முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.071.திருஅடைவு
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.071.திருஅடைவு
6.071.திருஅடைவு
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
2797 | பொருப்பள்ளி வரைவில்லாப் புரமூன் றெய்து கரப்பள்ளி திருக்காட்டுப் பள்ளி கள்ளார் சிரப்பள்ளி சிவப்பள்ளி செம்பொன் பள்ளி பரப்பள்ளி யென்றென்று பகர்வோ ரெல்லாம் |
6.071.1 |
மேருவை வில்லாகக்கொண்டு திரிபுரங்களை அம்பால் எய்தானது பொருப்பள்ளி, வருந்தி அழியுமாறு சலந்தரனைச் சக்கரத்தால் பிளந்தானது அழகிய சக்கரப்பள்ளி, திருக்காட்டுப்பள்ளி, மது நிறைந்து மலர்கள் மணம் கமழும் கொல்லியறைப்பள்ளி, மயில்கள் ஆடும் சாரலினை உடைய சிராப்பள்ளி, சிவப்பள்ளி, செம்பொன் பள்ளி, செழிப்புமிக்க நனிபள்ளி, தவப்பள்ளிபுகழ் பொருந்திய பரப்பள்ளி என்று இத்தலப்பெயர்களைப் பலகாலும் சொல்லுவார் எல்லாரும் மேலான தேவருலகை அடைந்து அதனை இனிமைமிகக் காப்பாராவார்.
2798 | காவிரியின் கரைக்கண்டி வீரட்டானங் மேவியவீ ரட்டானம் வழுவைவீ ரட்டம் கோவில்நகர் வீரட்டங் குறுக்கைவீ ரட்டங் நாவில்நவின் றுரைப்பார்க்கு நணுகச் சென்றால் |
6.071.2 |
காவிரியின் கரையிலுள்ள கண்டியூர் வீரட்டானம், கடவூர் வீரட்டானம், விரும்பத்தக்க புகழினை உடைய அதிகை வீரட்டானம், வழுவூர் வீரட்டானம், பரப்பு மிக்க பறியலூர் வீரட்டானம், இடபத்தை ஊர்தியாக உடைய சிவபெருமானுக்குரிய இடமாகிய கோவலூர் வீரட்டானம், குறுக்கை வீரட்டானம், தலைமையும் மேன்மையுமுடையவிற்குடி வீரட்டானம் என்னும் வீரட்டானங்கள் எட்டினையும் முறைப்பட முன்னர் ஒருமுறை மொழிந்து பின்னர் அம்முறையே நாவில் பழகிப்பலகாலும் போற்றுவார்க்கு அருகில் இயமதூதர்கள் ஒருகால் செல்ல நேரிடின் இவர் சிவபெருமானுக்கு அடியர் என்று உடனே உணர்ந்து அவரைவிட்டு வெகு தொலைவு அகல நீங்குவர்.
2799 | நற்கொடிமேல் விடையுயர்த்த நம்பன் செம்பங் கற்குடிதென் களக்குடிசெங் காட்டங் குடி விற்குடிவேள் விக்குடி நல்வேட்டக் குடி புற்குடிமா குடிதேவன் குடிநீலக்குடி |
6.071.3 |
நல்ல இடபக்கொடியை மேலே உயரத்தூக்கியவனும், நம்புதற்குரியவனுமாகிய சிவபெருமானுடைய செம்பங்குடி, நல்லக்குடி, பெருமைமிக்க நாட்டியத்தான்குடி, கற்குடி, இனிய களக்குடி, செங்காட்டங்குடி, கருந்திட்டைக்குடி, கடையக்குடி ஆகியவற்றோடு ஆராயுங்கால் குடியில் முடியும் ஊர்களாகிய விற்குடி, வேள்விக்குடி, நன்மமைமிகு வேட்டக்குடி, வேதிகுடி, மாணிகுடி, விடைவாய்க்குடி, புற்குடி, மாகுடி,, தேவன்குடி, நீலக்குடி, புதுக்குடி, என்பனவற்றையும் புகழ்ந்து கூறத் துன்பம் நீங்கும்.
2800 | பிறையூருஞ் சடைமுடியெம் பெருமா னாரூர் நறையூரும் நல்லூரும் நல்லாற் றூரும் உறையூரும் ஓத்தூரும் ஊற்றத் தூரும் துறையூருந் துவையூருந் தோழூர் தானுந் |
6.071.4 |
பிறை தவழும் சடைமுடிச் சிவபெருமானுடைய ஆரூர், பெரும் பற்றப்புலியூர், பேராவூர், நறையூர், நல்லூர், நல்லாற்றூர், நாலூர், சேற்றூர், நாரையூர், உறையூர், ஓத்தூர், ஊற்றத்தூர், அளப்பூர், ஓமாம்புலியூர், ஒற்றியூர், துறையூர், துவையூர், தோழூர், துடையூர், என்னுமிவற்றைத் தொழத் துன்பங்கள் தொடர மாட்டா.
