முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.003.திருவீரட்டானம்
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.003.திருவீரட்டானம்
6.003.திருவீரட்டானம்
ஏழைத்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
ஏழைத்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
2107 | வெறிவிரவு கூவிளநல் தொங்க லானை பொறியரவி னானைப்புள் ளூர்தி யானைப் அறிதற் கரியசீ ரம்மான் தன்னை எறிகெடிலத் தானை இறைவன் தன்னை |
6.003.1 |
அலைகள் வீசும் கெடில நதிக்கரையிலுள்ள எம்பெருமான் நறுமணம் கமழும் வில்வமாலை அணிந்தவன். அதிகை வீரட்டத்தில் உகந்தருளியிருப்பவன். இடபவாகனன்.ஆதிசேடனாகவும், கருடவாகனத் திருமாலாகவும் பொன் நிறமுடைய பிரமனாகவும் அவருள் உடனாய் இருந்து அவரைச் செயற்படுப்பவன். பொருள்சேர் புகழுக்குத்தக்கவன். உணர்ந்தார்க்கும் உணர்வரிய சிறப்பினை உடைய தலைவன். அதியரையமங்கை என்ற திருத்தலத்தை உகந்தருளியிருப்பவன். அத்தகைய பெருமானை அறிவிலியாகிய யான் என் வாழ்க்கையின் முற்பகுதியில் வழிபடாது பழித்துக்கூறிய செயல் இரங்கத்தக்கது.
2108 | வெள்ளிக் குன்றன்ன விடையான் தன்னை புள்ளி வரிநாகம் பூண்டான் தன்னைப் வள்ளி வளைத்தோள் முதல்வன் தன்னை எள்கவிடு பிச்சை யேற்பான் தன்னை |
6.003.2 |
மீண்டும் பிறப்பெடுக்க வேண்டிய நிலையில்லாத வீட்டுலகை அருளவல்லஎம்பெருமான் வெள்ளி மலை போன்ற காளையை வாகனமாக உடையவன். வில்லைப்பயன் கோடலில் வல்ல மன்மதனுடைய வில்லைக் கையாண்ட செயலைக் கோபித்தவன். படப்புள்ளிகளையும் கோடுகளையும் உடைய நாகத்தை அணிகலனாக அணிபவன். பொன் துகள் போல ஒளிவீசும் செஞ்சடையினன். சந்திரனைப் போல ஒளிவீசும் தோள்வளை அணிந்த முதல்வன். பிறர் தன்னை இகழுமாறு பல வீட்டிலுள்ளவர்களும் வழங்கும் பிச்சையை ஏற்பவன். அத்தகைய பெருமானை ஏழையேன் பண்டு இகழ்ந்த திறம் இரங்கத்தக்கது.
2109 | முந்தி யுலகம் படைத்தான் தன்னை சந்தவெண் திங்க ளணிந்தான் தன்னைத் சிந்தையில் தீர்வினையைத் தேனைப் பாலைச் எந்தை பெருமானை யீசன் தன்னை |
6.003.3 |
செழிப்புடைய கெடிலநதி பாயும் அதிகை வீரட்டானத்தை உகந்தருளியிருக்கும் எந்தையாய்ப் பெருமானாய், எல்லோரையும் ஆள்பவனாய் உள்ள எம்பெருமான்தான். என்றைக்கும் கெடுதலில்லாத முதற்பொருள். அவனே முற்பட்ட காலத்தில் உலகங்களைப் படைத்தவன். அழகிய வெள்ளியபிறை சூடி அடியார்களின் தவமாகிய நெறியை முற்றுவிப்பவன். சித்தம் முதலிய கருவிகளால் செய்யப்படும் செயல்களின் பயனாய்த் தேனும் பாலும் போன்று இனியவன். அத்தகைய பெருமானை ஏழையேன் பண்டு இகழ்ந்தது இரங்கத்தக்கது.
2110 | மந்திரமும் மறைப்பொருளு மானான் தன்னை அந்தரமு மலைகடலு மானான் தன்னை கந்தருவஞ் செய்திருவர் கழல்கை கூப்பிக் இந்திரனும் வானவரும் தொழச்செல் வானை |
6.003.4 |
ஆகா, ஊகூ என்ற கந்தருவர் இருவரும் பாடித் திருவடிகளில் நறுமலர்களைத் தூவிக்கைகளைக் குவித்து காலையும் மாலையும் இந்திரனும் மற்ற தேவர்களும் வழிபடுமாறு எளிமையில் காட்சி வழங்கும் சிவபெருமான் வேதமந்திரமும் அவற்றின் பொருளும் ஆயவன். மதியம், வெங்கதிர், காற்று, தீ, வான், அலைகளை உடைய கடல் ஆகியவற்றின் உடனாய் நின்று அவற்றைச் செயற்படுப்பவன். அதியரையமங்கை என்ற திருத்தலத்தில் உகந்தருளியிருப்பவன். அத்தகைய பெருமானை ஏழையேன் பண்டு இகழ்ந்தது இரங்கத்தக்கது.
