முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.010.திருப்பந்தணைநல்லூர்
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.010.திருப்பந்தணைநல்லூர்

6.010.திருப்பந்தணைநல்லூர்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பசுபதீசுவரர்.
தேவியார் - காம்பன்னதோளியம்மை.
2182 | நோதங்க மில்லாதார் நாகம் பூண்டார் பேய்தங்கு நீள்காட்டில் நட்ட மாடிப் ஆதங்கு பைங்குழலாள் பாகங் கொண்டார் பாதங்க நீறேற்றார் பைங்க ணேற்றார் |
6.010.1 |
பந்தணைநல்லூர்ப் பெருமான் வருந்துவதாகிய மாயை உடம்பு உடையர் அல்லாதாராய்ப் பாம்புகளையும், மார்பில் பூணூலையும் அதன்மேல் ஆமை ஓட்டினையும் அணிந்தவர். அவர் வளர்கின்ற கருங்குழலியாகிய உமாதேவியை ஒருபாகமாகக் கொண்டு, பிறையைச் சூடிய சடையில் கங்கையையும் கொண்டு அந்தி வானத்தின் செந்நிறமேனியில் அடிமுதல் முடி வரை திருநீறணிந்து, கையில் தீயினைக் கொண்டு, பேய்கள் தங்கும் பரந்த சுடுகாட்டில் கூத்தாடிப் பசிய கண்களை உடைய காளை மீது இவர்ந்து வந்து பிச்சை ஏற்றவர்.
2183 | காடலாற் கருதாதார் கடல்நஞ் சுண்டார் ஓடலாற் கருதாதார் ஒற்றி யூரார் பீடுலாந் தனைசெய்வார் பிடவ மொந்தை பாடலா ராடலார் பைங்க ணேற்றார். |
6.010.2 |
பந்தணைநல்லூர்ப் பெருமான் கடலில் தோன்றிய நஞ்சினை நுகர்ந்து, களிற்றுத் தோலால் மெய்யினைப் போர்த்து, மண்டையோட்டினையே உண்கலனாகக் கொண்டு, ஒற்றியூரை உகந்து, அடியார்களுடைய உடற்பிணிகளையும் உட்பகைகளையும் தம் ஒரே பார்வையாலே வலிமைகெடச் செய்து, பிடவம், மொந்தை, குடமுழா, கொடுகொட்டி, குழல் என்ற வாச்சியங்கள் ஒலிக்கச் சுடுகாட்டினைத் தவிர வேற்று இடங்களை விரும்பாது, அங்குப் பாடியும் ஆடியும் செயற்பட்டுப் பசிய கண்களை உடைய காளை மீது இவர்ந்து பிச்சை ஏற்றவர்.
2184 | பூதப் படையுடையார் பொங்கு நூலார் வேதத் தொழிலார் விரும்ப நின்றார் ஓதத் தொலிகடல்வாய் நஞ்ச முண்டார் பாதத் தொடுகழலார் பைங்க ணேற்றார் |
6.010.3 |
தேவர்களை அடிமையாகக் கொண்டு அவர்களுடைய பொன்னுலகை உடைமையாகக் கொண்டு சுற்றிக் கட்டப்பட்ட கழலைத் திருவடிகளில் அணிந்த பந்தணைநல்லூர்ப் பெருமான் வெள்ளம் ஒலிக்கும் கடலில் தோன்றிய விடத்தை உண்டவர். விரிந்த சடைமேல் வெள்ளிய பிறையினை முடிமாலையாகச் சூடியவர். வேதங்கள் ஓதி வேள்விகள் செய்யும் அந்தணர்கள் தம்மைப் பரம்பொருளாக விரும்ப இருப்பவர். திருமாலாகிய போரிடும் காளையை உடைய அப்பெருமான் பூதப்படை உடையவர். அவர் பூணூல் அணிந்து புலித்தோலை இடையில் அணிந்து பசிய கண்களை உடைய காளை மீது அமர்ந்து பிச்சை ஏற்றவர் ஆவார்.
