முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.055.திருக்கயிலாயம்
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.055.திருக்கயிலாயம்

6.055.திருக்கயிலாயம்
போற்றித்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
போற்றித்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் இமயமலையிலுள்ளது.
சுவாமிபெயர் - கயிலாயநாதர்.
தேவியார் - பார்வதியம்மை.
2636 | வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி ஆற்றாகி யங்கே அமர்ந்தாய் போற்றி காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி |
6.055.1 |
விண்ணாகியும் வேறு பூதங்களாகியும் நிலைபெற்றிருப்பவனே! அடியேனை வேற்றிடத்துக்குத் திரும்பிச் செல்லாதபடி அடிமையாகக் கொண்டவனே! இன்ப ஊற்றாகி உயிர் அறிவினுள்ளே நிலைபெற்றிருப்பவனே! இடையறாத சொற்களின் ஒலியே! சக்தியாகி ஐம்பூதங்களிலும் நான்கு வேதங்களிலும் ஆறு அங்கங்களிலும் இருப்பவனே! காற்றாகி எங்கும் கலந்தவனே! கயிலை மலையில் உறைபவனே! உனக்கு வணக்கங்கள் பல.
2637 | பிச்சாடல் பேயோ டுகந்தாய் போற்றி வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி பொய்ச்சார் புரமூன்று மெய்தாய் போற்றி கச்சாக நாக மசைத்தாய் போற்றி |
6.055.2 |
பேய்களோடு கூத்தாடுதலை உகந்தவனே! பிறவியைப் போக்கும் தலைவனே! உயிர்களைப் பல வகையான பிறப்புக்களில் நிறுத்தி விளையாடுதலில் வல்லவனே! விரும்பி என் உள்ளத்துப் புகுந்தவனே! பொய்யைச் சார்பாகக் கொண்ட முப்புரங்களை அழித்தவனே! என் சிந்தையை விடுத்துப் போகாது இருப்பவனே! பாம்பைக் கச்சாக அணிந்தவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கங்கள் பல.
2638 | மருவார் புரமூன்று மெய்தாய் போற்றி உருவாகி யென்னைப் படைத்தாய் போற்றி திருவாகி நின்ற திறமே போற்றி கருவாகி யோடும் முகிலே போற்றி |
6.055.3 |
பகைவர் மும்மதில்களையும் அழித்து, விரும்பி என் உள்ளத்துப் புகுந்து, என்னை உருவமுடையவனாகப் படைத்து, என் உயிர் உடம்பின்வழிப் படாதபடி நீக்கி நின் வழிப்படுத்து எனக்கு இன்பமாகிநின்ற செயலுடையவனாய், உலகத்தாரால் முன்னின்று துதிக்கப்படுபவனாய், கருவாய்க்கப்பெற்றுச் சஞ்சரிக்கும் காளமேகம் போல் உலகுக்கு நலன் தருவானாய், உள்ள கயிலை மலையானே! உனக்கு வணக்கங்கள் பல.
2639 | வானத்தார் போற்றும் மருந்தே போற்றி ஊனத்தை நீக்கும் உடலே போற்றி தேனத்தை வார்த்த தௌவே போற்றி கானத்தீ யாட லுகந்தாய் போற்றி |
6.055.4 |
தேவா போற்றும் அமுதமாய், வந்து என் உள்ளம் புகுந்தவனாய், உயிர்களின் குறையைப் போக்கும் அருள் உருவம் உடையவனாய், ஓங்கித் தீப்பிழம்பாய் உயர்ந்தவனாய், தேனை வடித்த தௌவு போல்பவனாய், தேவர்களுக்கும் தேவனாய், சுடுகாட்டுத் தீயில் கூத்தாடுதலை விரும்பியவனாய் உள்ள கயிலை மலையானே! உனக்கு வணக்கங்கள் பல.
2640 | ஊராகி நின்ற உலகே போற்றி பேராகி யெங்கும் பரந்தாய் போற்றி நீராவி யான நிழலே போற்றி காராகி நின்ற முகிலே போற்றி |
6.055.5 |
ஊர்களாகவும் உலகமாவும் பரவியவனே! அனற் பிழம்பாய் ஓங்கி உயர்ந்தவனே! புகழ் வடிவினனாய் எங்கும் பரவியவனே! நீங்காது என் உள்ளத்தில் புகுந்தவனே! நீர் நிறைந்த ஓடைபோலக் குளிர்ச்சி தருபவனே! ஒப்பற்றவனே! கார்முகில் போல அருளவல்லவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கங்கள் பல.
2641 | சில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றி புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி கல்லுயிராய் நின்ற கனலே போற்றி |
6.055.6 |
முதற்கண் சில வேறு தேவர்களாய் நின்று அருள் வழங்கிப் பின் அத்தேவர்களும் நீ ஒருவனேயாகி ஒன்றி நின்றவனே! தேவர்களும் அறிய முடியாத பெரிய தேவனே! புல்லாகிய ஓரறிவு உயிருக்கும் வாழ்க்கை வழங்கியவனே! நீங்காது என் உள்ளத்துப் புகுந்தவனே! உலகுகள் தோறும் பல உயிர்களாக நின்றபவனே! உலகைப் பற்றி அதனைக் கைவிடாதவனே! கல்லின் கண்ணும் உள்ள உயிர்களாய் நிற்கும் ஒளிப்பொருளே! கயிலை மலையானே! உனக்கு வணக்கங்கள் பல.