2111 | ஒருபிறப்பி லானடியை உணர்ந்துங் காணார் வருபிறப்பொன் றுணராது மாசு பூசி அருபிறப்பை யறுப்பிக்கும் அதிகை யூரன் திருபிறப்பும் வெறுவியரா யிருந்தார் சொற்கேட் |
6.003.5 |
பிறவாயாக்கைப் பெரியோன் திருவடிகளை நினைத்துப் பார்ப்பது கூடச் செய்யாராய் உயர்கதியை அடைவதற்குரிய வழியைத்தேடி அவ்வழியே வாழ்க்கையை நடத்தாதவராய், இடையறாது வருகின்ற பிறப்பின் காரணத்தை உணராராய், உடம்பில் அழுக்கினைத் தாமே பூசிக்கொண்டு அகக்கண் குருடராயசமண முனிவருடைய மனம்போல் நடப்பேனாகி, இம்மைக்கும் மறுமைக்கும் பயன்படாத செயல்களைச் செய்யும் அவர்களுடைய சொற்களை உபதேசமாகக் கொண்டு, கொடிய பிறவியை அடியோடு போக்குவிக்கும் அதிகை வீரட்டானத்து எம்பெருமான் திருவடிகளைச் சரண் புக்கு வாழாமல் ஏழையேன் பண்டு அப்பெருமானை இகழ்ந்த செயல் இரங்கத்தக்கது.
2112 | ஆறேற்க வல்ல சடையான் தன்னை கூறேற்கக் கூறமர வல்லான் தன்னைக் நீறேற்கப் பூசும் அகலத் தானை ஏறேற்க வேறுமா வல்லான் தன்னை |
6.003.6 |
கங்கையைத் தன்னுள் அடங்குமாறு ஏற்றுக் கொள்ள வல்ல சடையான், மைபோலக் கரிய முன் கழுத்தினன். எல்லாப் பொருள்களின் நுண்ணிலையையும் ஏற்று அவற்றுக்குப் பற்றுக் கோடாக நிற்கவும் பருநிலையில் அவற்றுக்கு உள்ளும் புறம்பும் அறிவாய் நிறைந்து நிற்கவும் வல்லவன். திரண்ட வளையல்களைக்கையில் அணிந்த பார்வதி பாகன். நீறு, தன்னையே சார்பாக ஏற்க அதனைப் பூசிய மார்பினன். தானும் களங்கம் இல்லாதவனாய்ப் பிறர் களங்கத்தையும் போக்குவிப்பவன். காளை வாகனத்தில் தக்கபடி ஏறி அதனைச் செலுத்துவதில் வல்லவன். அத்தகைய பெருமானை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த செயல் இரங்கத்தக்கது.
2113 | குண்டாக்க னாயுழன்று கையி லுண்டு உண்டி யுகந்தமணே நின்றார் சொற்கேட் வண்டுலவு கொன்றையங் கண்ணி யானை எண்டிசைக்கும் மூர்த்தியாய் நின்றான் தன்னை |
6.003.7 |
மூர்க்கர்களாய் தடுமாறி இளைய பெண்கள் முன்னிலையில் நாணமின்றிஉடையில்லாமல் நின்று உணவைக் கையில் பெற்று நின்றவாறே உண்ணும் சமணத்துறவியரின் சொற்களை மனங்கொண்டு அவர்கள் இனத்தவனாகி நல்லுணர்வில்லாமல் திரிந்த நான், வண்டுகள் சூழ்ந்து திரியும் கொன்றைப்பூ மாலையை அணிந்து வானவர்களால் புகழப்பட்டு, எண்திசையிலுள்ளார்க்கும் தலைவனாய் நிலைபெற்ற எம்பெருமானை ஏழையேனாகிய யான் பண்டு இகழ்ந்தவாறு இரங்கத்தக்கது.
2114 | உறிமுடித்த குண்டிகைதங் கையிற் றூக்கி கறிவிரவு நெய்சோறு கையி லுண்டு மறிதிரைநீர்ப் பவ்வநஞ் சுண்டான் தன்னை எறிகெடில நாடர் பெருமான் தன்னை |
6.003.8 |
உறியில் சுருக்கிட்டு வைத்த கஞ்சிக்கரகத்தைக் கையில் தொங்கவிட்டுக்கொண்டு ஊத்தை வாயினை உடைய சமணர்களிடையே யானும் ஒரு மூர்க்கனாகி, கறியோடு நெய் ஊட்டப்பட்ட சோற்றினைக் கையில் வாங்கி உண்டு காண்பவருக்கு வெறுக்கத்தக்க காட்சிப் பொருளாக இருந்த யான்,அலைமோதும் கெடில நதி பாயும் நாட்டிற்குத் தலைவனாய்க் கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட பெருமானைத் தீவினை உடையேனாய், பரம்பரையாக வழிபட்டுவரும் குடும்பப் பழக்கம் பற்றியும் நினைக்க இயலாதேனாய் ஏழையேனாய்ப் பண்டு இகழ்ந்த செயல் இரங்கத்தக்கது.
