முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.053.திருவீழிமிழலை
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.053.திருவீழிமிழலை
6.053.திருவீழிமிழலை
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீழியழகர்.
தேவியார் - சுந்தரகுசாம்பிகை.
2615 | மானேறு கரமுடைய வரதர் போலும் கானேறு கரிகதற வுரித்தார் போலுங் தேனேறு திருவிதழித் தாரார் போலுந் ஆனேற தேறும் அழகர் போலும் |
6.053.1 |
திருவீழிமிழலையில்அமர்ந்த செல்வராய், அடியேனை ஆட்கொண்ட அடிகள் கையில் மானை ஏந்தி வரம் கொடுப்பவராய், பெரிய மலையின் இரு பகுதிகளையும் வில்லாகுமாறு வளைத்தவராய், காட்டில் உலவும் யானை கதறுமாறு அதன் தோலை உரித்தவராய்க் கட்டங்கப்படை உடுக்கை இவற்றைக் கைகளில் கொண்டவராய், தேன் பொருந்திய கொன்றைப் பூ மாலையை அணிந்தவராய், காளையை இவரும் அழகராய்க் காட்சி வழங்குகிறார்.
2616 | சமரம்மிகு சலந்தரன்போர் வேண்டி னானைச் நமனையொரு கால்குறைத்த நாதர் போலும் குமரனையும் மகனாக வுடையார் போலுங் அமரர்கள்பின் அமுதுணநஞ் சுண்டார் போலும் |
6.053.2 |
குளிர்ந்த வீழிமிழலையில் விரும்பித்தங்கும் இளையவராய், அடியேனை ஆட்கொண்ட அடிகள் தம்மோடு போரிடவந்த சலந்தரன் என்ற அசுரனைச் சக்கரத்தால் பிளந்த திறமை உடையவராய், நமனை ஒரு காலால் உதைத்து அழித்தவராய், திருமாலை இடப்பாகத்துக் கொண்டவராய், முருகனையும் மகனாக உடையவராய்த் தேவர்கள் பிறகு அமுதம் உண்ணுமாறு முன்னர் அவர்களை அழிக்க வந்த நஞ்சினை உண்டவராவார்.
2617 | நீறணிந்த திருமேனி நிமலர் போலும் ஏறணிந்த கொடியுடையெம் மிறைவர் போலும் வேறணிந்த கோலமுடை வேடர் போலும் ஆறணிந்த சடாமகுடத் தழகர் போலும் |
6.053.3 |
வியன்வீழிமிழலைஉறை விகிர்தராய் அடியேனை அடிமையாகக் கொண்ட அடிகள் திருமேனியில் நீறு அணிந்த தூயோராய்த் திருமாலுக்குச் சக்கரத்தை வழங்கியவராய், காளை எழுதிய கொடியை உடைய என் தலைவராய், நெருப்பாகிய அம்பினால் மூன்று மதில்களையும் எய்தவராய், உலகியலுக்கு வேறாகக் கொண்ட வடிவுடைய வேடராய்ச் சடைமுடியில் கங்கையை அணிந்த அழகராய்க் காட்சி வழங்குகிறார்.
2618 | கைவேழ முகத்தவனைப் படைத்தார் போலுங் செய்வேள்வித் தக்கனைமுன் சிதைத்தார் போலும் மெய்வேள்வி மூர்த்திதலை யறுத்தார் போலும் ஐவேள்வி ஆறங்க மானார் போலும் |
6.053.4 |
பெரிய வீழிமிழலையில்உறையும் வேறுபட்ட இயல்பினை உடையவராய் அடியேனை ஆட்கொண்ட அடிகள் விநாயகனைப் படைத்து அவனால் கயாசுரனைக் கொல்வித்துத் தக்கனுடைய வேள்வியையும் பிரமன் தலை ஒன்றனையும் அழித்து, யாகதேவன் தலையை அறுத்து, ஐவகை வேள்விகளும் வேதங்களின் ஆறு அங்கங்களுமாக உள்ளார்.
