முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.006.திருவதிகைவீரட்டானம்
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.006.திருவதிகைவீரட்டானம்

6.006.திருவதிகைவீரட்டானம்
திருவடித்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருவடித்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர்.
தேவியார் - திருவதிகைநாயகி.
2139 | அரவணையான் சிந்தித் தரற்றும்மடி சரவணத்தான் கைதொழுது சாரும்மடி பரவுவார் பாவம் பறைக்கும்மடி திரைவிரவு தென்கெடில நாடன்னடி |
6.006.1 |
அலைகள் ஒன்றொடொன்று மோதுகின்ற கெடில நதி பாயும் நாடனாய்த் திருவதிகை வீரட்டானத்தை உகந்தருளியுள்ள எம் செல்வனுடைய திருவடிகள் திருமாலால் தியானித்துப் போற்றப்படும். பிரமனுடைய தலைகளுக்கு அணிகளாகும், முருகனால் தொழப்பட்டு அணுகப்பெறும். பற்றுக் கோடாகக் கொண்ட அடியவர்களுக்கெல்லாம் அடைக்கலம் நல்கும், தம்மை வழிபடுபவர்களுடைய பாவத்தைப் போக்கும், பதினெண் தேவ கணத்தவராலும் பாடப் பெறும்.
2140 | கொடுவினையா ரென்றுங் குறுகாவடி படுமுழவம் பாணி பயிற்றும்மடி கடுமுரணே றூர்ந்தான் கழற்சேவடி நெடுமதியங் கண்ணி யணிந்தானடி |
6.006.2 |
விரைந்து செல்வதாய் ஏனைய காளைகளினின்றும் மாறுபட்ட காளையை ஊர்பவனும், நீண்ட பிறையை முடிமாலையாக அணிந்தவனும், கெடில நதிக்கரையிலுள்ள அதிகை வீரட்டானத்தை நீங்காது உகந்தருளியிருப்பவனும் ஆகிய எம்பெருமானுடைய திருவடிகள் தீவினை உடையவரால் ஒரு காலும் அணுகப்பெறாதன. நலிவுற்றுச் சரணாக அடைந்தவரை அழியாமல் காப்பன. முழவு ஒலித்தலையும் தாளம் இடுதலையும் பயிற்றுவிப்பன. வெகுண்டெழுந்த கொடிய கூற்றுவன் மீது பாய்ந்தன. கடலால் சூழப்பட்ட இவ்வுலகைக் காக்கும் திருமாலால் விரும்பிப் போற்றப்படுவன.
2141 | வைதெழுவார் காமம்பொய் போகாவடி கைதொழுது நாமேத்திக் காணும்மடி நெய்தொழுது நாமேத்தி ஆட்டும்மடி தெய்வப் புனற்கெடில நாடன்னடி |
6.006.3 |
கெடில நாடனாய் அதிகை வீரட்டத்தை உகந் தருளிய செல்வனாகிய எம்பெருமானுடைய திருவடிகள் எம் பெருமானைத் தூற்றிக் கொண்டே துயிலெழுபவருடைய தீய விருப்பங்களே நிறைவேறச் செய்வன; வஞ்சனையாகிய வலையிலே அகப்படாதன. கையால் தொழுது நாவினால் துதித்து நாம் அகக் கண்ணால் காண வாய்ப்பு அளிப்பன. உலகத்தார் கணக்கிடும் எல்லையைக் கடந்து நிற்பன. அடியவராகிய நாம் உடலால் தொழுது நாவால் துதித்துக் கையால் நெய் அபிடேகம் செய்யப் பொருந்துவன. நீண்ட வானுலகையும் கடந்து எங்கும் நீக்கமற நிறைந்து நிற்பன.
