழக் கொண்டவரும், அந்நாளில் தாருகாவன முனி பத்தினியர் இட்ட பிச்சையோடு அவர்களது அன்பினையும் கொண்டவர் ஆவார்.
3027 | முடிகொண்டார் முளையிளவெண் டிங்க ளோடு அடிகொண்டார் சிலம்பலம்பு கழலு மார்ப்ப வடிகொண்டார்ந் திலங்குமழு வலங்கைக் கொண்டார் துடிகொண்டார் கங்காளந் தோள்மேற் கொண்டார் |
6.096.3 |
சடையை முடியாகக் கொண்டவரும், முதலில் காணப்படுகின்ற வெள்ளிய பிறைச் சந்திரனையும் படத்தால் மறைக்கும் இளம்பாம்பையும் உடன் உறையும்படி அம்முடிக்கண் கொண்ட வரும், ஒலிக்கும் தன்மை வாய்ந்த சிலம்பினையும் கழலினையும் ஒலிக்கும்படி அடிக்கண் கொண்டவரும், கொடுமை குறையாத முயலகனை அடிக்கீழ்க் கொண்டவரும், கூர்மையைக் கொண்டு நிரம்ப இலங்குகின்ற மழுவினை வலக்கையிற் கொண்டவரும், திருமாலை இடப்பாகமாகப் பொருந்தக் கொண்டவரும், துடியைக் கையிற் கொண்டவரும், எலும்புக் கூட்டினைத் தோள் மேற் கொண்டவரும் ஆகிய சிவபெருமானாரே சூலை நோயைத் தீர்த்து அடியேனை ஆட் கொண்டவர் ஆவார்.
3028 | பொக்கணமும் புலித்தோலும் புயத்திற் கொண்டார் பூதப் படைகள்புடை சூழக் கொண்டார் அக்கினொடு படஅரவம் அரைமேற் கொண்டார் அனைத்துலகும் படைத்தவையும் அடங்கக் கொண்டார் கொக்கிறகுங் கூவிளமுங் கொண்டை கொண்டார் கொடியானை யடலாழிக் கிரையாக் கொண்டார் செக்கர்நிறத் திருமேனி திகழக் கொண்டார் செடியேனை யாட்கொண்ட சிவனார் தாமே. |
6.096.4 |
திருநீற்றுப் பையினையும் புலித்தோலையும் புயத்தில் கொண்டவரும், பூதப்படைகள் தம்மைப் பக்கங்களில் சூடிக் கொண்டவரும், அக்குமணியையும் படநாகத்தையும் இடுப்பின்மேல் கொண்டவரும், தாம் படைத்தவையாகிய எல்லா உலகங்களையும் ஒடுங்குமாறு செய்தலைக் கொண்டவரும், கொக்கிறகினையும் வில்வத்தினையும் முடித்த சடையில் கொண்டவரும், கொடிய சலந்தராசுரனை ஆற்றல் மிக்க ஆழிக்கு இரையாகக் கொண்டவரும், செந்நிறத் திருமேனி விளங்கக் கொண்டவரும் ஆகிய சிவனாரே கீழ்மையேனை ஆட்கொண்டவர்ஆவார்.
3029 | அந்தகனை அயிற்சூலத் தழுத்திக் கொண்டார் சுந்தரனைத் துணைக்கவரி வீசக் கொண்டார் மந்தரம்நற் பொருசிலையா வளைத்துக்கொண்டார் தந்திரமந் திரத்தரா யருளிக் கொண்டார் |
6.096.5 |
அந்தகாசுரனைக் கூரிய சூலத்தால் அழுத்தி அவன் உயிரைக் கொண்டவரும், திரிபுரம் அழிக்கச் சென்ற காலத்தில் உணர்தற்கரிய வேதத்தைத் தேர்க்குதிரையாக்கிக் கொண்டவரும், ஆலால சுந்தரனை இரட்டைக் கவரி வீசக்கொண்டவரும், சுடுகாட்டை நடனமாடுமிடமாகக் கொண்டவரும், மந்தர மலையைப் போரிடுதற்குரிய வில்லாக வளைத்துக் கொண்டவரும், மாகாளனை வாசல் காப்பாளனாகக் கொண்டவரும், தந்திர மந்திரங்களில் பொருந்தி நின்று அருளுதலைக் கொண்டவரும் ஆகிய சிவபெருமானார் சமணரிடமிருந்து என்னை நீக்கி என்னை ஆட்கொண்டவர் ஆவார்.
