முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.093.பலவகைத் - திருத்தாண்டகம்
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.093.பலவகைத் - திருத்தாண்டகம்
6.093.பலவகைத் - திருத்தாண்டகம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
2995 | நேர்ந்தொருத்தி யொருபாகத் தடங்கக் கண்டு பாய்ந்தொருத்தி படர்சடைமேற் பயிலக் கண்டு தாந்திருத்தித் தம்மனத்தை யொருக்காத் தொண்டர் பூந்துருத்தி பூந்துருத்தி யென்பீ ராகில் |
6.093.1 |
தம் மனத்தைத் தாம் திருத்தி ஒருமுகப்படுத்தாத மக்களைப் போலப் பேணுவாரின்றித் தனித்துத் தண்டு ஒன்றை ஊன்றி உடல் தளராத முன்னம், துணைவியாக நேர்ந்த ஒருத்தியைத் தன் உடலின் ஒரு பாகத்து அடங்கச் செய்து, பூமி நிலைதளரும் வண்ணம் பெரிய முகங்கள் ஆயிரத்தொடும் பாய்ந்த ஒருத்தியைப் பரந்த சடைமேல் பொருந்தச் செய்து, பட நாகத்தையும் குளிர்ந்த மதியையும் ஒருங்கே வைத்த செல்வராகிய சிவபெருமான் உவந்து உறையும் பூந்துருத்தி. பூந்துருத்தி என்று பலகாலும் நினைத்து வாழ்த்துவீராகில் துன்பமே விளைக்கும் புலால் பொருந்திய துருத்தி போன்ற உடம்பை நீக்கல் கைகூடும்.
2996 | ஐத்தானத் தகமிடறு சுற்றி யாங்கே மைத்தானக் கண்மடவார் தங்க ளோடு பைத்தானத் தொண்மதியும் பாம்பும் நீரும் நெய்த்தானம் நெய்த்தான மென்பீ ராகில் |
6.093.2 |
மைதீட்டும் இடமான கண்களையுடைய மடவாரோடு வாழும் நிலையற்ற மனைவாழ்க்கையில் இறுமாந்து வாழ்வீர்காள்! கோழைக்கு இடமான மிடற்று உட்பகுதி பன்னாளும் பலவற்றையும் பேசி இறுதி நாளில் செயலற்றுக் கோழையினால் அடைக்கப்படும் நிலையை அடைந்தால் அதனை நீங்குதற்கு யாதொரு மருந்துந் தருவாரில்லை. ஆகலான் ஒளிர்மதியையும், படமாகிய இடத்தினையுடைய பாம்பையும், கங்கையையும் தன் விரிந்த சடைமேல் வைத்து மகிழ்ந்த பண்பனாகிய சிவபெருமான் விரும்பி உறையும் நெய்த் தானம் நெய்த்தானம் என்று பலகாலும் நினைத்து வாழ்த்துவீராகில் நிலையில்லாத ஊனினாலாகிய உடம்பினை நீக்கல் கைகூடும்.
2997 | பொய்யாறா வாறே புனைந்து பேசிப் கையாறாக் கரண முடையோ மென்று நெய்யாறா ஆடிய நீல கண்டர் ஐயாறே ஐயாறே யென்பீ ராகில் |
6.093.3 |
நிலையாமை நீங்காத முறைமையுடைய பொருள்களையே சிறப்பித்துப் பேசிப் பொழுது புலர எழுந்தது முதல் பொருளைத் தேடி ஒழுக்கமாக எங்கள் குலத்தொழிலைக் கொண்டுள்ளோம் என்று எண்ணி இறுமாந்த மனத்தராய் அத்தொழிலில் தொடர்தலை உறுதியாகக் கருதி வாழ்வீர்காள்! நெய்யை ஆறுபோல் ஆடியவரும், நீலகண்டரும், நீண்ட செஞ்சடையரும், நெற்றிக் கண்ணரும் ஆகிய சிவபெருமான் விரும்பி உறையும் ஐயாறே! ஐயாறே! என்று பலகாலும் நினைத்து வாழ்த்துவீராயின் பிறவித் துன்பம் தீர்த்துச் சிவனுலகை ஆளலும் கைகூடும்.
