முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.034.திருவாரூர்
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.034.திருவாரூர்

6.034.திருவாரூர்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர்.
தேவியார் - கரும்பனையாளம்மை.
2425 | ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ கருவனாய்க் காலனைமுன் காய்ந்த நாளோ மருவனாய் மண்ணும் விண்ணுந் தெரித்த நாளோ திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ |
6.034.1 |
ஒப்பற்ற தலைவனாய், உலகங்கள் துதிக்க நின்றவனே! ஒரே உருவம் அரி, அயன், அரன் என்ற மூன்று வடிவம் ஆனவனே! கோபங்கொண்டு கூற்றுவனை உதைத்தவனே! மன்மதனையும் கண்ணிலிருந்து தோன்றிய நெருப்பினால் சாம்பலாக்கியவனே! பொருந்துதல் உடையவனாய் மண் உலகையும், தேவர் உலகையும் படைத்தவனே! மான்குட்டியைக் கையில் ஏந்தியவனே! அழகியவளாம் பார்வதியை ஒருபாகமாக உடலில் கொண்டவனே! இச்செயல்களை எல்லாம் செய்வதற்கு முன்னோ, செய்த பின்னோ நீ திருவாரூரை உகந்தருளும் திருத்தலமாகக் கொண்டுள்ளாய்?
2426 | மலையார்பொற் பாவையொடு மகிழ்ந்த நாளோ நிலைபேறு பெறுவித்து நின்ற நாளோ அலைசாமே அலைகடல்நஞ் சுண்ட நாளோ சிலையான்முப் புரமெரித்த முன்னோ பின்னோ |
6.034.2 |
அழகிய மலை மங்கையாகிய பார்வதியோடு மகிழ்ந்தவனே! தேவர்கள் வருந்தாதபடி கடல் விடத்தை உண்டவனே! தேவர்கணம் புடைசூழ இருந்தவனே! அவர்களுக்கு வலிமை தரும் அமுதத்தை உண்பித்து நிலைபேற்றை அருளியவனே! நினைக்கவும் முடியாத தீப்பிழம்பாக ஓங்கி இருந்தவனே! வில்லால் மும் மதில்களையும் எரித்துச் சாம்பலாக்கியவனே! இச்செயல்களைச் செய்வதன் முன்னோ செய்த பின்னோ நீ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய்?.
2427 | பாடகஞ்சேர் மெல்லடிநற் பாவை யாளும் வேடனாய் வில்வாங்கி எய்த நாளோ மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை ஆடுவான் புகுவதற்கு முன்னோ பின்னோ |
6.034.3 |
பாடகம் என்ற அணியினை அணிந்த மெல்லிய அடிகளை உடைய பார்வதியோடு பார்த்தனுடைய வலிமையைப் பரிசோதிப்பதற்கு வேடனாய் வில்லை வளைத்துக் கொண்டு நின்றவனே! தேவர்களுக்கும் பற்றுக் கோடாய் நின்றவனே! மாட மாளிகைகள் நிறைந்த தில்லைத் திருப்பதியில் அழகு விளங்கும் பொன்னம்பலத்தில் நிலைபெற்றுக்கூத்தாடத் தொடங்கியவனே! இச்செயல்களைச் செய்வதன் முன்னோ செய்தபின்னோ நீ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய்?
2428 | ஓங்கி உயர்ந்தெழுந்து நின்ற நாளோ தாங்கியசீர்த் தலையான வானோர் செய்த நீங்கியநீர்த் தாமரையான் நெடுமா லோடு வாங்கிமதி வைப்பதற்கு முன்னோ பின்னோ |
6.034.4 |
ஓங்கி உயர்ந்து எழுந்து நின்றவனே! ஓர் ஊழியில் போலப் பல ஊழிகளிலும் நிலைபெற்றிருப்பவனே! மிகச் சிறப்புடைய உயர்ந்த தேவர்களின் ஒத்துழைப்போடு நிகழ்த்தப்பட்ட தக்கனுடைய பெரிய வேள்வியை அழித்தவனே! நீருள் பூக்காது திருமாலின் உந்தியில் பூத்த தாமரையில் தோன்றிய பிரமனும், திருமாலும், 'பெருமானே! எங்கள் உள்ளத்தில் நிலைபெற்றிருப்பாயாக' என்று துதித்து, தம் உள்ளத்தின் கண் கொண்டு செறித்து வைக்கப்பட்டிருப்பவனே! இச் செயல்கள் நிகழ்த்தப்படுவதன் முன்னோ நிகழ்த்தப்பட்ட பின்னோ நீ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய்?.
