முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.007.திருவாஞ்சியம்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.007.திருவாஞ்சியம்
2.007.திருவாஞ்சியம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வாஞ்சியநாதர்.
தேவியார் - வாழவந்தநாயகியம்மை.
1536 | வன்னி
கொன்றைமத மத்த பொன்னி யன்றசடை யிற்பொலி தென்ன வென்றுவரி வண்டிசை என்னை யாளுடை யானிட |
2.007. 1 |
வன்னியிலை கொன்றைமலர் ஊமத்தம் மலர் வில்வம் ஆகியவற்றைப் பொன்போன்ற தம் சடையில் சூடிய பழமையாளரும், என்னை அடிமையாகக் கொண்டவரும் ஆகிய சிவபிரான் தமது இருப்பிடமாகக் கொண்டு விரும்பிய ஊர், வரிவண்டுகள் தென்ன என்ற ஒலிக் குறிப்போடு இசைபாடும் திருவாஙசியமாகும்.
1537 | கால
காலர்கரி கானிடை மேலர் வேலைவிட முண்டிருள் மாலை கோலமதி மாடமன் ஞாலம் வந்து பணியப்பொலி |
2.007. 2 |
காலனுக்குக் காலர்; கரிந்த இடுகாட்டில் சிறந்த நடனம் புரிபவர்; எப்பொருட்கும் எல்லா உயிர்கட்கும் மேலானவர்; கடலிடைத்தோன்றிய நஞ்சினை உண்டு இருள்கின்ற கண்டத்தை உடையவர்; அச்சிவபிரான், மாலைக்காலத்தே தோன்றும் அழகிய மதி உச்சியில் பொருந்தும் மாடவீடுகள் நிறைந்த திருவாஞ்சியத்தில் உள்ள அழகிய கோயிலை, உலகோர் வந்து தம்மைப் பணிந்து அருள் பெறுமாறு விரும்பி விற்றிருந்தருளுகின்றார்.
1538 | மேவி
லொன்றர் விரிவுற்ற நாவி னாலருட லஞ்சின தேவி லெட்டர்திரு வாஞ்சிய பாவந் தீர்ப்பர்பழி போக்குவர் |
2.007.3 |
விரும்பி வழிபடின் நீ நான் என்ற வேற்றுமை யின்றி அந்நியம் ஆவர். ஒன்றாய் அரும்பிய அவர் பலவாய் விரியுமிடத்து, சிவம் சத்தி என இரண்டாவர். ஒன்றாய் வேறாய் உடனாய் மூன்றாவர். நாவினால் நான்கு வேதங்களை அருளியவர். பரை ஆதி இச்சை ஞானம் கிரியை என்னும் ஐவகைச் சத்தியாகிய திருவுருவை உடையவர். ஆறுகுணங்களை உடையவர். ஏழு ஓசை வடிவினர். அட்டமூர்த்தங்களாய் விளங்குபவர். இத்தகையவராய்த் திருவாஞ்சியத்தில் எழுந்தருளியுள்ள செல்வனார் தம் அடியவர்களின் பாவங்களைத் தீர்ப்பர். அவர் அடியவர்கட்கு வரும் பழியைப் போக்குபவர்.
1539 | சூல
மேந்திவளர் கையினர் சால நல்லபொடிப் பூசுவர் சீல மேவுபுக ழாற்பெரு ஆல முண்டவடி கள்ளிடம் |
2.007.4 |
சூலம் ஏந்திய நீண்ட கையினை உடையவர்; தம் திருமேனிக்குப் பொருத்தமாக நல்ல திருநீற்றை மிகுதியாகப் பூசுபவர்; சிறந்த வேத வசனங்களைப் பேசுபவர். ஆலகாலம் உண்டருளிய அவ்விறைவர், ஒழுக்கத்தால் சிறந்தோர் வாழ்வதால் புகழ்பெற்ற திருவாஞ்சியத்தை இடமாகக் கொண்டு அமர்ந்துள்ளார்.
1540 | கையி
லங்குமறி யேந்துவர் தையல் பாகமுடை யாரடை செய்ய மேனிக்கரி யமிடற் தையர் பாதமடை வார்க்கடை |
2.007.5 |
கையின்கண், விளங்கும் மான் கன்றை ஏந்தியவர்; காந்தள் இதழ் போன்ற மெல்லிய விரல்களை உடைய பார்வதி தேவியைத் தமது பாகமாகக கொண்டவர்; பகைவராகிய திரிபுரத்து அசுரரின் முப்புரங்களை அழித்தவர்; சிவந்த திருமேனியையும் கரிய மிடற்றையும் உடையவர்; இத்தகையோராய்த் திருவாஞ்சியத்துள் எழுந்தருளிய தலைவராகிய சிவபிரான் திருவடிகளை அடைபவர்களைப் போக்கற்கு அரிய நோய்கள் எவையும் அடையா.
1541 | அரவம்
பூண்பரணி யுஞ்சிலம் இரவி னல்லபலி பேணுவர் பரவு வார்வினை தீர்க்கநின் மருவி யேத்தமட மாதொடு |
2.007.6 |
அரவை அணிகலனாகப் பூண்பவர்; காலில் அணியும் சிலம்பு ஆரவாரிக்க வீடுகள் தோறும் நாணிலராய் இரவிற் சென்று நல்ல பலியைப் பெறுபவர்; தம் திருப் பெயர்களைக் கூறிப் பரவுவார் வினைகளைத் தீர்க்கத் திருவாஞ்சியத்துள் நாம் சென்று வழிபடுமாறு உமையம்மையாரோடு எழுந்தருளியுள்ளார்.