2998 | இழவொன்று தாமொருவர்க் கிட்டொன் றீயார் கழனங்கோ வையாதல் கண்டுந் தேறார் அழனம்மை நீக்குவிக்கும் அரைய னாக்கும் பழனம் பழனமே யென்பீ ராகில் |
6.093.4 |
ஒருபொருள் தமக்கு நட்டமாகும்படி உயர்ந்தோர்க்கு ஒன்று கொடுத்தலையும் பல இடத்தும் அலைந்து திரியும் வறியவர் ஒருவர்க்கு ஒன்று ஈதலையும் செய்யாராய், ஈன்றெடுத்த தாய், தந்தை, மனைவியர், மக்கள் முதலியோர் தம் காலில் பூணும் தளையாதலை அனுபவித்தும் தௌயாராய், இறுமாந்த மனத்தாராய் அவர்களையே நிலையாகக் கருதி வாழ்வீர்காள்! நம் அழுகையை நீக்குவிப்பவனும் நம்மை அரையனாக்குபவனும், நம்மை அமரருலகு ஆள்விப்பவனும் ஆகிய தலைவன் சிவபெருமான் விரும்பி உறையும் பழனம் பழனம் என்று பலகாலும் நினைத்து வாழ்த்துவீராயின் பன்னாள் செய்து போந்த பழைய வினையாகிய நோயை நீக்கலும் கைகூடும்.
2999 | ஊற்றுத் துறையொன்ப துள்நின் றோரீர் மாற்றுத் துறைவழி கொண்டோடா முன்னம் வேற்றுத் தொழில்பூண்டார் புரங்கள் மூன்றும் சோற்றுத்துறை சோற்றுத்துறை யென்பீ ராகில் |
6.093.5 |
நிலையற்ற மனைவாழ்க்கையில் இறுமாந்து வாழ்வீர்காள்! அழுக்கு ஊறுகின்ற துறையாம் இவ் உடலில் உள்ள ஒன்பது பெருவாயில்களின் உள்ளே அகப்பட்டு நின்றமையால் இறைவனை நினைகின்றிலீர், அவை ஒன்பதையும், ஒருசேர அடைக்கும் இறுதிப்போதில் இறைவனை நினைக்க விரும்பினும் அது செய்யமாட்டீர். மாற்றுத்துறையாகிய யாதனாசரீரத்துடன் செல்லும் வழியை மேற்கொண்டு கால தூதுவரோடு நீவிர் ஓடாமுன்னம் பகைமைத் தொழில் பூண்டாருடைய புரங்கள் மூன்றையும் வெவ்விய அழலிடத்து வீழ்விக்கும் வேந்தனாகிய சிவபெருமான் விரும்பி உறையும் சோற்றுத்துறை சோற்றுத்துறை என்று பலகாலும் நினைத்து வாழ்த்துவீராயின் பிறவித்துயர் நீங்கித் தூய வீட்டுநெறியினைச் சேர்தல் கைகூடும்.
3000 | கலஞ்சுழிக்குங் கருங்கடல்சூழ் வையந் தன்னிற் நலஞ்சுழியா எழுநெஞ்சே இன்பம் வேண்டில் அலஞ்சுழிக்கு மன்னாகந் தன்னான் மேய வலஞ்சுழியே வலஞ்சுழியே என்பீ ராகில் |
6.093.6 |
மரக்கலங்கள் சுழலுகின்ற கரிய கடலால் சூழப்பட்ட உலகில் வஞ்சனைக் கடலில் அழுந்தி, முயலாமலே, நன்மையைத் தேடி அலைகின்ற நெஞ்சே! நல்லின்பம் பெற வேண்டில் நம்புதற்குரிய தலைவன் திருவடியிணைக்கே வாழ்த்து நவில். அங்ஙனம் நவில விரும்பின் எல்லாப் பொருளும் அடங்கச் சுருட்டும் பாம்பரசனாகிய ஆதிசேடனால் விரும்பப்பட்டதும் அருமறையும் ஆறங்கமும் ஆன சிவபெருமான் உறைவதும் ஆகிய கோயிலைக் கொண்ட வலஞ்சுழியே வலஞ்சுழியே என்று பலகாலும் கூறுவையாயின் வலிய வினைகள் தீர வானுலகு ஆளல் கைகூடும்.
3001 | தண்டிகுண் டோதரன்பிங் கிருடி பண்டை யுலகம் படைத்தான் தானும் திண்டி வயிற்றுச் சிறுகட் பூதஞ் கண்டியூர் கண்டியூர் என்பீ ராகிற் |
6.093.7 |
தண்டியும் குண்டோதரனும், பிருங்கியாகிய இருடியும், புகழ்சார்ந்த நந்தியும், சங்குகன்னனும், பண்டு உலகைப் படைத்த பிரமனும், உலகளந்த திருமாலும் பல்லாண்டு இசைக்கவும் திண்ணிய வயிற்றையும் சிறிய கண்களையுமுடைய பூதங்கள் சில பாடவும் விடை ஒன்றை ஊர்பவனாகிய சிவபெருமான் மேவி உறையும் கண்டியூர் கண்டியூர் என்று பலகாலும் நினைத்து வாழ்த்துவீர் ஆயின் நும் வலிய வினையை விரைவாக நீக்கல் கைகூடும்.