2142 | அரும்பித்த செஞ்ஞாயி றேய்க்கும்மடி சுரும்பித்த வண்டினங்கள் சூழ்ந்தவடி பெரும்பித்தர் கூடிப் பிதற்றும்மடி திருந்துநீர்த் தென்கெடில நாடன்னடி |
6.006.4 |
தௌவான நீரை உடைய கெடில நதி பாயும் நாட்டினனாய், திருவீரட்டானத்தில் உகந்தருளியிருக்கும் எம் செல்வனாகிய எம்பெருமானுடைய திருவடிகள் தாமரையை அரும்பச் செய்யும் காலையில் தோன்றும் செந்நிறக் கதிரவனை நிறத்தாலும் ஒளியாலும் ஒப்பன. தம் அழகை ஓவியத்து எழுதலாகாத வனப்பினவாய் அடியார்களுக்கு அருளை வழங்குவன. சுரும்புகளும் வண்டுகளும் சுற்றித் திரியும் வாய்ப்பினை அளிப்பன. சந்திரனையும் கூற்றுவனையும் வெகுண்டன. பெருவிருப்புடைய அடியவரால் குழாமாகப் போற்றப்படுவன. தவறு செய்தவர்களுடைய தவறுகளை அறியும் ஆற்றல் உடையன.
2143 | ஒருகாலத் தொன்றாகி நின்றவடி பொருகழலும் பல்சிலம்பும் மார்க்கும்மடி இருநிலத்தார் இன்புற்றங் கேத்தும்மடி திருவதிகைத் தென்கெடில நாடன்னடி |
6.006.5 |
கெடில நாட்டுத் திருவதிகை வீரட்டானத்து எம் செல்வனுடைய திருவடிகள் படைப்புக் காலத்து ஒன்றாகி நின்று முற்றழிப்புக் காலத்தில் மாயையைத் தொழிற்படுத்தாது தம் நிலையிலேயே நிற்பன. ஒன்றில் கழலும் மற்றொன்றில் சிலம்பும் ஒலிக்குமாறு அமைந்தன. புகழ்வாருடைய புகழ் உரைகளுக்கு முடிவு காண இயலாதபடி தடுக்கும் ஆற்றல் உடையன. இப்பெரிய நில உலகிலுள்ளார் மகிழ்ந்து துதிக்கும் வாய்ப்பினை அளிப்பன. அவ்வாறு இன்புற்று அடியவர்கள் அருச்சித்த பூக்களைத் தம்பால் தாங்கி நிற்பன.
2144 | திருமகட்குச் செந்தா மரையாமடி பொருளவர்க்குப் பொன்னுரையாய் நின்றவடி உருவிரண்டு மொன்றோடொன் றொவ்வாவடி திருவதிகைத் தென்கெடில நாடன்னடி |
6.006.6 |
அழகிய கெடிலநாடனாய திருவதிகை வீரட்டானத்து எம்செல்வன் சேவடிகள் திருமகளுக்குச் செந்தாமரை போல்வன. சிறந்து அடியார்களுக்குத் தேன் போல இனிப்பன. செல்வர்களுக்கு அவர்கள் செல்வத்தைச் செலவிடும் திறத்தை ஓர்ந்து அறிய உரைகல்லாய் இருப்பன. புகழ்பவர் புகழ் எல்லையைத் தடுக்க வல்லன. வலம் இடம் இருபுறத்து அடிகளும் ஆண் அடியும் பெண் அடியுமாய் ஒன்றொடொன்று ஒவ்வாது அமைந்திருப்பன. தமக்கு உருவம் உடைமையே இயல்பு என்று உணரப்படமுடியாமல் உருவம் அருவம் என்ற நிலைகளைக் கடந்திருப்பன.
2145 | உரைமாலை யெல்லா முடையவடி வரைமாதை வாடாமை வைக்கும்மடி அரைமாத் திரையி லடங்கும்மடி கரைமாங் கலிக்கெடில நாடன்னடி |
6.006.7 |
கரைகளிலே மக்களின் ஆரவாரத்தை மிகுதியாக உடைய கெடில நதி பாயும் நாட்டில் நறுமணம் கமழும் வீரட்டானத்தை உகந்தருளியிருக்கும், மண்டையோட்டை ஏந்திய சிவபெருமானுடைய திருவடிகள் பாட்டும் உரையுமாகிய சொற்கோவைகளை உடையன. சொற்களால் முழுமையாக உணரப்படாதன, உமா தேவியை மனம் வாடாமல் மகிழ்வாக வைப்பன. வானவர்களால் வணங்கி வாழ்த்தப்படுவன. அரைமாத்திரை ஒலியற்றாகிய பிரணவக் கலையில் அடங்குவன. தம் பரப்பினை யாரும் அளக்கவியலாதபடி எங்கும் பரவி இருப்பன.
