முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.006.திருவையாறு
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.006.திருவையாறு
2.006.திருவையாறு
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செம்பொன்சோதீசுரர்.
தேவியார் - அறம்வளர்த்தநாயகியம்மை.
1524 | கோடல்கோங்
கங்குளிர் கூவிள மாலை ஓடுகங் கையொளி வெண்பிறை சூடு பாடல் வீணைமுழ வங்குழன் மொந்தைபண் ஆடு மாறுவல் லானுமை யாறுடை |
2.006.1 |
வெண்காந்தள், கோங்கம் குளிர்ந்த வில்வ மாலை சீர்மிகு கங்கை, ஒளி வெண்பிறை ஆகியனவற்றை முடியிற் சூடிய ஒருவனும் பாடற்குரிய வீணை, முழவம், குழல், மொந்தை ஆகியன தாளத்தோடு ஒலிக்க ஆடுதலில் வல்லவனும் ஆகிய இறைவன் ஐயாறுடைய ஐயனாவான்.
1525 | தன்மை
யாருமறி வாரிலை தாம்பிற பின்னு முன்னுஞ்சில பேய்க்கணஞ் சூழத் துன்ன வாடை யுடுப்பர் சுடலைப்பொடி அன்னமா லுந்துறை யானுமை யாறுடை |
2.006. 2 |
அன்னங்கள் ஒலிக்கும் ஐயாறுடைய ஐயனின் தன்மையை அறிபவர் எவரும் இல்லை. அத்தகைய இறைவர் பிறர் எள்ளுமாறு சில பேய்க்கணங்கள் பின்னும் முன்னும் சூழத் திரிவார். கந்தலான ஆடையை இடையிலே கட்டியிருப்பார். இடுகாட்டின் சாம்பலை மேனிமேல் பூசுவார்.
1526 | கூறு
பெண்ணுடை கோவண முண்பது மாறி லாருங்கொள் வாரிலை மார்பில் ஏறு மேறித் திரி வ ரிமை யோர்தொழு ஆறு நான்குஞ்சொன் னானுமை யாறுடை |
2.006. 3 |
ஐயாறுடைய ஐயன், ஒரு கூறாக உமையம்மையைக் கொண்டவர்: கோவண ஆடை உடுத்தவர்: வெள்ளிய தலையோட்டில் பிச்சையேற்று உண்பவர். மார்பில் அணிந்துள்ள அணிகலன்களோ பண்டமாற்றாகப் பிறகொள்வார் இல்லாத ஆமை யோடு, பன்றிக்கொம்பு, பாம்பு முதலானவை. இடபத்தில் ஏறித்திரிபவர். தேவர் பலரும் வணங்க நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் அருளியவர்.
1527 | பண்ணி
னல்லமொழி யார்பவ ளத்துவர் எண்ணி னல்லகுணத் தாரிணை வேல்வென்ற வண்ணம் பாடிவலி பாடித்தம் வாய்மொழி அண்ணல் கேட்டுகந் தானுமை யாறுடை |
2.006. 4 |
பண்ணிசையினும் இனிய மொழி பேசுபவரும், பவளம் போன்று சிவந்த வாயினை உடையவரும் எண்ணற்ற நல்ல குணங்களை உடையவரும், வேல் இணை போன்ற விழியினரும் ஆகிய இளமகளிர், தம் தன்மைகளையும், வலிய வீரச் செயல்களையும் தம் வாய் மொழியால் பாடி வணங்க அவற்றைக் கேட்டு உகந்தருளுபவர், ஐயாறுடைய ஐயன்.
1528 | வேன
லானை வெருவவுரி போர்த்துமை வானை யூடறுக் கும்மதி சூடிய தேனெய் பாறயிர் தெங்கிள நீர்கரும் ஆனஞ் சாடுமுடி யானுமை யாறுடை |
2.006.5 |
கொடிய யானையைப் பலரும் வெருவுமாறும் உமையம்மை அஞ்சுமாறும் கொன்று, அதன் தோலை உரித்துப் போர்த்தவரும், வானத்தைக் கிழித்துச் செல்லும் மதியை முடியில் சூடிய வலியரும், தேன், நெய், பால், தயிர், இளநீர், கரும்பின் சாறு, ஆனைந்து ஆகியவற்றை ஆடும் முடியினரும் ஆகிய பெருமைகட்கு உரியவர் ஐயாறுடைய ஐயன் ஆவார்.
1529 | எங்கு
மாகிநின் றானு மியல்பறி மங்கை பாகங்கொண் டானு மதிசூடு பங்க மில்பதி னெட்டொடு நான்குக் அங்க மாறுஞ்சொன் னானுமை யாறுடை |
2.006.6 |
எங்கும் நிறைந்தவனும் பிறர் அறியவாராத இயல்பினனும், உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவனும் மதிசூடிய மைந்தனும் குற்றமற்ற பதினெண் புராணங்கள், நான்கு வேதங்கள் அவற்றை அறிதற்குதவும் ஆறு அங்கங்கள் ஆகியவற்றை உரைத் தருளியவனும் ஆய பெருமான், ஐயாறுடைய ஐயனாவான்.
