முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.007.திருவீரட்டானம்
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.007.திருவீரட்டானம்
6.007.திருவீரட்டானம்
காப்புத்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
காப்புத்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
2149 | செல்வப் புனற்கெடில வீரட்டமும் தில்லைச்சிற் றம்பலமுந் தென்கூடலும் நல்லூரும் தேவன் குடிமருகலும் கல்லலகு நெடும்புருவக் கபால மேந்திக் |
6.007.1 |
நீர் மிக்க கெடிலநதியால் செல்வவளம் பெற்ற அதிகை வீரட்டம், சிற்றேமம், மிக்க பரப்பினை உடைய குளிர்ந்த குற்றாலம், தில்லைச் சிற்றம்பலம், தெற்கில் உள்ள மதுரை, அழகிய ஆனைக்கா, சிராப்பள்ளி, நல்லூர், தேவன்குடி, மருகல், சான்றோர்கள் வழிபட்டுத் துதிக்கும் நாரையூர் ஆகியன - கல்லலகு என்ற வாச்சியத்தையும், நீண்ட புருவச் சுவடுடைய மண்டையோட்டினை யும் கட்டங்கம் என்ற படைக்கலத்தையும் ஏந்திய சிவபெருமான் உகந்தருளியுள்ள திருத்தலங்களாம்.
2150 | தீர்த்தப் புனற்கெடில வீரட்டமும் ஆர்த்தருவி வீழ்சுனைநீ ரண்ணா மலை ஏத்துமின்கள் நீரேத்த நின்ற ஈசன் கார்த்தயங்கு சோலைக் கயிலாயமும் |
6.007.2 |
அதிகை வீரட்டம், கோவலூர் வீரட்டம், வெண்ணெய்நல்லூர், அருவிகள் ஆரவாரித்து விழும் சுனைநீரை உடைய அண்ணாமலை, அறையணி நல்லூர், அரநெறி, இடைமருது, இன்னம்பர், ஏகம்பம், மேகத்தொடு விளங்கும் சோலைகளை உடைய கயிலாயம் என்பன - நாம் துதிக்குமாறு நெற்றிக்கண்ணனாகிய எம் பெருமான் உகந்தருளியிருக்கும் திருத்தலங்களாம். அத் தலங்களில் எம்பெருமானைப் போற்றுங்கள்.
2151 | சிறையார் புனற்கெடில வீரட்டமும் துறையார் வனமுனிக ளேத்த நின்ற அறையார் புனலொழுகு காவி ரிசூழ் கறையார் பொழில்புடைசூழ் கானப் பேரும் |
6.007.3 |
பாறைகளில் மோதிப் பெருகிவருகின்ற நீரை உடைய காவிரியால் தென்புறம் சூழப்பட்ட திருவையாற்றில் அமுதமாக உகந்தருளியிருக்கும் பெருமான் தடுக்கப்படுகின்ற நீரை உடைய கெடில நதிக் கரையிலுள்ள அதிகை வீரட்டம், பாதிரிப்புலியூர், ஆமாத்தூர், நீர்த்துறைகளை அடுத்த சோலைகளில் வாழும் முனிவர்கள் துதிக்க இருக்கும் சோற்றுத்துறை, துருத்தி, நெய்த்தானம், இருண்ட சோலைகளால் சூழப்பட்ட கானப்பேரூர், கழுக்குன்றம் ஆகிய திருத்தலங்களில் கோயில் கொண்டுள்ளான்.
2152 | திரையார் புனற்கெடில வீரட்டமும் உரையார் தொழநின்ற ஒற்றி யூரும் வரையா ரருவிசூழ் மாந தியும் கரையார் புனலொழுகு காவி ரிசூழ் |
6.007.4 |
கெடிலக் கரை வீரட்டம், திருவாரூர், தேவூர், நெல்லிக்கா, புகழை உடைய சான்றோர் வழிபடும் ஒற்றியூர், ஓத்தூர், மாற்பேறு, மாந்துறை, மலை அருவிகள் சூழ்ந்த மாநதி, மாகாளம், கேதாரம், மாமேரு என்பன காவிரி சூழ்கடப்பந்துறையில் உகந்தருளியிருக்கும் பெருமானுடைய திருத்தலங்களாம்.