3030 | பாரிடங்கள் பலகருவி பயிலக் கொண்டார் நீரடங்கு சடைமுடிமேல் நிலாவுங் கொண்டார் வாரடங்கு வனமுலையார் மைய லாகி ஊரடங்க வொற்றிநகர் பற்றிக் கொண் டார் |
6.096.6 |
பூதகணங்கள் பல இசைக் கருவிகளையும் இயக்கக் கொண்டவரும், மேனியில் பவளநிறத்தையும் வெண்ணீற்றுப் பூச்சில் பளிங்கு நிறத்தையும் கொண்டவரும், கங்கை தங்கும் சடைமுடிமேல் பிறைச் சந்திரனையும் கொண்டவரும், அழகு நிறைந்த மிடற்றினில் நீலநிறம் கொண்டவரும், கச்சிற்குள் அடங்கும் அழகிய முலையாராகிய தாருகாவன முனிபத்தினியர் காதலால் மயக்கம் கொண்டு வந்திட்ட பிச்சையுடன் அவர்களுடைய கைவளையல்களையும் கொண்டவரும் எல்லா ஊர்களும் தம் ஆட்சியில் அடங்கியிருக்கத் திருஒற்றியூரைத் தமக்கு இடமாகப் பற்றிக் கொண்டவருமாகிய சிவபெருமானார் என் உடலிற் பொருந்திய சூலை நோயைத் தீர்த்து என்னை ஆட்கொண்டவர் ஆவார்.
3031 | அணிதில்லை அம்பலமா டரங்காக் கொண்டார் கணிவளர்தார்ப் பொன்னிதழிக் கமழ்தார் கொண்டார் மணிபணத்த அரவந்தோள் வளையாக் கொண்டார் துணிபுலித்தோ லினையாடை யுடையாக் கொண்டார் |
6.096.7 |
அழகிய தில்லை அம்பலத்தைத் தாம் ஆடும் அரங்காகக் கொண்டவரும், கடலில் வந்த ஆலால நஞ்சினை அமுதாகக் கொண்டவரும், அழகு மிகுகின்ற சரங்களாகிய பொன் போன்ற கொன்றை மலராலாகிய மணம் கமழ்கின்ற மாலையைக் கொண்டவரும், விருப்பம் நிறைந்த கோடி என்றதலத்தில் கூடி இருத்தலைக் கொண்டவரும், மாணிக்கத்தோடு கூடிய படத்தையுடைய பாம்பினைத் தோள்வளையாகக் கொண்டவரும், மேற் கொண்டு நீண்ட வீதியில் வருதற்குப் பெரிய இடபத்தைக் கொண்டவரும், உரித்த புலியினது தோலை உத்தரியமாகவும் உடையாகவும் கொண்டவரும், சூலத்தைக் கையில் கொண்டவருமாகிய சிவபெருமானார் என்னைத் தமக்கு அடிமையாகக் கொண்டவராவார்.
3032 | படமூக்கப் பாம்பணையா னோடு வானோன் குடமூக்கிற் கீழ்க்கோட்டங் கோயில் கொண்டார் நெடுமூக்கிற் கரியினுரி மூடிக் கொண்டார் இடமாக்கி யிடைமருதுங் கொண்டார் பண்டே |
6.096.8 |
படத்தையும் கொடுமைக் குணத்தையுமுடைய பாம்பைப் படுக்கையாகக் கொண்ட திருமாலையும் இந்திரனையும் பங்கயத்துப் பிரமனையும் தம் விருப்பப்படி படைத்துக் கொண்ட வரும், குடமூக்கிற் கீழ்க் கோட்டத்தைக் கோயிலாகக் கொண்டவரும், கூற்றுவனை உதைத்து ஒப்பற்ற வேதியனாம் மார்க்கண்டேயனை வாழக் கொண்டவரும், துதிக்கையை உடைய யானையினது தோலினை உடலில் போர்த்திக்கொண்டவரும், தம்மை நினையாத பாவிகளை நீங்கக் கொண்டவரும், இடைமருதினைத் தமக்கு இடமாகக் கொண்டவரும், ஆகிய சிவபெருமானார் என்னை இந்நாள் ஆட்கொண்ட இறைவர் ஆவார்.