2429 | பாலனாய் வளர்ந்திலாப் பான்மை யானே நீலமா மணிகண்டத் தெண்டோ ளானே சீலமே சிவலோக நெறியே யாகுஞ் கோலம்நீ கொள்வதற்கு முன்னோ பின்னோ |
6.034.5 |
பாலர் முதலிய பருவங்களைக் கொண்டு வளராமல் என்றும் ஒரே நிலையில் இருப்பவனே! வழிபடும் அடியவர்களுக்கு அவ்வவ்விடங்களில் பற்றுக்கோடாய் இருப்பவனே! நீலகண்டனே! பெருந்தோள்களை உடையவனே! முக்காலமும் ஆளும் செயலை உடையவனே! சிவலோகம் சேரும் நெறியை அடியாருக்கு அருளும் புகழுக்குரிய தன்மையனே! நுண்ணறிவு உடையவனே! நற்பண்புகளுக்கு இருப்பிடமானவனே! அருளுருவம் கொண்டவனே! இச் செயல்கள் நிகழ்த்தப்படுவதன் முன்னோ நிகழ்த்தப்பட்டதன் பின்னோ நீ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய்?.
2430 | திறம்பலவும் வழிகாட்டிச் செய்கை காட்டிச் மறம்பலவு முடையாரை மயக்கந் தீர்த்து பிறங்கியசீர்ப் பிரமன்தன் தலைகை யேந்திப் அறம்பலவும் உரைப்பதற்கு முன்னோ பின்னோ |
6.034.6 |
உயிர்களுக்கு மனித வாழ்க்கையின் பயனையும் அப்பயனை அடையும் வழி முறைகளையும் அறிவர் வாயிலாகக் காட்டியவனே! அணுவை விடச் சிறிய அணுவாகவும் பெரிய பொருள்களை விடப் பெரியவனாகியும் உள்ளவனே! ஒவ்வாத செயல்கள் பலவும் உடைய தாருகவனத்து முனிவருடைய மயக்கத்தைத் தீர்த்து அருள் செய்து இருந்தவனே! மிக்க சிறப்புடைய பிரமனுடைய மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பிச்சை ஏற்று உண்டு உழன்று நிற்பவனே! அறம்பலவும் உரைத்தவனே! இச் செயல்களை நீ செய்வதன் முன்னோ செய்த பின்னோ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய்?
2431 | நிலந்தரத்து நீண்டுருவ மான நாளோ கலந்துரைக்கக் கற்பகமாய் நின்ற நாளோ வலஞ்சுருக்கி வல்லசுரர் மாண்டு வீழ சலந்தரனைக் கொல்வதற்கு முன்னோ பின்னோ |
6.034.7 |
மண்ணும் விண்ணும் ஒன்றுபட நீண்ட உருவம் ஆயினவனே! கலப்பினால் சராசரங்கள் யாவுமாகி நிற்பவனே! எல்லோரும் கூடி உன் பெருமையைப் பேசக் கற்பகமாய் உள்ளவனே! வானோருக்கு அசுரர்கள் தீங்கு விளைத்த காரணத்தால் திருமாலைப் படைத்து அசுரர்களுடைய வலிமையைச் சுருக்கி அவர்கள் மாண்டு அழியச் செய்தவனே! வாசுகியால் வெளிப்பட்ட ஆலகால விடத்தை உண்டவனே! சலந்தரனை அழித்தவனே! இச்செயல்கள் செய்வதற்கு முன்னோ செய்தபின்னோ நீ குளிர்ந்த ஆரூரைக் கோயிலாகக் கொண்டாய்?
2432 | பாதத்தால் முயலகனைப் பாது காத்துப் கீதத்தை மிகப்பாடும் அடியார்க் கென்றுங் பூதத்தான் பொருநீலி புனிதன் மேவிப் வேதத்தை விரிப்பதற்கு முன்னோ பின்னோ |
6.034.8 |
அழுத்திய திருவடியால் முயலகனை யாருக்கும் தீங்கு நிகழ்த்தாதவாறு அழுத்திவைத்து உலகில் மேம்பட்ட சுடராய்த் திகழ்பவனே! உன்புகழ் பாடும் அடியவர்களுக்கு என்றும் அழிவில்லா வீட்டுலகம் நல்கியவனே! பூத கணங்களை உடைய நந்தி தேவர், தனக்குத் தானே ஒப்பாகும் பார்வதி, புனிதனாகிய பிரமன், பொய்யுரையாத வேதத்தில் வல்ல நால்வர் மற்றத் தேவர் எல்லோருக்கும் வேதக் கருத்தை விரித்து உரைத்தவனே! நீ இச் செயல்களைச் செய்வதன் முன்னரோ செய்த பின்னரோ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய்?