2185 | நீருலாஞ் சடைமுடிமேல் திங்க ளேற்றார் ஊரெலாம் பலியேற்றார் அரவ மேற்றார் வாருலா முலைமடவாள் பாக மேற்றார் பாருலாம் புகழேற்றார் பைங்க ணேற்றார் |
6.010.4 |
கச்சணிந்த முலைகளையுடைய உமாதேவியாரை இடப்பாகமாக ஏற்ற பந்தணைநல்லூர்ப் பெருமான் கடலில் தோன்றிய நஞ்சினை மிடற்றில் ஏற்றுக் கங்கை உலாவும் சடைமுடி மேல் திங்கள் சூடியவர். மான்குட்டியை ஒருகையில் ஏற்ற அப் பெருமான் அழகிய கை ஒன்றில் நெருப்பை ஏற்று, ஊர்களெல்லாம் பிச்சை ஏற்று, பிச்சையிட வந்த மகளிரின் நிறை எனற பண்பினைக் கவர்ந்தவர். அவர் மழு ஏந்தி, உலகில் பரவிய புகழுக்கு உரியவராய்ப் பசிய கண்களை உடைய காளையை இவர்ந்து பிச்சை ஏற்றவர்.
2186 | தொண்டர் தொழுதேத்துஞ் சோதி யேற்றார் இண்டைச் சடைமுடியார் ஈமஞ் சூழ்ந்த அண்டத்துக் கப்புறத்தார் ஆதி யானார் பண்டை வினையறுப்பார் பைங்க ணேற்றார் |
6.010.5 |
அண்டங்களையும் கடந்த எங்கும் பரவியிருப்பவராய், எல்லோருக்கும் முற்பட்டவராய்ச் சூரியனாகவும் அக்கினியாகவும் இருந்து, அடியவர்களுடைய பழைய வினைகளைச் சுட்டு எரிப்பவராய் உள்ள பந்தணை நல்லூர்ப் பெருமான் அடியார்கள் தம்மைத் தொழுது துதிப்பதற்குக் காரணமான ஞானஒளியை உடையவர். நடுங்காத அழகிய தலையை உடையவர். தூய நீறணிந்தவர். சடையில் முடிமாலை சூடியவர். இடுகாட்டைச் சூழ்ந்திருக்கும் சுடுகாட்டில் இரவு தோறும் கூத்து நிகழ்த்துபவர். அவர் பசிய கண்களை உடைய காளையை இவர்ந்து பிச்சை ஏற்றவர் ஆவார்.
2187 | கடமன்னு களியானை யுரிவை போர்த்தார் மடமன்னு மடியார்தம் மனத்தி னுள்ளார் நடமன்னி யாடுவார் நாகம் பூண்டார் படமன்னு திருமுடியார் பைங்க ணேற்றார் |
6.010.6 |
கானப்பேர் என்ற திருத்தலத்தை விரும்புபவரும், உமாதேவி காண இடையறாது நடம் ஆடுபவரும் ஆகிய பந்தணை நல்லூர்ப் பெருமான், மத யானைத் தோலைப் போர்த்தவர். எம் பெருமான் அருளியவாறன்றித் தாமாக ஒன்றும் அறியாராகிய அடியவர் உள்ளத்தில் உகந்து நிலையாக இருப்பவர். மான் தோலைத் தோளில் அணிந்து, நாகத்தைத் திருமேனியிற் பூண்டு, முடியிலும் பாம்பினைச் சூடி, நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் ஓதுகின்ற நாவினை உடையவர். அவர் பைங்கண் ஏறு ஊர்ந்து பலி ஏற்றவராவர்.
2188 | முற்றா மதிச்சடையார் மூவ ரானார் கற்றார் பரவுங் கழலார் திங்கள் பற்றாகும் பாகத்தார் பால்வெண் ணீற்றார் பற்றார் மதிலெரித்தார் பைங்க ணேற்றார் |
6.010.7 |
பந்தணைநல்லூர்ப் பெருமான் மும்மூர்த்திகளையும் உடனாய் இருந்து செயற்படுத்தலின் மூவர் ஆனவர். அவர் பிறை சூடிய சடையினர். மூவுலகும் துதிக்கும் முதல்வர். சான்றோர் துதிக்கும் திருவடிகளை உடையவர். பிறையையும் கங்கையையும் விரும்பித் தலையில் கொண்டவர். மூங்கில் போன்ற தோள்களை உடைய பார்வதி பாகர். வெள்ளியநீறு அணிபவர். தம் பண்பினால் உலகங்கள் ஆகவும் அவற்றை அழிக்கும் ஊழிக்காலங்களாகவும் உள்ளவர். பகைவர் மதில்களை எரித்த அப்பெருமானார் பைங்கண் ஏறு ஊர்ந்து பலி ஏற்றார்.
