முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.095.தனி - திருத்தாண்டகம்
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.095.தனி - திருத்தாண்டகம்
6.095.தனி - திருத்தாண்டகம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
3015 | அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் து(ம்)நீ |
6.095.1 |
ஏறூர்ந்த செல்வனே! எனக்கு அப்பனும் அம்மையும் தமையனும் நீ. அன்புடைய மாமனும் மாமியும் நீ. பிறப்பு, குடிமை முதலியவற்றான் ஒப்புடைய மனைவியரும், ஒள்ளிய செல்வமும் நீ, ஒரு குலத்தவரும், பிற சுற்றத்தவரும், நிலையாக நின்று வாழும் ஒப்பற்ற ஊரும் நீ, நுகர்ச்சிப் பொருள்களாகவும், ஊர்தி வகைகளாகவும் தோன்றுபவனும் நீ, இப்பொன்னும் இம்மணியும் இம்முத்தும் நீ, எனக்குத் துணையாய் உடனின்று உலகத்து அப்பன் அம்மை முதலாயினாரினின்று என்னைத் துறப்பிப்பானும் நீ. நீயே எனக்குக் கடவுள்.
3016 | வெம்பவரு கிற்பதன்று கூற்றம் நம்மேல் எம்பரிவுந் தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம் அம்பவளச் செஞ்சடைமேல் ஆறு சூடி செம்பவள வண்ணர்செங் குன்ற வண்ணர் |
6.095.2 |
அழகிய பவளம் போன்ற செஞ்சடைமேல் ஆறு சூடியவரும், அனல் ஆடியவரு ஆன் அஞ்சிலும் ஆடுதலை உகந்தவரும், செம்பவள நிறத்தினரும் செங்குன்ற வடிவினரும், செவ்வான வண்ணரும் ஆகிய சிவபெருமான் எம் சிந்தையராயினார்; அதனால் கூற்றம் நம்மேல் நாம் வருந்தும்படி வரவல்லதன்று. கொடிய வினையாகிய பகையும் மெல்ல வருத்துகின்ற எம் துன்பமும் யாம் தீர்ந்தோம்; யாதோரிடையூறும் இல்லோம்; ஞாயிறு எங்கெழுந்தாலும் அதனால் எமக்கு வரக்கடவது என்னை? யாவர்க்கும் எளியோம் அல்லோம்.
3017 | ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே |
6.095.3 |
கண்ணுதலாய்! நீ ஆட்டுவித்தால் ஆடாதார் ஒருவர் ஆர்? அடக்குவித்தால் அடங்காதார் ஒருவர் ஆர்? ஓட்டுவித்தால் ஓடாதார் ஒருவர் ஆர்? உருகுவித்தால் உருகாதார் ஒருவர் யார்? பாட்டுவித்தால் பாடாதார் ஒருவர் யார்? பணிவித்தால் பணியாதார் ஒருவர் ஆர்? காட்டுவித்தால் காணாதார் ஒருவர் ஆர்? நீ காட்டாவிடில் காண்பார் ஆர்?
3018 | நற்பத்தார் நற்பதமே ஞான மூர்த்தீ சொற்பதத்தார் சொற்பதமுங் கடந்து நின்ற நிற்பதொத்து நிலையிலா நெஞ்சந் தன்னுள் கற்பகமே யானுன்னை விடுவே னல்லேன் |
6.095.4 |
வீடுபேற்றினை அடைய உரியவருடைய வீடுபேறாய் நின்றவனே! ஞானமே வடிவானவனே! நன்மையை விளக்கும் சுடரே! நான்கு வேதங்களுக்கும் அப்பால் நின்ற சொல்பதத்தாராகிய அபர முத்தருடைய சொற்பதத்தையும் கடந்து நின்ற சொல்லற்கரிய சூழலாய்! இஃது உனது தன்மை. நிற்பது போலக் காட்டி நில்லாது அலைகின்ற நெஞ்சுவழியாக வந்து நிலையில்லாத புலாலுடம்பிற்புகுந்து நின்று எல்லாப் பயன்களையும் தரும் கற்பகமே! கனகமும் மாணிக்கமும் ஒத்த நிறத்தினை உடைய எம் கடவுளே. யான் உன்னை விடுவேன் அல்லேன்.