2642 | பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி எண்ணும் எழுத்துஞ்சொல் லானாய் போற்றி விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி |
6.055.7 |
பண்ணின் இசையாகி இருப்பவனே! உன்னைத் தியானிப்பவரின் பாவத்தைப் போக்குபவனே! எண்ணும் எழுத்தும் சொல்லும் ஆனவனே! என் உள்ளத்தை நீங்காத தலைவனே! விண்ணும் தீயும் நிலனும் ஆகியவனே! மேலார்க்கும் மேலாயவனே! கண்ணின் மணி போன்ற அருமையானவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கங்கள் பல.
2643 | இமையா துயிரா திருந்தாய் போற்றி உமைபாக மாகத் தணைத்தாய் போற்றி அமையா வருநஞ்ச மார்ந்தாய் போற்றி கமையாகி நின்ற கனலே போற்றி |
6.055.8 |
ஏனைய உயிர்களைப் போல இமைக்காமல் மூச்சுவிடாமல் இருப்பவனே! என் உள்ளத்தை நீங்காத தலைவனே! பார்வதி பாகனே! பல ஊழிகளையும் கடந்தவனே! பொருந்தாத கொடிய விடத்தை உண்டவனே! முதற் பழையோனே! பொறுமையாகச் செயற்படும் ஞான ஒளி உடையவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கங்கள் பல.
2644 | மூவாய் பிறவாய் இறவாய் போற்றி தேவாதி தேவர்தொழுந் தேவே போற்றி ஆவா அடியேனுக் கெல்லாம் போற்றி காவாய் கனகத் திரளே போற்றி |
6.055.9 |
மூத்தலோ பிறத்தலோ இறத்தலோ இல்லாது எல்லாப் பொருள்களுக்கும் முற்பட்டு என்றும் இயற்கையாகவே விளங்கும் தேவர் தலைவரும் தொழும் தெய்வமே! எங்கும் பரவியிருப்பவனே! ஐயோ! என்று வருந்தும் அடியேனுக்கு எல்லாமாய் இருக்கும் பெருமானே! கனகத்திரள் போல்பவனே! கயிலை மலையானே! அடியேன் துயரங்கள் வருத்த வருந்துகின்றேன். என்னைக் காப்பாயாக. உனக்கு வணக்கங்கள் பல.
2645 | நெடிய விசும்பொடு கண்ணே போற்றி அடியும் முடியு மிகலிப் போற்றி கொடியவன் கூற்றம் உதைத்தாய் போற்றி கடிய உருமொடு மின்னே போற்றி |
6.055.10 |
பெரும்பரப்புடைய வானகத்திற்கு இருப்பிடமாய், எப்பொருளின் நீள அகலங்களையும் தன்னுள் அடக்கியவனாய், உன் அடியையும், முடியையும் காண அரியும், அயனும் தம்முள் மாறுபட்டு முயன்றும் அறிய முடியாமல் அனற்பிழம்பாய் நின்றவனாய்க் கொடிய வலிய கூற்றுவனை உதைத்தவனாய், அடியேனுடைய உள்ளத்தைக் கோயிலாகக் கொண்டவனாய், கொடிய இடியும் மின்னலும் ஆகியுள்ள கயிலை மலையானே! உனக்கு வணக்கங்கள் பல.
2646 | உண்ணா துறங்கா திருந்தாய் போற்றி எண்ணா இலங்கைக்கோன் தன்னைப் போற்றி பண்ணா ரிசையின்சொற் கேட்டாய் போற்றி கண்ணா யுலகுக்கு நின்றாய் போற்றி |
6.055.11 |
உண்ணாது உறங்காது இருப்பவனே! வேதங்களை ஓதாது உணர்ந்தவனே! உன்பெருமையை நினைத்துப் பார்க்காது செயற்பட்ட இராவணனைச் சிறிதளவு விரலை அழுத்தி நசுக்கி மகிழ்ந்து, அடக்கி ஆள்பவனே! பின் அவன்பால் பண்ணோடு கூடிய இசையின் இனிமையைச் செவிமடுத்தவனே! முன்னரேயே அடியேனுடைய உள்ளத்தில் புகுந்தவனே! உலகுக்குப் பற்றுக் கோடாய் இருப்பவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கங்கள் பல.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 53 | 54 | 55 | 56 | 57 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கயிலாயம் - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - போற்றி, மலையானே, உனக்கு, வணக்கங்கள், போற்றிகயிலை, நின்றாய், சிந்தை, போற்றி&, புகுந்தாய், இருப்பவனே, புகுந்தவனே, தலைவனே, எங்கும், உள்ளத்துப், பரந்தாய், பரவியவனே, யெங்கும், நிமிர்ந்தாய், தேவனாய், அழலாய், இசையாகி, உள்ளத்தை, நீங்காத, திருந்தாய், அடியேனுடைய, நீங்கா, போற்றிஎன்சிந்தை, உள்ளத்தில், பண்ணின், போற்றிஓங்கி, நீங்காது, போக்கும், காற்றாகி, நிலைபெற்றிருப்பவனே, போற்றிமருவியென், ஊற்றாகி, கொண்டாய், திருமுறை, திருச்சிற்றம்பலம், புரமூன்று, மெய்தாய், விரும்பி, முகிலே, உயிர்களைப், திருக்கயிலாயம், போற்றிபோகாதென், கூத்தாடுதலை, போற்றும்