1542 | விண்ணி
லானபிறை சூடுவர் கண்ணி னாலநங் கன்னுட பண்ணி லானவிசை பாடன்மல் தண்ணலார் தம்மடி போற்றவல் |
2.007.7 |
வானகத்தே தோன்றிய பிறைமதியைத் தம் திருமுடியில் தங்கி விளங்குமாறு சூடியவர்; நெற்றிக் கண்ணால் மன்மதனின் உடலை நீறாக்கியவர். பண்களில் பொருந்திய இசையோடு பாடும் புகழ்பொருந்திய திருவாஞ்சியத்துள் விளங்கும் அவ்வண்ணலாரின் திருவடியைப் போற்றவல்லார்க்கு அல்லல் இல்லை.
1543 | மாட
நீடுகொடி மன்னிய வாடியூ டவரை யாலடர்த் வேட வேடர்திரு வாஞ்சிய பாட நீடுமனத் தார்வினை |
2.007. 8 |
நீண்ட கொடிகள் நிலைத்துள்ள மாட வீடுகளைக் கொண்ட தென்னிலங்கைக்கு அரசனாகிய இராவணன் வாடி வருந்தக் கயிலை மலையால் அவனை அடர்த்துப்பின் அருள்செய்தவர்; அருச்சுனன் பொருட்டு வேட்டுவக் கோலம் தாங்கியவர். திருவாஞ்சியத்துள் எழுந்தருளிய வேந்தர். அவ்விறைவரைப்பாட எண்ணுவார், வினை, பற்று ஆகியன நீங்கப் பெறுவர்.
1544 | செடிகொ
ணோயினடை யார்திறம் கடிய கூற்றமுங் கண்டக நெடிய மாலொடய னேத்தநின் தடிகள் பாதமடைந் தாரடி |
2.007.9 |
நீண்டுயர்ந்த திருமாலும் பிரமனும் தம்மை வணங்குமாறு ஓங்கிநின்ற திருவாஞ்சியத்து அடிகளாகிய சிவபிரான் திருவடிகளை அடைந்த அடியவர்களின் திருவடிகளை அடைந்தவர்கள், துன்பம் தரும் நோய்களை அடையார். துன்புறுத்தும் தீவினைகளால் மாறுபடார். கொடிய கூற்றுவனும் அவர்களைக்கண்டு அஞ்சி அகல்வான். சிவகதி அவர்களைத் தேடி வரும்.
1545 | பிண்ட
முண்டுதிரி வார்பிரி மிண்டர் மிண்டுமொழி மெய்யல வண்டு கெண்டிமரு வும்பொழில் தண்ட வாணனடி கைதொழு |
2.007.10 |
பிறர் திரட்டித்தந்த சோற்றை உண்டு திரியும் சமணரும், செந்நிற ஆடையைப் போர்த்துழலும், அவரின் வேறுபட்ட புத்தரும் ஆகிய மிண்டர்கள் வலிந்துகூறும் உரைகள் மெய்யல்ல. பொய்யிலியாகிய எம் இறைவன் வண்டுகள் கிளறி உண்ணும் தேன் நிறைந்த மலர்களை உடைய பொழில் சூழ்ந்த திருவாஞ்சியத்துள் எழுந்தருளியுள்ளான். அண்டம் முழுவதும் வாழும் அவன் திருவடிகளைக் கைகளால் தொழுது வணங்குவார்க்கு அல்லல் இல்லை.
1546 | தென்றல்
துன்றுபொழில் சென்றணை தென்று நின்றவிறை யானை நன்று காழிமறை ஞானசம் ஒன்று முள்ளமுடை யாரடை |
2.007.11 |
தென்றல், பொழிலைப் பொருந்தி அதன் மணத்துடன் சென்று வீசும் திருவாஞ்சியத்துள் என்றும் நீங்கா துறையும், இறைவனியல்பை உணர்ந்து அவனடிகளை ஏத்தித் துதித்தலால், நன்மை தரும் காழிப்பதியுள் மறைவல்லவனாய்த் தோன்றிய ஞானசம்பந்தனின் இச்செந்தமிழ்ப் பாடல்களில் ஈடுபடும் மனம் உடையவர்கள், உயரிய வீடு பேற்றை அடைவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவாஞ்சியம் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருவாஞ்சியத்துள், வாஞ்சியத், உடையவர், வாஞ்சியம், றார்திரு, சென்று, திருவடிகளை, சிவபிரான், தென்றல், குந்திரு, விளங்கும், அல்லல், யல்லலே, தோன்றிய, எழுந்தருளிய, அடியவர்களின், யார்கட்கே, சிறந்த, நிறைந்த, கொண்டு, திருச்சிற்றம்பலம், திருமுறை, திருவாஞ்சியத்தில், விரும்பி, திருவாஞ்சியம், தம்மடி, செல்வனார், வாஞ்சிய, ஒன்றாய்