முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.008.திருக்காளத்தி
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.008.திருக்காளத்தி

6.008.திருக்காளத்தி
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காளத்திநாதர்.
தேவியார் - ஞானப்பூங்கோதையாரம்மை.
2161 | விற்றூணொன் றில்லாத நல்கூர்ந் தான்காண் மற்றூணொன் றில்லாத மாசது ரன்காண் பொற்றூண்காண் மாமணிநற் குன்றொப் பான்காண் கற்றூண்காண் காளத்தி காணப் பட்ட |
6.008.1 |
விற்று அப்பணத்தால் உணவு வாங்குவதற்குரிய பொருள் ஒன்றும் தன்பால் கொள்ளாத வறியவனைப் போலக் காட்சி வழங்கி, கச்சி ஏகம்பத்தில் உகந்தருளியிருந்து, பிச்சை எடுத்தலைத் தவிர உணவுக்கு வேறு வழியில்லாத பெருந்திறமையனாய், மயானத்துக் காணப்படுபவனாய், தவறான ஏழு உலகங்களையும் தாங்கி நிற்கும் கற்றூண் போல்வானாய்க் காளத்தியில் காட்சி வழங்கும் சிவகணங்களின் தலைவனாகிய எம்பெருமான் எப்பொழுதும் என் மனக்கண்களுக்குக் காட்சி வழங்கியவாறே உள்ளான்.
2162 | இடிப்பான்காண் என்வினையை ஏகம் பன்காண் முடிப்பான்காண் மூவுலகு மாயி னான்காண் படித்தான் தலையறுத்த பாசு பதன்காண் கடித்தார் கமழ்கொன்றைக் கண்ணி யான்காண் |
6.008.2 |
என் வினைகளை அழிப்பவனாய், ஏகம்பத்தில் உறைபவனாய், அணிகலன்களாக எலும்புகளையே அணிபவனாய், எல்லா உலக நிகழ்ச்சிகளையும் வகுத்து அமைப்பவனாய், மூவுலகங்களிலும் வியாபித்திருப்பவனாய், பஞ்சாதியாக முறையாக வழு ஏதுமின்றி வேதங்களை ஓதும் பிரமனின் ஐந்தாம் தலையை நீக்கிய பசுபதி என்ற அடையாளங்களை உடையவனாய், பராய்த்துறை. பழனம், பைஞ்ஞீலி இவற்றில் உகந்தருளியிருப்பவனாய்க் கொன்றைப் பூவினாலாய மார்பு - மாலை, முடிமாலை இவற்றை அணிபவனாகிய காளத்திப் பெருமான் என்கண் உள்ளான்.
2163 | நாரணன்காண் நான்முகன்காண் நால்வே தன்காண் பூரணன்காண் புண்ணியன்காண் புராணன் தான்காண் சாரணன்காண் சந்திரன்காண் கதிரோன் தான்காண் காரணன்காண் காளத்தி காணப் பட்ட |
6.008.3 |
நாராயணாய், பிரமனாய், நான்கு வேதங்களையும் ஓதுபவனாய், ஞானப் பெருங்கடலின் அக்கரையை அடையச் செய்யும் படகு போன்ற நிறைவானவனாய்ப் புண்ணியனாய்ப் பழையோனாய், முறுக்குண்ட சடை மீது கங்கையை ஏற்ற தூயோனாய், எங்கும் இயங்குபவனாய்ச் சந்திர சூரியர்களை உடனாய் இருந்து செயற்படுப்போனாய், நற்பண்புகளில் தனக்கு உவமை இல்லாதானாய், மெய்யுணர்வுடையோருக்குத் தானே முதற்பொருளாகத் தோன்றுபவனாய்க் காளத்தியில் காட்சி வழங்கும் சிவகணத் தலைவனாகிய எம்பெருமான் என்கண் உள்ளான்.
2164 | செற்றான்காண் என்வினையைத் தீயாடி காண் குற்றான்காண் ஏகம்பம் மேவி னான்காண் சொற்றான்காண் சோற்றுத் துறையு ளான்காண் கற்றான்காண் காளத்தி காணப் பட்ட |
6.008.4 |
என் தீவினைகளை அழித்துத் தீயின்கண் கூத்து நிகழ்த்தித் தன்னைத் தியானிப்பவர்களுக்கு நெருக்கமானவனாய், உமா தேவியின் கணவனாய், தேவர்கள் துதிக்கும் வேத வடிவினனாய், மன்மதனுடைய அம்பு செலுத்தும் ஆற்றலைச் சாம்பலாக்கக் கற்றவனாய், ஒற்றியூர், ஏகம்பம், சோற்றுத்துறை என்ற திருத்தலங்களில் உறை பவனாய்க் காளத்தியில் காணப்படும் கணநாதன் என்கண் உள்ளான்.
