முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.056.திருக்கயிலாயம்
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.056.திருக்கயிலாயம்

6.056.திருக்கயிலாயம்
போற்றித்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
போற்றித்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் இமயமலையிலுள்ளது.
சுவாமிபெயர் - கயிலாயநாதர்.
தேவியார் - பார்வதியம்மை.
2647 | பொறையுடைய பூமிநீ ரானாய் போற்றி நிறையுடைய நெஞ்சி னிடையாய் போற்றி மறையுடைய வேதம் விரித்தாய் போற்றி கறையுடைய கண்ட முடையாய் போற்றி |
6.056.1 |
எதனையும் தாங்குதலை உடைய நிலமாகவும் நீராகவும் இருப்பவனே! பூதப்படையை ஆளும் தூயவனே! நல்வழியில் நிறுத்தப்படும் நெஞ்சில் இருப்பவனே! என் உள்ளத்தில் நீங்காது இருப்பவனே! மறைத்துச் சொல்லப்படும் பொருள்களை உடைய வேதத்தை விரித்து உரைத்தவனே! தேவர்களால் வணங்கப்படுபவனே! நீலகண்டனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.
2648 | முன்பாகி நின்ற முதலே போற்றி அன்பாகி நின்றார்க் கணியாய் போற்றி என்பாக எங்கும் அணிந்தாய் போற்றி கண்பாவி நின்ற கனலே போற்றி |
6.056.2 |
எல்லாவற்றிற்கும் முன் உள்ள காரணப்பொருளே! மூப்படையாத உடலை உடைய முக்கண் பெருமானே! அன்பர்களுக்கு ஆபரணமே! கங்கைச் சடையனே! எலும்பாகிய அணிகலன்கள் உடையவனே! என் உள்ளத்தை நீங்காத தலைவனே! கண்ணில் பரவியுள்ள ஒளியே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.
2649 | மாலை யெழுந்த மதியே போற்றி மேலை வினைகள் அறுப்பாய் போற்றி ஆலைக் கரும்பின் தௌவே போற்றி காலை முளைத்த கதிரே போற்றி |
6.056.3 |
மாலை மதியமே! என் சிந்தையில் நிலைபெற்று இருப்பவனே! இனித்தோன்றும் என் வினைகளைப் போக்குபவனே! வானில் உலவும் பிறை முடியனே! ஆலையில் பிழியப்படும் கருப்பஞ்சாற்றின் தௌவே! அடியார் அமுதமே! காலையில் தோன்றும் இளஞாயிறே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.
2650 | உடலின் வினைக ளறுப்பாய் போற்றி படருஞ் சடைமேல் மதியாய் போற்றி சுடரின் திகழ்கின்ற சோதீ போற்றி கடலில் ஒளியாய முத்தே போற்றி |
6.056.4 |
உடலில் நுகரப்படும் வினைகளை அறுப்பவனே! எரியை ஏந்தி ஆடும் பிரானே! பிறையை அணிந்த சடையனே! பல பூதங்களோடு கூத்தாடும் பெருமானே! விளக்குப் போல ஒளிவிடுகின்ற சோதியே! என் உள்ளத்தில் தோன்றியிருப்பவனே! கடலில் ஆழ்ந்திருக்கும் முத்துப் போன்றவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.
2651 | மைசேர்ந்த கண்ட மிடற்றாய் போற்றி பொய்சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றி மெய்சேரப் பால்வெண்ணீ றாடீ போற்றி கைசே ரனலேந்தி யாடீ போற்றி |
6.056.5 |
நீலகண்டனே! திருமாலுக்குச் சக்கரம் ஈந்தவனே! ஐயம் திரிபுகள் உள்ள உள்ளங்களில் புகாதவனே! என் உள்ளத்தே நீங்காது இருப்பவனே! உடல் முழுதும் வெள்ளிய நீறு பூசியவனே! சான்றோர்கள் போற்றும் ஞானதீபமே! கையில் அனலை ஏந்திக் கூத்து நிகழ்த்துபவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.
2652 | ஆறேறு சென்னி முடியாய் போற்றி நீறேறு மேனி யுடையாய் போற்றி கூறேறு மங்கை மழுவா போற்றி காறேறு கண்ட மிடற்றாய் போற்றி |
6.056.6 |
கங்கைச் சடையனே! அடியார்களுக்கு ஆரமுதே! நீறு பூசிய மேனியனே! நீங்காது என் உள்ளத்து இருப்பவனே! கையில் கூரிய மழுப்படையை ஏந்தியவனே! ஏழு கிழமைகளாகவும் உள்ளவனே! நீலகண்டனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.