3033 | எச்சனிணத் தலைகொண்டார் பகன்கண் கொண்டார் மெச்சன்வியாத் திரன்தலையும் வேறாக் கொண்டார் உச்சநமன் தாளறுத்தார் சந்திரனை யுதைத்தார் அச்சமெழ அழித்துக்கொண் டருளுஞ் செய்தார் |
6.096.9 |
வேள்வித் தெய்வத்தின் நிணம் பொருந்திய தலையைக் கொண்டவரும், சூரியர்களில் ஒருவனாகிய பகனது கண்ணைக் கொண்டவரும், சூரியர்களில் மற்றொருவனுடைய பற்களை உடைத்து ஒறுத்தலைக் கொண்டவரும், தன்னையே மெச்சினவனாய், மாறான, வழியல்லாத வழியிற் சென்ற தக்கன் தலையை வேறாகக் கொண்டவரும், வெற்றியுடைய அக்கினி தேவனின் கரத்தைக் கொண்டவரும், வேள்வியைக் காத்து நின்ற வெற்றியில் உயர்ந்த இயமனுடைய தாளை அறுத்தவரும், சந்திரனை உதைத்தவரும், அறிவில்லாத தக்கனுடைய வேள்வி முழுவதையும் அதில் ஈடுபட்டார் அனைவருக்கும் அச்சம் உண்டாக அழித்துப்பின் அனைவருக்கும் அருள் செய்தவரும் ஆகிய சிவபெருமானார் அடியேனை ஆட்கொண்ட அமலர் ஆவார்.
3034 | சடையொன்றிற் கங்கையையுந் தரித்துக் கொண்டார் உடையொன்றிற் புள்ளியுழைத் தோலுங் கொண்டார் கடைமுன்றிற் பலிகொண்டார் கனலுங் கொண்டார் விடைவென்றிக் கொடியதனில் மேவக் கொண்டார் |
6.096.10 |
தன் சடைகள் பலவற்றுள் ஒன்றிடத்தே கங்கையை அடக்கித் தரித்துக் கொண்டவரும், வீணையைத் தடவிச் சாம வேதத்தின் இசையைக் கொண்டவரும், புள்ளி மான் தோலை உடை என்னும் ஒரு தன்மையில் ஏற்றுக்கொண்டவரும், தம்மை நினைவார் உள்ளத்தைத் தம்மிடத்து ஒருங்கிநிற்கும்படி செய்து கொண்டவரும், வீட்டு வாசல் தோறும் பிச்சை கொண்டவரும், கையில் கனல் கொண்டவரும், காபால வேடத்தை விரும்பிக் கொண்டவரும், இடபத்தைத் தன் வெற்றிக் கொடியில் பொருந்தக் கொண்டவரும், ஆகிய சிவபெருமானார் என் கொடிய துயரங்களைத் தீர்த்து என்னை ஆட்கொண்டவர் ஆவார்.
3035 | குராமலரோ டராமதியஞ் சடைமேற் கொண்டார் சிராமலைதஞ் சேர்விடமாத் திருந்தக் கொண்டார் பராபரனென் பதுதமது பேராக் கொண்டார் இராவணனென் றவனைப்பேர் இயம்பக் கொண்டார் |
6.096.11 |
குரா மலர் பாம்பு, பிறை இவற்றைச் சடைமேல் கொண்டவரும், நந்தீசனைக் குடமுழா வாசிப்பவனாகக் கொண்டவரும், சிராமலையைத் தாம் சேர்வதற்குத் திருந்த அமைந்த இடமாகக் கொண்டவரும், தென்றலைத் தனது நெடிய தேராகக் கொண்ட மன்மதன் அழியச் சினத்தைக் கொண்டவரும், பராபரன் என்பதுதம் பெயராக அமையக் கொண்டவரும், மேருமலையை வில்லாகக் கையில் கொண்டவரும், பயங்கள் பலவற்றை உண்டாக்கி இராவணன் என்று பேர் இயம்ப அவனைக் கொண்டவரும் ஆகிய சிவபெருமானார் என் துன்பந்தரும் நோய்களைத் தீர்த்து என்னை ஆட்கொண்டவர் ஆவார்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 94 | 95 | 96 | 97 | 98 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தனி - திருத்தாண்டகம் - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கொண்டவரும், சிவபெருமானார், தீர்த்து, கொண்டார், தமக்கு, யாட்கொண், ஆட்கொண்டவர், பொருந்திய, தீர்த்தென்னை, பொருந்தக், கையில், கொண்டு, திருத்தாண்டகம், அடியேனை, வேள்வி, கையிற், கொண்டவருமாகிய, நிறைந்த, பற்றிக், சடைமுடிமேல், யாட்கொண்ட, பாவிகளை, அனைவருக்கும், தரித்துக், பயங்கள், சூரியர்களில், சந்திரனை, திருமேனி, நீங்கக், ஆட்கொண்ட, படைத்துக், முயலகனை, அழித்தவரும், இடப்பாகமாகக், முப்புரிநூல், பிச்சை, பலிகொண்டார், திருமுறை, திருச்சிற்றம்பலம், தடியேனை, வெண்ணீறு, திகழக், அடிக்கீழ்க், பிறைச், சந்திரனையும், கொண்டவர், தாருகாவன, உடலில், விளங்கக், நோயைத்