முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.057.திருக்கயிலாயத்திருமலை
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.057.திருக்கயிலாயத்திருமலை
6.057.திருக்கயிலாயத்திருமலை
போற்றித்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
போற்றித்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் இமயமலையிலுள்ளது.
சுவாமிபெயர் - கயிலாயநாதர்.
தேவியார் - பார்வதியம்மை.
2657 | பாட்டான நல்ல தொடையாய் போற்றி சூட்டான திங்கள் முடியாய் போற்றி ஆட்டான தஞ்சும் அமர்ந்தாய் போற்றி காட்டானை மெய்த்தோ லுரித்தாய் போற்றி |
6.057.1 |
மேம்பட்ட பாமாலை சூடியவனே! உன்தன்மை இன்னது என்று பிறரால் அறியப்படாதவனே! பிறையை முடியில் சூடியவனே! ஊமத்த மாலையை அணிந்தவனே! பஞ்ச கவ்விய அபிடேகத்தை விரும்புபவனே! பகைவருடைய முப்புரமும் எரியுமாறு நகைத்தவனே! யானையின் தோலை உரித்தவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.
2658 | அதிரா வினைகள் அறுப்பாய் போற்றி சதுரா சதுரக் குழையாய் போற்றி எதிரா வுலகம் அமைப்பாய் போற்றி கதிரார் கதிருக்கோர் கண்ணே போற்றி |
6.057.2 |
வினைகள் நடுங்கச் செய்யாதபடி அவற்றை நீக்குபவனே! கல்லால மர நிழற்கீழ் அமர்ந்தவனே! திறமை உடையவனே! சிறந்த குழை என்னும் காதணியை அணிந்தவனே! சாம்பலை உடலில் பூசும் தலைவனே! தனக்கு ஒப்பில்லாத முத்தி உலகை அமைத்து அதனை அடையும் அடியவருக்கு என்றும் பிறப்பிற்குத் திரும்பி வாராத அருளைச் செய்பவனே! ஒளி வீசும் சூரியன் முதலிய ஒளிகளுக்குப் பற்றுக் கோடாக இருப்பவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.
2659 | செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி ஐயாய் பெரியாய் சிறியாய் போற்றி வெய்யாய் தணியாய் அணியாய் போற்றி கையார் தழலார் விடங்கா போற்றி |
6.057.3 |
செம்மை கருமை வெண்ணிறம் இவற்றை உடையவனே! நீங்காத செல்வம் உடையவனே! வியக்கத்தக்கவனே! பெரிய பொருள்களும் சிறிய பொருள்களும் ஆகியவனே! ஆகாயத்தின் தன்மை உடையவனே! தீயோருக்கு வெப்பமும் அடியார்க்குக் குளிர்ச்சியும் அண்மையுமாய் உள்ளவனே! ஓம்பாதே நிலைபெற்றிருக்கும் அருட் சக்தியை உடையவனே! அனல் ஏந்திய அழகனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.
2660 | ஆட்சி யுலகை யுடையாய் போற்றி சூட்சி சிறிது மிலாதாய் போற்றி மாட்சி பெரிது முடையாய் போற்றி காட்சி பெரிது மரியாய் போற்றி |
6.057.4 |
உலகை ஆள்பவனே! அடியார்களுக்கு இன்பம் அளிப்பவனே! சிறிதும் வஞ்சனை இல்லாதவனே! கடல் விடம் உண்டவனே! மேம்பட்ட மாண்புகளை உடையவனே! என் உள்ளத்துள் நிலைபெற்றிருப்பவனே! தம்முயற்சியால் யாரும் காண்டற்கு அரியவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.
2661 | முன்னியாய் நின்ற முதல்வா போற்றி என்னியா யெந்தை பிரானே போற்றி மன்னிய மங்கை மணாளா போற்றி கன்னியார் கங்கைத் தலைவா போற்றி |
6.057.5 |
தவக்கோலம் பூண்ட முதல்வனே! மூப்படையாத திருமேனியனே! எனக்குத் தாயும் தந்தையும் ஆயவனே! ஏழிசையை விரும்புபவனே! உன்னோடு கூடிய பார்வதியின் துணைவனே! மந்திரமும் அவற்றைச் செயற்படுத்தும் செயல்களும் ஆனவனே! என்றும் அழிவில்லாத கங்கைக்குத் தலைவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.
