முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.036.திருப்பழனம்
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.036.திருப்பழனம்

6.036.திருப்பழனம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆபத்சகாயர்.
தேவியார் - பெரியநாயகியம்மை.
2445 | அலையார் கடல்நஞ்ச முண்டார் தாமே கொலையாய கூற்ற முதைத்தார் தாமே சிலையால் புரமூன் றெரித்தார் தாமே பலிதேர்ந் தழகாய பண்பர் தாமே |
6.036.1 |
திருப்பழனத்திலே உகந்தருளி உறையும் எம்பெருமான் அலைகள் பொருந்திய கடலின் நஞ்சினை உண்டவர். தேவர்களுக்கு அருள் செய்யும் முதற்பொருள். உயிர்களைக் கவரும் கூற்றினை உதைத்தவர். தம்மால் கொல்லப்பட்ட வேங்கைப் புலியின் தோலை உடுத்தவர். வில்லால் திரிபுரத்தை எரித்தவர். கொடிய சூலை நோயைப் போக்கி என்னை ஆட் கொண்டவர். பிச்சை எடுக்கும் நிலையிலும் அழகான பண்புடையவர்.
2446 | வெள்ள மொருசடைமே லேற்றார் தாமே கள்ளங் கடிந்தென்னை யாண்டார் தாமே உள்ளத் துவகை தருவார் தாமே பள்ளப் பரவைநஞ் சுண்டார் தாமே |
6.036.2 |
பழன நகர் எம்பிரானார் ஒற்றைச் சடையிலே கங்கை வெள்ளத்தை ஏற்றவர். மேம்பட்டவர் எல்லோருக்கும் மேம்பட்டவர். வஞ்சத்தைப் போக்கி என்னை ஆட்கொண்டவர். ஞானம் பெற்ற பூதங்களைப் படையாக உடையவர். தம்மை நினைக்கும் மனத்திற்கு மகிழ்ச்சி தருபவர். தீராத பெரிய நோய்க ளையும், சிறிய நோய்களையும் தீர்ப்பவர். ஆழமான கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவர்.
2447 | இரவும் பகலுமாய் நின்றார் தாமே அரவ மரையில் அசைத்தார் தாமே குரவங் கமழுங்குற் றாலர் தாமே பரவும் அடியார்க்குப் பாங்கர் தாமே |
6.036.3 |
பழன நகர் எம்பிரானார் இரவும் பகலும் எப்போதும் என் நெஞ்சத்து உள்ளவராய்ப் பாம்பினை இடையில் இறுக்கிக் கட்டியவராய்த் தீயில் கூத்தாடித் தம் கையால் எல்லோருக்கும் 'அஞ்சன்மின்' என்று அபயம் அளிப்பவராய்க் குரா மலர் மணம் கமழும் குற்றாலத்தில் உறைபவராய்ப் பலபல வேடங்களை விரும்பு பவராய்த் தம்மை வழிபடும் அடியவர்களுக்கு என்றும் பக்கலில் இருந்து உதவுபவர்.
2448 | மாறில் மதில்மூன்று மெய்தார் தாமே நீறுசேர் திருமேனி நிமலர் தாமே ஏறுகொடுஞ் சூலக் கையர் தாமே பாறுண் தலையிற் பலியார் தாமே |
6.036.4 |
பழன நகர் எம்பிரானார் தமக்கு நிகரில்லாத மதில்கள் மூன்றனையும் அழித்தவராய்க் கோடுகளை உடைய பாம்பினைக் கச்சாக அணிந்தவராய், திருநீறணிந்த தூயவராய், நெற்றியில் அக்கினியாகிய கண்ணை உடையவராய்க் கொடிய சூலத்தை ஏந்தியவராய், எலும்புகளை அணிகளாக அணிந்தவராய்ப் பருந்துகள் புலால் நாற்றமறிந்து வட்டமிடும் மண்டையோட்டில் பிச்சை ஏற்பவராய் உள்ளார்.
2449 | சீரால் வணங்கப் படுவார் தாமே ஆரா அமுதமு மானார் தாமே நீறார் நியமம் உடையார் தாமே பாரார் பரவப் படுவார் தாமே |
6.036.5 |
பழன நகர் எம்பிரானார் எல்லோராலும் புகழ்ந்து வணங்கப் படுபவராய், எண் திசைகளுக்கும் உரிய தேவராய், தெவிட்டாத அமுதம் ஆவாராய், எல்லையற்ற பெருமை உடையவராய், நீர்வளம் பொருந்திய நியமம் என்ற திருத்தலத்தை உடையவராய், மேருமலையை வில்லாக வளைத்தவராய், எல்லா உலகத்தாராலும் முன் நின்று துதிக்கப்படுபவர் ஆவர்.
2450 | காலனுயிர் வெளவ வல்லார் தாமே கோலம் பலவு முகப்பார் தாமே நீலம் பொலிந்த மிடற்றார் தாமே பால விருத்தரு மானார் தாமே |
6.036.6 |
பழன நகர் எம்பிரானார் காலன் உயிரைப் போக்க வல்லவராய், விரைந்து ஓடும் வெள்ளை நிறக் காளையை உடைய வராய்ப் பல வேடங்களையும் விரும்புபவராய்க் கொடிய பாம்பினைத் தம் வில்லின் நாணாக இணைத்தவராய், நீல கண்டராய்க் கயிலாயத் தின் உச்சியில் உள்ளாராய், பாலன் மூத்தோன் முதலிய எல்லாப் பருவங்களையும் உடையவராய் உள்ளார்.