2115 | நிறைவார்ந்த நீர்மையாய் நின்றான் தன்னை மறையானை மாசொன்றி லாதான் தன்னை கறையானைக் காதார் சூழையான் தன்னைக் இறையானை எந்தை பெருமான் தன்னை |
6.003.9 |
எல்லார் உள்ளத்திலும் தங்கியிருப்பவனாகிய எந்தை பெருமான் குறைவிலா நிறைவினனாய் நிலைபெற்றவன். நெற்றிக்கண்ணன். வேத வடிவினன். களங்கம் ஏதும் இல்லாதான். தேவர்கள் தலையில் தன் திருவடிகளை வைத்து அருளியவன். கழுத்தில் விடக்கறை உடையவன். குழைக்காதன். கையில்கட்டங்கம் என்ற படைக்கலன் ஏந்தியவன். அத்தகைய பெருமானை ஏழையேன் பண்டு இகழ்ந்த செயல் இரங்கத்தக்கது.
2116 | தொல்லைவான் சூழ்வினைகள் சூழப் போந்து வல்லையே இடர்தீர்த்திங் கடிமை கொண்ட கொல்லைவாய்க் குருந்தொசித்துக் குழலும் ஊதுங் எல்லைகாண் பரியானை எம்மான் தன்னை |
6.003.10 |
முல்லை நிலத்திலிருந்த குருந்த மரத்தை, அதன் கண் பிணைத்திருந்த இடைக்குலச் சிறுமியர் ஆடைகளை அவர்கள் மீண்டும் எடுத்துக் கொள்வதற்காக வளைத்துக் கொடுத்து, வேய்ங்குழல் ஊதி அவர்களை வசப்படுத்திய இடையனாய் அவதரித்த திருமாலும், பிரமனும் ஆகியஇருவரும் முயன்றும் அடிமுடிகளின் எல்லையைக் காண இயலாதவாறு அனற்பிழம்பாய் நின்றவனாய்த் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் தலைவனாய், எனக்கும் தலைவனாய், பண்டைத் தீவினைகள் என்னைச் சூழ்ந்தமையாலே அவற்றின் வழியே சென்று அவனைப் பலவாறு இழித்துப் பேசியும் பின் ஒருவாறு தௌந்தும் நின்ற அடியேனுடைய அறிவுக்கு அறிவாய் நின்று விரைவில் என் சூலை நோயைத் தீர்த்து என்னை ஆட்கொண்ட பெருமானை ஏழையேன் பண்டு இகழ்ந்தவாறு இரங்கத்தக்கது.
2117 | முலைமறைக்கப் பட்டுநீ ராடாப் பெண்கள் தலைபறிக்குந் தன்மையர்க ளாகி நின்று மலைமறிக்கச் சென்ற இலங்கைக் கோனை இலைமறித்த கொன்றையந் தாரான் தன்னை |
6.003.11 |
மாசுதீரப்புனல் ஆடும் வழக்கத்தை விடுத்து அற்றம் மறைத்தலுக்கு உடைமாத்திரம் அணிந்த சமணசமயப் பெண் துறவியர் தங்கள் தெய்வம் என்று பெரிதும் மதித்துத் தம் கைகளால் தலைமயிரைப் பறிக்கும் பண்புடையவர்களாகித் தங்கள் கொள்கைகளிலேயே நிலைநின்று தக்க செயல் இன்னது என்று ஆராய்ந்தறிய இயலாதவர்களாகித் தவம் என்ற பெயரால் பொருத்த மற்ற செயல்களைச் செய்பவர் சமணத் துறவியர். அவர் வழி நின்றேனாகிய யான். புட்பகவிமானம் சென்ற வழியைக் கயிலை மலை தடுத்ததனால் அதனைப் பெயர்க்கச் சென்ற இராவணனுடைய வலிமை கெடத்துன்புறுத்திய சிவந்த திருவடிகளை உடையவனாய் இலைகளுக்கு இடையே தோன்றிய கொன்றைப் பூவாலாகிய மாலையை அணிந்த எம்பெருமானைப் பண்டு அறியாமை உடையேனாய் இகழ்ந்த திறம் இரங்கத்தக்கது.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவீரட்டானம் - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - இரங்கத்தக்கது, டிகழ்ந்த, நான்பண், ஏழையேன், பெருமானை, தன்னைஏழையேன், அத்தகைய, இகழ்ந்த, அணிந்த, பெருமான், வல்லான், சடையான், தலைவனாய், கையில், திருவடிகளை, உகந்தருளியிருப்பவன், நின்று, அதனைப், வல்லவன், அறிவாய், செயல்களைச், சொற்களை, நிற்கவும், களங்கம், மாலையை, துறவியர், தங்கள், உடையேனாய், தோன்றிய, அவர்கள், இகழ்ந்தவாறு, நின்றான், காட்சி, திருச்சிற்றம்பலம், முதல்வன், திருமுறை, னானைப், யமர்ந்தான், உடனாய், செயற்படுப்பவன், அதியரையமங்கை, மீண்டும், உடையவன், இகழ்ந்தது, மானான், எம்பெருமான், பாயும், திருவீரட்டானம், ஒளிவீசும், வழங்கும், அவற்றின்