2801 | பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும் கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில் இருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும் திருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்து |
6.071.5 |
நீர்ப்பெருக்கினை உடைய கங்கையாற்றைச் சடையிலணிந்த சிவபெருமான்திகழும் பெருங்கோயில்கள் எழுபத்தெட்டுடன், கடம்பூர்கரக் கோயில், மணங்கமழும் பொழில்கள் சூழ்ந்தஞாழற் கோயில், கருப்பறியலூரில் மலை போன்று விளங்கும் கொகுடிக்கோயில், அந்தணர்கள் வேதம் ஓதி வழிபாடு செய்து துதிக்கும் இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயிலாகிய திருக்கோயில், என்னும் சிவபெருமானுறையும் கோயில்களை வலம் வந்துபடி மீது வீழ்ந்து வணங்கத் தீவினைகள் யாவும்தீரும்.
2802 | மலையார்தம் மகளொடுமா தேவன் சேரும் தலையாலங் காடுதடங் கடல்சூ ழந்தண் பலர்பாடும் பழையனூ ராலங் காடு விலையாடும் வளைதிளைக்கக் குடையும் பொய்கை |
6.071.6 |
மலையரசன் மகளாகியபார் வதியொடு மகாதேவன் மகிழ்ந்துறையும் மறைக்காடு, வளப்பம் மிக்க சோலைகள் சூழ்ந்த தலைச்சங்காடு, தலையாலங்காடு, பரந்த கடலால் சூழப்பட்டதும், அழகியதும், குளிர்ந்ததுமாகிய சாய்க்காடு, மோதித்தள்ளும் நீரையுடைய கொள்ளிக்காடு, பலரும் புகழும் பழையனூர் ஆலங்காடு, பனங்காடு, பாவை போன்ற பெண்கள் தங்கள் பாவம் நீங்குதற்காக விலை ஏறப்பெற்ற தம் வளையல்கள் கலந்து ஒலிக்கும்படி ஆடும் பொய்கைகளை உடைய வெண்காடு ஆகியவற்றை அடைந்து வணங்க வினைகள் விட்டு நீங்கும்.
2803 | கடுவாயர் தமைநீக்கி யென்னை யாட்கொள் நெடுவாயில் நிறைவயல்சூழ் நெய்தல் வாயில் மடுவார்தென் மதுரைநக ரால வாயில் குடவாயில் குணவாயி லான வெல்லாம் |
6.071.7 |
கடுக்காயைத் தின்னும்வாயினராகிய சமணரை நீக்கி என்னை அடிமை கொள்ளும்கண்ணுதற் கடவுளாகிய சிவபெருமான் விரும்பித் தங்கும் இடங்களாகிய அண்ணல்வாயில், நெடுவாயில், பயிர் நிறைந்த வயல் சூழ்ந்த நெய்தல்வாயில், நிலவும் முல்லைவாயில், ஞாழல்வாயில், வையை நீர் பொருந்திய அழகிய மதுரை நகரத்து மன்னும் ஆலவாயில், அலை எழுந்து மடங்கும் கடல் சூழ்ந்த புனவாயில், மாடங்கள் உயர்ந்து தோன்றும் குடவாயில், குணவாயில், ஆகிய இவற்றுள் எல்லாம் புகுந்த வணங்குவாரைப் பாவச் செயல்கள் ஒரு நாளும் பற்றமாட்டா.
2804 | நாடகமா டிடநந்தி கேச்சுரமா காளேச் கோடீச்சுரங் கொண்டீச் சுரந்திண் டீச்சுரங் ஆடகேச் சுரமகத்தீச் சுரமய னீச்சுர ஈடுதிரை யிராமேச்சுர மென்றென் றேத்தி |
6.071.8 |
கூத்தப் பெருமானது இடமாகிய நந்திகேச்சுரம், மாகாளேச்சுரம், நாகேச்சுரம், நாகளேச்சுரம், நன்மை பொருந்திய கோடீச்சரம், கொண்டீச்சரம், திண்டீச்சரம், குக்குடேச்சுரம், அக்கீச்சரம் என்றுமிவற்றைக் கூறுமிடத்து உடன்வரும் ஆடகேச்சுரம், அகத்தீச்சுரம், அயனீச்சுரம், அத்தீச்சுரம், சித்தீச்சுரம், அழகிய குளிர்ந்த கடற்கரையில் முத்துபவளம் முதலியவற்றைக் கொணர்ந்து போகடும் திரைகள் சூழ்ந்த இராமேச்சுரம் என்றெல்லாம் இறைவன் தங்குகின்றஈச்சுரம் பலவற்றையும் கூறி அவனைப் புகழ்வோமாக.
