முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.097.திருவினாத் - திருத்தாண்டகம்
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.097.திருவினாத் - திருத்தாண்டகம்
6.097.திருவினாத் - திருத்தாண்டகம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
3036 | அண்டங் கடந்த சுவடு முண்டோ பண்டை யெழுவர் படியு முண்டோ கண்ட மிறையே கறுத்த துண்டோ தொண்டர்கள் சூழத் தொடர்ச்சி யுண்டோ |
6.097.1 |
அன்பர்களே! நீங்கள் கண்ட எம்பிரானிடம் அண்டம் கடந்து நின்றதற்கான அடையாளம் உண்டோ? அங்கையில் அனலேந்திய ஆடலுண்டோ? பண்டை முனிவர் எழுவர் பணி செய்யும் படியும் உண்டோ? பூதங்கள் பல சூழப் போதல் உண்டோ? கண்டம் சிறிதே கறுத்தது உண்டோ? கண்களுக்கு மேலாக நெற்றியில் கண் ஒன்று உண்டோ? தொண்டர் சூழும் அத்தொடர்ச்சி உண்டோ? நீங்கள் அவனைக் கண்டவண்ணம் எமக்குச் சொல்வீராக.
3037 | எரிகின்ற இளஞாயி றன்ன மேனி விரிகின்ற பொறியரவத் தழலு முண்டோ வரிநின்ற பொறியரவச் சடையு முண்டோ சொரிகின்ற புனலுண்டோ சூலம் உண்டோ |
6.097.2 |
அன்பர்களே! நீங்கள் கண்ட எம்பிரானிடம் இள ஞாயிறு போன்று ஒளிவிடும் அவன் உடலின் ஓருபால் விளங்குகின்ற அணியினை உடைய உமாதேவி உண்டோ? வெள்ளிய இடப முண்டோ? பரவுகின்ற தீப்பொறியும் ஒலியுமுடைய தழலுமுண்டோ? வேழத்தின் தோல் உண்டோ? வெண்ணூல் உண்டோ? வரியும் புள்ளியும் பொருந்திய பாம்பைக் கொண்ட சடையுமுண்டோ? அச்சடை மேல் வைக்கப்பட்ட இளமதியும் உண்டோ? சடையிலிருந்து ஒழுகும் நீர் உண்டோ? கையில் சூலும் உண்டோ? நீங்கள் அவனைக் கண்ட வண்ணம் எமக்குச் சொல்வீராக.
3038 | நிலாமாலை செஞ்சடைமேல் வைத்த துண்டோ புலால்நாறு வெள்ளெலும்பு பூண்ட துண்டோ கலாமாலை வேற்கண்ணாள் பாகத் துண்டோ சுலாமாலை யாடரவந் தோள்மே லுண்டோ |
6.097.3 |
அன்பர்களே! நீவிர் கண்ட எம்பெருமான் பிறைக் கண்ணியைச் செஞ்சடை மேல்வைத்ததுண்டோ? அவனுக்கு நெற்றியில் கண்ணுண்டோ? பூசும் நீறுதான் அவனுக்குச் சந்தனமோ? புலால் நாறும் வெள்ளெலும்புமாலையை அவன் பூண்டதுண்டோ? பூதங்கள் அவனைச் சூழ்ந்ததுண்டோ? போர்க்குணமுடைய இடபம் அருகில் உண்டோ? போர் செய்யும் தன்மை வாய்ந்தனவும், வேல்போன்றனவுமாகிய கண்களையுடைய உமையம்மை அவன் பாகமாகப் பொருந்திய துண்டோ? கார்காலத்து மலரும் கொன்றை மாலை அவனுடலில் கலந்ததுண்டோ? வளைந்தமாலை போல்வதும் படமெடுத்தாடுவதும் ஆகிய பாம்பு தோள்மேல் விளங்குதல் உண்டோ? அவனை நீங்கள் கண்டவண்ணம் எமக்குக் கூறுவீராக.
3039 | பண்ணார்ந்த வீணை பயின்ற துண்டோ உண்ணா வருநஞ்ச முண்ட துண்டோ கண்ணார் கழல்காலற் செற்ற துண்டோ எண்ணார் திரிபுரங்க ளெய்த துண்டோ |
6.097.4 |
அன்பர்காள்! நீவிர் கண்ட எம்பெருமான் பண் நிறைந்த வீணையை வாசித்துப் பழகியதுண்டோ? பூதங்கள் பல சூழ்ந்து வர வெளியே போந்ததுண்டோ? உண்ணற்காகாத கொடிய நஞ்சை உண்டதுண்டோ? ஊழித் தீப் போன்ற ஒளி அவன்பால் உண்டோ? கண், மகிழ்வால் நிறைதற்குக் காரணமான திருவடியால் அவன் காலனை உதைத்ததுண்டோ? மன்மதனையும் நெற்றிக்கண்ணிடத்துத் தோன்றிய நெருப்பால் அவன் அழித்ததுண்டோ? பகைவருடைய திரிபுரங்கள் மேல் அவன் அம்பு எய்ததுண்டோ? நீங்கள் அவனை எவ்வகையில் கண்டீர்கள்?