2451 | ஏய்ந்த வுமைநங்கை பங்கர் தாமே ஆய்ந்து மலர்தூவ நின்றார் தாமே தேய்ந்த பிறைசடைமேல் வைத்தார் தாமே பாய்ந்த படர்கங்கை யேற்றார் தாமே |
6.036.7 |
பழன நகர் எம்பிரானார் தமக்குப் பொருந்திய பார்வதி பாகராய், ஏழு ஊழிக்காலங்களுக்கும் அப்பாற்பட்டவராய், அடியார்கள் மலர்களைத் தூய்மை செய்து அணிவிக்க அவற்றை ஏற்று நிற்பவராய், எல்லை கடந்த பெருமை உடையவராய், உருவில் சிறிய பிறையைச் சடையில் அணிந்தவராய், விடம் கக்கும் வாயினை உடைய பாம்பினை இடையில் இறுக்கிக் கட்டியவராய்த் தேவருலகிலிருந்து கீழ்நோக்கிப் பாய்ந்த கங்கையைச் சடையில் ஏற்றவராய் உள்ளார்.
2452 | ஓராதா ருள்ளத்தில் நில்லார் தாமே பேராதென் சிந்தை யிருந்தார் தாமே ஊராரு மூவுலகத் துள்ளார் தாமே பாரார் முழவத் திடையார் தாமே |
6.036.8 |
பழன நகர் எம்பிரானார் தம்மை நினையாதவர் உள்ளத்தில் நிலையாக இல்லாதவராய், உள்ளத்தில் அன்பு சுரந்து பெருகுகின்ற அன்பர்கள் உள்ளத்தில் நிலையாக இருப்பவராய், என் உள்ளத்தை விட்டு அகலாது இருப்பவராய், தம் அடியவர் அல்லாத பிறருக்குக் காண்பதற்கு அரியவராய், ஊர்கள் நிறைந்த மூவுலகத்தும் பரவியிருப்பவராய், உலகம் துயரால் நடுங்காதபடி காப்பவராய், இவ்வுலகைச் சூழ்ந்த கடல்களிலும் பரவியிருப்பவராய் உள்ளார்.
2453 | நீண்டவர்க்கோர் நெருப்புருவ மானார் தாமே பூண்டரவைப் புலித்தோல்மே லார்த்தார் தாமே ஆண்டுலகே ழனைத்தினையும் வைத்தார் தாமே பாண்டவரிற் பார்த்தனுக்குப் பரிந்தார் தாமே |
6.036.9 |
பழனநகர் எம்பிரானார் திருமாலுக்கு அடியினைக் காணமுடியாத தீப் பிழம்பின் வடிவில் காட்சி வழங்கியவராய், பார்வதி பாகராய், புலித்தோல் மீது பாம்பினை இறுகக் கட்டி இடையில் அணிபவராய், செஞ்சடையில் கங்கை வெள்ளத்தைத் தேக்கியவராய், ஏழு உலகங்களையும் படைத்து ஆள்பவராய், பல இடங்களிலும் சிவமாகிக் காட்சி வழங்குபவராய், பாண்டவரில் அருச்சுனனுக்கு இரங்கிப் படைகள் வழங்கி அருள்புரிந்தவராய் உள்ளார்.
2454 | விடையேறி வேண்டுலகத் திருப்பார் தாமே புடைசூழத் தேவர் குழாத்தார் தாமே அடைவே புனல்சூழ்ஐ யாற்றார் தாமே படையாப் பல்பூத முடையார் தாமே |
6.036.10 |
பழன நகர் எம்பிரானார் காளையை இவர்ந்து தாம் விரும்பிய உலகத்து இருப்பவராய்ச் சூரியன் வழிபடும் சோற்றுத் துறையில் உறைபவராய்த் தேவர் கூட்டத்தால் நாற்பக்கமும் சூழப் பெற்றவராய்ப் பூந்துருத்தியையும் நெய்த்தானத்தையும் விரும்பியவராய், அடுத்துப் புனல்சூழும் திருவையாற்றை உகந்தருளி உறைபவராய், இராவணனுடைய ஆற்றலை அழித்தவராய்ப் பூதங்களைப் படையாக உடையவராய் உள்ளார்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 34 | 35 | 36 | 37 | 38 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்பழனம் - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - பிரானார், தாமேபழன, நகரெம், எம்பிரானார், உள்ளார், நின்றார், உடையவராய், வைத்தார், பெருமை, இடையில், பாம்பினை, பொருந்திய, உள்ளத்தில், மானார், வணங்கப், நியமம், படுவார், யுடையார், பார்வதி, இருப்பவராய், பரவியிருப்பவராய், காட்சி, சோற்றுத், நிலையாக, சடையில், வெள்ளை, காளையை, பாகராய், தாமேபாரார், கட்டியவராய்த், உண்டவர், போக்கி, பிச்சை, நஞ்சினை, உகந்தருளி, திருமுறை, திருச்சிற்றம்பலம், யாண்டார், மேம்பட்டவர், எல்லோருக்கும், திருப்பழனம், வழிபடும், கச்சாக, இறுக்கிக், துள்ளார், பூதங்களைப், படையாக, இரவும், அணிந்தவராய்