2653 | அண்டமே ழன்று கடந்தாய் போற்றி பண்டை வினைக ளறுப்பாய் போற்றி தொண்டர் பரவு மிடத்தாய் போற்றி கண்டங் கறுக்கவும் வல்லாய் போற்றி |
6.056.7 |
ஏழுலகம் கடந்தவனே! ஆதிப்பழம் பொருளே! பழையவினைகளை நீக்குபவனே! மன்னவரும் விண்ணவரும் போற்றும் மூர்த்தியே! அடியார்கள் போற்றும் திருத்தலங்களில் உறைபவனே! வழிபாட்டினை நோக்கி அடியவர்களை ஆளும் ஒளியே! நீலகண்டனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.
2654 | பெருகி யலைக்கின்ற ஆறே போற்றி உருகிநினை வார்தம் முள்ளாய் போற்றி அருகி மிளிர்கின்ற பொன்னே போற்றி கருகிப் பொழிந்தோடு நீரே போற்றி |
6.056.8 |
பெருகி அலைவீசும் ஆறுபோல்பவனே! நீங்காத நோய்களை நீக்குபவனே! உருகிநினைப்பவர்களின் உள்ளத்தில் உள்ளவனே! குறைபாடுகளை நீக்கும் பெருமானே! அரிதில் கிட்டப்பெற்று ஒளிவீசும் பொன் போன்றவனே! ஒருவராலும் குறை கூறப்படாதவனே! கார்மேகமாகிப் பொழியும் மழையானவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.
2655 | செய்யமலர் மேலான் கண்ணன் போற்றி பொய்யாநஞ் சுண்ட பொறையே போற்றி மெய்யாக ஆனஞ் சுகந்தாய் போற்றி கையானை மெய்த்தோ லுரித்தாய் போற்றி |
6.056.9 |
செந்தாமரை மலர்மேல் உள்ள பிரமனும் திருமாலும் தேடியும் காணமுடியாதவாறு நின்றவனே! விடத்தை உண்ட தவறாத அருள் வடிவே! என்னையும் ஒரு பொருளாக ஆண்டு கொண்டவனே! பஞ்சகவ்விய நீராட்டை விரும்புபவனே! சான்றோர்கள் புகழும் நற்குணனே! துதிக்கையை உடைய யானைத் தோலை உரித்தவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.
2656 | மேல்வைத்த வானோர் பெருமான் போற்றி சீலத்தான் தென்னிலங்கை மன்னன் போற்றி கோலத்தாற் குறைவில்லான் தன்னை யன்று காலத்தாற் காலனையுங் காய்ந்தாய் போற்றி |
6.056.10 |
மேல் உலகில் தங்கும் வாய்ப்பளிக்கப்பட்ட தேவர்கள் தலைவனே! வானில் உலவிய மூன்று மதில்களையும் அம்பு எய்து அழித்தவனே! இராவணன் கயிலையைப் பெயர்க்க அவனை வாயால் அலற வைத்துப் பின் அவனை, உன்னை வழிபடும் பண்பினன் ஆக்கியவனே! அழகில் குறைவில்லாத மன்மதனை ஒருகாலத்தில் சாம்பலாகும்படி கோபித்தவனே! ஒருகாலத்தில் கூற்றுவனையும் வெகுண்டவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 54 | 55 | 56 | 57 | 58 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கயிலாயம் - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - மலையானே, போற்றி, போற்றிகயிலை, வணக்கம், உனக்கு, இருப்பவனே, திருந்தாய், பிரானே, நீலகண்டனே, னுள்ளத், பெருமானே, நின்றாய், போற்றும், சடையனே, நீங்காது, உள்ளத்தில், போற்றிமிக்கார்க, மிடற்றாய், ஒருகாலத்தில், சான்றோர்கள், போன்றவனே, பெருகி, உள்ளவனே, நீக்குபவனே, கையில், ளறுப்பாய், நீங்காத, படுவாய், கங்கைச், போற்றிநீங்காதென், திருச்சிற்றம்பலம், திருமுறை, திருக்கயிலாயம், தலைவனே, போற்றிஅடியார்கட், முடியாய், போற்றிமேலாடு, சிந்தை, வானில்