3002 | விடமூக்கப் பாம்பேபோற் சிந்தி நெஞ்சே வடமூக்க மாமுனிவர் போலச் சென்று படமூக்கப் பாம்பணையிற் பள்ளி யானும் குடமூக்கே குடமூக்கே யென்பீ ராகிற் |
6.093.8 |
நெஞ்சே! வெள்ளேறு ஊறும் விமலனுடைய அடியார்களைக் கண்டபோது ஆலமர் கடவுளை அடைந்த முனிவர் போல் அவர்களைச் சென்றடைந்து, விடம், உக்க பாம்பு போல அடங்கி வணங்கு. வணங்கி, மாதவத்தார், மனத்து உள்ளவரும், மழுப்படையை ஏந்திய செல்வரும், படத்தையுடைய கொடிய பாம்பாகிய அணையிற் பள்ளி கொள்ளும் திருமாலும், பங்கய மலர்வாழ் பிரமனும் புகழ்ந்து தோத்திரித்தும் காணப்படாதவரும் ஆகிய அரனார் மகிழ்ந் துறையும் குடமூக்கே குடமூக்கே என்று பலகாலும் நினைத்து வாழ்த்துவையாயின் கொடுவினைகள் தீர அவரைக் கிட்டுதல் கைகூடும்.
3003 | தண்காட்டச் சந்தனமுந் தவள நீறும் கண்காட்டாக் கருவரைபோ லனைய காஞ்சிக் எண்காட்டாக் காடங் கிடமா நின்று வெண்காடே வெண்காடே என்பீ ராகில் |
6.093.9 |
மேகலையணிந்து கார்மயிலின் சாயலைக் கொண்டு நீலமலைபோன்று விளங்கும் உமாதேவியார் ஒரு பங்கில் கலந்து நின்று கடைக்கண்ணைச் செலுத்திக் காண, சந்தனமும், வெண்ணீறும் குளிர்ந்து விளங்க, தழைவிரவித் தொடுக்கப்பட்ட கொன்றைக் குறுமாலையைச் சூடி, எண்ணற்ற இறந்தோருடைய இடமாகிய முதுகாட்டில் நின்று எரிஏந்தி இரவில் ஆடும் இறைவர் விரும்பி உறையும் வெண்காடே வெண்காடே என்று பலகாலும் நினைந்து வாழ்த்துவீராயின் கெடாத வலிய வினைகளாகிய நோய்களைக் கெடுத்தல் கைகூடும்.
3004 | தந்தையார் தாயா ருடன்பி றந்தார் வந்தவா றெங்ஙனே போமா றேதோ சிந்தையீ ருமக்கொன்று சொல்லக் கேண்மின் எந்தையார் திருநாமம் நமச்சி வாய |
6.093.10 |
ஒருவருக்குத் தந்தை யார்? தாய் யார்? உடன் பிறந்தார் தாம் யார்? தாரம் யார்? புத்திரர் யார்? தாம் தாம் தமக்கு என்ன தொடர்புடையர்? நிலவுலகிற் பிறந்தது தந்தை முதலியவரோடு முன்னேயும் கூடிநின்றோ? இறப்பது அவர்களோடு பின்னும் பிரியாது கூடிநிற்கவோ? ஆகவே சிந்தையீர், பொய்யான இத்தொடர்பு கொண்டு ஏதும் மகிழ வேண்டா. உமக்கு ஓர் உறுதி சொல்லக் கேண்மின். ஒளிவீசித் திகழும் மதியும் கொடிய பாம்பும் நட்புக்கொண்டு விளையாடி மகிழும் முடியை உடைய எந்தையாரது திருநாமமாகிய நமச்சிவாய என்ற திருஐந்தெழுத்தை ஓதியவாறே துயிலெழுவார்க்குப் பெரிய வீட்டுலகில் நிலை பெற்றிருத்தல் கைகூடும். ஆகவே அதனைச் செய்ம்மின்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 91 | 92 | 93 | 94 | 95 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பலவகைத் - திருத்தாண்டகம் - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கைகூடும், பலகாலும், உறையும், சிவபெருமான், நினைத்து, யென்பீ, விரும்பி, வாழ்வீர்காள், வாழ்த்துவீராயின், திருத்தாண்டகம், கண்டியூர், வலஞ்சுழியே, குடமூக்கே, சோற்றுத்துறை, நீக்கல், பூந்துருத்தி, செய்து, வெண்காடே, இறைவர், வீழ்விக்கும், இறைவனை, கொண்டு, நெஞ்சே, நின்று, சொல்லக், திருமாலும், பிரமனும், புரங்கள், கலந்து, இறுமாந்து, அடங்கச், சடைமேல், வாழ்த்துவீராகில், துருத்தி, புலால், திருமுறை, திருச்சிற்றம்பலம், மகிழ்ந்து, பாம்பும், இறுமாந்த, தமக்கு, மனத்தராய்க், பலவகைத், நிலையற்ற, மனைவாழ்க்கையில், தலைவன்