3019 | திருக்கோயி லில்லாத திருவி லூரும் பருக்கோடிப் பத்திமையாற் பாடா வூரும் விருப்போடு வெண்சங்கம் ஊதா வூரும் அருப்போடு மலர்பறித்திட்டுண்ணா வூரும் |
6.095.5 |
சிவபெருமானது திருக்கோயிலில்லாததால் நன்மையில்லாத ஊரும், திருவெண்ணீற்றை மக்கள் அணியாததால் நன்மையில்லாத ஊரும், உடம்பு வணங்கிப்பத்தி மிகுதியால் மக்கள் பாடா ஊரும், அழகான பலதளிகள் இல்லாத ஊரும், விருப்புடன் வெள்ளிய வலம்புரிச் சங்கினை ஊதாஊரும். மேற்கட்டியும் வெண் கொடிகளும் இல்லா ஊரும், மலரைப்பேரரும்பாய் உள்ள நிலையிற் பறித்துச் சிவனுக்குச் சாத்திப் பின்னரே உண்ணல் முறையாயிருக்க அங்ஙனம் உண்ணா ஊரும், ஆகிய அவை எல்லாம் ஊரல்ல; அடவியாகிய பெருங்காடே.
3020 | திருநாமம் அஞ்செழுத்தும் செப்பா ராகில் ஒருகாலுந் திருக்கோயில் சூழா ராகில் அருநோய்கள் கெடவெண்ணீ றணியா ராகில் பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்தும் |
6.095.6 |
திருநாமமாகிய அஞ்செழுத்தை ஒருகாலும் செப்பாராயின், தீவண்ணருடைய இயல்பை ஒருகாலும் பேசாராயின், திருக்கோயிலினை ஒருகாலம் வலம் வாராராயின், உண்பதற்குமுன் பல மலரைப் பேரரும்பாய் உள்ள நிலையிற் பறித்து அவற்றை இறைவனுக்கு இட்டுப்பின் உண்ணாராயின், கொடுநோய்கள் கெட வெண்ணீற்றை அணியாராயின், அங்ஙனம் செய்யாதாரெல்லாரும் இறைவனது திருவருளை இழந்தவராவர். அவர்கள் பிறந்த முறைமை தான் யாதோவெனின், தீராத கொடுநோய்கள் மிகத் துன்புறுத்தச் செத்து, வரும் பிறப்பிலும் பயனின்றி வாளா இறந்து மீளவும் பிறப்பதற்கு அதுவே தொழிலாகி இறக்கின்றார் ஆதலேதான்.
3021 | நின்னாவார் பிறரின்றி நீயே யானாய் மன்னனாய் மன்னவர்க்கோ ரமுத மானாய் பொன்னானாய் மணியானாய் போக மானாய் என்னானாய் என்னானாய் என்னி னல்லால் |
6.095.7 |
நின்னைப்போல் ஆவார் பிறர் இன்றி நீ ஒருவனே ஆனாய், நினைப்பார்தம் மனமாகிய நிலத்துக்கு ஒப்பற்ற வித்தும் ஆனாய், தலைவன் ஆனாய், அரசர்களுக்கு ஒப்பற்ற அமுதம் ஆனாய்; மறை நான்கும் ஆறங்கமுமாய், பொன்னும் மணியும் போகமும் ஆகும் பூமிமேல் புகழ்தற்குரிய பொருளானவனே! நீ எவ்வாறெல்லாம் ஆனாய் எவ்வாறெல்லாம் ஆனாய் என்று வியப்பதையன்றிச் சிற்றறிவினையுடைய யான் எவற்றை எஞ்சாதுசொல்லிப் புகழ்வேன்.
3022 | அத்தாவுன் அடியேனை அன்பா லார்த்தாய் எத்தனையும் அரியைநீ எளியை யானாய் பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன் இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ |
6.095.8 |
தந்தையே! ஐயா! உன் அடியவன் ஆகிய என்னை என் அன்பு கொண்டு பிணிப்புண்ணச் செய்தாய்; உனது திருவருள் நோக்கத்தாலே என்னைத் தீர்த்த நீர் ஆட்டித் தூயவன் ஆக்கினாய். அடைதற்கு மிகவும் அரியையாகிய நீ எனக்கு மிகவும் எளியை ஆயினாய்; என்மீது இரங்கி எனை ஆண்டுகொண்டு என்செயல்களை எல்லாம் உன் செயல்களாக முன்னின்று ஏற்றுக்கொண்டாய். ஒரு நெறிப்படாத பித்தனேனும் யாதுமுணராத பேதையேனேனும், வீணில் உழலும் பேயேனேனும் இழிவு மிகுந்த நாயேனேனும் நான் செய்த குற்றங்கள் எல்லாவற்றையும் பொறுத்தனை. நின் அருட்செயல்கள் யாவும் எம்போலியரது அளவிற்கு உரியனவோ? அல்ல; அல்ல; எம்பெருமான் திருக்கருணை இருந்த தன்மையைக் காட்டுவனவே அவை.