2146 | நறுமலராய் நாறும் மலர்ச்சேவடி செறிகதிருந் திங்களுமாய் நின்றவடி மறுமதியை மாசு கழுவும்மடி செறிகெடில நாடர் பெருமானடி |
6.006.8 |
கெடிலநாடர் பெருமானாம் திருவீரட்டானத்து எம் செல்வனுடைய திருவடிகள் இயற்கையிலேயே மலர் மணம் உடையனவாய் மலர்களாலும் அருச்சிக்கப் படுவன. அறமும் நீதியும் தம் வடிவமாக உலகியலையும் நாட்டியலையும் நிகழச்செய்வன. உலகிலே கதிரவனும் மதியமுமாய்ப் புறத்து ஒளிகளைத் தருவன. யோகியர் உள்ளத்தே ஒளிப்பிழம்பாய் உள்ளொளி பெருக்குவன. சந்திரனுக்கு ஏற்பட்ட மாசினைக் கழுவியன. மந்திரங்களும் அவற்றைச் செயற்படுத்தும் செயல்களுமாய் உள்ளன.
2147 | அணியனவுஞ் சேயனவு மல்லாவடி பணிபவர்க்குப் பாங்காக வல்லவடி மணியடி பொன்னடி மாண்பாமடி தணிபாடு தண்கெடில நாடன்னடி |
6.006.9 |
இனிய இசை பாடப்படும் குளிர்ந்த கெடிலநதி பாயும் நாட்டில் பெருமைபொருந்திய அதிகைவீரட்டானத் தலைவனுடைய திருவடிகள் அடியார்களுக்குப் பக்கத்தில் உள்ளனவாயும், அடியார் அல்லார்க்கு தூரத்தில் உள்ளவாயும் அமைந்திருப்பன. அடியவர்களுக்குக் கிட்டுதற்கு அரிய அமுதம் போன்று உள்ளன. வழிபடுபவர்களுக்குத் துணையாகும் ஆற்றல் உடையன. உலகப் பற்றற்ற சான்றோர்கள் பற்றும் தகையவாய்ப் பவள நிறத்தை உடையன. மணிகள் போலவும் பொன் போலவும் மதிப்பிடற்கரிய பெருமை உடையன. மருந்தாய்ப் பிறவிப் பிணியை அடியோடு நீக்கும் ஆற்றல் உடையன.
2148 | அந்தா மரைப்போ தலர்ந்தவடி முந்தாகி முன்னே முளைத்தவடி பந்தாடு மெல்விரலாள் பாகன்னடி வெந்தார் சுடலைநீ றாடும்மடி |
6.006.10 |
ஒலிக்கும் தழற்பிழம்பாய் வளர்ந்த வடிவினனும் பந்தினை விளையாடும் மெல்லிய விரல்களை உடைய பார்வதி பாகனும், பெரிய பவள மலை போல்வானும், அதிகை வீரட்டத்தை உகந்தருளியிருக்கும் தூயோனும் ஆகிய எம் பெருமானுடைய திருவடிகள் தாமரைப் பூக்கள் போல மலர்ந்துள்ளன. இராவணனுடைய ஆற்றலையும் போக்கியன, ஏனைய பொருள்களின் தோற்றங்களுக்கு முன்னே தோன்றியன. சுடுகாட்டில் எரிக்கப்பட்டவருடைய சாம்பலில் தோய்வனவாம்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவதிகைவீரட்டானம் - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருவடிகள், செல்வன்னடி, டானத்தெஞ், நாடன்னடிதிருவீரட், பாயும், ஆற்றல், நிற்பன, தென்கெடில, எம்பெருமானுடைய, அளிப்பன, உகந்தருளியிருக்கும், செல்வனுடைய, வீரட்டானத்தை, திருவதிகை, பற்றும், போலவும், வாய்ப்பினை, முன்னே, புகழ்தகைய, இருப்பன, உருவம், அமைந்திருப்பன, நாட்டில், வீரட்டானத்து, செல்வனாகிய, ஒன்றொடொன்று, திருமாலால், பதினெண், திருச்சிற்றம்பலம், திருமுறை, போற்றப்படுவன, வீரட்டத்தை, கடந்து, தொழுது, கையால், திருவதிகைவீரட்டானம், எங்கும்