3040 | நீறுடைய திருமேனி பாக முண்டோ கூறுடைய கொடுமழுவாள் கையி லுண்டோ ஆறுடைய சடையுண்டோ அரவ முண்டோ ஏறுடைய கொடியுண்டோ இலய முண்டோ |
6.097.5 |
அன்பர்காள்! நீவிர் கண்ட எம்பெருமானுக்குத் திருமேனியில் நீறு பூசிய பாகமுண்டோ? நெற்றியில் நெருப்புமிகும் ஒரு கண்ணுமுண்டோ? கூறுபடுத்துங்கொடிய மழுவாயுதம் கையிலுண்டோ? கொல்லும் புலியது தோலாகிய உடையுண்டோ? கங்கையைத் தாங்கும் சடையுண்டோ? அச்சடையிடத்துப் பாம்பு உண்டோ? அப் பாம்பின் அருகே பிறையுண்டோ? பெருமை அளவிட முடியாத இடபக் கொடியுண்டோ? கூத்துமுண்டோ? நீங்கள் அவன் கொண்ட எவ்வகை வேடத்தில் அவனைக் கண்டீர்கள்?.
3041 | பட்டமுந் தோடுமோர் பாகங் கண்டேன் கொட்டிநின் றிலயங்க ளாடக் கண்டேன் கட்டங்கக் கொடிதிண்டோள் ஆடக் கண்டேன் சிட்டனைத் திருவால வாயிற் கண்டேன் |
6.097.6 |
அன்பர்காள்! சிவபெருமானை நான் கனவில் கண்டவாறே நனவிலும் அவன் நெற்றிப்பட்டமும் செவித்தோடும் ஓரொருபாகத்தில் விளங்கக் கண்டேன், நிலம் அழகுபெறுமாறு பிச்சை பெறப்பல இடங்களிலும் திரிந்தலையக் கண்டேன். வாச்சியங்களைப் பூதகணங்கள் இயம்பப் பலவகைக் கூத்துக்களை ஆடக் கண்டேன். காதிற்குழையும் சென்னியில் பிறையும் விளங்கக் கண்டேன், உயர்த்திய மழுக்கொடி திண்டோளை ஒட்டி ஆடக்கண்டேன்; வலிமை மிக்க மழுவாயுதம் வலக்கையில் திகழக் கண்டேன்; மேலான அவனைத் திருவாலவாயிற் கண்டேன். அவனை நீவிர் கண்டவாறு எங்ஙனம்?.
3042 | அலைத்தோடு புனற்கங்கை சடையிற் கண்டேன் பலிக்கோடித் திரிவார்கைப் பாம்பு கண்டேன் கலிக்கச்சி மேற்றளியே யிருக்கக் கண்டேன் வலித்துடுத்த மான்தோல் அரையிற் கண்டேன் |
6.097.7 |
மறைவல்லவனும், மாதவத்தவனும் ஆகிய சிவபெருமானுடைய சடையில் அலைவீசி ஓடும் நீர்ப் பெருக்கையுடைய கங்கையைக் கண்டேன். கொன்றை மலரால் ஆன மாலையை அவன் அணிந்த தன்மையைக் கண்டேன். பிச்சைக்கு ஓடித்திரியும் அவன் கையில் பாம்பைக் கண்டேன். பகற்பொழுதில் பழனத்திருப்பதியில் அவன் சென்றுபு குதலைக் கண்டேன். அவன் ஆரவாரம் மிக்க கச்சி மேற்றளியில் மேவி இருக்கக் கண்டேன். அவனது கறைபொருந்திய மிடற்றைக் கண்டேன்; கையில் கனலும் கண்டேன். அரையில் இறுக்கி உடுத்த மான் தோலைக் கண்டேன். அவனை நான் கண்டவாறு இது. அவனை நீவிர் கண்டவாறு எங்ஙனம்?
3043 | நீறேறு திருமேனி நிகழக் கண்டேன் கூறேறு கொடுமழுவாள் கொள்ளக் கண்டேன் ஆறேறு சென்னியணி மதியுங் கண்டேன் ஏறேறி யிந்நெறியே போதக் கண்டேன் |
6.097.8 |
அன்பர்காள்! எம்பெருமான் திருநீறு திகழும் திருமேனியுடன் உலவக் கண்டேன். அவன் நீண்ட சடைமேல் நீர்நிறை கங்கை பொருந்தக் கண்டேன். கூறுபடுத்தலைப் பொருந்திய கொடிய மழுவாயுதத்தை அவன் கொள்ளக் கண்டேன். கொடுகொட்டி என்னும் வாச்சியத்தையும் கையலகு என்னும் ஆயுதத்தையும் அவன் கையிற் கண்டேன். ஆறு பொருந்திய அவன் தலையில் அழகிய மதியையும் கண்டேன். அவன் அடியார்க்கு ஆரமுதம் போன்று இன்பஞ் செய்தலைக் கண்டேன். அவன் இடபவாகனமேறி இவ்வழியே வரக்கண்டேன். அவனை இவ்வகையில் யான் கண்டேன். அவனை நீவிர் கண்டவாறு எங்ஙனம்?.