3023 | குலம்பொல்லேன் குணம்பொல்லேன் குறியும் பொல்லேன் நலம்பொல்லேன் நான்பொல்லேன் ஞானி யல்லேன் விலங்கல்லேன் விலங்கல்லா தொழிந்தேன் அல்லேன் இலம்பொல்லேன் இரப்பதே ஈய மாட்டேன் |
6.095.9 |
சார்ந்த கூட்டத்தால்நான் தீயேன்; குணத்தாலும் தீயேன்;குறிக்கோளாலும் தீயேன். குற்றமாகிய செயலே பெரிதுஉடையேன்; நலம் பயத்தற்குரிய வேடத்தாலும் தீயேன்.எல்லாவற்றாலும் நான் தீயேன். ஞானியல்லேன்; நல்லாரோடுகூடிப்பழகிற்றிலேன்; மறவுணர்வுடைய மக்கட்கும் அஃதில்லாத பிற உயிர்கட்கும் இடைநிற்கின்ற ஒரு சார் விலங்கும் அல்லேன்; மனவுணர்வு பெற்றும்அம் மன உணர்வால் பயன் கொள்ளாமையின் விலங்கல்லாது ஒழிந்தேனும் அல்லேன்; வெறுக்கத்தக்க பொய்குறளை கடுஞ்சொல் பயனில் சொல் என்பனவற்றையே மிகப் பெரிதும் பேசும் ஆற்றலினேன். பிறப்பால்குடிமை நல்லேன் ஆயினும் என்செயலால் அதுவும் பொல்லேனாக இகழப்பட்டேன். பிறர்பால் இரப்பதனையே மேற்கொண்டு என்பால் இரப்பவர்க்கு யாதும் ஈயமாட்டேன். இந்நிலையில் அறிவற்ற நான் என் செய்வதற்காக மனிதனாகத் தோன்றினேன்.
3024 | சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம் அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய் கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில் |
6.095.10 |
சங்கநிதி பதுமநிதி ஆகிய நிதிகள் இரண்டையும் தந்து, ஆட்சி செய்யப் பூமியொடு வானுலகையும், தருவாராயினும் சிவபெருமானிடத்தே ஒரு தலையாய அன்பில்லாராய் நிலையின்றி அழிவாராகிய அவரது செல்வத்தை யாம் ஒருபொருளாக மதிக்க மாட்டோம். உறுப்புக்கள் எல்லாம் அழுகிக் குறையுந் தொழுநோயராய்ப் பசுவை உரித்துத்தின்று திரியும் புலையராயினும் கங்கையை நீண்ட சடையில் கரந்த சிவபெருமானுக்கு அன்பராயின் அவரே நாம் வணங்கும் கடவுள் ஆவார்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 93 | 94 | 95 | 96 | 97 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தனி - திருத்தாண்டகம் - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - ஆரொருவர், ஒருவர், தீயேன், திருத்தாண்டகம், ஒப்பற்ற, அல்லேன், அங்ஙனம், நிலையிற், தொழிலாகி, மக்கள், திருவி, நன்மையில்லாத, ஒருகாலும், எவ்வாறெல்லாம், சங்கநிதி, பதுமநிதி, தோன்றினேன், எல்லாம், திருக்கருணை, மிகவும், கொடுநோய்கள், கடந்து, நின்று, என்னைத், கடவுள், எனக்கு, ஏறூர்ந்த, மாமனும், நெஞ்சந், கூற்றம், தீர்ந்தோம், கண்ணுதலாய், திருச்சிற்றம்பலம், திருமுறை, ஆட்டுவித்தால், செஞ்சடைமேல், அதனால், சூழலாய்