2153 | செழுநீர்ப் புனற்கெடில வீரட்ட மும் கொழுநீர் புடைசுழிக்குங் கோட்டுக் காவும் பழிநீர்மை யில்லாப் பனங்காட் டூரும் கழுநீர் மதுவிரியுங் காளிங்க மும் |
6.007.5 |
கெடிலக்கரை அதிகை வீரட்டம், திரிபுராந்தகம், அழகிய தேவீச்சரம், வெள்ளம் சூழும் கோட்டுக்கா, குடமூக்கு, கோகரணம், கோலக்கா, இழித்துரைக்கும் தன்மை இல்லாத பனங் காட்டூர், பனையூர், பயற்றூர், பராய்த்துறை, கழுநீர்ப் பூக்களிலிருந்து தேன் வெளிப்படும் காளிங்கம் என்பன கணபதீச்சரத்தை உகந்தருளியிருக்கும் சிவபெருமானுடைய திருத்தலங்களாம்.
2154 | தெய்வப் புனற்கெடில வீரட்டமும் பவ்வந் திரியும் பருப்ப தமும் மவ்வந் திரையு மணிமுத்த மும் கவ்வை வரிவண்டு பண்ணே பாடுங் |
6.007.6 |
கெடிலக் கரையிலுள்ள அதிகை வீரட்டம், செழிப்பை உடைய குளிர்ந்த பிடவூர், கடல் வெள்ளம் அணுகும் சீசைலம், பறியலூர் வீரட்டம், பாவநாசம், இன்னிசை முழங்கும் மணிமுத்தம், மறைக்காடு, வாய்மூர், வலஞ்சுழி, ஆரவாரத்தை உடைய வண்டுகள் பண்பாடும் கழிப்பாலை என்பன சிவபெருமான் உகந்தருளியிருக்கும் திருத்தலங்களாம்.
2155 | தெண்ணீர்ப் புனற்கெடில வீரட்டமுஞ் உண்ணீரார் ஏடகமும் ஊறல் அம்பர் விண்ணார் விடையார் விளமர் வெண்ணி கண்ணார் நுதலார் கரபு ரமுங் |
6.007.7 |
அதிகை வீரட்டம், சீர்காழி, வல்லம், திருவேட்டி, நீர்வளம் மிக்க ஏடகம், ஊறல், அம்பர், உறையூர், நறையூர், அரண நல்லூர், வானத்திலும் உலவும் காளை வாகனம் உடைய சிவ பெருமான் உகக்கும் விளமர், வெண்ணி, மீயச்சூர், வீழிமிழலை, நெற்றிக்கண்ணனாம் சிவபெருமான் விரும்பும் கரபுரம் ஆகியவை மண்டை ஓட்டினை ஏந்தும் அப்பெருமான் உகந்தருளியுள்ள திருத்தலங்களாம்.
2156 | தௌளும் புனற்கெடில வீரட்டமுந் எள்ளும் படையான் இடைத்தா னமும் கொள்ளு மிலயத்தார் கோடி காவும் கள்ளருந்தத் தௌளியா ருள்கி யேத்துங் |
6.007.8 |
பூதப்படையை உடையவரும், கூத்தினை நிகழ்த்துபவரும், ஆகிய பெருமானார் உகந்தருளியிருக்கும் திருத்தலங்கள், அதிகை வீரட்டம், திண்டீச்சரம், புகலூர், இடைத்தானம், ஏயீச்சுரம், ஏமம், கூடல், கோடிகா, குரங்கணில் முட்டம், குறும்பலா, திருவடி ஞானம் பெறச் சத்திநிபாதம் பெற்றவர் தியானித்துத் துதிக்கும் நாகை குடந்தைக் காரோணங்கள், என்பனவாகும்.