3044 | விரையுண்ட வெண்ணீறு தானு முண்டு சுரையுண்டு சூடும் பிறையொன் றுண்டு அரையுண்ட கோவண ஆடை யுண்டு இரையுண் டறியாத பாம்பு முண்டு |
6.097.9 |
அன்பர்காள்! இமையோர் பெருமானுடலில் மணமுடைய வெண்ணீறு உண்டு. அவன் கைகளில் ஒன்றில் வெண்டலையும் ஒன்றில் வீணையுமுண்டு. சுரைபோன்று தோன்றும் சடை முடியுண்டு அவனுக்கு, அதில் அவன் சூடும் பிறை ஒன்றுண்டு. அவன் சூலாயுதத்தையும் தண்டாயுதத்தையும் சுமந்ததுண்டு, அவனுக்கு இடுப்பில் கட்டிய கோவண ஆடையுண்டு, அவன்பால் ஊன்றுகோலும் போர்க்குந்தோலும் அழகாக உண்டு. அவனிடத்து இருக்கும் பாம்பு பசி இல்லாததாகலின் இரையுண்டறியாதது. அவனிடம் எல்லாம் உள. இவ்வாறு அவனை நான் கண்டேன். நீவிர் அவனைக் கண்டவாறு எங்ஙனம்?
3045 | மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன் அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும் இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன் |
6.097.10 |
இறைவன் மைபூசிய கண்ணளாம் உமையம்மையும் தானுமாகிக் கச்சி மயானத்து வாழ்பவனும் நீண்ட சடையினனும் ஆவான்" என்று கூறின் அவன் அவ்வளவே ஆம் தன்மையன் அல்லன். அவன் எப்பொருளையும் தன்பொருட்டு ஏற்க இசைதலை உடையான் அல்லன். உலகப் பொருள்களில் ஒருவன் அல்லன்; ஓரூர்க்கே உரியனல்லன். யாதொரு பொருளும் தனக்கு உவமையாதல் இல்லாதவன். அதனால் அவனுடைய அந்தத் தன்மையையும் அந்த நிறத்தையும் அந்த வடிவத்தையும் அவன் திருவருளையே கண்ணாகப் பெற்றுக் காணலாமேயல்லாமல் மற்றைப் பொருள்கள் போலப் பிறரொருவர் இன்னவகையுட்பட்டவன், இன்ன நிறத்தையுடையவன், இன்ன வடிவத்தை உடையவன் என்று இவனைச் சொல்லோவியமாகவோ எழுத்தோவியமாகவோ எழுதிக் காட்டல் இயலாது.
3046 | பொன்னொத்த மேனிமேற் பொடியுங் கண்டேன் மின்னொத்த நுண்ணிடையாள் பாகங் கண்டேன் அன்னத்தே ரூர்ந்த அரக்கன் தன்னை சின்ன மலர்க்கொன்றைக் கண்ணி கண்டேன் |
6.097.11 |
அன்பர்காள்! நான் சிவபெருமானை என் சிந்தனையுட் கண்டவாறே என் கண்ணிலும் அவன் பொன்னார் மேனி மேல் திருநீற்றுப் பொடியும் கண்டேன்; புலித்தோலாகிய உடை கண்டேன். தன்னிடப்பாகத்தில் மின்னலைப் போன்ற நுண்ணிய இடையை உடைய உமையாள் பொருந்தக் கண்டேன. ஒளியுடைப் பாம்பு ஒன்றையும் அரைமேற்கண்டேன். அன்னம்போன்ற வெள்ளிய தேரினை ஊர்ந்த அரக்கன் அலற அவனை நசுக்கிய திருவடியையும் கண்டேன். அடையாளப் பூவாகிய கொன்றை மலராலான தலை மாலையையும் கண்டேன். நீவிர் அவனைக் கண்டவாறு எங்ஙனம்?
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 93 | 94 | 95 | 96 | 97 | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவினாத் - திருத்தாண்டகம் - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கண்டேன், நீவிர், நீங்கள், கண்டவாறு, அன்பர்காள், பாம்பு, அவனைக், எங்ஙனம், பிரானாரைக், பொருந்திய, அவனுக்கு, எம்பெருமான், கொன்றை, அன்பர்களே, திருத்தாண்டகம், கையில், அல்லன், பூதங்கள், நெற்றியில், அரக்கன், சூடும், திருமுறை, விளங்கக், சிவபெருமானை, கண்டவாறே, என்னும், கொள்ளக், கையிற், பொருந்தக், ஒன்றில், னல்லன், கையலகு, வெண்ணீறு, மழுவாயுதம், கண்டீர்கள், போன்று, வெள்ளிய, பாம்பைக், சொல்வீராக, கண்டவண்ணம், எம்பிரானிடம், செய்யும், கண்ணுண்டோ, பலசூழப், கொடுமழுவாள், சடையுண்டோ, பிறையுண்டோ, திருமேனி, அவன்பால், திருவினாத், திருச்சிற்றம்பலம், கொடியுண்டோ