2619 | துன்னத்தின் கோவணமொன் றுடையார் போலுந் பொன்னொத்த திருமேனிப் புனிதர் போலும் மின்னொத்த செஞ்சடைவெண் பிறையார் போலும் அன்னத்தேர் அயன்முடிசேர் அடிகள் போலும் |
6.053.5 |
பரந்த வீழிமிழலையைச் சேர்ந்த தூயோராய் அடியேனை ஆட்கொண்ட அடிகள் கீளோடு இணைக்கப்பட்ட கோவணம் ஒன்று உடையாராய், மூன்று சுடர்களும் அவற்றின் ஒளியுமாகிய தூயவராய், பொன்னார் மேனிப் புனிதராய், பூதகணம் தம்மைச் சுற்றி வரத் தாம் வருபவராய், மின்னலை ஒத்து ஒளிவீசும் சிவந்த சடையில் பிறை சூடியவராய், அன்னத்தை வாகனமாக உடைய பிரமனுடைய மண்டையோட்டினை ஏந்திய தலைவராய் உள்ளார்.
2620 | மாலாலும் அறிவரிய வரதர் போலும் நாலாய மறைக்கிறைவ ரானார் போலும் வேலார்கை வீரியைமுன் படைத்தார் போலும் ஆலாலம் மிடற்றடக்கி அளித்தார் போலும் |
6.053.6 |
வியன் வீழிமிழலை அமர்ந்த விகிர்தராய் அடியேனை ஆட்கொண்ட அடிகள் திருமாலாலும் அறிய முடியாதவராய், வரம் அருளுபவராய், தம்மை மறவாதவர் பிறவிப்பிணியைப் போக்க வல்லவராய், நான்கு வேதங்களுக்கும் தலைவராய், அஞ்செழுத்தாகிய பெயரை உடையவராய், நம்மால் விரும்பப்படுபவராய், கையில் வேலை ஏந்திய காளியைத் தாருகன் என்ற அசுரனை அழிப்பதற்காகப் படைத்தவராய், விடத்தைத்தம் கழுத்தில் அடக்கித் தேவர்களைப் பாதுகாத்தவராவர்.
2621 | பஞ்சடுத்த மெல்விரலாள் பங்கர் போலும் மஞ்சடுத்த மணிநீல கண்டர் போலும் செஞ்சடைக்கண்வெண்பிறை கொண்டணிந்தார் போலுந் அஞ்சடக்கும் அடியவர்கட் கணியார் போலும் |
6.053.7 |
திருவீழிமிழலை அமர்ந்த சிவனாராகி அடியேனை ஆட்கொண்ட அடிகள் செம்பஞ்சு போன்ற மெல்லிய விரல்களை உடைய பார்வதி பாகராய், படம் எடுக்கும் பாம்பினை இடையில் இறுகக் கட்டிய மேம்பட்டவராய், காளமேகம் போன்ற அழகிய நீலகண்டராய், வடகயிலைத்தலைவராய், செஞ்சடையில் வெண்பிறை சூடியவராய், ஐம்பொறிகளையும் அடக்கி ஆளும் அடியவர்களுக்கு நெருக்கத்தில் இருப்பவராய் உள்ளார்.
2622 | குண்டரொடு பிரித்தெனையாட் கொண்டார் போலும் புண்டரிகப் புதுமலரா தனத்தார் போலும் வெண்டலையிற் பலிகொண்ட விகிர்தர் போலும் அண்டத்துப் புறத்தப்பா லானார் போலும் |
6.053.8 |
வியன் வீழிமிழலைநகருடையவராய் அடியேனை ஆட்கொண்ட அடிகள் சமணரிடமிருந்து அடியேனை ஆட்கொண்டவராய், குடந்தையில் உறைபவராய், அடியவர்கள் உள்ளத் தாமரையை ஆசனமாகக் கொண்டவராய், கருடனைக் கொன்று பின் அவனை உயிர்ப்பித்தவராய், வெள்ளிய மண்டையோட்டில் பிச்சை ஏற்கும் விகிர்தராய், அண்டங்களுக்கும் அப்பாற்பட்டவராய் உள்ளார்.