2165 | மனத்தகத்தான் தலைமேலான் வாக்கி னுள்ளான் இனத்தகத்தான் இமையவர்தஞ் சிரத்தின் மேலான் புனத்தகத்தான் நறுங்கொன்றைப் போதி னுள்ளான் கனத்தகத்தான் கயிலாயத் துச்சி யுள்ளான். |
6.008.5 |
மனத்திலும் தலைமேலும் சொற்களிலும் உள்ளானாய், மனம் மெய்மொழிகளைச் செயற்படுத்தித் தன் திருவடிகளை வாயாரப்பாடும் தொண்டர் இனத்தானாய். தேவர்கள் தலை மேலானாய், ஏழுலகங்களையும் கடந்தவனாய், இவ்வுலகில் செவ்விதாகிய பொன் போன்ற நல்ல விளைவை நல்கும் குறிஞ்சி முதலிய நிலத்தில் உள்ளானாய், நறிய கொன்றைப் பூவில் உறைபவனாய், மலை நெருப்பு காற்று மேக மண்டலம் இவற்றில் உடனாய் இருந்து இவற்றைச் செயற்படுப்பவனாய்க் கயிலாயத்து உச்சி உள்ளானாகிய காளத்திப் பெருமான் என்கண் உள்ளான்.
2166 | எல்லாம்முன் தோன்றாமே தோன்றி னான்காண் பொல்லாப் புலனைந்தும் போக்கி னான்காண் நல்லவிடை மேல்கொண்டு நாகம் பூண்டு கல்லாடை மேற்கொண்ட காபா லிகாண் |
6.008.6 |
ஏனைய பொருள் தோன்றுதற்கு முன்னும் இருப்பவனாய், ஏகம்பத்து விரும்பி உறைபவனாய், தேவர்கள் துதிக்கப் பொறிவாயில் ஐந்து அவித்தவனாய், முறுக்கேறிய சடையின் மேல் பாய்ந்த கங்கையை அதன்கண் நிரப்பியவனாய், பெரிய காளைமீது ஏறிப் பாம்புகளைப் பூண்டு குளிர்ந்த மண்டை யோட்டை ஏந்தி, நாணத்தைக் காப்பதொரு பொருளாகத்துறந்தார் அணியும் காவியாடை உடுத்துக் காபாலம் என்னும் கூத்தாடும் காளத்திநாதன் என் கண் உள்ளான்.
2167 | கரியுருவு கண்டத்தெங் கண்ணு ளான்காண் எரிபவள வண்ணன்காண் ஏகம் பன்காண் திரிபுரங்கள் தீயிட்ட தீயா டிகாண் கரியுரிவை போர்த்துகந்த காபா லிகாண் |
6.008.7 |
நீலகண்டனாய், எமக்குக் காட்சி வழங்குபவனாய், அருளால் ஏற்ற பெற்றியின் பல்வேறு வடிவு உடையவனாய், வண்டுகள் நுகரும் கொன்றைப் பூவினை அணிந்தவனாய், ஒளிவீசும் பவள வண்ணனாய், ஏகம்பனாய், எட்டுத் திசைகளும் தானேயாய பண்பினனாய், முப்புரங்களையும் தீக்கொளுவியவனாய். நெருப்பிடையே கூத்து நிகழ்த்துபவனாய், என் உள்ளத்திலிருந்து தீவினைகளை அழிப்பவனாய், யானைத் தோலைப் போர்த்து மகிழ்ந்து காபாலக் கூத்து ஆடுபவனாய்க் காளத்திப் பெருமான் என்கண் உள்ளான்.
2168 | இல்லாடிச் சில்பலிசென் றேற்கின் றான்காண் வில்லாடி வேடனா யோடி னான்காண் மல்லாடு திரள்தோள்மேல் மழுவா ளன்காண் கல்லாலின் கீழிருந்த காபா லிகாண் |
6.008.8 |
இல்லங்கள் தோறும் சென்று அவர்கள் வழங்கும் சிறு அளவினவாகிய உணவுகளை ஏற்கின்றவனாய், தேவர்கள் தொழுது வழிபடப்படுகின்றவனாய், வில்லை ஏந்தி வேடன் உருக்கொண்டு பன்றிப்பின் ஓடியவனாய். பூணூலும் பூண்ட மார்பினனாய், வலிய திரண்ட தோளில் மழுப்படை ஏந்தியவனாய், பார்வதி கணவனாய், மகிழ்வோடு ஒரு காலத்தில் கல்லால மரத்தின் கீழ்த் தென் முகக் கடவுளாய் இருந்தவனாய்க் காபாலக்கூத்து ஆடுபவனாய்க் காளத்தியில் உகந்தருளியிருக்கும் சிவபெருமான் என்கண் உள்ளான்.