2433 | புகையெட்டும் போக்கெட்டும் புலன்க ளெட்டும் கலையெட்டுங் காப்பெட்டுங் காட்சி யெட்டுங் நகையெட்டும் நாளெட்டும் நன்மை யெட்டும் ம்திகையெட்டுந் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ |
6.034.9 |
சென்று சேரத்தக்க எண் வகைப் பிறப்புக்கள், எண்வகைக் குற்றங்கள், எண்புலன்கள், எண்வகை உலகங்கள், எண்வகைத் தீவுகள், எண்வகைக் கடல்கள், எண்வகை அரண்கள், தீவுகள் எட்டின்எண்வகைப்பட்ட இயல்புகள், உன் திருவடிகளை அடைந்தவர்களுக்குக்கிட்டும் பயன்கள் எட்டு, எண்வகை ஒளிகள், ஒன்றும்பலவும் ஆகிய பகுதிகளை உடைய எட்டு நாள்கள், எட்டுநன்மைகள், ஞானத்தின் மேம்பட்ட அடியார்களின்மனத்தில் அமைந்த எண்வகைப் பண்புகளாகிய எண்மலர்கள்,எட்டுத் திசைகள் ஆகிய இவற்றைத் தோன்றச் செய்வதன்முன்னோ தோற்றிய பின்னோ நீ திருவாரூரைக்கோயிலாகக் கொண்டாய்?
2434 | ஈசனா யுலகேழும் மலையு மாகி வாசமலர் மகிழ்தென்ற லான நாளோ தாதுமலர் சண்டிக்குக் கொடுத்த நாளோ தேசமுமை யறிவதற்கு முன்னோ பின்னோ |
6.034.10 |
உலகம் ஏழையும் மலைகள் ஏழையும் அடக்கி ஆள்பவனே! இராவணன் ஆற்றலை அழித்து இருப்பவனே! பொதிய மலையில் அமர்ந்து மலர்களின் மணங்களை மகிழ்ந்து ஏற்கும் தென்றலாகி இருப்பவனே! மதயானையின் தோலைப் போர்த்து மகிழ்ந்தவனே! சூடிய மலர் மாலையைச் சண்டி கேசுவரருக்குக் கொடுத்தவனே! சகரபுத்திரர்களின் சாபத்தைத் தீர்த்து அவர்களை ஆட் கொண்டவனே! இச் செயல்களால் உலகவர் உன்னைப் பரம்பொருள் என்று அறிவதற்கு முன்னோ அறிந்தபின்னோ நீ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய்?
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 32 | 33 | 34 | 35 | 36 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவாரூர் - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - முன்னோ, கோயிலாக், கொண்டாய், திருவாரூரைக், கோயிலாகக், பின்னோ, பின்னோதிருவாரூர், இருப்பவனே, நின்றவனே, இருந்தவனே, உடையவனே, கொண்டவனே, செய்வதன், செயல்கள், கொண்டு, எண்வகை, அழித்தவனே, நிகழ்த்தப்பட்ட, அடியவர்களுக்கு, பின்ன&, என்றும், நிற்பவனே, மேம்பட்ட, கொடுத்த, எண்வகைக், தீவுகள், ஏழையும், தீங்கு, மாண்டு, தீர்த்து, சிறப்புடைய, உரைத்தவனே, கற்பகமாய், உள்ளவனே, பின்னோஅணியாரூர், உலகையும், கையில், செய்வதற்கு, மகிழ்ந்த, சாம்பலாக்கியவனே, தோன்றிய, மண்ணும், உலகங்கள், உருவம், புடைசூழ, பார்வதியோடு, திருவாரூர், திருமுறை, மாளிகைகள், செய்தபின்னோ, திருச்சிற்றம்பலம், இச்செயல்களைச், மகிழ்ந்தவனே, விடத்தை, உண்டவனே, பெருமானே