முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.026.திருநெல்வாயில்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.026.திருநெல்வாயில்
![](../images/lingam01.gif)
2.026.திருநெல்வாயில்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அரத்துறைநாதர்.
தேவியார் - ஆனந்தநாயகியம்மை.
1742 | புடையி
னார்புள்ளி கால்பொ ருந்திய மடையி னார்மணி நீர்நெல் வாயிலார் நடையி னால்விரற் கோவ ணந்நயந் துடையி னாரெம துச்சி யாரே. |
2.026. 1 |
வயற்பக்கங்களில் நண்டுகளை உடையதும், வாய்க்கால்களை அடுத்துள்ள நீர்மடையில் நீலமணி போன்று தௌந்த நீரை உடையதுமான நெல்வாயில் இறைவர் ஒழுக்கத்திற்குக்காட்டாக நால்விரல் அளவுள்ள கோவண ஆடையை உடையவர். அவர் எம் முடிமேல் திகழும் மாண்பினர்.
1743 | வாங்கி
னார்மதிண் மேற்க ணைவெள்ளந் தாங்கி னார்தலை யாய தன்மையர் நீங்கு நீரநெல் வாயி லார்தொழ ஓங்கி னாரெம துச்சி யாரே. |
2.026. 2 |
முப்புரங்கள் மீது கணை தொடுக்க வில்லினை, வளைத்தவர். பெருகிவந்த கங்கைநீரைச் சடைமிசைத் தாங்கியவர். மேலான தன்மைகளை உடையவர். ஓடும் நீரினைஉடைய நெல்வாயில் என்னும் தலத்தினர். நாம் தொழுமாறு புகழால் ஓங்கி விளங்குபவர். அவர் எம்முடிமேல் விளங்கும் மாண்பினர்.
1744 | நிச்ச
லேத்துநெல் வாயி லார்தொழ இச்சை யாலுறை வாரெம் ஈசனார் கச்சை யாவதோர் பாம்பி னார்கவின் இச்சை யாரெம துச்சி யாரே. |
2.026. 3 |
நாள்தோறும் நாம் ஏத்தவும் தொழவும் நெல் வாயிலில் இச்சையோடு விளங்குபவர். எம் ஈசர். பாம்பைக் கச்சையாக அணிந்தவர். உயிர்கட்கு இச்சை உண்டாதற் பொருட்டு, தான் இச்சா சக்தியோடு விளங்குபவர். அவர் எம் உச்சியில் விளங்கும் மாண்பினர்.
1745 | >மறையி
னார்மழு வாளி னார்மல்கு பிறையி னார்பிறை யோடி லங்கிய நிறையி னாரநெல் வாயிலார் தொழும் இறைவ னாரெம துச்சி யாரே. |
2.026.4 |
வேதங்களை அருளியவர். மழுவாகிய வாளினை உடையவர். சடைமுடியில் பொருந்திய பிறையினை உடையவர். வானளாவ வளர்ந்து, நிறைந்து விளங்கும் நெற்பயிர் விளையும் வயல்களை வாயிலில் உடையதால், நெல்வாயில் எனப்பெற்ற தலத்தில் எழுந்தருளியிருப்பவர். நம்மால் தொழத்தகும் இறைவர். அவர் எமது முடிமிசைத் திகழ்பவர்.
1746 | விருத்த
னாகிவெண் ணீறு பூசிய கருத்த னார்கன லாட்டு கந்தவர் நிருத்த னாரநெல் வாயின் மேவிய ஒருத்த னாரெம துச்சி யாரே. |
2.026. 5 |
முதியவராய்த் திருவெண்ணீறு அணிந்துள்ள தலைவர். தீயில் ஆடுதலை உகந்தவர். நடனம் புரிபவர். நெல்வாயில் என்னும் தலத்தில் விளங்கும் ஒருவர் என்னும் பெயருக்கு உரியவர். அவர் எமது உச்சியில் விளங்குபவர்.
1747 | காரி
னார்கொன்றைக் கண்ணி யார்மல்கு பேரி னார்பிறை யோடி லங்கிய நீரி னாரநெல் வாயி லார்தொழும் ஏரி னாரெம துச்சி யாரே. |
2.026. 6 |
கார்காலத்தில் மலரும் கொன்றைமலரால் இயன்ற கண்ணியைச் சூடியவர். நிறைந்த புகழை உடையவர். பிறைசூடி விளங்கும் இயல்பினர். நெல் வாயிலில் உறைபவர். நாம் தொழத்தகும் அழகர். அவர் எமது உச்சியில் விளங்குபவர்.