2169 | தேனப்பூ வண்டுண்ட கொன்றை யான்காண் ஞானப்பூங் கோதையாள் பாகத் தான்காண் வானப்பே ரூரு மறிய வோடி கானப்பே ரூரான்காண் கறைக்கண் டன்காண் |
6.008.9 |
வண்டுகள் நுகரும் தேனை உடைய கொன்றை சூடியாய்த் திரு ஏகம்பத்தனாய், தேன் ஒழுகும் பூக்களை அணிந்த ஞானப்பூங்கோதை அம்மையை இடப்பாகமாகக் கொண்டவனாய், நமக்கு இனியவனாய், ஞானப் பிரகாசனாய், ஊழியிறுதியில் வானமும் உலகும் அழியுமாறு விரைந்து ஒடுக்க வல்லவனாய், வண்டுகள் பொருந்திய சோலைகளை உடைய திருக்கானப்பேரூரில் உறைபவனாய் நீலகண்டனாய்க் காளத்திப் பெருமான் என்கண் உள்ளான்.
2170 | இறைவயன்காண் ஏழுலகு மாயி னான்காண் குறையுடையார் குற்றேவல் கொள்வான் தான்காண் மறைவுடைய வானோர் பெருமான் தான்காண் கறையுடைய கண்டத்தெங் காபா லிகாண் |
6.008.10 |
யாவருக்கும் முதல்வனாய், ஏழுலகும், ஏழ் கடலும் இவற்றைச் சுற்றிய மலைகளும் ஆகிப் பலகுறைபாடுகளையும் உடைய உயிர்கள் தனக்குச் செய்யும் குற்றறேவல்களை ஏற்றுக் குடமூக்குத் தலத்திலுள்ள கீழ்க்கோட்டத்தை விரும்பி, வேதம் ஓதும் வானோருக்கும் தலைவனாய்த் திருமறைக் காட்டுத் தலத்தில் தங்கும் நீலகண்டனாய்க்கறைக் கண்டனாய்க் காபாலக்கூத்து ஆடும் காளத்திப் பெருமான் என்கண் உள்ளான்.
2171 | உண்ணா வருநஞ்ச முண்டான் தான்காண் பண்ணாரப் பல்லியம் பாடி னான்காண் அண்ணா மலையான்காண் அடியா ரீட்டம் கண்ணாரக் காண்பார்க்கோர் காட்சி யான்காண் |
6.008.11 |
பிறர் உண்ண இயலாத கொடிய நஞ்சினை உண்டவனாய், ஊழித் தீயை ஒப்ப அழிப்பதனைச் செய்பவனாய்ப் பண்களுக்குப் பொருந்தப் பல வாச்சியங்களை இயக்கிப் பாடியவனாய், தான் ஓதிய நான்கு வேதங்களில் கூறப்பட்ட இறைமைப் பண்புகளை உடையவனாய், அண்ணாமலையானாய், அடியார் கூட்டம் தன் திருவடிகளைத் தொழுது போற்றுமாறு அருளுபவனாய், தன்னை மனக்கண்களால் காண்பவர்களுக்கு அரிய காட்சிப் பொருளாய் இருப்பவனாய் உள்ள காளத்திப் பெருமான் என்கண் உள்ளான்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்காளத்தி - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - உள்ளான், யானவனென், என்கண், பெருமான், காட்சி, காளத்திப், காளத்தியில், தேவர்கள், லிகாண்காளத்தி, காளத்தி, உறைபவனாய், கூத்து, கொன்றைப், உடையவனாய், வழங்கும், அவனென், வண்டுகள், கொன்றை, தீவினைகளை, உள்ளானாய், இவற்றைச், கணவனாய், விரும்பி, ஆடுபவனாய்க், தொழுது, காபாலக்கூத்து, மகிழ்ந்து, நுகரும், ஏகம்பம், கண்டத்தெங், வண்டுண்ட, இருப்பவனாய், பட்டகணநாதன்காண், கணநாதன், பொருள், ஏகம்பத்தில், தலைவனாகிய, தாங்கி, பிச்சை, திருமுறை, திருச்சிற்றம்பலம், றில்லாத, எம்பெருமான், யான்காண்காளத்தி, கங்கையை, உடனாய், இருந்து, செய்யும், நான்கு, அழிப்பவனாய், இவற்றில், திருக்காளத்தி, சிந்தை