2623 | முத்தனைய முகிழ்முறுவ லுடையார் போலும் எத்தனையும் பத்திசெய்வார்க் கினியார் போலும் மித்திரவச் சிரவணற்கு விருப்பர் போலும் அத்தனொடும் அம்மையெனக் கானார் போலும் |
6.053.9 |
வியன்வீழிமிழலை அமர் விகிர்தராய் அடியேனை அடிமைகொண்ட அடிகள் முத்துப்போன்ற சிறிதே அரும்புகின்ற நகைப்பினையும், செறிந்த பவளக்கொடிபோன்ற சடையினையும் உடையவராய், சிறிதளவு, தம்பால் பக்தி உடையவருக்கும் இனியராய், அட்டமூர்த்த உருவினராய், நண்பனாகிய குபேரனிடம் விருப்பு உடையவராய், அடியேனுக்குத் தந்தையும் தாயும் ஆவார்.
2624 | கரியுரிசெய் துமைவெருவக் கண்டார் போலுங் எரியதொரு கைத்தரித்த இறைவர் போலும் விரிகதிரோ ரிருவரைமுன் வெகுண்டார் போலும் அரிபிரமர் துதிசெயநின் றளித்தார் போலும் |
6.053.10 |
பரந்த வீழிமிழலையில் விரும்பித்தங்கிய தூயராய், அடியேனை ஆளுடைய அடிகள், பார்வதி அஞ்சுமாறு யானைத் தோலை உரித்துப் போர்த்துக் கங்கையையும் சிவந்த சடையில் மறைத்து, அக்கினி தேவனுடைய ஒரு கையை நீக்கிய தலைவராய்ப் பன்றியின் கூரிய பல்லை அணிகலனாகப் பூண்டு, சந்திரன் சூரியன் என்ற இருவரையும் தக்கன் வேள்விக்களத்தில் வெகுண்டு ஒறுத்துத் திருமாலும் பிரமனும் தம்மைத் தோத்திரிக்க அவர்களுக்கு அருள் செய்தவர்.
2625 | கயிலாய மலையெடுத்தான் கதறி வீழக் குயிலாரும் மென்மொழியாள் குளிர்ந்து நோக்கக் வெயிலாய சோதிவிளக் கானார் போலும் அயிலாரும் மூவிலைவேற் படையார் போலும் |
6.053.11 |
வீழிமிழலை அமர் விகிர்தராய் அடியேனை ஆட்கொண்ட அடிகள் கயிலாய மலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணன் கதறிக்கொண்டு விழுமாறு அவனைக் கால் விரலால் நசுக்கிப்பின் அவனுக்கு அருள் செய்தவராய், குயில்போன்ற இனிய சொற்களை உடைய உமையம்மை மனம் குளிர்ந்து காணுமாறு கூத்தாடுதலில் வல்ல இளையராய்ப் பகலவன்போல ஏனைய ஒளிகளைத் தாழ்த்தித் தாம் ஒளி வீசுபவராய்க் கூர்மையான முத்தலைச் சூலப்படையுடையவராய் இருக்கின்றார்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 51 | 52 | 53 | 54 | 55 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவீழிமிழலை - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - அடிகள், ஆளுடைய, அடியேனை, போலும்அடியேனை, ஆட்கொண்ட, போலும்வியன்வீழி, மிழலையமர், விகிர்தர், விகிர்தராய், உடையவராய், கொண்டார், உள்ளார், திருவீழிமிழலை, கொண்டவராய், தலைவராய், சிவந்த, விமலர், சூடியவராய், கானார், கயிலாய, குளிர்ந்து, பார்வதி, அமர்ந்த, மானார், ஏந்திய, வீழிமிழலை, சடையில், அணிந்த, கையில், அழகராய்க், திருமுறை, திருச்சிற்றம்பலம், போலுந்திருவீழி, காட்சி, வழங்குகிறார், மூன்று, படைத்தார், செய்தார், வீழிமிழலையில், குழகர், சிதைத்தார்