1530 | ஓதி
யாருமறி வாரிலை யோதி சோதி யாய்நிறைந் தான்சுடர்ச் சோதியுட் வேதி யாகிவிண் ணாகிமண் ணோடெரி ஆதி யாகிநின் றானுமை யாறுடை |
2.006.7 |
யாவராலும் ஓதி அறிதற்கு அரியவனும், உயிர்கள்தாமே அறிதற்கு இயலாதவனாயினும் அவனே ஓதுவித்தும் உணர்வித்தும் சோதியாக நிறைந்துள்ளவனும், சுடர்ச் சோதியுட் சோதியாக விளங்குபவனும், வேத வடிவினனும் விண், மண், எரி, காற்று ஆகிய உலகின் முதல்வனாய் விளங்குபவனும் ஆகி பெருமான் ஐயாறுடைய ஐயனாவான்.
1531 | குரவ
நாண்மலர் கொண்டடி யார்வழி விரவு நீறணி வார்சில தொண்டர் பரவி நாடொறும் பாடநம் அரவ மார்த்துகந் தானுமை |
2.006. 8 |
ஐயாறுடைய ஐயன் அடியவர் அன்றலர்ந்த குரா மலர்களைக் காண்டு வழிபடவும், திருநீற்றை மேனியெங்கும் விரவிப் பூசிய தொண்டர்கள் வியந்து போற்றவும், அரவாபரணனாய் எழுந்தருளியுள்ளான். நம் பாவங்கள் அவனை வழிபட நீங்குவதால், நாமும் நாளும் அவனைப் பரவி ஏத்துவோம்.
1532 | உரைசெய்
தொல்வழி செய்தறி யாவிலங் வரைசெய் தோளடர்த் துமதி சூடிய கரைசெய் காவிரி யின்வட பாலது அரைசெய் மேகலை யானுமை யாறுடை |
2.006. 9 |
வேதங்கள் உரைத்த பழமையான நெறியை மேற்கொள்ளாத இலங்கைமன்னன் இராவணனைக் கயிலை மலைக்கீழ் அகப்படுத்தி அவனது தோள் வலிமையை அடர்த்தவரும், மதிசூடிய மைந்தரும் காவிரி வடகரையில் விளங்கும் ஐயாற்றில் மகிழ்வோடு இடையில் மேகலாபரணம் புனைந்து உறைபவரும் ஆகிய பெருமானார், ஐயாறுடைய ஐயன் ஆவார்.
1533 | மாலுஞ்
சோதி மலரானு காலங் காம்பு வயிரங் கோல மாய்க்கொழுந் தீன்று ஆல நீழலு ளானுமை |
2.006.10 |
ஐயாறுடைய ஐயன் திருமாலும் நான்முகனும் அறிய இயலாத சத்திய வடிவானவன். அவனது கால் போலத் திரண்ட அழகிய காம்பினையும் கழல் போன்ற கொழுந்தினையும் பவளம் போன்ற பழங்களையும் ஈன்ற திரண்ட கல்லால மரநிழலில் எழுந்தருளியுள்ளான்.
1534 | கையி
லுண்டுழல் வாருங் மெய்யைப் போர்த்துழல் வாரு மைகொள் கண்டத்தெண்டோண்முக்க ணான்கழல் ஐயந் தேர்ந்தளிப் பானுமை யாறுடை |
2.006. 11 |
கையில் உணவை வாங்கி உண்டு உழலும் சமணரும், நாற்றம் அடிக்கும் துவராடையால் உடலைப் போர்த்துத்திரியும் புத்தரும் கூறும் உரைகள் மெய்யல்ல என்பதை அறிந்து, நீலகண்டமும் எண் தோளும் மூன்று கண்களும் உடைய சிவனே பரம்பொருள் எனத் தேர்ந்து வாழ்த்த, ஐயந்தேரும் ஐயாறுடைய ஐயன் நம்மைக் காத்தருளுவான்.
1535 | பலிதி ரிந்துழல்
பண்டங்கன் மேயவை கலிக டிந்தகை யான்கடற் காழியர் ஒலிகொள் சம்பந்த னொண்டமிழ் பத்தும்வல் மலிகொள் விண்ணிடை மன்னிய சீர்பெறு |
2.006. 12 |
பலி ஏற்று உழல்பவனாய், பாண்டரங்கக் கூத்தாடும் பெருமான் எழுந்தருளிய திருவையாற்றினை உலகில் கலிவாராமல் கடியும் வேள்வி செய்தற்கு உரிமை பூண்ட திருக்கரங்களை உடைய, கடலை அடுத்துள்ள காழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் இசையொலி கூடிய சிறந்த தமிழால் பாடிய இப்பதிகப் பாடல்களை வல்லவர்கள் புகழ் மலிந்த வானுலகில் நிலையான சிறப்பைப் பெறுவார்கள்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவையாறு - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - ஐயாறுடைய, யாறுடை, ஐயனாவான், யானுமை, பெருமான், வாரிலை, திரண்ட, வேதங்கள், மதிசூடிய, மைந்தனும், சோதியுட், அறிதற்கு, விளங்குபவனும், ஆகியவற்றை, காவிரி, சோதியாக, எழுந்தருளியுள்ளான், தானுமை, யாருமறி, வெண்பிறை, திருச்சிற்றம்பலம், திருமுறை, மார்பில், னானுமை, உடையவரும், திருவையாறு, நான்கு, பலரும், மைந்தனார்