2662 | உரியா யுலகினுக் கெல்லாம் போற்றி எரியாய தெய்வச் சுடரே போற்றி அரியா யமரர்கட் கெல்லாம் போற்றி கரியானுக் காழியன் றீந்தாய் போற்றி |
6.057.6 |
எல்லா உலகிற்கும் உரிமை உடையவனே! உன் கருத்தறிந்து செயற்படும் காளையை வாகனமாக உடையவனே! எரி போன்ற அருள் விளக்கே! பிறர் இகழுமாறு மண்டை யோட்டினை ஏந்தினவனே! தேவர்கள் அணுகுவதற்கு அரியவனே! அறிவு வடிவானவனே! நுண்ணியனே! ஒரு காலத்தில் திருமாலுக்குச் சக்கரம் ஈந்தவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கங்கள் பல.
2663 | எண்மேலும் எண்ண முடையார் போற்றி பண்மேலே பாவித் திருந்தாய் போற்றி விண்மேலும் மேலும் நிமிர்ந்தாய் போற்றி கண்மேலுங் கண்ணொன் றுடையாய் போற்றி |
6.057.7 |
உயிர்களுடைய எண்ணங்களுக்கு மேற்பட்ட எண்ணங்களை உடையவனே! உயிர்களைக் கரையேற்றும் பொருட்டு மேம்பட்ட குணங்களை உடையவனே! பண்ணிடத்திலே விருப்பம் கொண்டு பண்ணோடு யாழினையும் வீணையையும் இசைக்கின்றவனே! வானத்தையும் கடந்து ஓங்கியிருப்பவனே! மேலோருக்கெல்லாம் மேலோனே! இரு கண்களுக்கு மேலே மூன்றாவதான நெற்றிக் கண்ணை உடையவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.
2664 | முடியார் சடையின் மதியாய் போற்றி துடியா ரிடையுமையாள் பங்கா போற்றி அடியார் அடிமை அறிவாய் போற்றி கடியார் புரமூன்று மெய்தாய் போற்றி |
6.057.8 |
சடையில் பிறை சூடி, திருநீறு பூசிய மூர்த்தியே! உடுக்கை போன்ற இடையை உடைய பார்வதி பாகனே! தம் முயற்சியால் அறிய முற்படுபவர் காணமுடியாதபடி இருப்பவனே! அடியவர்களின் அடிமைத் தன்மையின் உண்மையை அறிபவனே! அவர்களைத் தேவருலகை ஆளவைப்பவனே! காவல் பொருந்திய மும்மதில்களையும் அழித்தவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.
2665 | போற்றிசைத்துன் னடிபரவ நின்றாய் போற்றி ஏற்றிசைக்கும் வான்மே லிருந்தாய் போற்றி நாற்றிசைக்கும் விளக்காய நாதா போற்றி காற்றிசைக்குந் திசைக்கெல்லாம் வித்தே போற்றி |
6.057.9 |
அடியார்கள் வணக்கம் சொல்லித் திருவடிகளை வழிபடுமாறு இருப்பவனே! புண்ணியனே! முயற்சியால் அணுக அரியவனே! இடி ஒலிக்கும் வான்மேல் இருப்பவனே! எண்ணிறந்த பெயர்களை உடையவனே! நான்கு திசைகளுக்கும் ஒலி வழங்கும் தலைவனே! பிரமனுக்கும் திருமாலுக்கும் உள்ளவாறு உணர்தற்கு அரியவனே! காற்று இயங்கும் திசைகளுக்கெல்லாம் காரணனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 55 | 56 | 57 | 58 | 59 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கயிலாயத்திருமலை - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - போற்றி, மலையானே, உடையவனே, உனக்கு, போற்றிகயிலை, வணக்கம், இருப்பவனே, யுடையாய், அரியவனே, முடையாய், நின்றாய், தலைவனே, மேம்பட்ட, பொருள்களும், கெல்லாம், என்றும், பெரிது, முயற்சியால், திருமுறை, விரும்புபவனே, அணிந்தவனே, சூடியவனே, திருச்சிற்றம்பலம், திருக்கயிலாயத்திருமலை, நிழற்கீழ், வினைகள், அமர்ந்தாய்