2189 | கண்ணமரு நெற்றியார் காட்டார் நாட்டார் பெண்ணமருஞ் சடைமுடியார் பேரொன் றில்லார் மண்ணவரும் வானவரும் மற்றை யோரும் பண்ணமரும் பாடலார் பைங்க ணேற்றார் |
6.010.8 |
தமக்கெனப் பெயர் ஒன்றும் இல்லாதவரும், பிறப்பு இறப்பு பிணி என்பன அற்றவரும், நில உலகத்தவரும் வானுலகத்தவரும், பிரமன் உபபிரமர்களும், உரகர் முதலிய மற்றவர்களும் எதிரே வந்து வணங்கித் துதித்துப் பண்ணோடு கூடிப் பாடுதலை உடையவரும் ஆகிய பந்தணைநல்லூர்ப் பெருமான் கங்கை தங்கும் சடையினர். கண் பொருந்திய நெற்றியை உடையவர். கையில் மழு ஏந்தியவர். காட்டிலும், நாட்டிலும் உகந்தருளியிருக்கும் அப் பெருமான் பைங்கண் விடை ஊர்ந்து பலி ஏற்றார்.
2190 | ஏறேறி யேழுலகு மேத்த நின்றார் நீறேறு மேனியார் நீல முண்டார் ஆறேறு சென்னியார் ஆனஞ் சாடி பாறேறு வெண்டலையார் பைங்க ணேற்றார் |
6.010.9 |
பந்தணை நல்லூர்ப் பெருமான் இடபத்தை இவர்ந்து ஏழுலகும் துதிக்குமாறு நிலையாக இருப்பவர். தேவர்களால் எப்பொழுதும் வழிபடப்படுபவர். நீறணிந்த மேனியர். விடத்தை உண்டவர். வேள்வித்தீயில் இடப்படும் அவியை நுகர்பவர். உள்ளங்கையில் தீயைக் கொண்டு அதனால் அடியார் வினைகளை நீக்குபவர். கங்கை தங்கு சடையினர். ஆன்ஐந்தால் அபிடேகம் செய்யப்படுபவர். தீப்போன்ற விடத்தைக் கக்கும் ஐந்தலை நாகத்தை இடையில் இறுகச்சுற்றியவர். புலால் நாற்றம் கண்டு பருந்துகள் சுற்றி வட்டமிடும் மண்டையோட்டை ஏந்திப் பைங்கண் ஏறு இவர்ந்து பலியேற்றவர் ஆவர்.
2191 | கல்லூர் கடிமதில்கள் மூன்று மெய்தார் நல்லூரார் ஞானத்தார் ஞான மானார் மல்லூர் மணிமலை யின்மே லிருந்து பல்லூர் பலிதிரிவார் பைங்க ணேற்றார் |
6.010.10 |
ஞானத்தை அடியார்க்கு வழங்கு பவராய்த் தாமே ஞானவடிவாகி, நான்மறையும் ஆறு அங்கமும் எப்பொழுதும் ஓதும் நாவினை உடையவராய், நாகை, குடந்தைக் காரோணங்களையும் நல்லூரையும் உகந்தருளியிருப்பவர் பந்தணைநல்லூர்ப் பெருமான்.அவர் கற்கள் நிறைந்த மதில்கள் மூன்றையும் அம்பு எய்து அழித்தவர். வலிமை மிகுந்த அழகிய கயிலாயமலைமேலிருந்து கொடிய அரக்கர் மன்னனாகிய இராவணன்தலைகள் சிதறுமாறு கோபித்த அப்பெருமான் பல ஊர்களிலும் பிச்சைக்காகத் திரிந்தவர். அவர் பைங்கண் ஏறுஇவர்ந்து பணி ஏற்றவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்பந்தணைநல்லூர் - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - பெருமான், பந்தணை, ணேற்றார்பலியேற்றார், கொண்டு, பந்தணைநல்லூர்ப், உடையவர், பிச்சை, இவர்ந்து, பைங்கண், கண்களை, ஏற்றவர், காதலார், தோன்றிய, கடலில், இருப்பவர், நல்லூர்ப், சடையினர், காளையை, பலியேற்றார், சூடியவர், அணிந்து, இடையில், இருந்து, சடைமுடியார், எப்பொழுதும், டாறங்கம், நாவினை, துதிக்கும், நிலையாக, ஒன்றும், றில்லார், ஊர்ந்து, நவின்ற, விரும்ப, சடையில், கங்கையையும், கையில், ணேற்றார், பூண்டார், திருமுறை, திருச்சிற்றம்பலம், தங்கும், சுடுகாட்டில், திருப்பந்தணைநல்லூர், விடத்தை, உண்டவர், உகந்து, நஞ்சினை, கருதாதார், கொடுகொட்டி, அப்பெருமான்