1748 | ஆதி
யாரந்த மாயி னார்வினை கோதி யார்மதில் கூட்ட ழித்தவர் நீதி யாரநெல் வாயி லார்மறை ஓதி யாரெம துச்சி யாரே. |
2.026.7 |
உலகிற்கு ஆதிஅந்தமாக விளங்குபவர். குரோதமான செயல்களைப் புரிந்த அசுரர்களின் மதில் கூட்டங்களை அழித்தவர். நீதியை உடையவர். நெல் வாயிலில் எழுந்தருளியிருப்பவர். மறைகளை ஓதியவர். அவர் எமது உச்சியில் உறைபவர்.
1749 | பற்றி
னானரக் கன்க யிலையை ஒற்றி னாரொரு கால்வி ரலுற நெற்றி யாரநெல் வாயி லார்தொழும் பெற்றி யாரெம துச்சி யாரே. |
2.026.8 |
கயிலைமலையைப் பற்றி எடுத்த இராவணனை ஒருகால் விரலைப் பொருத்தி அவன் தலைகள் முழுவதும் அடர ஒற்றியவர். நெல்வாயிலில் விளங்குபவர். நாம் தொழும் தன்மையர். அவர் எமது உச்சியில் உறைபவர்.
1750 | நாடி
னார்மணி வண்ண னான்முகன் கூடி னார்குறு காத கொள்கையர் நீடி னாரநெல் வாயி லார்தலை ஓடி னாரெம துச்சி யாரே. |
2.026. 9 |
நீலமணி போன்ற நிறத்தினனாகிய திருமாலும், நான்முகனும் கூடித் தேடிக்குறுக முடியாத இயல்பினராய் எரி உருவொடு நீடியவர். நெல்வாயிலில் எழுந்தருளி யிருப்பவர். தலை ஓட்டைக் கையில் உடையவர். அவர் எமது உச்சியில் உறைபவர்.
1751 | குண்ட
மண்டுவர்க் கூறை மூடர்சொற் பண்ட மாகவை யாத பண்பினர் விண்ட யங்குநெல் வாயி லார்நஞ்சை உண்ட கண்டரெம் முச்சி யாரே |
2.026. 10 |
குண்டர்களாகிய சமணர்களும், துவர் ஏற்றிய ஆடையை அணிந்த மூடர்களாகிய புத்தர்களும் கூறும் சொற்களைப் பொருளாகக் கொள்ளாத பண்பினர். வானளாவ உயர்ந்துள்ள நெற்பயிர்கள் நிறைந்த நெல் வாயில் என்னும் தலத்தில் விளங்குபவர். அவர் எமது உச்சியார்.
1752 | நெண்ப
யங்குநெல் வாயில் ஈசனைச் சண்பை ஞானசம் பந்தன்சொல் லிவை பண்ப யன்கொளப் பாட வல்லவர் விண்ப யன்கொளும் வேட்கை யாளரே. |
2.026. 11 |
நெல்வாயில் என்னும் தலத்தில் நட்புக்கொண்டு விளங்கும் ஈசனை, சண்பைப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய சால்மாலையாகியஇத்திருப்பதிகத்தைப் பண்ணின்பயன் கொள்ளுமாறு பாடி வழிபட வல்லவர், வீட்டுலக இன்பத்தை அடையும் வேட்கையினர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 24 | 25 | 26 | 27 | 28 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருநெல்வாயில் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - துச்சி, விளங்குபவர், உடையவர், விளங்கும், உச்சியில், நெல்வாயில், என்னும், வாயிலில், தலத்தில், னாரநெல், உறைபவர், மாண்பினர், நிறைந்த, தொழத்தகும், எழுந்தருளியிருப்பவர், லார்தொழும், யாரநெல், வாயில், யங்குநெல், பண்பினர், நெல்வாயிலில், வல்லவர், லங்கிய, தன்மையர், லார்தொழ, னார்மணி, இறைவர், நீலமணி, திருச்சிற்றம்பலம், திருமுறை, தொழும், வாயிலார், னார்பிறை, திருநெல்வாயில், வானளாவ