2805 | கந்தமா தனங்கயிலை மலைகே தாரங் மந்தமாம் பொழிற்சாரல் வடபற்பதம் விந்தமா மலைவேதஞ் சையம் மிக்க இந்துசே கரனுறையும் மலைகள் மற்றும் |
6.071.9 |
கந்தமாதனம், கயிலைமலை, கேதாரம், காளத்தி, கழுக்குன்றம், இடமகன்ற அண்ணாமலை, தென்றல் தவழும் பொழில்களை உடைய சரிவுகளுடன் கூடிய வடபற்பதம், மகேந்திரமாமலை, நீலமலை, ஏமகூடமலை, விந்தமாமலை, வேதமலை, சையமலை, சோலைகள் மிக்க அகன்ற பொதியின் மலை. மேருமலை, உதயமலை, அத்தமலை ஆகிய இவையும் பிறவுமாகிய சந்திரனை முடியிலணிந்த சிவபெருமானுடைய மலைகளைப் புகழ்வோம். எம் இடர்கெடத் திசைநோக்கி நின்று அவற்றைப் புகழ்ந்து போற்றுவோம்.
2806 | நள்ளாறும் பழையாறுங் கோட்டாற் றோடு தௌளாறும் வளைகுளமுந் தளிக்குளமு நல் விள்ளாத நெடுங்களம்வேட் களம்நெல் லிக்கா கள்ளார்ந்த கொன்றையான் நின்ற ஆறுங் |
6.071.10 |
நள்ளாறு, பழையாறு, கோட்டாறு, நன்மை நிலவும், நாலாறு, திருஐயாறு, தௌளாறு, வளைகுளம், தளிக்குளம், நல்ல இடைக்குளம், திருக்குளம், அஞ்சைக்களம், குறையாத சிறப்புடைய நெடுங்களம், வேட்களம், நெல்லிக்கா, கோலக்கா, ஆனைக்கா, பரந்து திகழும்கோடிகா என்றெல்லாம் தேன் நிறைந்த கொன்றைப்பூ மாலை அணிந்த சிவபெருமான் விளங்கும் ஆறு, குளம், களம், கா ஆகிய எல்லாவற்றையும் கூறுவோம்.
2807 | கயிலாய மலையெடுத்தான் கரங்க ளோடு பயில்வாய பராய்த்துறைதென் பாலைத் துறை குயிலாலந் துறைசோற்றுத் துறைபூந் துறை மயிலாடு துறைகடம்பந் துறைஆவடு |
6.071.11 |
கயிலாய மலையை எடுத்த இராவணனுடைய கரங்களும் சிரங்களும் வலிமை சிதையும் வண்ணம் தன் கால் விரலால் அழிவுண்டாக்கிய சிவபெருமான் பயின்றுறையும் பராய்த்துறை, தென்பாலைத்துறை, எழுமுனிவர் பண்டுதவம் செய்த தவத்துறை, வெண்டுறை, பசிய சோலையிடத்துக் குயில்கள் வாழும் ஆலந்துறை, சோற்றுத்துறை, பூந்துறை, பெருந்துறை, குரங்காடுதுறை, மயிலாடுதுறை, கடம்பந்துறை, ஆவடுதுறை ஆகியவற்றையும் துறை என்னும் பெயர் தாங்கும் மற்றைத் திருத்தலங்களையும் வணங்குவோம்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 69 | 70 | 71 | 72 | 73 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருஅடைவு - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - வீரட்டானம், சூழ்ந்த, பொருந்திய, என்னும், சிவபெருமானுடைய, சிவபெருமான், கோயில், சோலைகள், தீவினைகள், விளங்கும், மணிக்கோயில், என்றெல்லாம், ஆனைக்கா, நிலவும், நிறைந்த, கயிலாய, புனவாயில், நீங்கும், சிவப்பள்ளி, செம்பொன், பொருப்பள்ளி, திருச்சிற்றம்பலம், திருமுறை, காவிரியின், இடமாகிய, தோழூர், திருஅடைவு, புகழ்ந்து, மாணிகுடி, தவழும்