2157 | சீரார் புனற்கெடில வீரட்டமும் பாரார் பரவுஞ்சீர்ப் பைஞ்ஞீலியும் நீரார் நிறைவயல்சூழ் நின்றி யூரும் காரார் கமழ் கொன்றைத் தாரார்க் கென்றும் |
6.007.9 |
அதிகை வீரட்டம், காட்டுப்பள்ளி, வெண்காடு, உலகு புகழும் சிறப்பினை உடைய பைஞ்ஞீலி, பந்தணைநல்லூர், பாசூர், நல்லம், வயல்சூழ்ந்த நின்றியூர், நெடுங்களம், நெல் வெண்ணெய், நெல்வாயில், கடவூர் வீரட்டம் என்பன கார் காலத்தில் மலரும் கொன்றை மலர் மாலையை அணிந்த சிவபெருமானுடைய திருத்தலங்களாம்.
2158 | சிந்தும் புனற்கெடில வீரட்டமும் அந்தண் பொழில்புடைசூழ் அயோகந்தியும் எந்தம் பெருமாற் கிடமாவதாம் கந்தங் கமழுங் கரவீரமும் |
6.007.10 |
அதிகை வீரட்டம், வாஞ்சியம், நள்ளாறு, தண்பொழில் சூழ் அயோகந்தி, ஆக்கூர், ஆவூர், ஆன்பட்டி, இடைச்சுரம், தலைச்சங்காடு, நறுமணம் கமழும்கரவீரம், சக்கரக் கோயிலை உடைய கடம்பூர் ஆகியன எங்கள் பெருமானுக்குத் திருத்தலங்களாம்.
2159 | தேனார் புனற்கெடில வீரட்டமும் வானோர் வணங்கும் மணஞ்சேரியும் ஏனோர்க ளேத்தும் வெகுளீச்சரம் கானார் மயிலார் கருமாரியும் |
6.007.11 |
அதிகை வீரட்டம், செம்பொன்பள்ளி, பூவணம், தேவரும் வணங்கும் மணஞ்சேரி, மதில்களை உடைய உஞ்சை மாகாளம், வாரணாசி மற்றவர்களும் வழிபடும் வெகுளீச்சரம், விளங்கும் சீசைலம், பெருமையையுடைய சோலைகளிலே காட்டில் தங்கக் கூடிய மயில்கள் பொருந்தியிருக்கும் கருமாரி என்பன நீலகண்டப் பெருமானுடைய திருத்தலங்களாம்.
2160 | திருநீர்ப் புனற்கெடில வீரட்டமும் வருநீர் வளம்பெருகு மாநிருபமும் பெருநீர் வளர்சடையான் பேணிநின்ற கருநீல வண்டரற்றுங் காளத்தியும் |
6.007.12 |
அதிகை வீரட்டம், அளப்பூர், அதிகைக்குத் தெற்கில் உள்ள சித்தவடம், நீர் வளம் மிக்க மாநிருபம், மயிலாப்பூர், பிரமபுரம், சுழியல், பெண்ணாகடம், நல்ல நீலநிறமான வண்டுகள் ஒலிக்கும் காளத்தி, கயிலாயம் என்பன அடியவர்களால் நிலையாகப் போற்றப்படும் கங்கை தங்கும் சடையை உடைய சிவபெருமான் உகந்தருளியிருக்கும் திருத்தலங்களாம்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவீரட்டானம் - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - வீரட்டம், புனற்கெடில, காப்புக், திருத்தலங்களாம், உகந்தருளியிருக்கும், தம்முடைய, சிவபெருமான், நல்லூர், பெருமான், மாகாளம், கோகரணம், கேதாரம், கெடிலக், பெருமானுடைய, வழிபடும், பயற்றூர், சிவபெருமானுடைய, விளமர், பாசூர், வணங்கும், நறையூர், வண்டுகள், தேவூர், வாய்மூர், சீசைலம், வெள்ளம், புனலொழுகு, குளிர்ந்த, தெற்கில், துதிக்கும், கல்லலகு, நல்லூரும், திருமுறை, திருச்சிற்றம்பலம், உகந்தருளியுள்ள, வெண்ணெய், பொழில்புடைசூழ், சூழப்பட்ட, திருவீரட்டானம், கயிலாயம், அருவிகள், விளங்கும், கரையிலுள்ள